ஊர் செய்திகள்
date
13 May 2015
ரொஹிஞ்சா முஸ்லிம்களின் அவலம் - காணொளி
வங்கதேசம் மற்றும் பர்மாவில் இருந்து வரும் குடியேறிகளின் அளவு கடுமையாக
அதிகரித்துள்ளமை குறித்து ஒரு அவசர பிராந்திய சந்திப்புக்கு தாய்லாந்து
அழைப்பு விடுத்துள்ளது.
கடலில், தாய்லாந்தின் கரையோரமாக ஆயிரக்கணக்கானோர் நெரிசலான படகுகளில்
தத்தளிப்பதாக நம்பப்படுகின்றது.
பெரும்பாலும் ரொஹிஞ்சாக்கள் அடங்கலாக வங்கதேசம் மற்றும் பர்மாவில் இருந்து
ஒரு படகில் வந்த நூற்றுக்கணக்கான குடியேறிகளை இந்தோனேசியா
திருப்பிவிட்டுள்ளது.
குடியேறிகளின் படகுகள் நீரில் மூழ்கினால் மாத்திரமே அவர்களை தாம் ஏற்போம்
என்று மலேசியா இப்போது கூறுகிறது.
உலகில் மிகவும் மோசமாக அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகமாக இந்த
ரொஹிஞ்சா முஸ்லிம்களை ஐநா விபரித்துள்ளது.
ரொஹிஞ்சா முஸ்லிம்களின் அவலங்கள் குறித்து ஆராயும் காணொளி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment