தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 December 2012

உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள்

மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில்
வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில்
இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ்,
பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள்
காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளது. மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின்
கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட
குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில்
இருந்தே இந்த அபூர்வ
கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது.



thanks:virakesari

29 December 2012

இந்தியாவில் 'கண்ணில்லாத' புதியகெளுத்தி மீன் கண்டுபிடிப்பு

ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி இந்தியாவில் கண்களே இல்லாத புதிய
வகை கெளுத்தி மீன்
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார்
உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின்
இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ்
கிணற்றிலேயே கண்ணில்லாத இந்த கெளுத்தி மீன்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன்
கட்டமைப்பில், கண்களே இல்லாத
கெளுத்தி மீன்களை காண்பது அரிது. இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும்
நிலத்தின் அடியில் சேறும் சகதியும்
இருக்கும் பகுதியில் வசிப்பவை. அப்துல் கலாமின் பெயர் இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்திய
குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின்
பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி
என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிவியல்துறைக்கு அவரின்
பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்
அவரது பெயர் இந்த
மீனினத்துக்கு சூட்டப்பட்டதாக இதில்
ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். "
ஆய்வுகள் மூலம் அவை எங்கிருந்து தோன்றின,
மற்ற உயிரினங்களுக்கும் இவற்றுக்குமான
தொடர்புகள் போன்றவை தெரியவரக் கூடும்." டாக்டர் பிஜாய் நந்தன். ஆழமான கிணறுகள், ஆழ் நீர் நிலைகளில்
இருக்கும் சுரங்கங்கள் போன்ற இடங்களில்
வாழும், கண்கள் இல்லாத இந்த வகையான
கெளுத்தி மீன்கள் குறித்த கண்டுபிடிப்பும்,
அது தொடர்பிலான ஆய்வுகளும் மிகவும்
ஆச்சரியம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று இந்த கண்டுபிடிப்பில்
ஈடுபட்டிருந்த குழுவில் இருந்த
கொச்சி அறிவியல் தொழில்நுட்ப
பல்கலைகழகத்தில் கடல்சார்
உயிரியல்துறையில் பேராசிரியராக
இருக்கும் டாக்டர் பிஜாய் நந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். "மீனினம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த
விஷயங்களை மட்டும் இவ்வகையான அரிய
மீன்களின் கண்டுபிடிப்புகள்
வெளிப்படுத்துவதில்லை. அதற்கு அப்பாற்பட்டு,
பல உயிரினங்கள் எப்படித் தோன்றின,
எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது என்பது போன்ற
நுண்ணிய விஷயங்களை அறிந்து கொள்ளவும்
இவ்வகையான கண்டுபிடிப்புகள் உதவுகின்றன"
என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மிகச் சிறியது மிகவும் சிக்கலான சுற்றுச்சூழலில் வாழும்,
ரத்த மீன்கள் என்றழைக்கப்படும் இந்த அரிய
வகை மீனினங்கள், ஆழ்ந்த சிவப்பு நிறத்தில்
சுமார் 3.78 சென்டி மீட்டர் நீளம் உள்ளவை. இந்தப் புதிய மீனினத்தின் புறத்தோற்றம்
குறித்த அடிப்படை ஆய்வுகள்
முடிந்து விட்டதாகவும், அதனுடைய மூலக்
கூறுகள், அது தோன்றிய விதம் குறித்த
ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்
டாக்டர் பிஜாய் நந்தன் கூறுகிறார். அந்த ஆய்வுகள் மூலம்
அவை எங்கிருந்து தோன்றின, எந்த
உயிரினத்திலிருந்து இவை உருப்பெற்றன, மற்ற
உயிரினங்களுக்கும் இவற்றுக்குமான
தொடர்புகள் போன்றவை தெரியவரக்கூடும்
எனவும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
Thanks bbctamil

21 December 2012

ஒரு நாள் உலகம் அழியும்

2012 டிசம்பர் 21 இன்றுடன் மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடைகின்றது. சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி இருளில் மூழ்கியிருக்கும். நிபிரு என்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும் என்று பல்வேறு விடயங்களைக் கூறி உலகம் அழியப் போகின்றது என்ற ஒரு கருத்து பேசப்படுகிறது. இக்கருத்தை பல்வேறு ஊடகங்களின் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. உலகம் அழியப் போகின்றது என்று திகதி குறிப்பிட்டுச் சொல்லப்படும் இது போன்ற செய்திகள் பரவுவது இதுதான் முதற்தடவையல்ல. மனித இன வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் உலக அழிவு குறித்த வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டே வந்துள்ளன. தற்போது இத்தகைய வதந்திகள் நவீன ஊடகங்களினூடாக மிக வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இது சாதாரண மக்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஆழமாக நம்பிய சிலர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாக மாறியுள்ளனர். 2012 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி உலகம் அழியப்போகின்றது என்பதும் கலப்படமற்ற ஒரு சுத்தப் பொய் மட்டுமல்ல, இது ஒரு சில வியாபார நோக்கம் கொண்ட வி'மிகளின் திட்டமிட்ட சூழ்ச்சி என்பதே உண்மை. இச்சந்தர்ப்பத்தில் உலக முடிவு நாள் மற்றும் மறுமை நாள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு தெளிவானது. அது பற்றி அறிந்து, புரிந்து, நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். மறுமை நாளின் தோற்றம் இவ்வுலகின் அழிவோடு ஆரம்பமாகும் என அல்குர்ஆனும் ஸ {ன்னாவும் விளக்குகின்றன. அல்குர்ஆனும் ஸ{ன்னாவும் உலக அழிவு, மஹ்'ர் பெருவெளி, அதற்குப் பின்னால் உள்ள சுவர்க்க, நரக வாழ்வுகள் குறித்து தேவையான அளவு விளக்கியுள்ளன. அல்குர்ஆன் உலக அழிவு பற்றி பல இடங்களில் விளக்கியுள்ளது. “அந்நாளில் வானத்தை நாம் எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவது போன்று சுருட்டுவோம். ஆரம்பத்தில் நாம் படைத்தது போன்றே மீட்டுகிறோம். இது எமது பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் அதனை நிறைவேற்றுவோம்.” (ஸ_ரா அல்அன்பியா: 104) இவ் வசனம் உலக அழிவு பற்றி முழுமையாக விளக்குகிறது. பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சம் சுருட்டிவிடப்படும். அதுவே இப்பிரபஞ்சத்தின் அழிவென அல்குர்ஆன் கூறுகிறது. எவ்வாறு இப்பிரபஞ்சம் உருவாகியதோ அந்த அமைப்பிலேயே அழிந்தும் போகும் எனவும் இவ்வசனம் சொல்கிறது. அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. அல்லாஹ் சொல்கிறான்;;: “நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.” (40: 59) “நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார்கள.; (நபியே) நீர் கூறும் ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.” (அல்குர்ஆன் 34:3) பார்க்க: (54: 1), (21:1) அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், கழா- கத்ர் ஆகியவற்றின் மீது முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை ஏற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது. மறுமை எப்போது வரும்? இறந்த பின் வாழ்வுண்டு' என்ற உண்மையை மக்களுக்கு எத்திவைத்த நபி (ஸல்) அவர்களிடம் அந்த மக்கள், ‘மறுமை நாள் வரும் என்கிறீர்களே! அது எப்போது வரும்?’ என்றும் கேள்வி கேட்கத் துவங்கினர். “மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம்.”(அல்குர்ஆன் 33: 63) மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற இரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாகக் கூறுகின்றான். ‘அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்லை. மறுமை நிச்சயம் வரும் என்றிருந்தால் அது வருகின்ற நாளை தெளிவாக அறிவித் திருக்கலாமல்லவா என்ற சந்தேகம் எழலாம். அதற்கான பதிலை இப்படிச் சொல்கிறது அல்குர்ஆன்;. “நிச்சயமாக அந்த (மறுமையின் நிகழ்வு) நேரம் வரக்கூடியதாக உள்ளது. உயிரினம் அனைத்தும், தான் செய்ததற்கு ஏற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த நாளை நான் இரகசியமாக வைத்துள்ளேன்.” (அல்குர்ஆன் 20: 15) ஆம்! இந்த நாளில் இன்ன நேரத்தில் அது (மறுமை, மரணம்) வரும் என்பது முன்கூட்டியே அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தால், மனிதர்களின் வாழ்வில் பெரும் குழப்பமே எஞ்சியிருக்கும். இன்ன நேரத்தில் மரணம் வரும், மறுமை வரும் என்ற செய்திகளை அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதால்தான் உலகம் ஓரளவு அமைதியாக உள்ளது. மறுமை வருமா? என்ற சந்தேகம் ஒருபுறம், எப்போது வரும்? என்ற சந்தேகம் மறுபுறம் என, அவர்களின் நிலை குழப்பதில் இருந்தது. அது வெகு சீக்கிரம் வரும் என அல்லாஹ் அறிவித்து விட்டான். மறுமை நாள் வரும் முன் சில அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள், மறுமை நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான சான்றுகளாக அமையும். இந்த சான்றுகள் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனிலும் குறிப்பிடுகின்றான், நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கிறான். மறுமை நாளின் அடையாளங்களில் சில: · ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தல், பின்தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகும், · விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும், · தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுதல், பாலைவனம் சோலை வனமாதல், காலம் சுருங்குதல், கொலைகள் அதிகரித்தல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்துப் பெருமையடிப்பது, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், ஆடை அணிந்தும் நிர்வாணமாயிருக்கும் பெண்கள், · உயிரற்ற பொருட்கள் பேசுவது, · தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், · மரணிப்பதற்கு ஆசைப்படுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றுதல், ய+தர்களுடன் மாபெரும் யுத்தம்,· க/பா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், ய+ப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர் தோன்றுதல், செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பைத்துல் முகத்தஸ் வெற்றி, மதீனா தூய்மையடைதல் இவை நம்பகமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள உலக முடிவுக்கான சில அடையாளங்கள். இவற்றில் சில நடந்து முடிந்த அடையாளங்கள். மற்றும் சில நிகழ்ந்து கொண்டி ருக்கும் அடையாளங்கள். என்றாலும், அந்த நாள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்பதை எம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த நாள் நெருக்கமாக வரும்போது சில மகத்தான அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள் தோன்றி விட்டால் அந்த நாள் எவ்வளவு சமீபத்தில் உள்ளது என்று முடிவு செய்து விடலாம். அத்தகைய மாபெரும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். 1. புகை மூட்டம். 2. தஜ் ஜhலின் வருகை. 3. (அதிசயப்) பிராணி. 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல். 5. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீள்வருகை. 6. ய/ஜ{ஜ் , ம/ஜ{ஜ் கூட்டத்தினரின் வருகை. 7. கிழக்கே ஒரு பூகம்பம் வெடித்தல். 8. மேற்கே ஒரு பூகம்பம் வெடித்தல். 9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தல். 10. இறுதியாக யமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல். ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி (ஸல்லல்லாஹ { அலைஹிஸ்ஸலாம்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹ{தைபா (ரழி), நூல்: முஸ்லிம் அந்த நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இம்மார்க்கத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த பத்து அடையாளங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டவுடன் உலகம் அழிந்துவிடும் என நபியவர்கள் இதன் மூலம் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். இவற்றில் மூன்று அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை. “சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ் ஜhல், (அதிசயப்) பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமானால் அவற்றுக்கு முன்பே ஈமான் கொண்டிருந்தாலே தவிர எவருக்கும் அவரது ஈமான் பயனளிக்காது” என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹ {ரைரா (ரழி) நூல்கள்: முஸ்லிம் இப்னுமாஜh) உலகம் அழியப் போகிறது என திகதி குறிப்பிட்டு அல்லது கால, நேரம் குறிப்பிட்டுச் சொல்லப்படும் தகவலை ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது. அவ்வாறு நம்புவாராயின் அவரது ஈமானில் கோளாறு இருக்கிறது என்பதே அர்த்தம்.உலக அழிவு குறித்து அவ்வப்போது பரப்பப்படும் வி'மப் பிரசாரத்தை நம்புபவர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கும் மரணம் குறித்து சிந்திக்கத் தவறி விடுகின்றனர். அது அவர்களது உலக முடிவு என்பதை மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு மனிதனுடைய மரணமும் அவனது உலக முடிவு என்பதை ஒவ்வொருவம் சிந்திக்க வேண்டும். முழு சமூகத்தினதும் மரணம்தான் உலகத்தின் இறுதிநாள் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எனவே, உலக அழிவு பற்றிய ஆய்வில் ஈடுபடுவதை விடுத்து மரண சிந்தனையோடு மறுமைநாளுக்காக எம்மைத் தயார்படுத்தி மறுமையில் வெற்றி பெறுவோமாக! அஷ்n'ய்க் nஜம்ஸித் அஸீஸ் (நளீமி)

12 December 2012

சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதல்இடம்பெற்ற மாணவன் நாடு திரும்பினார்

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில்
நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப்
போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற
இலங்கை மாணவனான ரிப்தி முஹம்மத் ரிஸ்கான்
இன்று காலை 7.24 மணியளவில்
இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.
சர்வதேச ரீதியில் நடைபெற்ற இந்தப்
போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப்
பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்து,
நாடு திரும்பிய மாணவன்
ரிஸ்கானுக்கு விமான நிலையத்தில் புத்த சாசன மற்றும் சமயவிவகார பதில் அமைச்சர்
எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தலைமையிலான
குழுவினரால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
83 நாடுகள் பங்கு பற்றிய இந்த சர்வதேச
போட்டியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் 14 வயதுடைய
மாணவரே முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

02 December 2012

சமுக ஒற்றுமையை நோக்கி..

