தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label news-maggona. Show all posts
Showing posts with label news-maggona. Show all posts

03 March 2024

"எரியும் நட்சத்திரம்"


மர்ஹூமா ஷஹ்னா ஸப்வான் எழுதிய கவிதைகளின் தொகுப்பான எரியும் நட்சத்திரம் நூல் வெளியீட்டு விழா 02.03.2024 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.


 

இந் நிகழ்விற்கு பேனாத் துளிகள் சஞ்சிகையின் ஆசிரியர் ஏ. ஆர். றஜா முஹம்மத் தலைமை தாங்கியதுடன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரும்பு இதழ் ஆசிரியர், ஓய்வு பெற்ற இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்  மதிப்பிற்குரிய ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.


15 February 2021

Marhoom Moulavi Nizam – Scholar with many talents



This message is published, In view of the 
2nd death anniversary of Marhoom Moulavi 
Nizam (Bahji), which falls on February 2. 
Moulavi Nizam was a Alim with a spe-
cialty, a scholar in Sharia, that our society 
has witnessed. He lived as an exemplary 
personality. His professional career extend-
ed as an Alim, scholar, journalist and a 
broadcasting resource person. While 
describing further about Marhoom Nizam, 
the vice President of All Ceylon Jamiathul 
Ulama and Deputy Director of Jamiya Nal-
eemiya Institute A.C.Agar Mohamed (Nal-
eemi) has said that Marhoom Nizam as an 
Alim lad a life with highly respected quali-
ties such as calmness and impartiality. One 
had not seen extremism in his speech, writ-
ings or actions. He had never blamed or 
used inappropriate words on anyone or any 
party. There was courtesy in his words and 
he always adopted a civilized form of 
expressing ideas. 
He abstained from raising controversial 
matters. He did not write speak or behave in 
ways that caused disturbances in society. He 
stressed that where ever Moulavi goes, his 
intention was on Muslim Umma. from this 
we could understand about his good quali-
ties. 
Nizam was born in Maggona on May 21. 
1946 as the second son to Marhooms 
A.L.M.Rasheedh Marrikar and Marhoom A 
Nurul Alavia, both belonged to the genera-
tions of Ayurvedic doctors. He started his 
early education at the Tamil mixed school in 
1952. 

30 March 2019

மக்கொன FLOWER BEES முன்பள்ளி சிறுவர் சந்தை

இன்று(30/03/2019)இடம்பெற்ற மக்கொன FLOWER BEES முன்பள்ளி சிறுவர்களின் சிறுவர் சந்தை

13 March 2019

"பாரம்பரியம்"-moulavi M. R. M. NIZAM



இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ரமழான் மாதத்தையொட்டி செவ்வாய்க்கிழமை 22/05/2018 இரவு 7.15 க்கு ஒலிபரப்பான "பாரம்பரியம்" பேட்டி நிகழ்ச்சி. 

மக்கொன மஹல்லம் கதீப் மௌலவி எம். ஆர். எம். நிஸாம் (பஹ்ஜி) அவர்களை கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னா பேட்டி காண்கிறார். தயாரிப்பு - முஸ்லிம் சேவை பொறுப்பாளர் பாத்திமா ரினோஸியா. ஒலிப்பதிவு உதவி "பாத்திமா மைந்தன்" அன்சார்.

அண்மையில் மௌலவி எம். ஆர் எம். நிஸாம் (பஹ்ஜி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். அன்னாருக்கு வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க பிரார்த்திக்கிறோம்.


Thanks:Najmul Hussain

19 February 2017

கட்டுகுறுந்த படகு விபத்தில் 11 பேர் பலி (VIDEO)


 கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, காணாமல் போனவர்களை தேடுவதற்காக 3 டோரா படகுகளும், ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ளவர்களில் 12 வயதான பிள்ளையொன்றும் உள்ள நிலையில், மேலும் கடலில் மூழ்கிய 32 பேர் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 பேர் பேருவளை வைத்தியசாலையிலும், 6 பேர் நாகொட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
இன்று காலை பேருவளையில் இருந்து களுத்துறை - ஸ்ரீகுருச தேவாலயத்திற்கு சென்ற நபர்கள் பயணித்த படகே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.




03 August 2015

இந்திரக்கரையில் இலவச கண் பரிசோதனை முகாம்



 
இலவச கண் பரிசோதனை வைத்திய முகாம்மொன்று இன்று (03.08.2015)
மக்கொன இந்திரிலிகொட தாருல்  ஹிக்மா  ஜும்மா  பள்ளிவாசளினால்
நடாத்தப்படுகின்றது.
பள்ளிவாசல் முன்றலிள்  இன்று பிற்பகல் 2  மணி வரை நடைபெறும் இம்
முகாமில்   உங்கள்  கண்களையும்  இலவசமாக  பரிசோதனை  செய்து  
கொள்ளலாம்.பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

29 March 2015

மக்கொன அஹதியா பாடசாலையின் 15 ஆண்டு பூர்த்தி விழா

மக்கொன அஹதியா பாடசாலையின் 15 ஆண்டு பூர்த்தி விழாவும் பரிசளிப்பு நிகழ்வுகளும் அல் ஹஸனியா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பிரதம அதிதியாக பாராளுமன்ற உருப்பினர் அஸ்லம் ஹாஜியார் அவர்களும் கெளரவ அதிதியாக மேல் மாகாண சபை உருப்பினர் இப்திகார் ஜமீல் அவர்களும் விசேட பேச்சாளராக அர்க்கம் நூராமித் மெளலவி அவர்களும் மற்றும் புரவலர் ஹாஷிம் உமர் உற்பட இன்னும் பல விசேட அதிதிகளும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
மக்கொன அஹதியாவின் அதிபர் உவைஸ் ஆசிரியர் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார்,
இன்று வெளியிடப்பட்ட மக்கொன அஹதியாவின் 15 ஆண்டு பூர்த்தி நினைவு மலரின் முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இன்னும் மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.




22 November 2014

மக்கொன: ஐ.தே.க பிரதேசசபை உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட தினத்திலேயே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து மூத்த அமைச்சர்கள் உட்பட பெருமளவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளமையை ஐ.தே.கவின் ஆதரவாளர்கள், மக்கொன பகுதியில் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை, இனந்தெரியாதோர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியிருக்கிறார்கள்.

இதன்போது ஐ.தே.க வின் முன்னார் பேருவளை எதிர்க்கட்சித் தலைவர் சமில ரணசிங்க என்பவர் தலையில் குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லையென ஐ.தே.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 August 2014

sltj blood donation-maggona

SLTJ மக்கொன மற்றும் பேருவலைக் கிளைகள் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்று (23/08/2014) மக்கொன அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் 103 பேர் இரத்ததானம் செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

20 April 2013

ரொக்லன் வீதியில் பயங்கர விபத்து

ரொக்லன் வீதியில் பயங்கர விபத்து பஸ் வண்டியில் ரயில் மோதி யுள்ளது
பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

29 November 2012

டிசம்பர் 1ம் 2ம் திகதிகளில் களுத்துறை -அளுத்கமவிற்கு ரயில் கிடையாது

இந்திரிலிகொடயில் பாலம்
திருத்த வேலைகள் காரணமாக
தெற்கு கரையோர ரயில் வீதியில்
களுத்துறை மற்றும் அளுத்கம ஆகிய
பகுதிகளுக்கு இடையில் டிசம்பர் 1ம்
திகதி காலை 9 மணி தொடக்கம் 2ம்
திகதி நண்பகல் 12 மணிவரை ரயில்
சேவை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

23 February 2012

Kalutara-Aluthgama Railway line to be upgraded

  அதிவேக ரயில் பாதை புனரமைக்கப்படுகிறது.

                                       MAGGONA RAILWAY STATION
                                                                                                                          More photoes