தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 July 2014

-தாத்தாரியர்களைத்-தோற்கடித்த-காஸா-இஸ்ரேல்-சிக்கியுள்ள-பொறி

-அப்துல் மலிக் அபூபக்கர்-



ஆக்கிரமிப்பாளன்- ஆக்கிரமிக்கப்பட்டவன் ஆக்கிரமிப்பாளன் யார்? என்பதை
மீள் நினைவுபடுத்த வேண்டிய ஓர் அவசியத்தைகாஸா மீதானபுதிய அத்துமீறல்
தோற்றுவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஆக்கிரமிப்பு இடம்பெறுவது போன்று,
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு நிலைப்பாடுகளைத் தோற்றுவித்து, உலகின்
கவனத்தை வேறு திசைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றது. இங்கு பலஸ்தீன
தேசிய முன்னெடுப்புக்கான நிறுவனத்தின்தலைவர்கலாநிதி முஸ்தபா அல்பர்கூஸி
சிறப்பான ஓர் உதாரணத்தின் மூலம் ஆக்கிரமிப்பாளனை மீண்டும்
அடையாளப்படுத்தியுள்ளார். 1940- 1944 காலப் பகுதியில் வட பிரான்ஸை நாஸி
ஜேர்மனி ஆக்கிரமித்து, புரிந்த அட்டூழியங்களை உலகமே அறியும். நாஸி
இராணுவத்தைஎதிர்த்து பிரான்ஸின் கிராமப் புறங்களில் Maquis எனும்பேரில்
போராட்டக் குழுக்கள் தோன்றின.பின்னர், அனைத்துசுதந்திர போராளிகளும்
கூட்டாக French Forces of Interior எனும் பேரில் நாஸி இராணுவத்தை
பிரான்ஸிலிருந்து வெளியேற்றின.



இங்கு பிரான்ஸ் போராளிகளை
ஆக்கிரமிப்பாளர்கள், நாஸி இராணுவத்திற்கு குந்தகம்விளைவித்தார்கள் எனக்
கூறினால் ஐரோப்பா தாங்கிக் கொள்ளுமா? முதலாவது உலகப் போரில் (1914 -1918)
உஸ்மானிய கிலாபத் பங்கேற்று, தோல்வி கண்டபோது, பலஸ்தீன் பிரித்தானிய
ஆக்கிரமிப்புக்குள் சென்று விட்டது. 1918- 1948 வரையான காலப் பகுதிக்குள்
ஐரோப்பாவில் சிதறிக் கிடந்த யூதர்களை பிரித்தானியா படிப்படியாக
பலஸ்தீனில் குடியேற்றியது. இக்காலப் பகுதியில் பலஸ்தீனர்களுக்கு எதிராக
யூத ஆயுதக் குழுக்களை பிரிட்டிஷ் காலனித்துவம் உருவாக்கியது.
இவர்களேபின்னர் இஸ்ரேல்இராணுவமாக வடிவமைக்கப்பட்டனர். 1948இல் இஸ்ரேல்
பிரகடனப்படுத்தப்பட்டபோது, பிரிட்டிஷ் பலஸ்தீனிலிருந்து வெளியேறியது.
பிரிட்டிஷ், தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலஸ்தீனை புதிதாக தோற்றம்
பெற்ற இஸ்ரேல் இராணுவத்திடம் கையளித்துவிட்டுச் சென்று விட்டது. ஓர்
ஆக்கிரமிப்பாளன் இன்னுமோர் ஆக்கிரமிப்பாளனிடம் பலஸ்தீனை ஒப்படைத்துச்
சென்று விட்டான்.இதுவரை பலஸ்தீனர்கள் சுதந்திரம் கோரி நடத்திய எல்லாப்
போராட்டங்களின்போதும் இஸ்ரேல்,மேற்குலகின் ஆயுத ஆதரவுடன் பலஸ்தீன்
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்,கர்ப்பிணிகள் என நிராயுத பாணிகளைக்
கொன்று குவிப்பதில் கொடூரத்தையே நிரூபித்துள்ளது. குத்ஸும் மேற்கும்
ஐரோப்பா பலஸ்தீன் மற்றும் குத்ஸைக் கைப்பற்ற முதலாவது சிலுவை யுத்தம்
(1096-1099), இரண்டாவது சிலுவை யுத்தம்(1145- 1149), இன்னும் பல தொடர்
சிலுவை யுத்தங்களைநடத்தியே வந்துள்ளது. ஆனால், ஸலாஹுத்தீன் அய்யூபி
(1138- 1193) போன்ற இஸ்லாமிய தளபதிகளுக்கு முன்னால், ஐரோப்பிய முயற்சிகள்
அனைத்துமே தவிடுபொடியாகிப் போயின. இருப்பினும், ஐரோப்பியர்கள் தமக்குள்
எவ்வளவோ முரண்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் ஏன் முதலாவது உலகப் போரில்
ஈடுபட்டு தமது பகையை வெளிப்படுத்தியபோதிலும், பலஸ்தீன் மற்றும் குத்ஸ்
விடயத்தில் ஐக்கியப்பட்டேஇருந்தனர்.குத்ஸ் முஸ்லிம்களிடத்திலிருந்து
பறிக்கப்படவே வேண்டும்என்பதில் ஐரோப்பியர்கள் ஒருமைப்பாட்டைக்
கொண்டிருந்தனர். இதற்கு பலஸ்தீனின் முன்னாள்முப்தி அமீன் அல்ஹுஸைனி
(1895- 1974) சான்று பகர்ந்துள்ளார். பலஸ்தீனில் பிரித்தானியர்கள் இவரைப்
பதவி நீக்கி, கைதுசெய்ய முற்பட்டபோது, அரபு நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து
வந்தார். இறுதியாக, ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தார். 1941இல்
ஹிட்லரைசந்தித்து முஸ்லிம் நாடுகளை காலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த
பிரிட்டிஷ் மற்றும்பிரான்ஸுக்கு எதிராக முஸ்லிம் படை ஒன்றை உருவாக்கவும்
உதவி கோரியிருந்தார். ஆனால், ஜெரூஸலம் பிரிட்டிஷின் பிடியில் முழுமையாக
வீழ்ந்தபோது, முழு ஜேர்மனியின் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மணி அடித்து
கொண்டாடப்பட்டதாக தனது ஆச்சரியத்தை அமீன் அல்ஹுஸைனி வெளியிட்டிருந்தார்.
ஜேர்மனி தனது பகையை பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷுடன் வெளிப்படுத்திய
போதிலும் ஜெரூஸலம் விடயத்தில் ஐரோப்பிய நிலைப்பாடு இன்றுவரை ஐக்கியமாக
தொடர்கின்றது. இன்று இஸ்ரேல்,காஸாவில் சர்வதேச சட்டத்தை மீறி விமானத்
தாக்குதல்களின்மூலம்நூற்றுக் கணக்கான பலஸ்தீனக் குழந்தைகளைக் கொன்று
குவித்தும்கூட, அமெரிக்காவும் ஐரோப்பாவும் மௌனம் சாதித்தே வருகின்றன.
ஜெரூஸலம் விடயத்தில் பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களுக்கும்
ஐரோப்பாவுக்குமிடையில் நிலவி வரும் பகையின் வெளிப்பாடே இந்த மௌனமாகும்.
இந்த மௌனத்தை "புதிய சிலுவைக் கூட்டணி" எனதுருக்கி பிரதமர் ரஜப் தையிப்
எர்துகான் வர்ணித்திருப்பது புதிய ஒரு விடயமல்ல. அவரது வாய் மூலம்
யதார்த்தமே வெளிவந்துள்ளது. அரபுலக மௌனம் கட்டார் மற்றும் துருக்கி
என்பனவே இஸ்ரேலின் அட்டூழியங்களை பகிரங்கமாக எதிர்த்துப் பேசி வருகின்றன.
காஸாவில் சிறுவர்கள், வயோதிபர்கள்மற்றும் பெண்கள் இஸ்ரேலிய விமானத்
தாக்குதல்களில் நூற்றுக் கணக்கில் சல்லடைகளாக வீதிகளில்
கொல்லப்பட்டுக்கிடக்கும் கொடூரக் காட்சிகளைக் கண்டும்கூட அரபிகளின்
மனச்சாட்சி ஆடிப் போகவில்லையா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த
போது, ஜோர்தான் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லய்ஸ் ஷுபைல்லாத்
பின்வருமாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது: "இவ் அரபு ஆட்சியாளர்கள்
சியோனிஸமயமாகி விட்டார்கள். இவர்களின் சர்வதிகாரங்களுக்கு அரபு மக்கள்
அஞ்சுகின்றனர்" இக்கருத்தை பலப்படுத்தும் வகையில், மக்காவின்இமாம்
ஷெய்க்ஸுஊத் அஷ்ஷுறைம் டுவிட்டர் மற்றும் இணையத்தளத்தில் ஒரு செய்தியை
வெளியிட்டுள்ளார். அதில் ஆட்சியாளர்களுக்கு பணி புரியும் பல அரபு
நாடுகளின் ஊடகங்கள், பலஸ்தீன் ஷுஹதாக்களைப் பார்த்து சிரிப்பதை மிக
வன்மையாக கண்டித்துள்ளார்.
பல அரபுஊடகவியலாளர்கள் ஏற்கனவே இஸ்ரேலின் அட்டூழியங்களால் பலஸ்தீனில்
உயிரிழந்தவர்களை"ஷுஹதாக்கள்" என நீண்ட காலமாக கூறி வந்தனர். இப்போது
"பலஸ்தீனில் கொல்லப்பட்டவர்கள்" என்ற புதிய பிரயோகத்தை உபயோகிக்கும் சில
அரபு ஊடகவியலாளர்களையும் இமாம் ஷுறைம் சாடியுள்ளார். ஆரம்பத்தில் அரபு
ஊடகங்கள் இஸ்ரேலை "ஸியோனிஸ எதிரி" என்றே வர்ணித்தன. பின்னர் "இஸ்ரேலிய
எதிரி" என்று குறிப்பிட்டன.தற்போது "இஸ்ரேலியப் படை" என ஒரு பொதுப் பெயரை
அரபு ஊடகங்கள்உபயோகித்து இஸ்ரேலின் கொடூரத்தை சரியாக எடுத்துக்
காட்டாதிருப்பதையும் ஷெய்க் ஸுஊத் ஷுறைம் விமர்சித்துள்ளார்.
இதன்மூலம் ஆட்சியாளர்கள் இஸ்ரேல்நோக்கி சாதகமாக நகரும் அதேவேளை, அரபு
ஊடகங்களும் ஸியோனிஸ மயமாகி வருவது தெளிவாகின்றது. அத்துமீறல் யுத்தம்
ஜூன்12இல் மேற்குக் கரையில் மூன்று யூதக் குடியேற்றக்காரர்கள் காணமால்
போயினர். இஸ்ரேலிய சிறைகளில் பலஸ்தீனக் கைதிகள் உண்ணாவிரதப்
போராட்டத்தைக் மேற்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றது. இவர்களை
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து நிருவாகக் கைதிகள் எனும் பேரில், இஸ்ரேல்
வருடக் கணக்கில் சிறையிலடைப்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லாமல், வழக்குப் பதிவு செய்யாமல் தம்மை
அடைத்து வைத்திருப்பதற்கு எதிராகவே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத்
தொடர்ந்தனர்.
ஆக்கிரமிப்பையும் இஸ்ரேலிய அட்டூழியங்களையும் தாங்க முடியாத பலஸ்தீனர்கள்
இந்த மூன்று வெளிநாட்டு யூதக் குடியிருப்பாளர்களைக் கொலை செய்துவிட்டனர்.
இதன் பின்னர் யூதக் குடியிருப்பாளர்கள் ஜுலை 2ஆம் திகதி 16 வயதுபலஸ்தீன
சிறுவன் முஹம்மத் ஹுஸைன் அபூ ஹுழைரை உயிருடன் எரித்தனர். இச்சம்பவங்கள்
அனைத்துமே இஸ்ரேலினால்ஆக்கிரமிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களில்
இடம்பெற்றுள்ள நிலையில், நெதன்யாஹு அதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்காது
எவ்வளவோ தூரத்திலுள்ள காஸா மீது போரை ஆரம்பித்தார். பத்து நாட்களாக
விமானத்தாக்குதல்களில் நிராயுத பாணிகளைக் கொன்று குவித்த பின்னரும் ஹமாஸ்
மற்றும் ஏனைய போராளிக் குழுக்களின் ஏவுகணைகள் இஸ்ரேலின் ஆழத்துக்குச்
சென்று தாக்குவதை இஸ்ரேலியப் படையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தனது விருப்பத்தின் பிரகாரம் எகிப்தின் ஸீஸி வரைந்த யுத்த
நிறுத்தத்திற்கு பலஸ்தீனர்களை நிர்ப்பந்தித்தார் நெதன்யாகு. ஆனால், அவர்
எம்மீது திணித்த போரை நாங்கள் எமது இஷ்டப் பிரகாரமே முடிப்போம். காஸா
மீதான எட்டு வருட அனைத்துப் பொருளாதார தடைகளும் நீக்கப்பட வேண்டும்.
இத்தடை காஸா மக்களைமிருகங்களை விடவும்மோசமான நிலையில் வாழ
நிர்ப்பந்தித்துள்ளது. இது, காஸா மக்கள் மீது மெது மெதுவாக மரண தண்டனையை
அமுல்செய்யும் இஸ்ரேலினதும்
மேற்கினதும் திட்டமாகும். காஸாவை ஒரு பெரும் சிறைச்சாலையாக ஆக்கியுள்ள
இஸ்ரேலிய தடை விலக்கப்பட வேண்டும், காஸாவின் கடற்பரப்பில் மீன் பிடிக்க
அனுமதிக்கப்பட வேண்டும், காஸாவின் வயல் நிலங்களில் விவசாயத்திற்கு அனுமதி
தரப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளுக்கு உடன்பட்டால், யுத்த
நிறுத்தத்துக்கு வருவோம் என பலஸ்தீனர்கள் கூறினர். இன்னும் மிக
முக்கியமாக, ஹமாஸிடம் பிடிபட்டிருந்த இஸ்ரேலியப்படை வீரர் ஜல்ஆத்
ஷாலித்தை விடுவித்தமைக்குப் பகரமாக, சுமார் ஆயிரம் பலஸ்தீனக் கைதிகளை
இஸ்ரேல் விடுவித்திருந்தது. ஆனால், இப்போதைய யுத்தம் ஆரம்பித்தபோது
அவர்களில் பெரும்பாலானோரை இஸ்ரேல்மீண்டும் சிறயிலடைத்துள்ளது.
இவர்களை ஒப்பந்தத்தை மீறி நெதன்யாகு கைது செய்திருப்பதால், இவர்களையும்
விடுவிக்க வேண்டும் என்பது யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ் இட்டுள்ள
நிபந்தனையாகும். இதனை வரவேற்காத நெதன்யாகு, காஸாவிற்குள் தரைத் தாக்குதலை
துவக்கியுள்ளார். படையினர் உள்நுழைந்த முதல் நாளிலே, இஸ்ரேலின் மிகச்
சிறப்பான "கோலானி" படையணிக்கு காஸாவின் ஷுஜாஇய்யா தெரு சவக்குழியாக
மாறியது. அதன் தளபதி கஸ்ஸான் இல்லியான் காயமடைந்துள்ளதுடன், ஏனைய
துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஷஉல் அரோன் எனும் இஸ்ரேலியப்படை வீரர்
ஹமாஸினால்கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலிய துருப்புக்கள் பல
எண்ணிக்கையில்கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். "காஸா இலகுவாக
குறிவைக்கப்படும் நரகம்.அங்கு தொடர்ந்தும் இருப்பது
பைத்தியகாரத்தனமாகும்" என அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜோன் கெர்ரி பொக்ஸ்
செய்திச் சேவையில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்குச் செல்வதை
தவிர்க்குமாறும் தமது பிரஜைகளைக் கேட்டுள்ளது.ஹமாஸின் ஏவுகணைகள்
இஸ்ரேலின் உள்ளே வீழ்வதால் அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே, கனடா...என பல
நாடுகள் விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. சுற்றுலா உட்பட பல பொருளாதார
ஊக்குவிப்புத் துறைகள் வீழ்ச்சியடைந்து பில்லியன் கணக்கில் யூத தேசம்
நஷ்டங்களை சந்தித்துள்ளது. ஒரு யுத்தத்திலிருந்து வெளியேறுவது, அதனுள்
நுழைவது போன்று இலகுவானதல்ல என்பதை நெதன்யாஹுவிற்கு பலஸ்தீனர்கள்
கற்பித்துள்ளனர் என அரபுலக சிந்தனையாளர் கலாநிதி அஸ்மி பஷாரா
கூறியுள்ளார். வெளியேற முடியாது நெதன்யாஹு திணறிக் கொண்டிருப்பதை, அவரது
