மர்ஹூமா ஷஹ்னா ஸப்வான் எழுதிய கவிதைகளின் தொகுப்பான எரியும் நட்சத்திரம் நூல் வெளியீட்டு விழா 02.03.2024 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.
ஊர் செய்திகள்
date
Showing posts with label NEWS. Show all posts

03 March 2024
05 November 2021
கொவிட் தொற்றுக்கு மாத்திரை; முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரிப்பு
தொற்று அறிகுறி தென்பட்டு 5 நாட்களுக்கு தலா 2 மாத்திரை வீதம் வழங்க சிபாரிசு
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் பிரிவு அனுமதித்துள்ளது.
21 January 2020
வானொலி புகழ் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி காலமானார்
வானொலி புகழ் அறிவிப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி நேற்று (20) திங்கட்கிழமை இரவு 11.30ற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் தேசிய வைத்தியசாலையிலிருந்து பாணந்துறை, கொஸல்வத்தையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் பாணந்துறையிலிருந்து கல்முனைக்கு கொண்டு செல்லப்படும் என அவரது மகனான MJM மின்ஹாஜ் தெரிவித்தார்.
இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கிய ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மறைவு சமூகத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் எம் அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பளாராக திகழ்ந்ததோடு ஆசிரியராக, அதிபராக என்று கல்வித்துறையிலும் சேவையாற்றியுள்ளார். பாணந்துறை ஜீலான் மத்திய மஹா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபருமாவார்.
சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான அல் ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களது ஜனாஸா சாய்ந்தமருது உஸ்மான் வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் இன்று பிற்பகல் (மஃரிப் தொழுகையின் பின்னர்) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Source:Thinakaran
30 December 2018
அகில இலங்கை ரீதியில் 2ம் - 3ம் இடங்களைப் பெற்ற முஸ்லிம் மாணவர்கள்
நேற்றிரவு வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் முஹைதீன் பாவா ரிசா முஹமத் பெற்றுள்ளார் (வலது).
இதேவேளை, உயிரியல் விஞ்ஞானத்துறையில் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாமிடத்தை மாத்தளை சாஹிரா மாணவன் முஹம்மத் ரிஸ்மி ஹகீம் கரீம் பெற்றுள்ளார் (படம் - இடது).
இவை தவிரவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக, உயிரியல் விஞ்ஞான பிரிவுகளிலும் முறையே ஹனீபா முஹம்மத் பர்ஹாத் (மட். புனித மிக்கேல்) மற்றும் பாத்திமா சுக்ரா ஹிதாயத்துல்லா (ஏறாவூர் அலிகார்) ஆகியோர் உட்பட ஒன்பது மாவட்டங்களில முஸ்லிம் மாணவர்கள் மாவட்டரீதியில் முதலிடங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Source :sonakar.Com
A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உயிரியல் விஞ்ஞான பிரிவு
முதலாம் இடம் - கலனி ராஜபக்ஷ - கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை இரண்டாம் இடம் - ரவிந்து ஷஷிக - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி மூன்றாம் இடம் - ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி
பௌதிக விஞ்ஞான பிரிவு
முதலாம் இடம் - சத்துனி விஜேகுனவர்தன - கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம் இரண்டாம் இடம் - சமிந்து லியனகே - காலி ரிச்சட் கல்லூரி மூன்றாம் இடம் - தெவிந்து விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி
வர்த்தக பிரிவு
முதலாம் இடம் - கசுன் விக்ரமரத்ன - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் இரண்டாம் இடம் - உச்சினி ரணவீர - கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை மூன்றாம் இடம் - மலிதி ஜயரத்ன - கொழும்பு மியுசியஸ் கல்லூரி
கலை பிரிவு
முதலாம் இடம் - சேனதி அல்விஸ் - பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை இரண்டாம் இடம் - சித்துமினி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் மூன்றாம் இடம் - இஷானி உமேஷா பிட்டிகல - கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை
பொறியியல் தொழில்நுட்பலியல் பிரிவு
முதலாம் இடம் - யசாஸ் பத்திரன - கொழும்பு ஆனந்தா கல்லூரி இரண்டாம் இடம் - தரிந்து ஹேஷான் - கொழும்பு ஆனந்தா கல்லூரி மூன்றாம் இடம் - சேஷான் ரங்கன - நிக்கவரெட்டிய மஹாசேன் கல்லூரி
தொழில்நுட்பவியல் பிரிவு
முதலாம் இடம் - சந்துனி கொடிப்பிலி - கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம் இரண்டாம் இடம் - ரிஸா மொஹமட் - சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் மூன்றாம் இடம் - விசிந்து லக்மால் - ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்.
Source:ada derana
08 October 2018
இலங்கைக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! (ஆம்பர்)
2018 ஒக்டோபர் 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
(2018 ஒக்டோபர் 08ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.)
**********************************************
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை மேலும் அதிகரிக்குமென
எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

12 January 2015
10 January 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நடைபெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவு
செய்யப்பட்டுள்ளார். அதன் படி பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்ட மஹிந்த
ராஜபக்ஷ 47.58% வீத வாக்குகளைப் பெற்றுள்ளதோடு அவரை எதிர்த்து
போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 51.28% வீதமான வாக்குகளைப்
பெற்றுள்ளார்.

Summary of the2015 Sri Lankan presidential election Candidate PartyVotes
Maithripala Sirisena New Democratic Fron 6,217,162 51.28%
Mahinda Rajapaksa United People's Freedom Alliance 5,768,090
47.58%
Ratnayake Arachchige SirisenaPatriotic National Front 18,174
0.15%
Namal Ajith RajapaksaOur National Front 15,726
0.13%
09 January 2015
புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

28 September 2014
ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் இல்லாத நிலையில் இன்றை மாநாடு திட்டமிடப்பட்டு நடைபெறுகிறது
நாட்டில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புசெயலாளர்கள் இல்லாத நிலையில் இன்று
பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடுஎன
நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்சட்டத்தரணி சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று
மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்நிகழ்வு தற்செயலாக
நடக்கின்றவிடயமாக கொள்ள முடியாது. நேரத்தினை சரியாக தெர்ந்தெடுத்து
வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறையாக நாங்கள் இதனை அவதானிக்க முடிகின்றது.
இதனை தற்செயலாக நடைபெறுவதாக நினைத்தால் இது எமது மடமை. இந்த நாட்டினை
பௌத்த சிங்கள நாடு என உணர்த்தும் தேவை அரசுக்கு இன்றுஏற்பட்டிருகின்றது.