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஒற்றமையை பலப்படுத்தம் வகையில் காத்திரமான முன்னெடுப்புக்கள் காலதாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும் என குறிப்பிட்டால் அது மிகையாகாது. இந்த வகையில் சமூக ஒற்றுமையை சாத்தியப்படுத்துவதாயின் சில அடிப்படையான உண்மைகள் அனைவராலும் ஆழமாகப் புரியப்படல் வேண்டும். ஆரம்பமாக பன்மைத்துவம் (Diversity) என்பது உலக வாழ்வின் ஒரு யதாhத்தம் என்பது சகலரினாலும் புரியப்படல் வேண்டும். பிரபஞ்சம், தாவர உலகம், மிருக உலகம், மனித இனம், தனிமனிதர்கள் முதலான எல்லா மட்டங்களிலும் பன்மைத்துவத்தைக் காணலாம். இவ்வுண்மை ஆழமாக புரியப்படவேண்டும் என்பது போலவே இது தொடர்பான மற்றும் சில உண்மைகளையும் அனைவரும் ஏற்றாகவேண்டும். மாற்றுக்கருத்துக்களும் கொள்கைகளும் உண்டு; எமக்கு மத்தியிலான முரன்பாடுகளை விட உடன்பாடுகளே அதிகம். ஒரு விடயத்தில் ஒன்றக்கு மேற்பட்ட கருத்துக்கள் சரியானவையாக இருக்கலாம்; இவற்றோடு அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு யதார்த்தம் உண்டு. மார்க்கத்தில் கிளையம்சங்களில் கருததுவேறுபாடுகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது மாத்திரமல்ல அது சிலபோது வரவேற்கத்தக்கதாகவும் நன்மை பயக்கவல்லதாகவும் அமையலாம் என்பதே அந்த யதார்த்தமாகும். சன்மார்க்கக் கண்ணோட்த்தில் சமூக ஒற்றுமையை பேண விரும்புவோர் மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்களை, விரிவாக அலசி ஆராய்தல் வேண்டும். மேலும் முரண்பாடுகள் தோன்றும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பேணவேண்டிய தர்மங்களையும் ஒழுக்கங்களையும் பற்றிய ஒரு பரவலான விழிப்புனர்வும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தப்படல் வேண்டும். இந்தவகையில் கருத்து வேறுபாடுகளின் போது கடைபிடிக்கவேண்டிய சில ஒழுங்குகளை உங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். முரண்படுவோருடனுள்ள உடன்பாடுகளையும் ஒருமைப்பாடுகளையும் நோக்குதல். உடன்படும் விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைத்தல்; முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளல். முரண்பாடுகளின் போது சத்தியத்தை தரிசிப்பதை முழு நோக்கமாகக்கொள்ளல். மாற்றுக்கருத்துக்களையும் மாற்றுக்கருத்துடையோரையும் மதித்தல். மாற்றுக்கருத்துடையோர் பற்றி நல்லெண்ணம் கொள்ளல். கலந்துரையாடல்களுக்கூடாக கருத்து வேறுபாடுளை களைதல் அல்லது குறைத்தல். தர்க்கம், குதர்க்கம், விவாதம் போன்றவற்றை தவிர்த்தல். கருத்துப் பரிமாற்றத்தின் போது பண்பாடு பேணுதல். எதிர்தரப்பினருக்கு அவர்களின் வாதங்களை முன்வைக்க அவகாசமளித்தல். கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கும் மார்க்கத்தின் கிளை அம்சங்களில் முடிவான முடிவுகளை வெளியிடாதிருத்தல். ஆரம்ப கால அறிஞர்களின் கருத்துவேறுபாடுகளை அறிந்திருத்தல். குப்ர், ஷிர்க் ,பித்அத், ழலாலா முதலான ஷரீஆ சார்ந்த கலை சொற்பிரயோகங்களை ஆழமாக விளங்கி கவனமாகப் பிரயோகித்தல். நடுநிலைப் போக்கை கடைப்பிடித்தல் தூய்மை பேணலும் சுயவிருப்பு வெறுப்புக்களை தவிர்த்தலும். தனிநபர் வழிபாடு, கொள்கை வெறி, இயக்க வெறி முதலான ஜாஹிலிய்யத்துகளிலிருந்து விடுபடல். முஸ்லிம் உம்மாவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் பால் கவனத்தைக் குவித்தல். சமூக ஒற்றுமையை முதற்தர முன்னுரிமையாக் கொள்ளல். மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள்; விரிவாக, விளக்கமாக கலந்துரையாடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு சமூகத்தின் எல்லா தரப்பினராலும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது அல்லாஹ்வின் பேரருளினால் சமூக ஒற்றுமை என்ற நம் அனைவரதும் கனவு மிகக் கிட்டிய எதிர்காலத்தில் நனவாக, உண்மையாக மாறுவது திண்ணம். இன்ஷா அல்லாஹ். இந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இயங்கும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலின் கரங்களை சமூகத்தின் எல்லா அணிகளும் பலப்படுத்த முன்வரல் வேண்டும். ஏனெனில் சமூக ஒற்றுமையையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஓர் அமைப்பே குறித்த கவுன்ஸில் ஆகும் என்பது யாவரும் அறிந்ததே. நன்றி:http://www.sheikhagar.org

29 November 2012

டிசம்பர் 1ம் 2ம் திகதிகளில் களுத்துறை -அளுத்கமவிற்கு ரயில் கிடையாது

இந்திரிலிகொடயில் பாலம்
திருத்த வேலைகள் காரணமாக
தெற்கு கரையோர ரயில் வீதியில்
களுத்துறை மற்றும் அளுத்கம ஆகிய
பகுதிகளுக்கு இடையில் டிசம்பர் 1ம்
திகதி காலை 9 மணி தொடக்கம் 2ம்
திகதி நண்பகல் 12 மணிவரை ரயில்
சேவை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

27 November 2012

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின்முதலாவது செயற்கைக்கோள்

இலங்கையின்
முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான
(செற்றலைட்) 'சுப்றீம்செற்',
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43
மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்படது.
சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்தே இந்த செயற்கைக்கோள்
ஏவப்பட்டதாக சுப்றீம்செட் நிறுவனம்
அறிவித்தது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
செலவில் உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கைக்கோள், எதிர்வரும் 2013ஆம் ஆண்டு ஜுன்
மாதத்திற்குப் பின்னர் வர்த்தக
நடவடிக்கைகளுக்காகப்
பயன்படுத்தப்படவுள்ளது.
மேற்படி இச் செயற்கைக்கோள் கடந்த 22ஆம்
திகதி விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் 5 நாட்கள்
தாமதமாகி இன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த
செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான
நிலையம் கண்டியில் அமைக்கப்படவுள்ளது.
வரலாற்றில் உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கு
ம் 45ஆவது நாடாக
இலங்கை இடம்பிடித்துள்ளதுடன்
தெற்காசியாவிலேயே இந்தியா,
பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சொந்தமாக
தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்துள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும்
இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25 November 2012

அரபாத்தின் உடல் 27-ம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளது

பாலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யாசீர்
அரபாத்தின் உடல் எதிர்வரும்
செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்படவுள்ளதாக
பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நஞ்சூட்டப்பட்ட நிலையிலா அவர் 2004-ம் ஆண்டில்
பிரான்ஸில் உயிரிழந்தார்
என்பதை ஆராய்வதற்காக அவரது உடலில்
பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இரத்தத்தில் காணப்பட்ட கோளாறு காரணமாக
அரபாத்துக்கு ஏற்பட்ட
பக்கவாதத்தினாலேயே அவர் உயிரிழந்ததாக
முன்னர் வெளியாகியிருந்த மருத்துவ
அறிக்கைகள் கூறின. ஆனால், ஆவணக்காட்சிப் படம் தயாரிக்கும்
நிறுவனமொன்றின் கீழ் பணியாற்றிய
சுவிட்ஸலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள்,
அரபாத்தின் உடலில் பொலோனியம்-210 என்ற
இரசாயனம் காணப்பட்டதாக தகவல்
வெளியிட்டதையடுத்து கடந்த ஆகஸ்டில் பிரான்ஸ் அதுபற்றிய
விசாரணைகளை ஆரம்பித்தது. மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில்
அமைந்துள்ள அரபாத்தின் கல்லறைப் பகுதி இந்த
மாதம் தொடக்கத்திலிருந்து பொதுமக்கள்
சென்றுபார்க்க முடியாதபடி சீல்
வைக்கப்பட்டுள்ளன. கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்படும்
உடலில் இருந்து டிஎன்ஏ சாம்பிள்
மாதிரிகளை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து,
ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
தனித்தனியாக
எடுத்துச்சென்று ஆய்வுக்குட்படுத்துவார்கள் என்று பாலஸ்தீனத்தின் முன்னாள்
உளவுத்துறை தலைவர் தவ்பீக்
திராவி கூறினார். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை 35 ஆண்டுகள்
வழிநடத்திய யாசீர் அரபாத் 1996-ம் ஆண்டில்
பாலஸ்தீன அதிகாரசபையின்
முதலாவது அதிபரானார். 2004-ம் ஆண்டில் அரபாத் மோசமாக
கவீனமுற்றிருந்தார். இரண்டு வாரங்களின்
பின்னர் பிரான்ஸின் இராணுவ
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக
அறிவிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டில் நவம்பர் 11-ம்
திகதி உயிரிழக்கும்
போது அவருக்கு வயது 75.

நன்றி:BBC tamil

23 November 2012

காத்தான்குடியில் இஸ்ரேலுக்கு எதிராகஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக காத்தான்குடியில்
ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை ஜும்
ஆ தொழுகையின் பினனர்; காத்தான்குடி நகர
சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரின்
ஏற்பாட்டில் இடம்பெற்றது. பலஸ்தீன - இஸ்ரேலுக்கு இடையில் இடம்;பெற்ற
போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்
செறிந்து வாழும் பிரதேசமான
காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.

thanks:virakesari

21 November 2012

இஸ்ரேல் உளவாளிகள் காஸாவில் படுகொலை!

இஸ்ரேலுக்கு உளவாளிகளாகச் செயற்பட்ட 6 பேர்
காஸாவில் சுட்டுப்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
காஸாவின் வடபகுதியிலுள்ள இடமொன்றில்
வைத்தே இவர்கள் சுடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததுடன் ஹமாஸின்
முக்கிய உறுப்பினர்களின் இருப்பிடங்கள்
தொடர்பாகவும்
அறியத்தந்தமை தொடர்பிலேயே இவர்கள்
கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் அதி நவீன
சாதனங்களை உபயோகித்திருந்தமை கண்டு பிடிக்
கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் ஹமாஸ்
இலக்குகளை படமும் பிடித்துள்ளனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 6 பேரில்
ஒருவரின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச் செல்லும்
புகைப்படமும் இணையத்தில்
வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Thanks;virakesri

Smartphone

வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை பார்ப்போம். ஏன் Smartphone ? உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும்
தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம். விலை (Price) : எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி
விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம். இயங்கு தளம் (Operating System) : எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian
என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே. இதில் ஆப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும். அதே போல தான் Blackberry, ஆப்பிளை விட விலை குறைவு என்ற
போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது
நலம். அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), இந்தியர்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது. இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மாடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா
முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1 OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS - யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக
வேண்டாம். அடுத்து Windows OS. நம் கணினியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது போன் மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும். வடிவமைப்பு,
டிஸ்ப்ளே (Body, Display): ஒரு போன் வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும். அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen போன் தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று
நீங்கள் பார்க்க வேண்டும். Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும்
போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை.
விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம். Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பிறகு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு பிரச்சினை இல்லை. iPad போல 10 இஞ்ச் என்றாலும் வாங்கி வைத்துக்
கொள்ளலாம். நினைவகம் (Memory) : அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. Smartphone - கள் கணினி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 - 200 MB அவசியம். External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக்
கொள்ளுங்கள். கேமரா (Camera): பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம். Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ)
அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான். வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். ப்ராசஸர் (Processor): மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப
விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். பாட்டரி (Battery) : எல்லாமே சரி. பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பாட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு
செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து). இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity): நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம்.
அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம். ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு. இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

Thanks: - பிரபு கிருஷ்ணா
Karpom.com

1990இல் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட ஒருசமூகத்தின் கண்ணீர் கதை

19 November 2012

தலைக்கு 'டை' பயன்படுத்துபவர்களா....? (Dye என்ற வார்த்தை Die என்பது)

'டை அடிப்பது சகஜமாகிவிட்ட இக்காலத்தில் வயது முதிர்ந்து நரையை மறைக்கவும், இளையோர் நாகரீகத்துக்காகவும் விதவிதமாக டை அடிப்பது எல்லோருக்கும் சகஜமாகிவிட்டது. ''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்'' என்கின்றனர் மருத்து ஆராய்ச்சியாளர்கள், ''தொடர்ந்து உபயோகிக்கும்போது, நம் தலைமுடியுடன் மட்டும் அது
வினைபுரிவதில்லை. உடலிலும் சென்று ரத்தத்திலும் கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்ப்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடித்திருக்கும் பெர்மனன்ட் டை; ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பதுதான் பிரச்னையே! டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப்
பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும். அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கான்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. அப்படி
அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்'' என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள், ''செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க
முயற்சிக்கலாம். எல்லாவற்றையும்விட, நரை முடியை அதன் அழகோடு ஏற்றுக்கொள்வது மிகமிகச் சிறந்தது!'' என்று எளிமையான வழிகாட்டுகின்றனர் மருத்துவர்கள். அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கையில், ''டை என்ற வார்த்தையே இப்போது உபயோகத்தில் இல்லை. 'டை' (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால்... 'கலரிங்' (Coloring) என்கிற சொல்லுக்கு உலகம் மாறிவிட்டது. பொதுவாக...
'டை'யில் மூன்று வகை உண்டு மெட்டாலிக் டை, ஹெர்பல் டை, அனிலைன் டை. இதில் சின்ன சின்ன பாக்கெட்டுகளில் மலிவுவிலையில் கிடைக்கும் டை... மெட்டாலிக் வகையைச் சார்ந்தது. இதில் ஏகப்பட்ட கெமிக்கல்கள் சேர்ந்திருக்கும். இதை உபயோகித்தால், அப்படியே முடியில் தங்கிவிடும். 'ப்ளீச்' செய்ய முடியாது. இது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக வந்த ஹெர்பல் டை... அவுரி விதை
மற்றும் ஹென்னா கலந்து வந்தாலும், கூடவே கெமிக்கலும் கலக்கப்பட்டே வருவதால்... இதுவும் உடலுக்கு கேடு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட டைகள் எல்லாம் முடியில் மட்டும் இல்லாமல்... உடலுக்குள்ளும் ஊடுருவி சென்று விடுவதுதான் ஆபத்துகளுக்கு அழைப்பு வைத்துவிடுகிறது. மூன்றாவது வகையான 'அனிலைன் கலர்' எனப்படும் டை, அமோனியா கலக்காமல் வந்துள்ளது. இதையும்கூட
எல்லோருக்குமே உடனே நாங்கள் போட்டுவிடுவதில்லை. பேட்ச் டெஸ்ட் என்கிற டெஸ்ட் செய்வோம். அதாவது, காதுக்கு பின்புறம் இதை அடித்துவிட்டு, வீட்டுக்கு போகச் சொல்லி விடுவோம். 24 மணி நேரத்துக்குக்குள்... அரிப்பு, தடிப்பு எந்த பிரச்னைகளும் வராமல் இருந்தால் மட்டுமே... அதை அவர்களுக்கு கலரிங் செய்ய பயன்படுத்துவோம்'' என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். ''அலர்ஜி உள்ளவர்கள்,
சிம்பிளாக மருதாணியை தலையில் தடவ சொல்லிவிடுவோம். இயற்கையான கலரிங் பொருளான மருதாணியில் எந்தத் தீங்கும் இல்லையே!'' ஆக, இனி டை அடிக்கும் முன்... யோசியுங்கள்!

