ஊர் செய்திகள்
date
Showing posts with label கிழக்கு துர்கிஸ்தான். Show all posts
Showing posts with label கிழக்கு துர்கிஸ்தான். Show all posts
20 November 2009
கிழக்கு துர்கிஸ்தான்
சீனாவின் இரும்புக் கரங்களுக்குள் ஒரு முஸ்லிம் தேசம்
-----------------------------------------------------
ஏ.ஸீ.எம். நதீர்
-------------------
மத்திய ஆசிய நாடுகளான கஸகிஸ்தான், கிரிகிஸ் தான், தஜிகிஸ்தான், துர்க் மேனிஸ்தான், உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகளின் வரிசையில் மறந்து விடப் பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் தேசம்தான் கிழக்கு துர்கிஸ்தானாகும்.
துர்கிஸ்தான் உலகின் மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் 19 ஆவது இடத்தில் இருக்கின்றது. அத்துடன் எண்ணெய் வளம், நிலக்கரி வளம் உட்பட உலகின் மிக அதிகமான யுரேனிய வளத்தையும் கொண்டிருக்கின்றது.
கிழக்கு துர்கிஸ்தானில் 95 வீதமான முஸ்லிம்களே வாழ்ந்து வந்தனர். இங்கு இஸ்லாம் பரவுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தவர்கள் அறபு முஸ்லிம் வியாபாரிகளாவர். கிழக்கு துர்கிஸ்தானி னூடாகவே பட்டுப்பாதை அமைந்திருந்தமை அதற்கு முக்கிய காரணமாகும். அறபு முஸ்லிம் வியாபா ரிகள் தாம் சென்ற இடங்களுக்கு வெறுமனே தமது வியா பாரப் பொருட் களை மட்டுமன்றி தமது மார்க்கத்தை யும் சுமந்து சென்றார்கள். இதன் விளைவாகவே பட்டுப்பாதையில் அமைந்திருந்த ஏராளமான நாடு களில் இஸ்லாம் பரவியது.
மூன்றாவது கலீபா உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹகம் பின் அம்ரு அல் கிபாரி என்பவரினூடாகவே இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது. எனினும், உமையா கலீபா அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியின்போது அவருடைய தளபதி களில் ஒருவரான குதைபா பின் முஸ்லிம் அல் பாஹிலி என்பவரின் மூலம் கைப்பற்றப்பட்டதன் பின்னரே இஸ்லாம் மிக வேகமாக பரவியது. இது ஹிஜ்ரி 83-94 காலப்பிரிவில் நடந்தது.
ஹிஜ்ரி 323 இல் ஸுத்தூப் பகர்கான் என்ற கோத் திரத் தலைவருடன் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட கிழக்கு துர்கிஸ்தான் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இவரது பேரன் ஹாரூன் பேகர் கான் காலத்தில் இன்னும் பல கோத்திரங்களிடையேயும் இஸ்லாம் பரவியது.
இக்காலப் பிரிவில் சிலைவணக் கத்தில் ஈடுபட்டிருந்த சில கோத்தி ரங்களும் காணப்பட்டன. இக் கோத்திரங்களுக்கு சீனா உதவி யளித்தது. இவர்களுக்கும் முஸ்லிம் களுக்குமிடையே பல போராட்டங் கள் நடைபெற்றன. அவற்றில் கோர்க்கானிய்யீன் எனும் கோத்தி ரத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மிகவும் பிரபல்யமானது. இப்போராட்டத்தில் சுல்தான் அலாவுத்தீன் முஹம் மத் அல் குவா ரிஸ்மி தலைமையிலான படை கோர்கானிய்யீன் கோத்திரப் படையை தர்ராஸ் எனும் இடத் தில் தோற்கடித்தது.
இப்போராட்டங்களில் முஸ் லிம்களைப் பலப்படுத்தியதில் மத்திய ஆசிய பிரதேசத்தில் வாழ் ந்த முஸ்லிம்களுக்கும், ஈரான், மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதி களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் பாரிய பங்குண்டு. இவர்கள் ஒரு புறத்தில் ஆயுத ரீதியாக உதவிய தோடு மறுபுறத்தில் அறிவுரீதியாக வும் உதவினர். இதனால், பல பாடசாலைகளும், பல்கலைக்கழ கங்களும் கிழக்குத் துர்கிஸ்தானில் தோற்றம் பெற்றன.
