தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

17 May 2015

தைரோய்ட் குறைவாக சுரப்பது ஏன்?

‘உடல் எப்­போதும் அச­தி­யா­கவே இருக்­கி­றது. கொஞ்­ச­மாக உணவைச் சாப்­பிட்­டாலும், உடல் எடை கூடிக்­கொண்டே போகி­றது. மாத­வி­லக்கு சுழற்சி ஒழுங்­காக ஏற்­ப­டு­வ­தில்லை’... இப்­படிச் சொல்­ப­வர்­க­ளிடம், ‘உங்­க­ளுக்குத் தைரோய்ட் கோளாறு இருக்­கி­றதா?’ என்­றுதான் கேட்கத் தோன்றும்.

இன்­றைய பெண்­க­ளிடம் அதி­க­ரித்­து­வரும் உடல்­நலப் பிரச்­சி­னை­களில், தைரோய்ட் சுரப்பி குறை­வாகச் சுரக்கும் பிரச்­சினை முக்­கி­ய­மா­னது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வய­தினர், நடுத்­தர வய­தினர் என்று பெண்­களில் பல­ரையும் பாதிக்கும் பிரச்­சி­னை­யாக இன்­றைக்கு இது உரு­வெ­டுத்­துள்­ளது.

இதை ஆரம்ப நிலை­யி­லேயே கவ­னித்துச் சிகிச்சை பெற்­றுக்­கொண்டால், பின்னால் ஏற்­ப­டு­கிற அறி­வாற்றல் குறைவு, மலட்­டுத்­தன்மை போன்ற பல சிக்­கல்­களைத் தவிர்க்க முடியும்.

தைரோய்ட்  என்­பது என்ன?
நம் தொண்டைப் பகு­தியில் மூச்சுக் குழாய்க்கு முன்­பாக, குரல்­வ­ளையைச் சுற்றி, இரு பக்­கமும் படர்ந்து, ஒரு வண்­ணத்­துப்­பூச்சி வடி­வத்தில் அமைந்­துள்­ளது தைரோய்ட்  சுரப்பி.

உடலில் ஏற்­படும் வளர்­சி­தை­மாற்றப் பணி­க­ளுக்குத் தேவை­யான முதன்மை நாள­மில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்­வரை இருக்கும். சாதா­ர­ண­மாகப் பார்க்­கும்­போது நம் கண்­ணுக்கு இது தெரி­யாது. நாம் உணவை விழுங்­கும்­போது, முன் கழுத்தில் குரல்­வ­ளை­யோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்­கப்­ப­டு­வதைப் பார்க்க முடி­கி­றது என்றால், தைரோய்ட்  சுரப்பி வீங்­கி­யுள்­ளது என்று அர்த்தம்.

தைரோக்ஸின் ஹோர்மோன்
தைரோய்ட்  சுரப்பி, ‘தைரொக்சின்' (T4), ‘டிரை­அ­ய­டோ­தை­ரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹோர்­மோன்­களைச் சுரக்­கி­றது. தைராய்டு செல்­களில் ‘தைரோ­கு­ளோ­புலின்' எனும் புரதம் உள்­ளது.

இதில் ‘டைரோசின்' எனும் அமினோ அமிலம் உள்­ளது. தைரோய்ட்  செல்கள் ரத்­தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்­தெ­டுத்து, டைரோ­சினை இணைத்து வினை­பு­ரிந்து T4 மற்றும் T3 ஹோர்­மோன்­களைச் சுரக்­கின்­றன. இந்த இரண்டு ஹோர்­மோன்­களும் உடலின் தேவைக்­கேற்ப ரத்­தத்தில் கலந்து, உடல் உறுப்­புகள் சீராகச் செயல்­பட உத­வு­கின்­றன.

இத்­தனைச் செயல்­பா­டு­க­ளையும் முன்­பிட்­யூட்­டரி சுரப்­பியில் சுரக்­கிற 'தைரோய்ட்  ஊக்கி ஹோர்மோன்' (TSH)கட்­டுப்­ப­டுத்­து­கி­றது.

