தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 11 Apr 2025

08 October 2017

மக்கொனை உட்பட சில பிரதேசங்களில் 09 மணி நேர நீர்வெட்டு


அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் எதிர்வரும் 2017.10.10 ம் திகதியன்று 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி அன்றைய தினம் காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை போன்ற பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்காரணமாக பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment