தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

03 March 2024

"எரியும் நட்சத்திரம்"


ர்ஹூமா ஷஹ்னா ஸப்வான் எழுதிய கவிதைகளின் தொகுப்பான எரியும் நட்சத்திரம் நூல் வெளியீட்டு விழா 02.03.2024 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.


 

இந் நிகழ்விற்கு பேனாத் துளிகள் சஞ்சிகையின் ஆசிரியர் ஏ. ஆர். றஜா முஹம்மத் தலைமை தாங்கியதுடன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரும்பு இதழ் ஆசிரியர், ஓய்வு பெற்ற இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்  மதிப்பிற்குரிய ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.



எரியும் நட்சத்திரம் கவிதைத் தொகுப்பின் முதற் பிரதி முன்னாள் இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், Dr. ரூமி ஹாஷிம் பவுண்டேஷனின் நிறுவுனர் அல்ஹாஜ் Dr. ரூமீ ஹாஷிம் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், இரண்டாவது பிரதியை Dr. ரூமி ஹாஷிம் பவுண்டேஷனின் செயலாளரும் Fine Cure Pharmaceutical நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான அல்ஹாஜ் ஜஸூக் அஹமட் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிமணி, கலாபூஷணம் என். நஜ்முல் ஹுஸைன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதுடன், பன்னூலாசிரியர், பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திருமதி ரிம்ஸா முஹம்மத் நூல் விமர்சனமுமம் இலங்கை திறந்த பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர் திருமதி ஸுமையா  ஷரிப்தீன் நூல் பற்றிய இரசனைக் குறிப்பும் செய்தனர்.

நூலாசிரியரின் தந்தை ஏ. எச். எம். ஸப்வான் அவர்களின் ஏற்புரையைத் தொடர்ந்து  நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் எம். முஸ்னி முர்ஷிட் நன்றியுரை வழங்கினார். 

நிகழ்ச்சியை செல்வி அஸ்ஹா லாபிர் திறம்படத் தொகுத்து வழங்கினார்.

இந்நூல் வெளியீடு பல விதத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நூலில் இடம்பிடித்துள்ள கவிதைகளில் சொந்தக்காரியான ஷஹ்னா ஸப்வான் இன்று நம்மோடு இல்லை. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இறையடி சேர்ந்திருந்த அவரின் கவிதைகளே நூலுருப் பெற்றிருந்தன. இது போனௌற ஒரு நூல் வெளியீடு தர்கா நகர் வரலாறில் முதல் தடவையாகும்.




இம்முயற்சியை மேற்கொண்டவர்கள் நூலாசிரியரின் குடும்ப அங்கத்தவர்களோ அல்லது நெருங்கிய உறவினர்களோ அல்ல. முகநூல் நட்புவட்டத்தில் ஒன்று சேர்ந்த துடிப்பான இளைஞர் யுவதிகள். இளம் தாரகையின் தூரிகை என்ற இவர்களது குழுவின் திட்டமிடல், நெறியாள்கை, கூட்டுப்பணி என்பன அதிசயிக்கத்தக்க விதத்தில் இருந்தன. மறைந்த கவிதாயினியின் கவிதைகளை மட்டும் தொகுத்ததோடு நின்றுவிடாமல் அவரது விருப் வெறுப்புகளையும் அறிந்து அவற்றையும் வைபவத்தில் வெளிக்காட்டியிருந்தனர். புத்தக அட்டை, மேடை அலங்காரம், அறிவிப்புப் பதாகை என அனைத்தும் நூலாசிரியரின் விருப்பத்திற்குரிய நிறமான ஊதா நிறத்திலேயே வடிவமைத்திருந்தனர்.

இளம் தாரகையின் தூரிகை குழும அங்கத்தவர்களான பர்ஹானா அப்துல்லாஹ் (மக்கொனை), ஆஷிக் ஹுசைன் (ஹெம்மாதகமை), ரஜா முஹம்மத் (அட்டாளைச்சேனை), ஹாஸ்மியா தாஹா (கெகிராவை), ஆகிப் நசூர் (கண்டி), பா. ரம்லா ஹிஷாம் (தர்கா நகர்), ஸல்மான் பின் பாரிஸ் (களுத்துறை), முஸ்னி முர்ஷிட் (எஹலியகொடை), ஹஷ்மத் ஹப்னாஸ் (அக்குரணை), இஷ்ரா பர்வின் (தர்கா நகர்), ஹஸனியா இர்பான் (தர்கா நகர்), திக்ரா ஹனீபா (கண்டி), ரிஸ்லா ஹம்ஸா (மன்னார்), நூர் ஷாஹிதா (பதுளை), அதீகா மஷூர் (ஹெம்மாதகமை) ஆகியோருக்கு வைபவத்தில் பங்கேற்ற அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.


video source : News 1st


No comments:

Post a Comment