தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

11 August 2015

உடல் பருமனுக்கு காரணமான மரபணு கண்டுபிடிப்பு - பருமனைக் குறைக்க வாய்ப்பா?

உடல் பருமன் என்பது ஒரு சாதாரண பிரச்சனை என்பதிலிருந்து உயிரைப் பறிக்கும் நோயாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் உடல் பருமனுக்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். கொழுப்பை சேகரித்து உடல் பருமனை அதிகரிக்கும் அந்த புரத மரபணு '14-3-3ஜீட்டா' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் மருந்துகள் மற்றும் அந்த குறிப்பிட்ட மரபணுவை முடக்குவதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நன்றி:மாலைமலர்

No comments:

Post a Comment