தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label ISLAM. Show all posts
Showing posts with label ISLAM. Show all posts

31 March 2024

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ர் இரவு

 ஆயிரம் மாதங்களின் நன்மை ஒரே இரவில்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முன் செய்த பாவங்கள் அழிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

21 July 2019

100 வயதான மலேசிய யாத்ரீகர் ஒருவர் இந்த ஆண்டு ஹஜ் செய்ய வந்துள்ளார்

100 வயதான மலேசிய யாத்ரீகர் ஒருவர் இந்த ஆண்டு ஹஜ் செய்ய மக்கா வந்துள்ளார் . அவர் மக்கா முகராமாவுக்கு வந்தபோது அவரது கண்கள் கண்ணீருடன் நிரம்பின. அல்லாஹ் (மிக்க கருணையாளன்) தான் விரும்பியவர்களை தன் மாளிகைக்கு அழைக்கிறான்.

24 May 2018

மழை காலத்தில்அதானும் தொழுகையும்


இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும்.

27 April 2018

ஷஃபான் மாதத்தின் சிறப்பு

*ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்*
_____________________________

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு நபி ஸல் அவர்கள் கூறிய சிறப்புக்கள் என்ன..? இன்று சமூகத்தில் நடந்தேரும் வணக்கங்களின் நிலை என்ன ..? என்ற தகவல்களை ஆதார பூர்வமாண ஹதீஸ்களில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

22 February 2017

மனைவி மக்களின் சீர்திருத்தத்திற்காக வேண்டிய பிரார்த்தனை







ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும்
மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி
அல்குர்ஆன் விளக்கம் – மனைவி மக்களின் சீர்திருத்தத்திற்காக வேண்டிய பிரார்த்தனை
வழங்குபவர் : மவ்லவி. இல்ஹாம் உவைஸ்
தேதி : 17 – 02 – 2017
சுலை லூஃ லூஃ இஸ்திராஹா – ரியாத்
source:islam kalvi.com


நண்பர்களுக்கும் பகிரவும்

இதையும் பார்க்கவும்

10 February 2017

ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்


இன்றைய கால சூழலில் ஒருவர் மரணத்தருவாயை அடையும் போதும் , மரணித்தவுடன் என்ன காரியங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாமல் உள்ளனர் அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக தவ்ஹீத் பேசும் நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி எழுதிய ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற நூலை வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு (மின்னனு வடிவில்) இங்கு பதிவிடப்படுகின்றது இதனை படித்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கின்றோம்.



ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (E-Book)
ஆசிரியர்: மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி

அட்டவணை – Index

1. மரணத்தருவாயில் செய்ய வேண்டியவை

2. உயிர் பிரிந்து விட்டால்

3. பொறுமையை கையாளுதல்

4. செய்யக்கூடாதவைகள்

5. மையித்தை பார்க்கும் போது

6. நல்ல மையியத்தின் அடையாளம்

7. மையத்தை குளிப்பாட்டுதல்

8. குளிப்பாட்டும் ஓழுங்குகள்

9. கபன் செய்தல்

a. ஆண் மையத்தின் கபன் துணி

b. பெண் மையத்தின் கபன் துணி

10. மவுனமாக விரைவாக எடுத்துச்செல்லல்

11. ஜனாஸா தொழுகை விவரம்

12. அடக்கம் செய்தல்

13. மையித்தை கப்ரில் வைக்கும் போது

14. தல்கீன்:

15. மையித்தை அடக்கிய பின்

16. தவிர்க்க வேண்டியவைகள்

17. பச்சை மட்டை நடுதல்

18. மையவாடிக்கு நுழையும் போது
விரிவாக படிக்க கீழுல்ல இனைப்பு மூலம் இதனை தரவிறக்கிக்கொள்ளவும்.
            ⬇
 E-BOOK - PDF


source:Islam kalvi.com

18 August 2016

நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.



لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (2:284)

இந்த வசனம் அல்லாஹ்வின் அறிவைப் பற்றிப் பேசுகின்றது. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். இரகசியம், பரகசியம் இரண்டும் அவனைப் பொருத்தவரையில் ஒன்றே என்று கூறுகின்றது. அவன் உள்ளங்களில் உள்ள வற்றையும் அறிந்தவன்.

قُلْ إِن تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللَّـهُ ۗ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

‘நீங்கள், உங்கள் உள்ளங்களில் உள்ளதை மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிவான். மேலும், வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்ற லுடையவன் என (நபியே!) நீர் கூறுவீராக!’ (3:29)

وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى

‘வார்த்தையை நீர் சப்தமிட்டுச் சொன்னாலும், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மறைவானதையும் நன்கறிவான்.’ (20:7)

இந்தக் கருத்தில் ஏராளமான வசனங்கள் உள்ளன. அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன். அது குறித்து அவன் உங்களை விசாரிப்பான். நாடியவர்களை அவன் மன்னிப்பான். நாடியவர்களைத் தண்டிப்பான் என்று கூறுகின்றது. உள்ளத்தில் உதிக்கும் தப்பான, தவறான எண்ணங்களுக்கும் விசாரனைகள் உண்டு என்பது நபித்தோழர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது. உள்ளத்தில் எந்தக் கெட்ட எண்ணங்களும் எழாவண்ணம் வாழ்வது கஷ்டமே! என அவர்கள் பயந்தனர். எனவே, இது குறித்து நபி(ச) அவர்களிடம் முறையிட்டார்கள். இது பற்றி இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.

18 October 2015

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்


மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும்.

புனித மாதம்:
இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும்.

‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.’
(9:36)

இந்த மாதத்தில் போர் செய்யக் கூடாது என்ற விதி அன்று வாழ்ந்த அறபிகளிடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது விதியாகவே பின்பற்றப்பட்டு வந்தது. உலகில் யுத்தங்களும் யுத்த அழிவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இஸ்லாம் யுத்தங்களை முழுமையாகத் தடுக்கவில்லை. நான்கு மாதங்கள் அதாவது, வருடத்தில் 1/3 பகுதியில் எதிரிகள் தாக்கினாலே தவிர போர் செய்யக் கூடாது என இஸ்லாம் தடுத்துள்ளது என்பது இஸ்லாத்தைப் பயங்கரவாதமாகக் காட்ட முற்படுபவர்கள் அவசியம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

02 May 2014

வெள்ளிக் கிழமையின் சிறப்புக்கள்.


ஜும்ஆஎன்ற இந்தவணக்கம் ஒவ்வொரு வாரமும் செய்யக் கூடிய சிறப்பு வழிபாடாகும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்பிருந்து ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறைவன் இதை வழங்கினான் சமுதாயங்களில் நாம் தான் கடைசி சமுதாயமாக இருப்பதனால்
நமக்கு ஒரு நாளை தேர்வு செய்து வழிபாடு நடத்துவற்கு தந்துள்ளான் இது பற்றி பின்வரும் நபி மொழி நமக்கு தெளிவு படுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம்வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வௌ;ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த்தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வௌ;ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்)அடுத்தநாள் (சனிக்கிழமை) யூதர்களின்(வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள். (முஸ்லிம் 1550,1551) வாரத்திற்கு ஒரு நாள் ஒதுக்கி சிறப்பு வழிபாடு நடத்துவது என்பதுநபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரான நமக்கு மாத்திரம் இல்லை நமக்கு முன்னால்
வாழ்ந்த சமுதாயத்தினருக்கும் அல்லாஹ் வழிபாடு நடத்துவதற்கு ஒரு நாளை தேர்வு செய்து கொடுத்திந்தான்
இது ஒரு புதிய நடை முறையில்லை என்பதைப் மேற்கண்ட செய்தியில் இருந்து புரிந்து கொள்ள முடியும். மற்றநாட்களுக்கு இல்லாத இந்த வெள்ளிக்கிழமைக்கு மாத்திரம் உள்ள சில சிறப்புக்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதம் (அலை) அவர்கள் வெள்ளிக் கிழமை படைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதம் (அலை)அவர்கள வெள்ளிக் கிழமை படைக்கபட்டார்கள் என்றால்மனித குலம் தோன்றியதும் வெள்ளிக் கிழமைதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள் ; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள். (முஸ்லிம் 1548) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக் கிழமையில் படைத்து வெள்ளிக் கிழமை அவர்களை ஒரு சுவனத்தில் அல்லதுஒரு தோட்டத்தில் குடியமர்தினான். அந்த தோட்டத்தில் அல்லது சுவனத்தில் குடியமர்த்தப்பட்டுஅவர்கள் செய்த தவறின்காரணமாக அதில் இருந்து வேளியேற்றப்பட்டார்கள். வெளியேற்றப்பட்ட பிறகு அவர் அல்லாஹ்விடம் அழுதழுது பாவமன்னிப்புத் தேடினார்கள். இது பற்றி அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான். எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்”என்றுஅவ்விருவரும்கூறினர். (அல்குர்ஆன் (7:23) ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்புத் தேடி அவர்களுடைய பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதற்கு தேர்வு செய்த நாளும் வெள்ளிக் கிழமைதான். ஆதம் (அலை)அவர்கள் மன்னிப்புப் பெற்றதும் படைக்கப்பட்டது உயிர் வாங்கப்பட்டதும் வௌ;ளிக்கிழமைதான். ஆதம் (அலை) பிறப்பும் இறப்பும்வெள்ளிக் கிழமையில் நடந்த மாதிரி மனித குலத்தினுடைய பிறப்பும் அழிவும்விசாரணையும் வெள்ளிக் கிழமைதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது அல்லாதசிறப்புக்கள் இருப்பதாக கூறப்படும் செய்திகள் இட்டுக் கட்டப்பட்டவையாகும். மற்ற சமுதாயத்தினருக்கு வழிபாட்டிற்கு ஒரு நாளைத்தான் அல்லாஹ் தெரிவு செய்து கொடுத்திருந்தான் ஆனால் நமக்கு வழிபாட்டிற்கு தேர்வு செய்த நாள் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டதாக இருக்கிறது.

இஸ்லாத்தில் முதலாவது ஆரம்பிக்கப்பட்ட ஜும்ஆ
இஸ்லாத்தில் முதன்முதலாவது ஜம்ஆவை ஆரம்பித்த பெருமை அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கேஇந்தப் பெருமை சேரும். மக்காவில் நபி (ஸல்) அவர்களால் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த நபித் தோழர் முதன் முதலில் மதீனாவிற்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள பனூ பயாழா என்ற ஒரு கூட்டத்தினருக்குச் சொந்தமாக கூழாங் கற்கள்நிறைந்த இடத்தில் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் தலைமையில் கிட்டத்தட்ட நாட்பது பேர்களை உள்ளடக்கிய ஒரு சிறு கூட்டத்தினர்
இவரின் தலைமையில் தொழுதார்கள் என்ற வரலாற்றை இப்போது நாம் பார்ப்போம். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில்அல்லாஹ்வின் தூதர் என்று மக்காவில் பிரச்சாரம் செய்தார்கள் பிரச்சாரம் செய்யும் போது கடுமையான சோதனைகளுக்கும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும்மத்தியில் இந்த சத்தியப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வந்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த மக்கள் தொழுகை நிறைவேற்றும் போது கூட அவர்கள் அனைவர்களும் கூட்டாகத்
தொழ முடியாத ஒரு நிர்ப்பந்தமான நிலை இருந்தது. மக்காவில் நபியாக வாழ்ந்த பதின் மூன்று வருடகாலத்தில் அவர்கள் ஜும்ஆவைநடத்த முடியவில்லை. மக்கா வெற்றிக்குப் பிறகுதான் அங்கு ஜும்ஆ நடைபெற்று வந்தது. மக்காவைப் பொறுத்த வரை அறபுக்கள் அனைவர்களும் கஃபாவை புனிதமான ஒரு ஆலயமாகக் கருதி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலத்தில் அனைவர்களும் மக்காவிற்கு யாத்திரிகை மேற் கொண்டு மக்காவை நோக்கி வருவார்கள். அப்படி மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத் தூதர் என்பதையும் இஸ்லாத்தினுடைய சட்டதிட்டங்களையும் ஓர் இறைக் கோட்பாட்டையும் சிலை வணக்கத்தையும் எதிர்த்து உள்ளுர் மக்களுக்கு சொல்வது போன்று வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும்பிரச்சாரம் செய்வார்கள்.இப்படி பதின் மூன்று வருட காலம் செய்து வந்தார்கள் இப்படி நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஐம்பதாவது வயதில் மதீனாவில் இருந்து ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு ஹஜ் செய்வதற்காக வேண்டிவருகை தந்தார்கள்.அந்த ஆறுபேர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதித்தார்கள். இவ்வாறுநபி (ஸல்) அவர்களின் போதனையைக் ஆறுபேர்களும் கேட்ட போது அவர்களுக்கு ஒரு மன மாற்றம் ஏற்பட்டு இவர் கூறுவது சரியாகத் தோன்றுவதாக அவர்களுக்குள் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அந்த நேரம்; இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நபி (ஸல்) அவர்களை சந்தித்து விட்டு மதீனாவிற்குச் சென்ற இவர்கள் அடுத்த ஆண்டு வரும் போது இந்த ஆறு பேர்களுடன் சேர்ந்து பனிரெண்டு பேர்கள் மதீனாவில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்
கொள்வதற்காக வேண்டி நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மக்காவிற்கு வருகிறார்கள். அடுத்தஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தைக் கணித்து வருகிறார்கள் ஏனெனில் ஹஜ்ஜுடைய காலம் அல்லாத காலத்தில் முஹம்மதை சந்திக்க வந்தவர்கள் என்று மக்கா இணைவைப்பாளர்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு சொல்லொன்னாத் துன்பதைக் கொடுப்பார்கள் அதனால் தான் அவர்கள் ஹஜ் காலத்தை தேர்வு செய்தார்கள். இந்த பனிரெண்டு பேர்களும் நபி (ஸல்)அவர்களை தனித் தனியாக சந்தித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின்இறுதித் தூதராகவும் ஏற்றுக் கொண்டதோடு இஸ்லாத்தை வாழ்க்கை நெரியாகவும் ஏற்றுக் கொண்டு உயிருள்ள வரை இஸ்லாத்தை உயிருள்ள வரை பின்பற்றுவதாகவும் இன்னும் பல உடன் படிக்கைகளையும் எடுத்துக் கொண்டு நாங்கள் எங்கள் ஊராகிய மதீனாவிற்குச் சென்று அங்கு இந்த