தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

09 July 2012

இருதய அடைப்பா? இதோ ஒரு நல்ல மருந்து

தேன் ஒவ்வொரு வீட்டி
லும் இருக்க வேண்டிய ஒரு அரிய மருந்து என அனைவரும் அறிவோம். நான் மாரடைப்பு ஒரு சிறு குறிப்பு எனும் இழையில் ஒரு வீட்டு வைத்திய முறை பற்றி கூறி இருந்தேன். அதை கீழே விளக்கப் படங்களுடன் கொடுத்துள்ளேன். தினமும் காலை உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி அருந்தலாம். தேன் மற்றும் இஞ்சி, தேன் மற்றும் பூண்டு எலுமிச்சை ஆகிய அனைத்து கலவைகளும் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. கொழுப்பை குறைக்க, உடல் இளைக்க, மூளையை சுறுசுறுப்பாக்க, இரத்தத்தை சுத்தப்படுத்த என பல வகைகளில் உதவுகிறது.

ஆனால் இந்த சாறை சாப்பிட நினைப்பவர்கள் அல்சர், லோ பிபி போன்ற சில பிரச்சனைகள் இருந்தால் தங்கள் மருத்துவரை அணுகிவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி சாறு - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு கப்
பூண்டு சாறு - ஒரு கப்
ஆப்பிள் வினிகர் - ஒரு கப்
தேன் - 3 கப்
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


எலுமிச்சை சாறு தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டிற்கு சிறிது தண்ணீர் ஊற்றி தனித்தனியாக நன்கு அரைத்து சாறினை எடுத்துக் கொள்ளவும்.


மூன்று சாறுகளையும் ஒரு கப் ஆப்பிள் வினிகருடன் சேர்த்து லோ சிம்மில் வைத்து அரைமணி நேரம் சூடாக்கவும். நான்கு கப்பானது 3 கப்பாக மாறும் வரை அடுப்பில் வைக்கவும்.


இப்போது அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும்.


பின் 3 கப்பாக இருக்கும் கரைசலுடன் அதே 3 கப் தேன் ஊற்றி நன்கு கலக்கவும்.


ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும்.
Thanks:www.arusuvai.com/tamil/node/20873

No comments:

Post a Comment