இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.
இந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு ஒரு அற்புதமான குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மழை இல்லாததால் காய்ந்து கிடக்கும் வயலை பார்த்து கவலையுடன் இருக்கிறார் ஒரு விவசாயி. அவரின் செல்ல மகள், தனது அப்பாவைப் பின் தொடர்ந்தபடியே இருக்கிறாள். காரணம், மற்ற விவசாயிகளைப் போல தனது அப்பாவும் தற்கொலை செய்து கொள்வாரோ என்கிற பயம்தான். இரவில் கூட தந்தையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்காமல் நட்சத்திரங்களை எண்ணியபடி இருக்கிறாள். மேலும் வீட்டில் இருக்கும் ஒரு கயிற்றை அப்பாவுக்கு தெரியாமல் மறைத்து வைக்கிறாள்.
ஒரு நாள் காலை அந்த கயிற்றை காணவில்லை. மிகவும் பதற்றத்துடன் சிறுமி தந்தையை தேடி வயலை நோக்கி ஓடுகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்...
நன்றி:மாலைமலர்
No comments:
Post a Comment