அறிக்கைகளே சுட்டிக்காட்டுகின்றன. யுத்தக் குற்றங்களுக்காக ஹமாஸை
விசாரிக்க வேண்டும் என்கிறார் நெதன்யாஹு. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின்
கீழுள்ள பலஸ்தீனர்கள் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க எவ்வழியிலும் போராடலாம்
என்பதற்கு சர்வதேச சட்டமே இடம் கொடுத்துள்ளது என்பது நெதன்யாஹுவிற்கு
மறந்து விட்டதோ புரியவில்லை. யூதக் குடியேற்றக்காரர்களை பலஸ்தீனர்கள்
கொலை செய்தனர் என்பது புத்திக்கு அப்பாற்பட்டதாகும். பலஸ்தீனர்களின்
நிலங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் யூதர்களைக் குடியேற்றுவது பெரும்
அத்துமீறலாகும். யூதக் குடியேற்றக்காரர்களே ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால்,
அவர்களை விரட்டியடிக்க ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு துன்பப்படும்
பலஸ்தீனர்களுக்கு சர்வதேச சட்டமே இடமளிப்பதைஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு
(OIC) சார்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் உரையாற்றிய சஊதிதூதுவர்
அப்துல்லாஹ் முஅல்லிமி சுட்டிக் காட்டியுள்ளார். "பலஸ்தீன் தாய்மார்கள்
அனைவரையும் அழித்தொழிக்க வேண்டும். அவர்கள்நச்சுப் பாம்புகளைப் பெற்றுக்
கொடுக்கின்றனர்" எனஓர் இஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்
தெரிவித்திருப்பதையும் சஊதி தூதுவர் தெளிவுபடுத்தியுள்ளார். யூதர்களின்
இந்த மனோநிலை நிச்சயம் அப்பாவிகளைக் கொலை செய்யும். ஏனெனில், அவர்கள்
இதற்கு அப்பால்சென்று, தமது நபிமார்களையே கொன்று குவித்தனர்என்பதை
அஷ்ஷெய்க் ஸுஊத் அஷ்ஷுறைம் நினைவூட்டியுள்ளார். விருந்தினர்கள் இரண்டு
வாரங்களையும் தாண்டி தொடரும் இந்த யுத்தத்தில், பலஸ்தீனர்கள் இரு
அதிதிகளை மேற்குக் கரையில், குத்ஸில் மற்றும் காஸாவில்
எதிர்பார்த்திருந்து வரவேற்றனர். ஜூலை 12 அன்று ஹமாஸ் இரவு ஒன்பது
மணிக்கு டெல்அவீவைதாக்குவோம். இஸ்ரேலின் ஏவுகணை தடுப்புக் கருவிகள்
முடியுமென்றால் ஹமாஸின் ஏவுகணையைத்தடுக்கட்டும் என போராளிகள்
சவால்விட்டிருந்தனர். இந்த ஏவுகணையை (அதிதியை) காணவென இஸ்ரேல்
ஆக்கிரமிப்பின் கீழுள்ள அனைத்து பலஸ்தீனர்களும் கூரைகளில், வீதிகளில்,
உணவகங்களில்இலட்சக் கணக்கில் வெளிவந்திருந்தனர். ஆரவாரத்துடன், தக்பீர்
கூறி இஸ்ரேல் ஏற்படுத்திய வேதனையை மறந்து கை தட்டி,இந்த விருந்தினர்
இஸ்ரேல் நோக்கிச் செல்லும்போது வரவேற்றனர். இரண்டாவது அதிதி ஹமாஸிடம்
சிக்கிய இஸ்ரேலியப்படைவீரர் ஷாஉல்அரோன். பெருநாள் தினத்தில் கூறும்
தக்பீருடன், வீதிகளில் இனிப்புப்பண்டங்களைப் பகிர்ந்து இவரையும்
வரவேற்றனர். இவர் மூலம் தமது உறவினர்களை இஸ்ரேலிய சிறைகளிலிருந்து
விடுவிக்க முடியும் என பலஸ்தீனர்கள் நம்புகின்றனர். போரின் முடிவு நீண்ட