தைரொக்ஸின் பணிகள்
குழந்­தையின் கரு வளர்­வதில் தொடங்கி, முழு­மை­யான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்­திக்­கூர்மை எனப் பல­வற்­றுக்குத் தைரொக்சின் ஹோர்­மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிரா­ண­வா­யுவைப் பயன்­ப­டுத்தி வேதி­வி­னைகள் புரி­வ­தற்குத் தைேராக்ஸின் தேவை.

கார்­போ­ஹைதரேட், புரதம், கொழுப்பு முத­லிய உணவுச் சத்­து­களின் வளர்ச்­சி­­ மாற்றப் பணி­களை ஊக்­கு­விப்­பதும், புரதச் சத்தைப் பயன்­ப­டுத்தி உடல் வளர்ச்­சியைத் தூண்­டு­வதும், சிறு­கு­டலில் உள்ள உணவுக் கூழி­லி­ருந்து குளுக்­கோஸைப் பிரித்து இரத்­தத்தில் கலப்­பதும், ரத்தக் கொலஸ்ட்­ரோலைக் கட்­டுப்­ப­டுத்­து­வதும் தைேராக்ஸின் ஹோர்மோன் செய்­கிற அற்­புதப் பணிகள்.

மேலும் இதயம், குடல், நரம்பு, தசை, பாலின உறுப்­புகள் போன்ற முக்­கி­ய­மான உறுப்­பு­களின் செயற்­பா­டு­க­ளையும் தைரொக்சின் ேஹார்­மோன்தான் ஊக்­கு­விக்­கி­றது. 

குறை தைரோய்ட் 
தைரோக்ஸின் ஹோர்மோன் குறை­வாகச் சுரப்­பதைக் ‘குறை தைரோய்ட்’ (Hypothyroidism) என்­கிறோம். இதன் ஆரம்ப நிலையில் உடல் சோர்­வாக இருக்கும். செயல்கள் மந்­த­மாகும். சாதா­ரணக் குளி­ரைக்­கூடத் தாங்க முடி­யாது. முகம் வீங்கும். முடி கொட்டும். இள­நரை தோன்றும். தோல் வறட்சி ஆகும். பசி குறையும். ஆனால், உடல் எடை அதி­க­ரிக்கும். அடிக்­கடி மலச்­சிக்கல் உண்­டாகும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறை­யற்ற மாத­வி­லக்கு, குரலில் மாற்றம், கை, கால்­களில் மத­ம­தப்பு, கருச்­சி­தைவு மற்றும் கருத்­த­ரிப்­பதில் பிரச்­சினை, மூட்­டு­வலி இப்­படிப் பல பிரச்­சி­னைகள் அடுத்­த­டுத்துத் தலை­தூக்கும்.

இரத்­த­சோகை, இரத்­தத்தில் கொலஸ்ட்ரோல் அளவு அதி­க­ரிப்­பது போன்ற பாதிப்­புகள் குறை தைரோய்ட்  உள்­ள­வர்­க­ளிடம் காணப்­படும் முக்­கி­ய­மான அறி­கு­றிகள்.

என்ன காரணம்?
நாம் உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயடின் சத்து இருப்­ப­தில்லை. தைரோய்ட்  சுரப்­பிக்குப் போது­மான அளவு அயடின் கிடைக்­கா­விட்டால், தைெராக்ஸின் ஹோர்­மோனைச் சுரக்க முடி­யாது. இதனால் தைரொய்ட்  ஊக்கி ஹோர்மோன் (TSH)  அதிக அளவில் சுரந்து, தைரெய்ட்  சுரப்­பியை மேன்­மேலும் தூண்டும்.

ஆனாலும், அதனால் போது­மான அள­வுக்குத் தைேராக்ஸின் ஹோர்­மோனைச் சுரக்க முடி­யாது. பதி­லாக, அது வீக்­க­ம­டைந்து கழுத்தின் முன் பக்­கத்தில் ஒரு கழலைப் போன்று தோன்றும்.

அதற்கு ‘முன்­க­ழுத்துக் கழலை' (Goitre) என்று பெயர். இது ஒரு தன்­த­டுப்­பாற்றல் நோயா­கவும் (Auto immune disease) ஏற்­ப­டலாம் என்­கி­றது மருத்­துவம். அதா­வது, நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்­தியை உரு­வாக்கும் செல்கள், சொந்த உடலின் செல்­க­ளையே, வெளி­யி­லி­ருந்து வரும் நோய்க் கிரு­மி­க­ளாகக் கருதி அழித்­து­வி­டு­கின்­றன.