இலங்கை அரசுக்கு பல்வேறு கோணங்களின் வெளிநாட்டு அழுத்தங்கள்
கூடுதாலாகஇடருந்து கொண்டு இருகின்றது. இதனை தவிர உள்நாட்டிலும்
வித்தியாசமானஅழுத்தங்கள் அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
யுத்த வெற்றியினை வைத்துக் கொண்டு இந்த நாட்டினை
இருபத்தைந்துவருடங்களுக்கு ஆட்சி நடாத்துவோம் என்று கூறிவந்த
ஜனாதிபதிக்கு இன்று ஐந்துவருடங்களுக்குள் ஆட்டம் கண்டுள்ளனர்.
இதனால்தான் இவர்கள் தேவையற்ற பிரச்சினையை தூண்டி விடுகின்றனர்.
இந்தநாட்டில் ஏனையவர்களுக்கு இருக்கக் கூடிய உரிமையைத்தான்
நாங்கள்கேட்கின்றோம்.
இந்தநாட்டின் உரிமைக்கு நாங்கள் உரித்துடையவர்கள். ஒரு
நாட்டுக்குள்நாங்கள் இறைமையின்றி இருக்கக் கூடாது. எமது உரிமைக்கு
ஏற்றபடி அரசியல்யாப்பு முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நடந்தால் தங்களது ஆதிக்கம் இல்லாம் போய்விடும்.
என்பதற்காவேபேரினவாதத்தினை தூண்டி விடுகின்றனர். இதற்கு நாங்கள் இடமளிக்க
முடியாதுஎனத் தெரிவித்தார்.
Source:-Meelparvai

22 September 2014
களுத்துறை மோதலில் பலர் காயம்(Video)
களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குச் செல்லும் வழியில் வழிபாட்டுக்காக கிறிஸ்தவ திருவுருவச் சொரூபம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட குழப்ப நிலைமைகளைத் தொடர்ந்தே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் உள்ளூர் கிறிஸ்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதாக உள்ளூர் செய்தியாளர் ரத்னசிறி கமகே பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
அதேவேளை அருகில் கூடியிருந்த சிங்கள ராவய உள்ளிட்ட பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பிக்குகள் காவல்துறையிடம் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, கண்ணீர்ப்புகையை பிரயோகித்ததாகவும் அவர் கூறினார்.
Source:-BBC

10 August 2014
களுத்துறையில் ‘மில்பர் கபூர் மன்றம்’ உதயம்
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு ‘மில்பர் கபூர் மன்றம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் பலவிதமான தேவைகளுக்கும், குறைபாடுகளுக்கும் நீண்டகாலமாக முகம் கொடுத்து வருகின்றனர். அவற்றை முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலைமை நீடித்து வருகின்றது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு தான் இம்மன்றத்தை ஸ்தாபித்து இருப்பதாக அதன் ஸ்தாபகரும், தலைவரும், பேருவளை நகர சபைத் தலைவருமான மில்பர் கபூர் இன்று ( 10 ஆம் திகதி ) தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இம்மாவட்ட முஸ்லிம்களைத் தேசிய மட்டத்தில் முன்னணியில் பிரகாசிக்கக் கூடியவர்களாகக் கட்டியெழுப்புவதும், எவரிலும் தங்கியிராது சுயமாக முன்னேற்றமடைந்தவர்களாக அவர்களை மேம்படுத்துவதும் இம்மன்றத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் மேம்பாட்டைப் பிரதான நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த மில்பர் கபூர் மன்றம் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு பெந்தொட்ட பீச் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது. களுத்துறை மாவட்டம் மிகவும் பெரியதொரு நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசம். இங்கு களுத்துறை, பேருவளை, மக்கோன, தர்காநகர், பாணந்துறை, அட்டுலுகம, வெலிப்பன்ன, வியங்கல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இம்மாவட்ட முஸ்லிம்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் பல குறைபாடுகளுக்கும் தேவைகளுக்கும் முகம் கொடுத்தவர்;களாக இருக்கின்றனர். அவற்றை முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படாத நிலமை நீண்ட காலமாக தொடர்கின்றது.
அவ்வெற்றிடத்தை நிரப்பி களுத்துறை மாவட்ட முஸ்லிம்களை கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் மேம்படுத்துவதை பிரதான இலக்காகக் கொண்டு தான் இம்மன்றம் அமைக்கப்பட்டு இருக்கின்றது இதன் மூலம் எதுவித சுயலாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. இந்த அமைப்பின் ஊடாக நாம் முன்னெடுக்கவிருக்கும் சகல மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தேவையான நிதி உள்ளிட்ட உதவி ஒத்துழைப்புக்கள் சமூக நலன்விரும்பிகள், தனவந்தர்கள், கொடைவள்ளல்கள் போன்றோர் மூலமே பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
இந்த வகையில் எமது மன்றத்தின் முதலாவது வேலைத்திட்டமாக களுத்துறை மாவட்டத்திலுள்ள சகல கால்பந்து விளையாட்டுக் கழகங்களையும் அழைத்து, அச்சங்கங்களின் மேம்பாடு குறித்து கலந்துரையாடினோம். இக்கலந்துரையாடலில் இம்மாவட்டத்திலுள்ள 32 கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின. இவ்வளவு தொகைக் கால்பந்து விளையாட்டுச் சங்கங்கள் வேறு மாவட்டங்களில் இருக்குமென நான் நினைக்கவில்லை. அதனால் எமது மாவட்ட விளையாட்டுக் கழகங்களை அபிவிருத்தி செய்வதை முக்கிய பணிகளில் ஒன்றாக நாம் கருதுகின்றோம்.
இக்கலந்துரையாடலின் போது அக்கழகங்களின் பிரதிநிதிகள் தமது தேவைகளையும், குறைபாடுகளையும் எமது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் முன்னணியில் திகழும் ‘சுப்பர் சன் கால் பந்து விளையாட்டுக் கழகத்தை’ மேம்படுத்துவதற்காக 10 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கினேன். அத்தோடு இக்கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஏனைய விளையாட்டுக் கழகங்களுக்கு ஜேஸிகள், பந்து உள்ளிட்ட ஏனைய அடிப்படை உதவிகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும் இவ்விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டு வீரர்களது ஆரோக்கியம் குறித்து விளையாட்டுத் துறை மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வந்து விசேட மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கும் நாம் தீர்மானித்திருக்கிறோம். அத்தோடு மாவட்டத்தில் உள்ள சிறிய விளையாட்டு மைதானங்களை எமது மன்றத்தின் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கும் உத்தேசித்துள்ளோம்.