தூர ஏவுகணைகள், சுரங்கப் பாதைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் கடல்வழி
மூலம் தமது போராட்டத்தை பலஸ்தீனர்கள் பலப்படுத்தியுள்ளனர். ஹமாஸ்
இவற்றைத் தயாரிப்பதில், போராட்டத்தை மேலும் முன்னரங்கில் எடுத்துச்
செல்வதில், தன்னிலேயே தங்கியுள்ளது. "பலஸ்தீன சிறுவர்கள் இனிஇஸ்ரேலிய
இராணுவத்திற்கு காஸாவில் கல்லெறிய மாட்டார்கள். இரண்டரை இலட்சம் கைக்
குண்டுகளை தயாரித்துள்ளோம். அவற்றையேஎறிவார்கள்"என ஹமாஸ் தெரிவித்துள்ள
நிலையில், அதன் தன்னில் தங்கியிருக்கும் நிலையே பேரம் பேச கிடைத்துள்ள
பலமாகும் என குவைத் பல்கலைக்கழக பேராசிரியர் ஷபீக் அல்கப்ரா
தெரிவித்துள்ளார். இருப்பினும், நெதன்யாஹுவின் முட்டாள் போரில்
அப்பாவிகள் கொல்லப்படுவதை இஸ்ரேல் மனித உரிமை அமைப்புக்களே
எச்சரித்துள்ளன. இவ்வாறு உலகமனித உரிமை அமைப்புக்களே இஸ்ரேலை கடுமையாக
கண்டித்துள்ள நிலையில், நிச்சயம் இஸ்ரேலிய துருப்புக்களின் மரணங்கள்
நெதன்யாஹுவின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கலாம். ஐந்து மில்லியன்
இஸ்ரேலியர்கள் ஏவுகணைகளுக்குஅஞ்சி, நிலக் கீழ் சுரங்கங்களில் பல
வாரங்களாக அடைக்கலம் புக வழிவகுத்த நெதன்யாஹுவின் நிலைவரத்தை நிச்சயம்
இஸ்ரேல்வாக்காளர்கள் சாதகமாக தொடர விடுவார்களா? ஏவுகணைகளை நிறுத்தப்
புறப்பட்ட இவரது போர், ஏவுகணைகளில் பத்து வீதத்தைக் கூட இன்னும்
நிறுத்த முடியவில்லை என்பது, யுத்தம் பலஸ்தீனர்களுக்கு சார்பாக முடிவுறவே
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதுஎன இராணுவ ஆய்வாளர் ஸப்வத் அஸ்ஸய்யாத்
தெரிவித்துள்ளார். மஸ்ஜிதுல் அக்ஸா மூன்றாவது புனிதஸ்தலம்மாத்திரமன்றி,
முதலாவது கிப்லாவுமாகும். ஆட்சியாளர்களின் புறக்கணிப்பு எவ்வளவு
உச்சத்திற்கு சென்றாலும், நாங்கள் பலஸ்தீனர்களுடனேயே ஆதரவாக நிற்கின்றோம்
என்பதை ஜேர்மனியின் உலக உதைப்பந்தாட்ட வீரர் மஸ்ஊத் ஓஸில்
நிரூபித்துள்ளார். துருக்கிய பெற்றோருக்குப் பிறந்த இவர், இறுதிப்
போட்டியில் வெற்றி பெற்ற தன் மூலம்தனக்குக்கிடைத்த பரிசுத்த தொகையான
மூன்று இலட்சம் யூரோக்களை காஸா சிறுவர்களுக்காக அன்பளிப்புச்
செய்துள்ளார். அரையிறுதி போட்டியில் கிடைத்த ஓரிலட்சத்து ஐம்பதாயிரம்
யூரோக்களையும் ஒவ்வொரு போட்டியின்போது கிடைத்த பரிசுகளையும் நன்கொடை
செய்துள்ளதுடன், குஐகுயு ஆளுனர் சபை உறுப்பினர் ஒருவர் இஸ்ரேலுக்கு
ஆதரவளிப்பதால், அவருக்கு மஸ்ஊத் கைலாகு கூட கொடுக்கவில்லை.
ஆக்கிரமிப்புக்குட்பட்டுள்ள பலஸ்தீனர்கள் பக்கம் நீதி தொடர்வது, நிச்சயம்
குத்ஸ் வரை சுதந்திரப்
போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்பை அதிகரித்துள்ளது.
Thanks:engalthesam.lk

No comments:

Post a Comment