கிழக்கு துர்கிஸ்தான் வரலாற் றில் சுதந்திரநாடாகவே இருந்துள் ளது. கி.மு. 119-139 காலப்பிரிவில் சீனாவைச் சேர்ந்த தூதுவரொருவர் இங்கு விஜயம் செய்திருக்கின்றார். இவ்விஜயத்தை சீன வரலாற்று நூல் கள் குறித்து வைத் திருக்கின்றன. இதன்மூலம் கிழக்கு துர்கிஸ்தான் சீனாவிற்கு அருகில் அமைந்த சுதந் திர நாடாகவே இருந்துள்ளமை உறுதியாகின்றது. சீனாவிற்கும் கிழக்கு துர்கிஸ்தானுக்கும் இடை யிலான தொடர்புகள் கி.மு 08 ஆம் நூற் றாண்டு தொடக்கம் கி.பி. 08 ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந் துள்ளது.
இக்காலப்பிரிவிலே இஸ்லாம் இங்கு ஹகம் பின் அம்ரு அல் கிபாரி மூலம் அறிமுகமாகியது. இங்கு வாழ்ந்த உய்கூர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இஸ் லாத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கிடையே இஸ்லாம் வேகமாகப் பர வியது. சிறிது காலத்திலே இக்கோத்திரத் தைச் சேர்ந்த பெரும்பான்மையினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
இதுதான் சீனா தனது இராட்சத கரங்களை கிழக்கு துர்கிஸ்தானில் நுழைக்க காரணமாக அமைந்தது. தனது அண்டைநாடு முஸ்லிம் நாடாக மாறுவதை யிட்டு சீனா அஞ்சியது. கிழக்கு துர்கிஸ்தானில் ஊடுருவுவதற்கு பல திட்டங் களை வகுத்தது. அதன் விளைவாகவே சிலைவணக்கத்திலீடுபட்டிருந்த கோத் திரத்தினரை முஸ்லிம்களுக் கெதிராக தூண்டிவிட்டதோடு அவர்களுக்குத் தேவையான அனை த்து உதவிகளையும் வழங்கியது.
சீனா படிப்படியாக கிழக்கு துர்கிஸ்தானை ஆக்கிரமித்தது. ஆனால், முஸ் லிம்கள் தமது சுதந்திர தாகத்தை இழக்கவில்லை. அவர்களுக்கும் சீனர்களுக் குமிடையே 1759-1862 வரையான காலப்பகுதியில் 142 போராட்டங் கள் நடைபெற்றன. இப்போராட் டங்களில் மில்லியன் கணக்கான உய்கூர் முஸ் லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1822 ஆம் ஆண்டு கிழக்கு துர் கிஸ்தானில் போராடிய முஸ்லிம் கள் வெற்றி பெற்றனர். அதன் மூலம் அந்நாடு மீண்டும் சுதந்திரம் பெற் றது. இப்போராட் டத்திற்கு உஸ்மானிய சாம்ராஜ்யம் உதவியது. இதனைத் தொடர்ந்த காலப் பிரிவு கிழக்கு துர்கிஸ்தானின் பொற் காலம் என அழைக்கப்படுகின்றது.
ஆனால், இந்த சுதந்திரம் மிக நீண்ட நாளைக்கு நிலைத்திருப்ப தற்கு சீனா விடவில்லை. 1876 ஆம் ஆண்டு கிழக்கு துர்கிஸ்தானை மீண்டும் சீனா கைப்பற்றியது. அதன் பெயரை சிங்கியாங் என்று மாற்றியது. சிங்கியாங் என்றால் ஆக்கிரமிக்கப்பட்ட பூமி அல்லது புதிய குடியேற்ற நாடு. இப்பெயரே இன்றுவரை கிழக்கு துர்கிஸ்தா னுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது சீனாவின் ஒரு மாகாண மாகவும் கருதப்படுகின்றது.