இதேவேளை இம்மாவட்டத்திலுள்ள 32 விளையாட்டுக் கழகங்களையும் உள்ளடக்கி இவ்வருட முடிவுக்குள் மாபெரும் சமாதான கால்பந்து விளையாட்டுப் போட்டி ஒன்றையும் இம்மாவட்டத்தில் நடாத்தவதற்கு தீர்மானித்துள்ளோம். இதில் வெற்றி பெறும் அணிக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும். அதேநேரம் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள, ஆனால் எதுவித தொழில் வாய்ப்பும் அற்ற விளையாட்டு வீரர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பகுதி நேர தொழில் வாய்ப்புக்களையாவது பெற்றுக் கொடுக்கவும் உத்தேசித்துள்ளோம்.
இவ்வாறு இம்மாவட்ட விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக உதவி ஒத்துழைப்புக்களை நல்குகின்ற நாம் விளையாட்டு வீரர்களில் இருந்தும் சில சேவைகளை எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக இரத்ததான முகாம்களை நடாத்துதல், அனர்த்தங்களின் போது அவசர உதவிகளுக்கான ஒத்துழைப்புக்களை நல்குதல் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக நாம் அளிக்கின்ற உதவி ஒத்துழைப்புக்கள் மூலம் தேசிய மட்டத்தில் எமது வீரர்களை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ள இளம் யுவதிகளுக்கு முன்பள்ளி கற்கை நெறியை எமது மன்றத்தின் அனுசரணையோடு நடாத்துவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு சமையல் கலை, தையல் பயிற்சி, சிறுவர் உளவள மேம்பாடு ஆகிய துறைகளிலும் பயிற்சிகளை அளிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
இதேநேரம் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாடுகளையும் தேவைகளையும் இனம் காண்பதையும,; வறிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்விக்கு உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதையும் நோக்காகக் கொண்டு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களை எமது மன்றம் அடுத்த இரு வாரங்களுக்குள் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அக்கலந்துரையாடலின் அடிப்படையில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்படும்.
அதேநேரம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த. சாதாரண தர / உயர் தர பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கென முன்னணி ஆசிரியர்களைக் கொண்டு விசேட கருத்தரங்குகளை நடாத்தவும் திட்டமிட்டுள்ளோம். இம்மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கான சகல நடவடிக்கைகளும் பாடசாலை அதிபர்கள் வழங்கும் யோசனைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்.
மேலும் இம்மாவட்ட மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவசக் கிளினிக்குகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள், நடமாடும் மருத்துவ முகாம்கள் என்பன நடாத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் இம்முகாம்களை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். நாம் முன்னெடுக்கும் இந்த அனைத்துச் சேவைகள் மூலமும் எமது மாவட்ட முஸ்லிம் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றோம்.
இது ஒரு பாரிய வேலைத்திட்டம். எமது சமூகத்தின் மேம்பாட்டையும் முன்னேற்றத்தையும் அடிப்படை இலக்காகக் கொண்டு தான் நாம் இதனை முன்னெடுக்கின்றோம். எம்மால் மாத்திரம் இப்பணியில் முழுமையான வெற்றியை அடைய முடியாது. ஆகவே இவ்வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பலாபலன்களைப் அடைந்து கொள்வதற்காக எம் சமூக மேம்பாட்டில் ஆர்வமும் அக்கரையும் கொண்ட சகலரையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். எமது இவ்வேலைத்திட்டத்திற்குக் கால எல்லை குறிக்கப்பட்டிருக்கிறது. இக்கால எல்லைக்குள் எமது வேலைத்திட்டங்களின் பிரதிபலனாக சமூகத்தில் முன்னேற்றங்கள் ஏற்படுமாயின், இவ்வேலைத் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்தோடு ஏனைய மாவட்டங்களுக்கும் எமது மன்றத்தின் சேவைகள் விஸ்தரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Thanks: sonakar .com
21 December 2013
பள்ளிவாசல்களை மிரட்டும் அசரீரி
விடிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒலிக்கின்ற
‘அதான்’ (பாங்கு) ஒலியைக் கேட்டு நேரகாலத்துடன் கண்விழித்து,
தமது கடமைகளை அதிகாலை வேளையிலேயே ஆரம்பித்ததாக சிங்கள
தலைவர்கள் கூட பெருமையுடன் கூறிய காலமொன்று இருந்தது.
இன்று… பள்ளிகளில் ‘பாங்கு’ சொல்வதற்கும் தொழுவதற்கும்
தடைபோடுமளவுக்கு நாகரிகம் பின்னோக்கி கூர்ப்படைந்திருக்கின்றது. இனவாதம் நமது தேசத்தின் வெட்கக்கேடாக
வளர்ந்து கொண்டிருக்கின்றது அல்லது வளர்த்து
விடப்பட்டிருக்கின்றது.
வரலாற்றை மீள் வாசிப்புச் செய்கின்ற போது, இனவாதிகளும்
அவர்களது மத சகிப்புத்தன்மையில்லா மனநிலையும்
சிறுபான்மை இனங்கள் மீதான கட்டுங்கடங்கா காழ்ப்புணர்வும் இன்னும்
கூர்ப்படையாமல் ‘கரப்பான் பூச்சி’ போல
மாற்றமின்றி அப்படியேதான் இருந்து கொண்டிருக்கின்றன
என்பதை நம்பும் காலம் வெகுதொலைவில் இல்லை. தார்ப்பரியத்தை சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றலுள்ள சிங்கள
சகோதரர்கள் கூட முகம் சுழிக்கும்
அளவுக்கு சிறுபான்மை இனங்களின் - அதிலும் குறிப்பாக
முஸ்லிம்களின் மத அடையாளங்கள் மீதான சம்ஹாரமும்
இனவெறுப்பு பிரசாரமும் கொதிநிலைக்கு வந்திருக்கின்றது.
ஒரு சாக்கடையை மூக்கைப் பொத்திக் கொண்டு கடந்து செல்வது போல் அன்றேல் மாட்டுச்சாணம் காலில் படாமல் விலகிச் செல்வது போல்
இனவாதத்தை கடந்து செல்வதைத் தவிர
வேறு வழியில்லை என்பது போன்றதொரு மாயை நம்மையெல்லாம்
சூழ்ந்திருக்கின்றது. தொடர் நாடகங்கள் ஒரு தொலைக்காட்சித் தொடர்நாடகம் போல இனவாதத்தின் காட்சிகள்
தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன - முடிவின்றி.
இவ்வார காட்சி தெஹிவளை,
கொஹுவலை பள்ளிவாசல்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும்
கல்லெறிதல் பற்றியது. கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை மற்றும்
கொஹூவலை பிரதேசங்களில் இருக்கும் மூன்று பள்ளிவாசல்கள்
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இப்
பள்ளிவாசல்களின் பரிபாலன சபையினர் பொய் சொல்லவில்லை என்றால்
இந்தச் செய்தி நம்பகரமானது. அதன்டிபடி, தெஹிவளை அத்திட்டிய
மஸ்ஜிதுல் ஹிபா, கொஹுவலை தாருல் ஷாபி தெஹிவளை தாருல் அர்கம் ஆகிய பள்ளிவாசல்களில் அல்லது தொழுகை நடத்துமிடங்களில்
இனிமேல் தொழுகை நடத்த வேண்டாம் என்று பொலிஸ் உடையணிந்தவர்கள்
வந்து கடுந்தொனியில் கட்டளையிட்டுச் சென்றிருக்கின்றனர். இப் பள்ளிவாசல்களை பௌத்த சாசன அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்
அதுவரைக்கும்
தொழுகை நடத்தக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய கிட்டத்தட்ட தொழுகைகள் கைவிடப்பட்டிருந்த நிலையில்,
கொஹு வலை கடவத்தை வீதியில் அமைந்துள்ள தாருல்
ஷாபி பள்ளிவாசல் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் பொலிஸ் மா அதிபரின்
கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அமைச்சர் றிசாட்,
“பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக
உருவாக்கப்பட்ட வக்பு சபையே இலங்கையில்
பள்ளிவாசல்களை நிர்வகிக்கின்றது. எனவே அவற்றை புத்தசாசன அமைச்சில் பதிவு செய்ய வேண்டிய
கட்டாயம் கிடையாது. எனவே இவ்வாறான
நடவடிக்கைகளை எடுப்பதானது முஸ்லிம்களிடையே மீண்டும்
ஒருவித அச்சத்தையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது தடுக்க வேண்டும்”
என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதிக்கான
அமைச்சருமான ஹக்கீம் இது குறித்து ஜனாதிபதியின்
நேரடி கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார். ஹக்கீம்
இது பற்றி தன்னிடம் எடுத்துக்கூறும் வரை தனக்கு இச்சம்பவம்
தொடர்பில் எதுவுமே தெரியாது எனவும், புறநகர்ப்பகுதியில்
குர்ஆன் மத்ரசா ஒன்றில் தொழுகை நடத்துவது பற்றிய முறைப்பாடு கிடைத்தது குறித்தே தான்
கேள்விப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இது விடயமாக கவனம் செலுத்துவதாக
அமைச்சருக்கு அவர் உறுதியளித்திருக்கின்றார். இதற்கிடையில், வழமைபோல ஆச்சரியம்
ஒன்று நிகழ்ந்திருக்கின்றது. அதாவது – மேற்குறிப்பிட்ட
பள்ளிவாசல்களில் ‘தொழுகை நடத்த வேண்டாம்’ என பொலிஸார்
எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை என்றும் அவ்வாறான
அதிகாரம் எதுவும் பொலிஸாருக்கு கிடையாது எனவும் பொலிஸ்
பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அடித்துக் கூறியுள்ளார்.
சீருடையில் வந்தோர்
இந்தச் சம்பவங்களை கோர்வையாக நோக்க வேண்டியிருக்கின்றது.
பள்ளிவாசலுக்கு சீருடைதாரிகள் வந்ததாக நிர்வாகம்
முறையிட்டுள்ளது, கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனை அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு எத்தி வைத்திருக்கின்றனர்.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று பாதுகாப்பு தரப்பு
கூறுகின்றது. இப்படித்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பல
நடவடிக்கைகளுக்கு யாரும்
உரிமை கோருவதில்லை அல்லது அப்படி எதுவுமே நடக்கவில்லை
என்றும் கூறப்படுவதுமுண்டு. கடைசியில் அப்படி ஒன்றும்
நடக்கவில்லை, எல்லாம் அசரீரி அல்லது மாயத் தோற்றம்
என்று கழிவிரக்கம் கொள்வதைத் தவிர அம்மக்களுக்கு வேறுவழி இருப்பதில்லை. முஸ்லிம்களுக்கு தொழுகை என்பது அவர்களின் மார்க்கத்தின்
அடிநாதமாக இருக்கின்றது.
நேரம்
தவறாது தொழுகையை நிறைவேற்றுமாறு அவர்களது மார்க்கம்
கட்டாயப்படுத்தியிருக்கின்றது. சனத்தொகைப் பரம்பலும்
மேற்குறிப்பிட்டது போன்ற சில காரணங்களுமே பள்ளிவாசல்கள் தோற்றம் பெறுவதை தவிர்க்கவியலாததாக ஆக்கியிருக்கின்றது. இதுதவிர, பள்ளிவாசல்கள் ஒருக்காலும் சிங்கள மக்களை மதம்
மாற்றுவதற்காகவோ தமிழ்
மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்காகவோ
உருவாக்கப்படுவது கிடையாது. ஆனால் அப்படியான
ஒரு கருத்துநிலையை பேரினவாதிகளே கிளப்பி
விட்டிருக்கின்றார்கள். தமிழர்களுக்கு பாடம் புகட்டிவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்ற கடும்போக்குவாதம், முஸ்லிம்களையும்
ஒன்றுக்கும் இயலாதவர்களாக மாற்றிவிட
ஒரு மனக்கணக்கு போட்டிருக்கின்றது. அதன் தொடர்
விளைவுகளாகத்தான் - ஹலாலும் பர்தாவும் பள்ளிவாசல்களும்
காவு கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தெஹிவளை பள்ளிவாசல்கள் அச்சுறுத்லுக்கு உள்ளாகியுள்ளதாகவும்
சீருடைதாரிகள் வந்து தொழ வேண்டாம் என்பது கூறியதாகவும்
பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறியது உண்மை என்றால், அப்படி ஒன்றும்
நடக்கவில்லை எனும் பொலிஸ் தரப்பின் மறுப்புரையில் லொஜிக்
பிழைக்கின்றது. மறுபுறத்தில் பொலிஸ் பேச்சாளர் மிகச் சரியான,
உண்மைக்குண்மையான அறிக்கையையே வெளியிட்டுள்ளார் என்றால், பள்ளிவாசல் நிர்வாகிகள் பொய் சொல்லியிருக்கின்றார்கள்
என்றே அர்த்தமாகும். அவ்வாறு இல்லை, இரண்டும் சரியே என்று இரண்டும் கெட்டான்
நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றால், சீருடையில் வந்தவர்கள்
யார்? என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும். உண்மையில்
அவ்வாறு வந்தவர்கள் பொலிஸ் காரர்கள்
என்பது கண்டுபிடிக்கப்பட்டால் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்காக
தலைமையகத்திற்கு தெரியாமல் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதேபோல் அவர்கள் போலி பொலிஸ் உடையில் வந்த விசமிகள் என்றால்
அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து பகிரங்கப்படுத்த வேண்டும்.
இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள
இரு பொலிஸ் குழுக்களும் நிறைவேற்ற வேண்டுமென மக்கள்
எதிர்பார்க்கின்ற பணிகள் இவைதான்.
இலக்கின் ரிஷிமூலம்
கொழும்பின் புறநகர் பகுதிகளான வெல்லம்பிட்டிய, ராஜகிரிய,
தெஹிவளை பிரதேசங்களில் அதிகமான தமிழ், முஸ்லிம்கள்
வீடு காணிகளை வாங்கி குடியேறி இருக்கின்றார்கள். ஆனால்
அதனை பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு கடும்போக்கு சிங்களவர்கள்
பக்குவப்படவில்லை. அந்த வகையில், ராஜகிரியவில் பள்ளிவாசல்
ஒன்றின் இருப்பு எதற்காக கேள்விக்குட்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்திற்காகவே தெஹிவளை, கொஹுவலை பள்ளிகளும்
இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம். எது எப்படியிருப்பினும், அவரவர் தாம் விரும்பிய
மார்க்கத்தை கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கும் ஜனநாயக
நாடொன்றில், அதற்கு தடை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத
செயலாகும். பள்ளிவாசல்கள் ‘வக்பு’ சபையின் கண்காணிப்பின் கீழ்
இயங்குகின்றன. இவற்றை புத்தசாசன அமைச்சில் பதிய வேண்டும் என்ற
எந்தக் கடப்பாடும் முஸ்லிம்களுக்கு இல்லை. அப்படி என்றால் அது குறித்து அரசாங்கம் முன்கூட்டியே பகிரங்க அறிவித்தல்
ஒன்றை வெளியிட வேண்டும். அதுவும் முஸ்லிம் சமய கலாசார
திணைக்களத்தின் மேற்பார்வையிலேயே அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதைவிட்டு விட்டு தொடர்ச்சியாக
பள்ளிவாசல்களை வீம்புக்கு இலக்கு வைத்தல் நல்லதற்கல்ல. அதற்காக எல்லாப் பிழைகளையும்
இனவாதிகளே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று கூறவரவில்லை.
முஸ்லிம்களின் பக்கத்திலும் தவறுகள், ஆவணப் பற்றாக்குறைகள்,
ஓட்டைகள் இருக்கலாம். உதாரணத்திற்கு நாட்டிலுள்ள
ஏதோவொரு பள்ளிவாசல் தொடர்பான எதேனும் ஒரு ஆவணத்தில்
பிடிகொடுக்கக் கூடிய விடயங்கள் ஏதாவது இருப்பதற்கு வாய்ப்புள்ளது. கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக்
கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்ற இனவாத
சக்திகளுக்கு இதுவே ஒரு துருப்புச் சீட்டாக அமைந்து விடும். அதேவேளை, மத்ரசாக்களிலும் தொழ முடியும்
என்பது முஸ்லிம்களின் உரிமை என்பதில் மறு கருத்தில்லை. அரச
தலைவரிடம் அமைச்சர் ஹக்கீம் கோரியிருப்பது போல் அதற்கான
அனுமதியும் கிடைக்க வேண்டும்தான். ஆயினும் சிங்களவர்கள்
செறிந்து வாழும் சூழலில் அமைந்துள்ள மார்க்க
போதனை பாடசாலை ஒன்றில் வெளியில் தெரியும்படி தொழுகை நடத்துவது இனவாதிகளின்
கண்களை குத்தவே செய்யும் என்ற யதார்த்தத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டியிருக்கின்றது. கொஹுவலை பகுதியிலிருந்தும் அவ்வாறான
ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது அரச தலைமையின்
காது வரைக்கும் சென்றிருக்கின்றதென்றால் பார்க்க
வேண்டியதுதானே! மத்ரசா ஒன்றில்
தொழுகை நடாத்துதவற்கு எதிராக பிக்கு ஒருவர் செய்த
முறைப்பாட்டை பாதுகாப்பு தரப்பினர் பரிசீலிக்க தொடங்கியுள்ளனர். இங்கு ‘மத்ரசா’
என்று கூறப்படுவது மேற்குறிப்பிட்ட பள்ளிவாசல்களில்
ஒன்றையா என்பதில் சிறிது மயக்கம் இருந்தாலும், பள்ளிகளில்
தொழுவதற்கே விடாதவர்கள் மத்ரசாக்களில்
தொழுவதை விரும்பமாட்டார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும்
கிடையாது.
வருத்தத்திலும் வருத்தம்
இந்த 3 பள்ளிவாசல்களிலும் தொடர்ச்சியாக தொழுகை நடத்தினால்
பிரச்சினை வரலாம் என்ற நல்லெண்ணத்திலேயே பொலிஸார் (என
நம்பப்படும் நபர்கள்) தொழ வேண்டாம் என கூறியதாகவும்
ஒரு கருத்து இருக்கின்றது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
இப்படிப் பொறுப்புடன் நடந்து கொண்ட அவர்கள்,
தொழுகை கைவிடப்பட்ட கொஹுவலை பள்ளிவாசல் தாக்குதலுக்கு இலக்காகாத வண்ணம் முன்கூட்டியே பாதுகாக்க
தவறிவிட்டனர் என்பது வருத்தத்திற்குரியது. அதைவிட வருத்தமான செய்தி ஒன்று இருக்கின்றது. கேட்டுக்
கேட்டுப் புளித்துப் போன சேதி. அதாகப்பட்டது –
கொழும்பிற்கு மிக அருகில் இருக்கின்ற 3 பள்ளிவாசல்களில்
தொழுகை நடத்துவது யாராலோ தடுக்கப்பட்டிருக்கின்ற போதும் 2
முஸ்லிம் அமைச்சர்களும் இரண்டு மூன்று மக்கள்
பிரதிநிதிகளும்தான் இதுபற்றி வாய்திறந்து ஏதோ பேசியிருக்கின்றார்கள்.