பெண்­க­ளுக்குச் சுரக்கும் ஈஸ்ட்­ரோஜன் ஹோர்மோன், இதைத் தூண்­டு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இப்­படித் தைேராய்ட் செல்கள் அழிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்குக் குறை தைெராய்டு ஏற்­ப­டு­கி­றது.

இது தவிரப் பாக்­டீ­ரியா, வைரஸ் போன்ற கிரு­மிகள் கார­ண­மாகத் தைெராய்ட் சுரப்­பியில் அழற்சி (Thyroiditis) ஏற்­ப­டு­வது, தைரோய்ட் சுரப்­பியை அறுவை சிகிச்சை செய்து அகற்­று­வது, முன்­பிட்­யூட்­டரி சுரப்பி சிதை­வ­டை­வது போன்ற கார­ணங்­க­ளாலும் குறை தைரோய்ட் ஏற்­ப­டலாம்.

இளம் வயதில் புற்­றுநோய் தாக்கி, கதி­ரி­யக்கச் சிகிச்சை பெற்­றி­ருந்தால், தைரோய்ட் சுரப்பி சிதை­வ­டைந்து, குறை தைெராய்ட் ஏற்­ப­டலாம்.

இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்குக் குறை தைரோய்ட் ஏற்­ப­டு­வ­தற்கு மன அழுத்­தம்தான் முக்­கி­ய­மான காரணம். பெற்றோர் யாருக்­கா­வது குறை தைரோய்ட் இருந்தால், வாரி­சு­க­ளுக்கும் அது வர வாய்ப்புண்டு.

குழந்­தைக்கும் குறை தைரோய்ட்
பிறந்த குழந்­தைக்கும் குறை தைரோய்ட்   (Cretinism) ஏற்­ப­டு­வ­துதான் வேத­னைக்­கு­ரி­யது. கருவில் குழந்தை நன்கு வளர்­வ­தற்குத் தாயி­ட­மி­ருந்து தைெராக்சின் ஹோர்மோன், சரி­யான அளவில் சென்­றாக வேண்டும். அப்­படிக் கிடைக்­கா­த­போது, குழந்­தைக்குக் குறை தைரோய்ட்  ஏற்­ப­டு­கி­றது.

இதனால், குழந்­தையின் வளர்ச்சி பாதிப்­ப­டை­கி­றது. பிறந்­த­வுடன் குழந்தை வீறிட்டு அழ­வில்லை என்றால், மூன்று நாட்­களில் தாய்ப்பால் அருந்­த­வில்லை என்றால், மஞ்சள் காமாலை நீடித்தால், குட்­டை­யாக இருந்தால், மூக்கு சப்­பை­யாக இருந்து, நாக்கு வெளித் தள்ளி, வயிறு பெருத்து, தொப்­புளில் குட­லி­றக்கம் காணப்­பட்டால், அந்தக் குழந்­தைக்குக் குறை தைரோய்ட்  இருக்க அதிக வாய்ப்­புள்­ளது.

பொது­வாக, குழந்­தைக்கு வயது ஏற ஏற அதன் நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்றம் ஏற்­பட வேண்டும். ஆனால், குறை தைரோய்டுள்ள குழந்­தைக்கு 'வளர்ச்சி மைல்கல்' தாம­தப்­படும். உதா­ர­ண­மாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்­பது, குரல் கேட்டுத் திரும்­பு­வது, நடக்கத் தொடங்­கு­வது, பல் முளைப்­பது, பேச்சு வரு­வது, ஓடி­யாடி விளை­யா­டு­வது போன்ற வளர்ச்சி நிலை­களில் பின்­ன­டைவும் பாதிப்பும் ஏற்­படும். வய­துக்கேற்ற அதன் செயல்­பா­டு­களில் மந்­த­மான நிலை உண்­டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறை­பா­டு­களும் தோன்­றலாம்.

பள்ளி வயதில் அறிவு வளர்ச்சி மற்றும் புத்­திக்­கூர்­மை­யிலும் (I.Q.) குழந்தை பின்­தங்கும். முக்­கி­ய­மாக, கற்­ற­லிலும் நினை­வாற்­ற­லிலும் குறை­பா­டுகள் தோன்றும். பெண் குழந்­தைகள் பரு­வ­ம­டை­வதில் தாமதம் ஏற்­படும். அல்­லது மாத­வி­லக்கு அதிக நாட்கள் நீடிக்கும். இவ்­வாறு ஏற்­படும் நிலையில் குழந்­தையை உட­ன­டி­யாக டாக்­ட­ரிடம் காண்­பித்துத் தகுந்த சிகிச்சை பெற்றால், பாதிப்­புகள் குறையும்.

பரி­சோ­த­னைகள் என்ன?
இரத்­தத்தில்  T3, T4  மற்றும் TSH அள­வு­களைப் பரி­சோ­திக்க வேண்டும். குறை தைரோய்ட் உள்­ள­வர்­க­ளுக்கு T3, T4 அள­வுகள் குறை­வா­கவும், TSH அளவு அதி­க­மா­கவும் இருக்கும்.

இது தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரி­சோ­த­னைகள் மூலம் தைரோய்ட்  சுரப்­பியின் வடிவம், எடை, அளவு ஆகி­ய­வற்றை அளந்து, தைேராய்ட் பாதிப்பைக் கணிக்க முடியும். இன்­றைய நவீன மருத்­து­வத்தில் 'ஐசோடோப் ஸ்கேன்' பரி­சோ­தனை தைரோய்ட் பாதிப்­பு­களை மிகவும் துல்­லி­ய­மாகத் தெரிந்­து­கொள்ள உத­வு­கி­றது.

சிகிச்சை என்ன?
குறை தைரோய்ட் பாதிப்­புக்குத் தைரோக்ஸின் மருந்தைத் தொடர்ந்து உட்­கொள்ள வேண்டும். இந்த மருந்தின் அளவு, அதற்­கான கால அளவு ஆகி­ய­வற்றை மருத்­து­வர்தான் தீர்­மா­னிக்க வேண்டும். மருத்­து­வரின் ஆலோ­சனை இல்­லாமல் இந்த மருந்தை நிறுத்­தக்­கூ­டாது.

அயடின் குறைவால் வரும் முன்­க­ழுத்துக் கழலை நோய்க்குப் போது­மான அளவு அயடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்­துக்­கொள்­வதன் மூலம் பிரச்­சி­னையைக் கட்­டுப்­ப­டுத்த முடியும். இப்­படி முறை­யாகச் சிகிச்சை எடுத்­துக்­கொள்­ளும்­போது அறிவு மந்தம், மாத­வி­லக்குக் கோளா­றுகள், மலட்­டுத்­தன்மை, பிர­ச­வ­கால சிக்­கல்கள் போன்­ற­வற்றைத் தடுத்­துக்­கொள்ள முடியும்.

முறை­யான உணவு
நிறைய தண்ணீர் குடிக்­க­வேண்டும். நார்ச்­சத்து நிறைந்த காய்­க­றிகள், பழங்­களை அதி­க­மாக உட்­கொள்ள வேண்டும். கடல் சார்ந்த உணவு வகை­களில் அயடின் சத்து அதிகம் என்­பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்­லது. பால், முட்டை, இறைச்சி சாப்­பிட வேண்­டி­யது முக்­கியம். பச­லைக்­கீரை, முள்­ளங்கி, காலிஃ­பி­ளவர், முட்­டைக்கோஸ், டர்னிப் ஆகி­ய­வற்றைக் குறை­வாகச் சாப்­பிட வேண்டும். சமை­ய­லுக்குச் சாதா­ரண உப்பைப் பயன்­ப­டுத்­து­வ­தை­விட அயடின் கலந்த உப்பைப் பயன்­ப­டுத்த வேண்டும்.

மருத்­து­வரின் ஆலோ­ச­னை­யோடு, கழுத்­துக்கு உண்­டான உடற்­ப­யிற்சி, யோகா­சனப் பயிற்­சி­களை மேற்­கொண்டால், குறை தைரோய்ட்  பிரச்­சி­னை­களைத் தடுக்க முடியும். தள்­ளிப்­போ­டவும் முடியும்.

டாக்டர் கு.கணேசன்

(நன்றி: தி இந்து)

No comments:

Post a Comment