thanks:lankasri.com

14 November 2012

world diabetes day

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய். இந்நோயை முழுதாகக் குணமாக்க முடியாது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் கவனத்துடன் செயற்பட்டால் உடல் ஆரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது. நீரிழிவு நோய் குறித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனடா நாட்டு விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்' என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதன்முதலில் இது 1991ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும். முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர். நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது. முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும்; போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது. சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம். 1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல். 2 அடிக்கடி தாகம் ஏற்படல். 3. அசாதாரண பசி ஏற்படல். 4. உடல் சோர்வாக இருத்தல். 5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல். 6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல். 7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல். 8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல். 9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல். 10. கண் பார்வை குறைவடைதல். 11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல். 12. எளிதில் கோபமடைதல். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும். பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது. இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன. நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். 1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம். 2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும். 3. விழித்திரையில் மாற்றத்தினால் ; (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract) கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல். 4. பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும். 5. சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்: 1. சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும். 2. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும் 3. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. . நீரிழிவு நோய்களுக்காகச் சிகிட்சை பெற்றுக் கொண்டிருப்போர் கவனிக்க வேண்டியவை: 1. வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். 2. வைத்திய ஆலோசனைப்படி குளிசையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும். 3. மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும். 4. சில சந்தர்ப்பங்களில் மருந்த எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் உங்களுடன் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும். 5. தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும். 6. உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும். 7. உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும். நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

12 November 2012

ஆயிரம் ரூபா நாணயக்குற்றி வெளியீடு


இலங்கை - ஜப்பான் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியால் 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றி இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய நாணயக்குற்றியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் கையளித்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

ஜப்பான் அரசின் கோரிக்கையின் பேரில் வெளியிடப்பட்ட இந்த நாணயக்குற்றியின் முன் பக்கத்தில் மேல் கொத்மலை நீர் தேக்க அணைக்கட்டின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய நாணயக்குற்றி 35.0 மில்லிமீற்றர் விட்டத்தையும் 22.0 கிராம் நிறையையும் கொண்டது.


thanks.virakesari

11 November 2012

பப்பாளியின் பெருமை!

மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகளைப்
பூர்வீகமாகக் கொண்ட பப்பாளி, 17ம்
நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது.
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற
நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. எளிதில்
கிடைக்கக்கூடிய, விலை மலிவான பப்பாளி, மிகவும் இனிப்பானது. பழுக்காத காய்கள்
பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சள்
நிறத்திலும் இருக்கும். பழுத்தபின் விதைகள்
மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பான
சுவையுடையவை. நல்ல மலமிளக்கியாகவும்,
பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி, சற்று எண்ணைப் பசையாக உள்ள பழமாகும்.
இது உடலுக்குத் தெம்பூட்டும்.
இதயத்துக்கு நல்லது. மனநோய்களைக்
குணமாக்குவதில் உதவும்.
கல்லீரலுக்கு ஏற்றது. கணைய வீக்கத்தைக்
கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல்
பிரச்சினைகளுக்கு பப்பாளியே அருமருந்து.
பப்பாளியில் உள்ள சர்க்கரையில்
பாதி குளுக்கோஸாகவும்,
மீதி பிரக்டோஸாகவும் (பழச் சர்க்கரை) உள்ளது.
பழங்களிலேயே வைட்டமின் 'ஏ' சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க
வைட்டமின் 'சி' கூடும். 100 கிராம் பச்சைக்
காயான பப்பாளியில் வைட்டமின் 'சி' 32
மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில்
40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல்
பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136
மில்லி கிராமும் வைட்டமின் 'சி' இருப்பதாகக்
கண்டறியப்பட்டுள்ளது. பப்பாளியில்
சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2
மற்றும் நியாசினும் உண்டு. பச்சைக் காயில்
உள்ள பாலில் செரிமானத்துக்கு உதவும் நொதிப்பொருட்கள் உள்ளன. அதற்கு 'பப்பாயின்'
என்று பெயர். இது புரதத்தைச் செரிக்க
உதவும். நிறையப் பருப்பு உணவுகளை உண்டபின்,
சில பப்பாளித் துண்டுகளைச் சாப்பிட்டால்
நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

02 November 2012

மழைக்கால சளி, தலைவலி போக என்ன சாப்பிடனும் தெரியுமா?

மழை என்பது சந்தோசமான விசயம்தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமால் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். என்ன பொருட்கள் சாப்பிட்டால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். விரவி மஞ்சள் மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும். அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும். மஞ்சள்தூள் ஆவி பிடிங்க ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும். துளசி இலை ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். பனங்கிழங்கு மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். மழைக்கால கசாயம் மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும். மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும். தலைப்பாரம் நீங்க இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். சாம்பிராணி புகை போடுங்க ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும். தும்மல் தீர்க்கும் தூதுவளை தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும் சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும். Thanks:new jaffna.com

31 October 2012

Tune your radios from Nov 1

இலங்கையில் இயங்கும் 45 பண்பலை (எப்.எம்)
ஒலிபரப்பு அலைவரிசைகளும்
தமது பண்பலை வானொலி அதிர்வெண்களை நவம்பர்
முதலாம் திகதி முதல் மாற்றியமைக்கவுள்ளன. தெளிவான ஒலி கிடைப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, வானொலி அதிர்வெண்களை மாற்றியமைத்துள்ளது. இலங்கையிலுள்ள 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெகா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்துவருகின்றன. இப்போது இரண்டு
அலைவரிசைகளுக்கிடையில் 100 கிலோ ஹேட்ஸ் அதிர்வெண் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் 300 கிலோ ஹேட்ஸாக அதிகரிக்கும்போது இலங்கையின் எந்தப் பகுதியிலும் தெளிவான ஒலியை பெறக்கூடியதாக இருக்கும் என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 October 2012

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின்
காரத்தன்மைக்கு அதில் உள்ள
அலைல் புரோப்பைல்
டை சல்பைடு என்ற
எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும்,
நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக
அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள்,
தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்.
இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில்
கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து,
உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட
வைக்க உதவி செய்கிறது.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில்
சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அற்த
கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும்
மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல்
வெங்காயத்திற்கு உண்டு.
இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும்
சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து விடும்.
செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான்
கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற
பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க
சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது.
வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான
செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம்
தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
சீதோஷண நிலை மாறும் போது அடிக்கடி இருமல்
வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல்
போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச்சாற்றில் தேன்
கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள்
நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும்
மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக
சமீபத்திய ஆராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புபைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன
இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல்
இறப்புகள, செல்
சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு
சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்,
பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில
வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
இதை மோரில் கலந்து குடிக்க இருமல்
குறையும். வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும்
கலந்த வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில்
தடவி வர வல்வலி, ஈறுவலி குறையும்.
அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள்
வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ்
வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல்
சுத்தமாகும்.

22 October 2012

கரையொதுங்கும் மீன்களில் நச்சுத்தன்மை இல்லை,உணவிற்கு உகந்தவையாகும்:தேசிய நீரியல் வளஆராய்ச்சியாளர்

கிழக்கில் கரையொதுங்கும் மீன்களில்
நச்சுத்தன்மை இல்லை. ஒட்சிசன்
குறைபாட்டினாலேயே அவை இறந்துள்ளன. இந்த
முடிவு இரசாயனப்
பகுப்பாய்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக
தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் இயக்குநர்
கலாநிதி கா.அருளானந்தன் அறிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மற்றும் தென்பகுதிக்
கடற்கரைகளில் மீனினங்கள் பெருமளவில்
கரையொதுங்கும் நிலையில் அது தொடர்பில்
பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் அவரிடம் கேட்ட
போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்
மேலும் தெரிவிக்கையில்:
ஜுலை மாதம் ஆரம்பமாகிய தென்மேல்
பருவப்பெயர்ச்சிக் காற்றின் காலம்
முடிவடைந்து நவம்பர்,டிசம்பர் மாதமளவில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலம்
ஆரம்பமாகவுள்ளது.
எனவே தற்போது அந்த இரண்டுக்கும் இடையில்
உள்ள காலமே இடைப்பருவப்பெயர்ச்சிக் காற்றுக்
காலமாகும். தென்மேல் பருவப் பெயர்ச்சிக்
காலத்தில் கடல் நீரோட்டமானது அரேபியன் தீவிலிருந்து இலங்கையின்
தெற்கு,கிழக்கு கடற்பகுதியூடாக வங்காள
விரிகுடாவை அடையும்.
இதேபோல் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலத்தில்
மீண்டும்
திசைமாற்றமடைந்து வந்து பாதையூடு கடல் நீரோட்டம் திரும்பிச் செல்லும். இவ்வாறு கடல்
நீரோட்டம் திசைமாற்றம் அடையும்
காலமே தற்போதய இடைப் பருவப் பெயர்ச்சிக்
காற்றுக்காலம். இந்தக் காலத்தில் ஆழ்கடலிலுள்ள குளிர் நீர்
கடற்கரையை நோக்கிவரும். இதனால் கரையோர
நீரின் வெப்பம் குறையும். அப்படி குறைந்த
வெப்பத்திலுள்ள நீர் "அல்கே பிளம்ஸ்' எனப்படும்
மிக நுண்ணிய தாவரங்களைத் தோற்றுவிக்கும்
அளவுக்கு அதிகமாக கரையோரத்தில் பல்கிப் பெருகும்""அல்கே பிளம்ஸை' உட்கொள்ள
கடலிலுள்ள சிறிய மீன்கள்
கரையை நாடும்.கூடவே அச்சிறிய மீன்களைத்
தேடி உண்ண பெரிய மீன்களும் வந்துவிடும்.
ஆனால் இந்த நுண்ணிய தாவரங்கள்
ஒளித்தொகுப்பில் ஈடுபடுவதற்காக நீரிலுள்ள ஒட்சிசனை முற்றாக உறிஞ்சிக் கொள்ளும். வந்த
மீன்கள் சுவாசிக்க ஒட்சிசன்
இன்றி உயிரிழந்து விடுகின்றன.
அத்தோடு நின்றுவிடாமல் குறுகிய
ஆயுள்காலம் கொண்ட இந்த அல்கே பிளம்ஸ்கள்
இறந்த நிலையில் கடலின் அடியில் சென்று பிரிகையடைகின்றன.
பிரிகைக்குத் தேவையான
ஒட்சிசனை கடலுக்கு அடியிலுள்ள
நீரிலிருந்தும் உறிஞ்சிக் கொள்கின்றன.
எனவே கடலுக்கு அடியிலுள்ள பெரிய இன
மீன்களும் சுவாசிக்க ஒட்சிசன் இன்றி உயிரிழக்கின்றன.
இதுவே தற்போது நிகழ்ந்துள்ள மாற்றத்துக்குக்
காரணம். இது ஒவ்வொரு வருடமும் இந்தக்
காலப்பகுதியில் நடைபெறுகின்றது. இந்த
முறை வழமையைவிட அதிகளவான மீன்கள்
கரையொதுங்குகின்றன. எனவே சுனாமிக்கான
அறிகுறி என்றோ அனர்த்தங்கள் நிகழப்
போவதாகவோ யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று அவர் மேலும்
தெரிவித்துள்ளார். வழமையாகப் பிடிக்கப்படும் மீனினங்கள்
கரையொதுங்குவது சுனாமிக்கான
அறிகுறி அல்லவென அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

thanks:virakesari

20 October 2012

பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி

தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக்
என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம்
என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும்
நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய
ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும்
தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும்
பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன்
என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும்
தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள்
தெரிவித்திருக்கிறார்கள். வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும்
மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்காக
ஆயிரத்து முப்பத்தி ஓர்
ஆண்களை தேர்வு செய்துகொண்டனர்.
பரிசோதனையின் துவக்கத்தில் இவர்களின்
ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது. ரத்தத்தில் லைகோபீன்
அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற
அடிப்படையில்,
இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக
பிரித்த ஆய்வாளர்கள், இந்த
நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர். இதில் ரத்தத்தில் லைகோபீனின்
அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258
பேர் இருந்தனர். இவர்களில் 25
பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம்,
லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த
குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது. இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம்
இருக்கும் தக்காளி உள்ளிட்ட
காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய்
தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும்
என்று இந்த ஆய்வாளர்கள்
கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற
வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும்
தன்மை கொண்டது என்றும்,
இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன்
மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்
தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக
பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி. எனவே இந்த லைகோபீன் அதிகம் இருக்கும்
தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில்
அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம்
வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின்
முடிவுகள் தெரிவிப்பதாக கூறுகிறார் அவர்.

Thanks:bbc tamil.com

17 October 2012

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய
நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல்
அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின்
அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக
வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக
இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில்
ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில்
ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும்
அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்

1- ஹஜ் உம்ரா :- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும்
இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன்
ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல்
அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு: - துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் – புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :-
அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய
வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ்
மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு: - அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த
பாலை அருந்தி தான்
நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:-
கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல்
வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த
நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை.
ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற
திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத் இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர்
கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின்
ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய்
ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும்
கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும்
பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா :-
உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள்
வலியுறுத்திய சுன்னத்தாகும். கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யா வாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால்
அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்

– ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
– ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி) – மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம்
– (திர்மிதி) உழ்ஹிய்யா விற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது: கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள்
குறையுள்ளவை. நேரம் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யா வாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும்
ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின்
குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
– ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
– ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும்
கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
– அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி) உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக
கொடுக்கக்கூடாது. குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க
வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக
கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள்
தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்

உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும்
நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம் குறிப்பு: - இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

Source:islamkalvi.com

16 October 2012

'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' : கூகுள் அலுவலகம்முன்னால் ஆர்ப்பாட்டம்

'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்'
திரைப்படத்துக்கு எதிர்ப்புத்
தெரிவித்து லண்டனிலுள்ள கூகுள்
அலுவலகத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கானோர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'யூடியூப்' இணையத்தளத்திலிருந்து 'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படத்தின்
காணொளிகளை அகற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள்
இதன்போது வலியுறுத்தியிருந்தனர். "இது கருத்துச் சுதந்திரம் அல்ல, அதற்கு ஓர்
எல்லையுண்டு; நபிகள்
நாயகத்தை அவமானப்படுத்தும்
எந்தவொரு நடவடிக்கையையும் நாம்
அனுமதிக்கப்போவதில்லை" என ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டோர் கோஷம் எழுப்பியுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சுமார் 4
மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது.
சுமார் 10,000 பேர் வரை இவ் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டதாக முஸ்லிம்
அமைப்பொன்று தெரிவித்துள்ளது. எனினும் சுமார் 3000 பேர் வரையிலேயே இதில்
ஈடுபட்டதாக லண்டன் பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
கூகுள் குறித்த காணொளிகளை உடனடியாக
அகற்றாவிடின் பிரித்தானியா பூராகவும் இவ்
ஆர்ப்பாட்டத்தினைத் தொடரப் போவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படம் மற்றும்
அதன் காணொளிகள் உலகம் பூராகவும் பெரும்
சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதன்காரணமாக லிபியாவில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்தில் அந்நாட்டுக்கான அமெரிக்கத்
தூதுவரும் கொல்லப்பட்டார்.
மேலும் பல உலகநாடுகளில் அமைந்துள்ள
அமெரிக்கத் தூதரகங்களும்
தாக்குதலுக்குள்ளாகின. அண்மையில் இதே காரணத்துக்காக பாகிஸ்தான்
யூடியூப் உட்பட 20,000 இணையத்தளங்களைத்
தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.
thanks:virakesari

