தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

30 July 2014

காசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட்
சவுத்ஆம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று போது தீவிரவாத இஸ்ரேலியயூத
தீவிரவாதிகளால் அழிந்து வரும் காசா வுக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின்
ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது கையில் (Wristbands) அணிந்திருந்த ரப்பர்
பேண்டில் காசாவை காப்பாற்றுங்கள் (Save Gaza),
பாலஸ்தீனத்திற்கு விடுதலை (Free Palestine)
என்று எழுதப்படிருந்தது.
இதை அணிவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும்
போட்டி நடுவருமான டேவிட் பூன் தடை விதித்தார்.
''மொயின் அலி எழுதியிருந்த வாசகம் மனிதநேயத்தை குறிக்குமே தவிர, இது
அரசியல் அல்ல. முதல்
உலகப்போர் தொடங்கிய 100-வது வருடத்தை நினைவுபடுத்தும்
வகையில் போரில் பங்கேற்ற வீரர்கள் நினைவாக தொண்டு நிறுவனத்தின்
லோகோ பொறித்த ஆடைகளை இங்கிலாந்து வீரர்கள் அணிய இருந்தார்கள்''
என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
தனது விளக்கத்தை கூறியது. சர்வதேச போட்டிகளில் அரசியல், மதம், இன
நடவடிக்கைகள் போன்ற
வாசகங்கள் இடம்பெறக் கூடாது என்று ஐ.சி.சி.
விதிமுறை கூறுகிறது.
இதுகுறித்து மொயின் அலி கூறும்போது ''இதுபோன்று ரிஸ்ட்பேண்ட்
அணிய நடைமுறை இல்லை. இனிமேல் இதுபோல்
அணியக்கூடாது என்று போட்டி நடுவர் எச்சரித்தார்'' என்றார்.
Thanks:
www.maalaimalar .com
www.adiraipirai .in

No comments:

Post a Comment