மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டு ரயில்கள் தடம்புரண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பலியாகியுள்ளனர்.
மும்பையில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த காமயானி விரைவு ரயில் நேற்று இரவு 11.30 மணியளவில் மத்திய பிரதேசம் மாநிலம் ஹார்டா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மேக்ஹாக் ஆற்றின் மேல் சென்றபோது ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தன.
அதே நேரத்தில் ஜப்புள்பூரில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் அதே இடத்தில் தடம் புரண்டது.
இதில் ரயிலில் 3 பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன. ரயில்கள் தடம் புரண்ட இடத்தில் இருந்து இதுவரை 30 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 300 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ரயில்களிலும் சேர்த்து 10 பெட்டிகள் வரை ஆற்றில் கவிழ்ந்து கிடப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அருகில் உள்ள அணை ஒன்று உடைந்து மேக்ஹாக் ஆற்றில் நீர் பேருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருப்பு பாதையின் அடிப்பகுதி அரிக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிகிறது.
சம்பவம் நடந்தபோது இருப்பு பாதை நீரில் முழுகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பனி சவாலாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி:New india news
No comments:
Post a Comment