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில்
ஒன்றுதான் தொழுகை,
தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய
முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில்
வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில்
இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான்
இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக்
கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல
ஒரு தெளிவு கிடைக்க வேண்டும்
என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான
ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல்
அவசியமாகும். 1. முன் வரிசையின் சிறப்புகள்
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய
பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க
வேண்டும். 5. இமாமின்
வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க
வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை 1. தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு மக்கள் பாங்கிலும், முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும்
குலுக்கல் மூலம் தான்
பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும்
தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப்
பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்:
(புகாரி, முஸ்லிம்) ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம்
வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின்
சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில்
நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக்
கூறினார்கள். அப்பொழுது நாங்கள்
யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்?
எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்) விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன்
வரிசையில் கிடைக்கும்
நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ
அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 2. வரிசையில் நேராக நிற்க வேண்டும் நபி(ஸல்) அவர்கள் தொழுகையின்
பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள்.
பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள்.
ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக
நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள்
உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். ( ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர்
நிற்கட்டும். பின்னர்,
அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும்,
பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள்
நிற்கட்டும். (முஸ்லிம்) உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய
விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்)
கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்) புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர்
செய்வது தொழுகையை நிலைநாட்டும்
விஷயங்களில் ஒன்றாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக
நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என்
முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன்.
(இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின்
கருத்துமாகும்) புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில்
நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம்
தோள்பட்டையை அருகிலுள்ளவரின்
தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின்
பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள்
இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள்
முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்)
வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என
நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்) முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்
கூறப்பட்டுள்ளது: நாங்கள்
புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம்
என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள்
அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள்
ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக
வீட்டிலிருந்து வந்தார்கள்.
(தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல
நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர்
ஸஃப்பை விட்டு தம்
நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள்
பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின்
அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக்
கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ்
உங்களுக்கு மத்தியில் பிளவையும்,
வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின்
ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப்
புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும்
தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள்.
அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள்
வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும்
அவர்கள் கூறுவார்கள், நிச்சயமாக அல்லாஹ்வும்
அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில்
உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர்.
(அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்:
அல்லாஹ், அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத்
கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள்
அவர்களுக்காக துஆச் செய்கின்றனர்
என்பதாகும்) (அபூதாவூது) விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க
வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது,
நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின்
தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால்
பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க
வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின்
கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க
வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர்
பார்க்கக்கூடாது.
நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன்
சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும்
அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும்.
பின்வரும்
ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது. உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள்.
உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள்,
இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள்
சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக்
கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக
இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக்
கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக்
கொள்வான். யார்
ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ்
துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அபூதாவூது) இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில்
இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக
எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும்
இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான்
இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல
சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம்,
அவர்களின் கால் பாதத்துடன் நமது கால்
பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள்
ஏதோ அது ஒரு பாவகரமான செயல்
போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள்.
அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில்
வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த
முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்)
சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ்
சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ்
துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின்
பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள்
ஞாபகம் வைத்து கொள்ளட்டும். 3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும் நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும்
சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்,
கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என்
உயிர் எவன் கைவசம்
இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின்
இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில்
ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அபூதாவூத்) விளக்கம்: வரிசையில்
இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான்
கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில்
நுழைந்து நமது உள்ளங்களில் பல
எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை
பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள
வேண்டும். 4. முதல் வரிசையை முழுமைபடுத்திய
பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க
வேண்டும் முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள்.
பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள்.
ஸஃப்பில் குறை இருக்குமாயின்
அது கடைசி ஸப்பாக இருக்கட்டும்.
(அபூதாவூது) விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம்
இருக்கும் போது அடுத்த
வரிசையை ஆரம்பிக்கக் கூடாது,
முன்வரிசையை முழுமை படுத்திய
பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும்
புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக
அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும்
அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க
வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல
காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன்
சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர்
இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள்
. இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான
முறையும் முற்றிலும் தடுக்கப்பட
வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள்
அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும். 5. இமாமின்
வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க
வேண்டும் தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச்
செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில்
இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்)
கூறினார்கள். (அபூதாவூது) இமாமின்
வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க
வேண்டும் ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன்
சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக
அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன்.
பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள்
பிடித்து அவர்களின்
வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி) 6. பெண்கள் நிற்கும் வரிசை நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே
நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத்
தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்
(ரலி) அவர்கள் எங்களுக்கு பின்
நின்றுதொழுதார்கள். (புகாரி) விளக்கம்: மேல்கூறப்பட்ட
ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம்
விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால்
மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில்
நிற்க வேண்டும். இரண்டாவது நபர்
வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய
வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன்
பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க
வேண்டும். மஃமூம்கள் இருவராக
இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர்
பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும்
தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண்
தனது தாயாக, மகளாக, மனைவியாக
இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த
வரிசை பின் வரிசையாகும். பின்வரும்
ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது. தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச்
சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த
ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும்.
பெண்களின் ஸஃப்புகளில் மிகச்
சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும்.
அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ஆகவே, தொழுகையில் வரிசையில் நிற்கும்
விஷயத்தில் மேல் கூறப்பட்ட
விஷயங்களை முழுமையாக பின்பற்ற அல்லாஹ் நம்
அனைவருக்கும் வாய்ப்பளிப்பானக!
K.L.M.இப்ராஹீம் மதனீ
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்
islamkalvi

11 October 2012

ஐந்தில் திருந்து: இல்லையேல் ஐம்பதில் வருந்து

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பார்கள். 'ஐந்தில் திருந்து இல்லையேல் ஐப்பதில் வருந்து என்கிறது புதிய ஆ ¡ய்ச்சி ஒன்று. குழந்தையாக இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி. குழந்தை ஆசையாகக் கேட்கிறதே.
அடம்பிடிக்கிறதே என்பதற்காகத் தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும் 'ஸ்பாஸ்ற் பூட்' வகைகளையும் வாங்கித் தரும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குள் புற்றுநோய் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 வீதம் குழந்தைகள் மித மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இப்படி அதிக
எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது. குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய
நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ். உடல் எடை அதிகரிப்பதால் வரும் புற்றுநோய் வருடம் தோறும் தனது வீதத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். வியிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழும்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி
விடுகிறது. சைட்டோகினஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. அதன் அளவை அதிகப்படியான கொழும்பு குறைத்துவிடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.
Thanks:thinakaran

02 October 2012

அல் - ஹஸனியா சிறுவர்தின கொண்டாட்டம்



 அல் - ஹஸனியா மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற
(01.10.2012)சிறுவர்தின கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்வு food fiesta

ஹஜ்ஜின் சிறப்புகள்

எம். ஷம்சுல்லுஹா

அமல்களில் சிறந்தது

"செயல்களில் சிறந்தது எது?" என நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்டது. "அல்லாஹ்வையும்
அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது"
என்றார்கள். "பின்னர் எது?"
என்று கேட்கப்பட்டது. "அல்லாஹ்வின் பாதையில்
போர் புரிவது" என்றார்கள். "பின்னர் எது?" என்று கேட்கப்பட்டது. "ஏற்றுக் கொள்ளப்படும்
ஹஜ்" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

29 September 2012

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின்இயக்குனர் கைது!