1911 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலாநிதி ஸின்யாத் சின் சீனாவை குடியரசாக மாற்றினார். இவரின் ஆட்சியின்போது மிகக் கடுமையான போராட்டத்தை கிழ க்கு துர்கிஸ்தானியர்கள் நடத்தினர். விளைவாக 1933 ஆம் ஆண்டு கிழக்கு துர்கிஸ்தான் மீண்டும் சுதந்திரம் பெற்றது. அத்துடன் தனது நாட்டின் பெயரை கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசு எனவும் பிரகடனப்படுத்தியது. அதன் தலைநகராக காஷ்கார் காணப்பட்டது. இந்நிலை 1949 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தது.
1949 ஆம் ஆண்டு சீனா கம்யூனிஸக் கொள்கைக்கு மாறியது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் இணைந்து மீண்டும் கிழக்கு துர் கிஸ்தானை ஆக் கிரமிக்க முயற்சித் தது. அம்முயற்சி 1956 ஆம் ஆண்டு சாத்தியமானது. மீண்டும் கிழக்கு துர்கிஸ்தான் சிங்கியாங் மாகாண மாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து சீனா தனது குடி மக்களை கிழக்கு துர்கிஸ்தானில் குடியேற்றியது. குறிப்பாக தனது படையினரை அவர்களது குடும்பத் தினருடன் குடியேற் றியது. அவர் களுக்கான அனைத்து வசதிகளை யும் ஏற்படுத்திக் கொடுத்தது. 1949 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆறு இலட்சத்துக்கும் குறைவாகவிருந்த சிறுபான்மையினர் மிக வேகமாக பெரும்பான்மையாக மாற்றப்பட்ட னர். உலகில் வேறெங்கும் இடம் பெற்றிராத அளவு குடியேற்றம் நடைபெற்றது. 200 மில்லியனுக்கு மேற்பட்ட சீனர்கள் குடியேற்றப் பட்டனர். முஸ்லிம்களின் எண்ணி க்கை 12-16 மில்லியன்களாக காணப்பட்டது.
கிழக்கு துர்கிஸ்தான் மக்கள் தமது சுதந்திரத்திற்காக மில்லியன் கணக்கான உயிர்களை அர்ப்பணித் துள்ளனர். எனினும் இதுபற்றி உல கத்தில் எந்த வொரு ஊடகமும் பேச வில்லை. அங்கு வாழ்ந்து கொண்டி ருக்கும் முஸ் லிம்கள் சிறைக்கைதி களாகவும் அரசியல் கைதிகளாக வும் உள்ளனர். அவர் கள் மிகக் கடு மையான வேலைகள் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு எவ் விதக் கூலிக ளும் வழங்கப்படுவதில்லை.
இங்கு மத வழிபாடுகளை மேற் கொள்வது தடைசெய்யப்பட்டுள் ளது. வீடு களில் மறைவாக வழி பாடுகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக ஒற் றர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்படுபவர்கள் தடைசெய்யப்பட்ட மத வழிபாடு களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
சீனாவின் இந் மனித உரிமை மீறல்களை, கிழக்கு துர்கிஸ்தான் முஸ்லிம் களின் அவலங்களை ஐ.நா. சபையில் சில முஸ்லிம் நாடுகள் பேசின. ஆனால், அவற் றிற்கு எவ்விதப் பெறுமானமும் வழங்கப்படவில்லை. பெரும் பாலான முஸ்லிம் நாடுகள் சீனாவை தமது நண்பனாகவே கருதுகின்றன. அதனை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
கிழக்கு துர்கிஸ்தான் என்ற வொரு முஸ்லிம் நாட்டை இன் றைய இளம் தலைமுறையினரில் பலர் அறியவில்லை. இனிவரும் தலைமுறையினர் சிலவேளை முற்று முழுதாகவே அறியாதவர்களாக இருக்கலாம். பலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடு களின் வரிசையில் கிழக்கு துர்கிஸ் தானும் இடம்பெறுகின்றது.நன்றி-மீள்பார்வை.
Subscribe to:
Posts (Atom)