இரண்டு ‘டசினுக்கும்’ அதிகமான முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும்
முழு, அரை அமைச்சர்களில் மற்றைய எல்லாரும் ‘பிடில்’
வாசித்துக் கொண்டிருக்கின்றனர். கொழும்பில் கோலோச்சும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இதில்
உள்ளடக்கம். தங்களின் கால் செருப்பு அறுந்ததில் இருக்கின்ற
கரிசனை அளவுக்குக் கூட, முஸ்லிம்களின் இனத்துவ அடையாளங்கள்
பறிக்கப்படுவது குறித்த அக்கறை அவர்களிடம் இருப்பதாக இந்த
பழாய்ப்போன வாக்காளப் பெருமக்களுக்கு தெரியவில்லை. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று தமிழில்
ஒரு பழமொழி உண்டு. இங்கு ‘கோயில்’ எனக்
குறிப்பிடப்படுவது எல்லா மத வழிபாட்டுத் தலங்களும்தான்.
ஏனென்றால் மனிதனை நல்வழிப்படுத்தும்
போதனை மையங்களாகவே எக்காலத்திலும்
அவை இருந்து கொண்டிருக்கின்றன. விகாரைகளும் கோவில்களும் தேவாலயங்ளும் பள்ளிவாசல்களும் இவ்வகையானவையே. இவற்றில்
நடக்கின்ற பிரித் வைபவத்தை, பூசைகளை, திருப்பலிகளை,
தொழுகைகளை நிறுத்துவதற்கோ தடை விதிப்பதற்கோ உத்தியோகபூர்வ
அதிகாரமோ தார்மீக உரிமையோ எந்த சக்திக்கும் இம்மியளவும்
கிடையாது. நாட்டில் மூடப்பட வேண்டிய அல்லது சட்ட வரைமுறைக்குள்
கொண்டு வரப்பட வேண்டிய விடயங்கள் வேறுபல இருக்கின்றன.
போலி மருத்துவ நிலையங்கள், சட்ட விரோத
கருக்கலைப்பு மையங்கள், விபசாரத்திற்காக நடத்தப்படுகின்ற
மசாஜ் நிலையங்கள், போதைப் பொருள் கடத்தல் நிறுவனங்கள் … போன்ற
இன்னும் ஏகப்பட்ட நாசகார வேலைகளை ஒழிக்க வேண்டியிருக்கின்றது.
வரலாற்றின் படிப்பினை
அதைவிட்டு விட்டு எந்த மதத்தினதும் வழிபாட்டிடத்திலான
வழிபாடுகளை தடை செய்வது மிகப் பெரிய சமூக எதிர்
விளைவுகளை கொண்டு வரும்.
தானுண்டு தன்பாடுண்டு என்று வாழ்ந்து வருகின்ற சகோதர
இனங்களுக்கு இடையில் பரஸ்பரம் வேண்டத்தகாத புதிய பிளவுகள்,
மனக்கசப்புக்கள், நம்பிக்கையீனங்கள் ஏற்படவும் காரணமாகிவிடும். 1990 களில் பள்ளிகளுக்குள் தொழுது கொண்டிருந்த
அப்பாவி முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர்.
காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் வேறு சில இடங்களிலும்
இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின்
முதுகுகளை நோக்கி புலிகள் துப்பாக்கியால் உரக்கப்
பேசினார்கள். அதுகாலவரைக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை மானசீகமாக ஏற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் மக்கள்
அந்தப் பள்ளியில் முரண்பட்டனர். இறைவனை தொழுமிடத்திற்குள் புகுந்து மனிதம்
வேட்டையாடப்பட்டதை எக்காரணத்திற்காகவும் மன்னிக்க அவர்கள்
கடைசி வரையும் மறுத்துவிட்டனர். ஆக, பள்ளிவாசலிலான
தமது வழிபாடு அச்சுறுத்தலுக்குள்ளானமையே புலிகளை
முஸ்லிம்கள் நிராகரிக்க அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக
அமைந்து விட்டது. இதுதான் வரலாறு. இப்போது அதற்கு ஒப்பான ஒரு கைங்கரியத்தையே பேரினவாதமும்
முடுக்கி விட்டிருக்கின்றது. தொழுகை நடத்தும் இடங்கள்
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தொழுவதற்கு சிவப்புக்
கொடி காட்டப்படுகின்றது. இது இப்படியே போனால்… விடுதலைப் புலிகள் முஸ்லிம்களால்
எவ்வாறு வெறுத்தொதுக்கப்பட்டார்களோ அவ்வாறே சிங்கள
இனவாதிகளும் அதற்கு சூடம் காட்டுபவர்களும் நோக்கப்படுவார்கள்.
அதன் பின்னணியில், காலவோட்டத்தில் சிங்கள – முஸ்லிம் உறவிலும்
கீறல் விழும் என்பதை வரலாறுகளில் இருந்து கற்றுக் கொள்ள
வேண்டும்.
வரலாறு முக்கியம் அமைச்சரே !
-ஷேக்ராஜா
நன்றி :வீரகேசரி

02 November 2013
எயர் அராபிய விமானத்தில் குழந்தை பிரசவித்த இலங்கை பெண் (வீடியோ இணைப்பு)
துபாயிலிருந்து இலங்கையைநோக்கிப் பறந்து கொண்டிருந்த எயர் அராபிய
விமானத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் பிள்ளையொன்றைப் பிரசவித்த
சம்பவமொன்று (31-10-2013) இடம்பெற்றுள்ளது விமானத்தை அவசரமாகஓமானில்
தரையிறக்கி அப்பெண்ணையும் குழந்தையையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்க
ஏற்பாடு செய்ததாம். துபாயில் பணிப்பெண்ணான இந்த கர்ப்பிணிப்
பெண்,இவ்விமானத்தில் இலங்கைக்கு வரும் போது மேல் வானில ட பிரசவ வலி
ஏற்படவே விமானத்தில் இருந்த பணியாட்கள் மற்றும் இலங்கை பனிப் பெண் ஒருவர்
அருகில் இருந்துள்ளனர்.
Thanks: jaffna muslim,Hiru

10 October 2013
25 மாவட்டங்களில் நாளை அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை
நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் நாளைய தினம்
(11) சுனாமி, மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட
அனர்த்தங்கள் தொடர்பான
முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு இடம்பெறும்
என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது. சர்வதேச அனர்த்தக்
குறைப்பு தினத்தை முன்னிட்டு இந்த
முன்னெச்சரிக்கை ஒத்திகை
முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த
முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை (11) வெள்ள அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு ஊட்டும்
நிகழ்வு அநுராதபுரம், பொலன்னறுவை,
வவுனியா, மொனராகலை, குருநாகல் ஆகிய
மாவட்டங்களில் முற்பகல் 11 மணியிலிருந்து 12
மணிவரை முன்னெடுக்கப்படும்.
மண்சரிவு அனர்த்த ஒத்திகை இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கேகாலை, மாத்தளை,
கண்டி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2
மணியிலிருந்து 3
மணிவரை முன்னெடுக்கப்படும்.
சுனாமி ஒத்திகை அம்பாறை, மட்டக்களப்பு,
திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம்,
மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,
கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 3
மணியிலிருந்து 4
மணிவரை முன்னெடுக்கப்படும்.
சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்தினையின் போது ஹம்பாந்தோட்டை பொலிஸ்
பிரிவு மணிக்கோபுரம், திவினுவர
மீன்பிடி துறைமுக மணிக்கோபுரம்,
முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால்
மணிக்கோபுரம் என்பவற்றில்
ஒலி எழுப்பப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Source:அத தெரண - தமிழ்

23 September 2013
மூன்று மாகாணங்களிலும் முதலிடம் பெற்றோர் இவர்கள்தான்
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண
சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
உறுப்பினர்களுக்கான விருப்பு வாக்குகள்
தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நேற்று (22) இரவு 11.30 மணியளவில் சகல
விருப்பு வாக்குகளும் வெளியிடப்பட்டதாக தேர்தலுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் மற்றும்
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டம் ஆகிய
இரு மாவட்டங்களுக்குமான
விருப்பு வாக்குகள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.
மூவரது விருப்பு வாக்குகள் மீள
எண்ணப்பட்டமையே இத் தாமதத்திற்கான காரணம்
என கூறப்படுகிறது.
விருப்பு வாக்குள் அறிவிப்பதற்கு தாமதம்
ஏற்பட்டமையின் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நேற்று (22)
இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இம்முறை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்
மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள்
குழப்பநிலையை ஏற்படுத்தியதன் காரணமாக
கண்டி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் பதற்ற நிலை உருவானது.
வடமேல் மாகாண விருப்பு வாக்கு தொடர்பில்
அநேகரின் கவனத்தை ஈர்த்த, ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிட்ட
தயாசிறி ஜயசேகர அதிக
விருப்பு வாக்குகளை பெற்றார். இலங்கை மாகாணசபை தேர்தல் வரலாற்றில்
அதிகப்படியான
விருப்பு வாக்குகளை தயாசிறி ஜயசேகர
3,36,327 வாக்குகளை பெற்றுக்
கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனான ஜொஹான் பெர்ணான்டோ - 1,34,443
விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட
தி.மு.ஜெயரத்னவின் மகன் அனுரத்த ஜெயரத்ன -
107,644 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்தில்
உள்ளார்.
இவருக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில்,
சரத் ஏக்கநாயக்க 70,174
விருப்பு வாக்குகளுடன் உள்ளார்.
இந்நிலையில் 25 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற வடக்கு மாகாண சபை தேர்தல்
முடிவுகளும் விருப்பு வாக்குகள்
விபரங்களும் விரைவில் வெளியிடப்பட்ன.
வடக்கு, தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில்
அனைவரது கவனத்திற்கும் எதிர்பார்ப்புக்கும்
மத்தியில் வட மாகாண சபை தேர்தல் இடம்பெற்றது.
வடமாகாணசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக்
கட்சி 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப்
பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர்
வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.
வடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில்
அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற
பெருமையும் தமிழரசுக் கட்சியின்
முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.
விக்னேஸ்வரனையே சாரும். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் கூடிய
விருப்பு வாக்குகளை அனந்தி எழிலன் - 87,870
விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள
அதேவேளை மூன்றாமிடத்தில் சித்தார்த்தன் -
39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுக்
கொண்டுள்ளார்.
நன்றி :அத தெரண - தமிழ

12 September 2013
நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதியஎல்லை நிர்ணயத்தால்தம்புள்ளை பள்ளிவாசலுக்கு ஆபத்து
தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித்திட்ட
வேலைகள் நகர அபிவிருத்தி அதிகார சபை
யினால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கென
பள்ளிவாசலையும் உள்வாங்கி புதிய வரைபடம்
ஒன்று தயாரிக்கப்பட்டு நேற்று எல்லைகள் அடை
யாளப்படுத்தப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புதி
தாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள எல்லைகளின்
படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான கழிப்
பறை தவிர்ந்த ஏனைய பகுதிகள் பாதை அபிவி
ருத்திக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தம்
புள்ளை ஹைரியா பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரி
வித்தார். பள்ளிவாசல் நிர்வாக சபை இதற்கு கடும்
எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முஸ்லிம் அமைச்
சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, மாத்
தளை நகர மேயர் ஹில்மி கரீம் என்போ
ருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் அமைப்பின்
தலைவரும்இ பிரதியமைச்சருமான பைசர் முஸ்
தபா இன்று வியாழக்கிழமை தம்புள்ளை பள்ளிவா
சலுக்கு விஜயம் செய்ய உறுதியளித்துள்ளதா
கவும் சலீம்தீன் தெரிவித்தார். நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழு
கைக்கு முஸ்லிம் அமைச்சர்களுக்கும்இ அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிக
ளுக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபையினால்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் விவகாரம் தெ ாடர்பாக நிர்வாக
சபையினால் ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்
இய்யதுல் உலமா சபைக்கும் மற்றும் முஸ்லிம்
அமைச்சர்களுக்கும் ஏற்கனவே பல கடிதங்கள்
அனுப்பியும் அவற்றுக்கு எதுவித பதிலும்
கிடைக்கவில்லையெனவும் நிர்வாக சபை கவலை தெரிவித்துள்ளது. மாத்தளை நகர மேயர் இன்று வியாழக்கி
ழமை நகர அபிவிருத்தி சபை தலைவர் மற்றும்
பள்ளிவாசல்
நிர்வாகிகளை சந்தித்து நிலைமைகளை அறிந்து
ஜனாதிபதி மூலம் சுமுகமான
தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கேசரிக்குத் தெரிவித்தார்.
நன்றி :வீரகேசரி,

22 August 2013
புதிய கல்விக் கொள்கையின் முக்கிய சில பரிந்துரைகள்
5 வயது முதல் 16 வயது வரையான சகல பிள்ளைகளுக்கும் கல்வியினை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோரை தண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும் எனவும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது. முதலாம், இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு வேலை (Home work) கட்டாயமாக்கப்படக்கூடாது எனவும் பாட சாலைப் பிள்ளைகள் கையடக்கத் தொலை பேசியினைப் பயன்படுத்துவது தடை செய்ய வேண்டுமெனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையொன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 23 பேரடங்கிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனை அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர், அரசாங்கம் மாறும்போதும், கட்சிகளின் ஆட்சிகள் மாறும் போதும் கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆளும் மற்றும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு இப்புதிய கல்விக் கொள்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தே இதனைத் தயாரித்துள்ளது. மதத் தலைவர்கள், கல்வி மான்கள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை தெரிவுக் குழுவுக்கு அழைத்து அவர்களின் சாட்சிகள் மற்றும் யோசனைகளைப் பெற்றே இப்புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலவசக் கல்வியை மேலும் பலப்படுத்தும் வகையிலும் ஆட்சிமாறும் போது மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தயாரித்துள்ளோம். இப்புதிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்புதிய கொள்கையின் மூலம் இலவசக் கல்வியைப் பெறும் 40 இலட்சம் மாணவர்கள் நன்மையடைவதுடன் இலவசக் கல்வியும் பலப்படுத்தப்படும். இதன் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்படும் என்றார். புதிய கல்விக் கொள்கையில் கல்வி முறைமை, கல்வி முகாமைத்துவம், தலைமைத்துவம், கல்வித் தரம், கல்வித் துறைசார் சேவைகள், அடங்கலாக கல்வித் துறையுடன் தொடர்புடைய சகல விடயங்களையும் உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தினூடாக கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை 5 வீதமாக உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆரம்பப் பாடசாலை கல்வி மத்திய அதிகாரப் பிரிவினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய சில பரிந்துரைகள்,
* பண்புசார் தரமிக்க சமநிலைமையான கல்வியினைப் பெறுவதற்காக சகல பிள்ளைகளுக்கும் நியாயமான சந்தர்ப்பங்களை வழங்குவது அரசின் பொறுப்பாகும்.
* சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்விச் சந்தர்ப்பத்தினை உறுதி செய்து பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.
* பெரும்பான்மையான இலங்கை சிறார்களின் தாய்மொழி மற்றும் தேசிய மொழி சிங்களம் அல்லது தமிழாக இருக்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச இணைப்பு மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்.
* பாடசாலைகளில் தமது சமயத்தைக் கற்க மற்றும் பின்பற்றவும் மாணவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.
* பாடவிதானம், கற்றல் - கற்பித்தல் ஒழுங்கு விதிமுறைகள், நேரசூசிகள் என்பன சகல 5 வருடங்களுக்கும் ஒருமுறை மாற்றப்பட வேண்டும்.
* சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் பெறுபேறு களுக்கு அமைய பிள்ளைகளுக்கு உயர்தர கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பயிற்சிப் பாடநெறிக்கு வகைப்படுத்தி உள்ளடக்கப்பட வேண்டும்.
* உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பிள்ளைகள் பொருத்தமான பல்கலைக்கழகக் கல்விக்கு ஏனைய மூன்றாம் நிலைக் கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பாட நெறியில் வகைப்படுத்தி ஈடுபடுத்த வேண்டும்.
* பரீட்சைத் திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடக்கும் பரீட்சைகளின் கால எல்லை மீளாய்வு செய்யப்பட வேண்டும். எந்தப் பரீட்சை பெறுபேறுகளை மதிப்பிடும் கால எல்லை 10 வாரங்களில் இருந்து 8 வார காலமாக குறைத்து பெறுபேறு வழங்கப்பட வேண்டும்.
* குறைந்த பட்சம் நாளொன்றில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள் 5 மணித்தியாலங்களும் இடை நிலைப் பிரிவுக்காக 6 மணித்தியாலங் களும் கற்பிக்கப்பட வேண்டும்.
* பாடசாலை பையின் நிறையை குறைப்பதற்கான ஒழுங்குகள் வகுக்கப்பட வேண்டும். புத்தகங்க ளின் பருமனை குறைக்கக் கூடியவாறு அவற்றை சிறிய பிரிவுகளாக அச்சிடுவது மிக முக்கியமாகும்.
* கனிஷ்ட இடைநிலை மட்டங் களுக்கு மேற்பட்ட பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பித்தலை முடியுமான அளவு ஊக்குவிக்க வேண்டும்.
* உயர்தர வகுப்புகளுக்காக கணிப்பொறி (Calculator) பயன்படுத்த இடமளிக்க வேண்டும்.
* சகல மாணவர்களதும் பாடசாலை சமுகமளிப்பு 80 வீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
* தேசிய கல்விக் கல்லூரிகளின் பாடநெறிக்கால எல்லையை 4 வருடங்கள் வரை நீடித்து அதனை பட்டப்பாடநெறியாக மாற்ற வேண்டும்.
* பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்க்கையில் தேசிய கல்வி நிறுவகத்தினூடாக 3 மாதங்களை விட கூடுதல் காலம் முழு நேரப் பயிற்சி வழங்குவது கட்டாயம்.
source:தினகரன்

12 July 2013
மஹியங்கனையில் மஸ்ஜிதுல்அரபா மீது தாக்குதல்: பன்றி இறைச்சியும்வீச்சு
மஹியங்கனை நகரில் உள்ள முஸ்லிம்களின்
வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல்
அரபா மீது நேற்று இரவு இனந்தெரியாத
நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் இராக்கால
வணக்கமான தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில்
ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட
குழுவொன்று குறித்த மஹியங்கனை மஸ்ஜிதுல்
அரபா மீது கல் வீசியுள்ளனர்.
இதனால் பள்ளிவாயலின் நான்கு ஜன்னல்
கண்ணாடிகளும், ஒரு கதவின் கண்ணாடியும் சேதமாகியுள்ளதுடன் பள்ளியின்
உற்பகுதிக்குள் பன்றி இறைச்சியையும்
வீசியுள்ளனர். பள்ளியின் கழிவறைப் பகுதியும்
சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிசில்
முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பொலிசார் பள்ளிவாயலில் காவல்
கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
நன்ற:virakesari

Subscribe to:
Posts (Atom)