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்கப் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். லிபியாவில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கி அங்கிருந்த அமெரிக்க தூதரைக் கொலை செய்தனர். உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இவ் விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு வேறொரு வழக்கி�் 21 மாத சிறைத் தண்டனை விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம். காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கனணீ, இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த து. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை. நகோலாவை கைது செய்த பொலிஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. thanks:virakesari

26 September 2012

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மக்கொன அல் ஹஸனியாவின் மூன்று மாணவர்கள் சித்தி

 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடபட்டது .
எமது பாடசாலைஅல்-ஹஸனியா M.V.த்தில் 
இருந்து மூன்று மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
தினகரன் இணயத்தளத்தில் இன்று வெளியிடப்பட்ட செய்தியை
தொடர்ந்து வாசிக்கவும் .

புலமைப்பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகின: தேசிய ரீதியில் 196 புள்ளிகளுடன் இருவர் முதலாமிடம்; 3ம் இடத்தில் கந்தானை மாணவி.

  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன. www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத் தின் இணைய தளத்தில் நேற்று உள்ளடக்கப் பட்டிருந்ததுடன் காலை 10.00 தொடக்கம் கொழும்பு சுற்றுப்புறப் பாடசாலைகளுக்கு பரீட்சை பெறுபேறு கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஏ. புஷ்பகுமார தெரிவித்தார். வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2 மாணவர்கள் முதலாம் இடத்தையும், 1 மாணவன் மூன்றாம் இடத்தையும், 8 மாணவர்கள் நான்காம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

24 September 2012

தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராக இன்றும்
தலைநகரில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று  நடைபெற்றது.
நபவியா தரீக்காவினர் ஏற்பாடு செய்திருந்த இம்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில்  ஆயிரக்கனக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
பட இணைப்பு 

21 September 2012

இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டம்

ஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராக இன்று புனித ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப்பேரணிகளும் இடம்பெற்றன. இதோ சில பட இணைப்புககள்.




பேருவல

















இறைவனின் ஜோதியை (இஸ்லாத்தை) தங்கள் வாயால் ஊதி அணைக்க நினைக்கும் மூடர்கள்!

கடந்த ஷில நாட்களாக அமெரிக்காவில் உள்ள ஒருவன் இஸ்லாத்தையும், இறைதூதர் நபி(ஸல்)அவர்களையும், இழிவுபடுத்தி எடுத்த படத்தைபற்றி பேசப்படுகிறது. இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் வழக்கம்போல முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையில்லாவர்கள், இஸ்லாத்தில் கருத்து சுதந்திரம் கிடையாது என்று சிந்தனைக்கோ, அறிவுக்கோ வேலை கொடுக்காமல் இஸ்லாத்தை, முஸ்லிம்களைப்பற்றி மீடியாக்கள் சொன்ன அளவுகோளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதிதள்ளுபவர்களை இதுவரை நாம் பார்த்தோம் இனியும் பார்க்கலாம்.

20 September 2012

நபிகளாரை அவமதிக்கும் திரைப்படம்: உலகெங்கும் கொதித்தெழுந்த முஸ்லிம்கள்

செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி. அவ்வளவு சீக்கிரம் இதனை யாரும் மறந்து விட முடியாது. அது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி. இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்வதானால் அமெரிக்காவின் துக்கமான நாள் என்று கூட சொல்லலாம். ஆம், இவ்வருடமும் செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த சம்பவம் அது.யாரும் அதனை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. வழமையான கலவரங்கள் கூட குறைவாக பதிவாகிக் கொண்டிருந்த மத்திய கிழக்கில் திடீரென ஆர்ப்பாட்டங்கள். யார் ஏற்பாடு செய்தார்கள்? எதற்காக ஒழுங்குபடுத்தினார்கள்? என்பதையெல்லாம் அறிவதற்குள் பாரிய சேதங்கள். கூடவே சில உயிர்களையும் குடித்து விட்டது. எகிப்து மற்றும் லிபியா, இவை இரண்டும் அரபு வசந்தத்தின் தென்றலை அனுபவித்து வரும் நாடுகள். இவை இரண்டு நாடுகளிலும் தான் ஆர்ப்பாட்டம் தீவிரமாய் ஆரம்பித்தன.

19 September 2012

தலை நகரை அதிர வைத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

[பட இணைப்பு ]
September 19, 2012
முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக மதிக்கும்
நபி (ஸல்)அவர்களையும் இஸ்லாத்தையும்
இழிவுபடுத்தும் விதம் திரைப்படம் எடுத்த
ஜெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியையும்
அதை அங்கீகரித்த அமெரிக்க அரசையும்
வெளியிட்ட யூடியுப் தளத்தையும் கண்டித்த
 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
இன்று பி.ப 1.30 மணியளவில் கொழும்பில்
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்ஷாஅல்லாஹ் கொழும்பில் வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி பாரிய அமெரிக்க எதிர்ப்பு தினம்!


முஹம்மது நபி(ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தியும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவு படுத்தியும் திரைப்படம் வெளியிட்ட அதன் தயாரிப்பாளனுக்கும் அதனை அனுமதித்த அமெரிக்காவிற்கும் எதிர்ப்பினை தெரிவித்து வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி கொழும்பில் பாரிய அமெரிக்க எதிர்ப்பு தினம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பகல் 1.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி ஜூம்மா பள்ளிவாசலிருந்து அமெரிக்க தூதரகத்தை நோக்கி இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உபயம்:ihzannetwork.blogspot.com

18 September 2012

Huawei Dongle ஐ Unlock செய்வது எப்படி?

இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை http://www.bb5.at/huawei.php?
imei=*************** அப்படியே Copy  செய்து,
இதில் இருக்கும் * இற்கு பதிலாக
உங்களுடைய  IMEI
Number யை கொடுத்து Address Bar  இல் Paste
செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.THANKS:www.nimzath.com/2012/02/huawei-dongle-unlock.html?m=1

17 September 2012

முஸ்லிம்களின் தொடர் ஆர்ப்பாட்டங்களும் துடிக்கும் உணர்வுகளும்

இஸ்லாத்துக்கு எதிராகவும் முஹம்மது நபியை அவமதிக்கும் விதமாகவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு சமூக இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட Innocence of Muslims என்ற திரைப்படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக அமெரிக்க தூதரகங்களை இலக்கு வைத்ததாக அவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் வடிவமைக்குட்பட்டிருக்கும் குறித்த திரைப்படமானது அவர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
"குற்றமற்ற முஸ்லிம்' என்ற தமிழ் பொருள்படும் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் சாம் பசில். இது அவரது உண்மையான பெயரல்ல. இரண்டுமணித்தியாலங்கள் நீளமான இத்திரைப்படத்தில் 59 நடிகர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் திரைக்குப் பின்னாலான தொழில்நுட்ப உதவிகளுக்கு 49 தொழில்நுட்பவியலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.