சத்தியப் பிரச்சாரத்தை செய்வதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குஉறுதி மொழி கொடுத்தார்கள். இவர்கள் ஹஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்களின் தலைமையில் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இவர்கள் தான் இஸ்லாமிய சாம்ராஜியம் மதீனாவில் உருவாகுவதற்கு அடித்தளமிட்டவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களில் தலைமையில் இஸ்லாமிய அரசுஉருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் கஅப்பின் மாலிக், உபாதா பின் அஸ்ஸாமித், உக்பா பின்ஆமிர்,பத்ருப் போரில் அபூஜஹ்லைக் கொன்ற முஆத் (ரலி) ஆகியோர் அடங்குவார்கள். இந்த பன்னிரெண்டு பேர் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.அவர்கள் இஸ்லாத்தை எற்றபின் நீங்கள்உங்கள் ஊருக்குச்சென்று ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் ஏனென்றால் மக்காவில் ஜும்ஆ நடத்த இயலாது. அதனால் நீங்கள் மதீனாவிற்கு சென்று அங்கு ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் என்றுஅந்த பன்னிரெண்டு பேரில் அஸ்அத் பின் சுராரா அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அவர் அங்கு சென்று ஜும்ஆவை நடத்தினார். இது நபி (ஸல்) அவர்களின் 52 வது வயதில் நடந்தது.நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நியமனம் செய்து 12 வது வருடத்திற்கு பிறகு முதல் ஜும்ஆ நடந்தது. தொடர்ந்து ஜ‚ம்ஆ
நடந்து கொண்டே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஊரி(மக்காவி)ல் ஜும்ஆ நடத்தவில்லை. நடத்துவதற்கான வாய்ப்பு அங்குஇல்லை.முதன்முதலில்ஜும்ஆ தொழுகை நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன் நடத்தியது அஸ்அத் பின் சுராரா என்ற ஒரு ஸஹாபி தான். கியாமத் நாள் வரை நடக்கும் ஜும்ஆவின் நன்மைகளில் ஒரு பங்கு அவருக்கும் இருக்கும். இந்த நல்ல காரியத்தை நபி(ஸல்) அவர்களின்கட்டளையினை ஏற்று தொடங்கி வைத்ததற்கான நன்மை அவருக்கும் சேரும். புதிய மார்கமாக மதீனாவில் இருப்பதால் அவர்கள் மதீனாவில்ஜும்ஆவை நடத்தினால் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்றுஎண்ணி ஊருக்கு வேளியே பனூபயாளா என்ற சமுதாயத்திற்குச் சொந்தமாக கூழங்கற்கள் நிறைந்த மணல் பகுதியில் நடத்தினார்கள்.இங்கு ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும் இன்றை அறிஞர்கள் ஜும்ஆவை நடத்துவது என்றால் அது பள்ளிவாசலாக இருக்க வேண்டும், வக்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் கூரை இல்லாத கட்டிடத்தில் ஜும்ஆ நடத்தலாமா? என்றல்லாம் கூறுவார்கள். ஆனால் இஸ்லாத்தில்முதன் முதலாக நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரத்துடன்நடத்தப்பட்ட முதலாவது ஜும்ஆ தனியாருக்கு சொந்தமானமதீனாவில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் தான் நடத்தப்பட்டது. இவர்கள் பன்னிரெண்டு பேர்களுடன் சேர்த்து கிட்டத்தட்ட நாற்பது பேர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்து அவர்கள் தலைமையில் ஜும்ஆ நடைபெறும் வரையும் அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்கள் தான் தலைமை ஏற்று நடத்தி வந்தார்கள். இது பற்றிய ஒரு செய்தி பின்வருமாறு கஅப்பின் மாலிக் (ரலி) அவர்கள் வயது முதிர்ந்து கண் பார்வை அற்றவராக இருந்த போது அவருடையமகன் அப்துர்ரஹ்மான் பின் கஅப் (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தையான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லக்கூடியவாரக இருந்தார்கள் இவ்வாறு அழைத்துச் செல்லும் போது வெள்ளிக் கிழமை அதான் ஓசையைக் கேட்கும் போது என்னுடைய தந்தை அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்தார்கள்
இவ்வாறுதொடர்ந்து பிராத்தித்து வந்ததைஅவதானித்த அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் தந்தையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் அதான் ஓசையைக் கேட்கும் போது எல்லாம் அஸ்அத் பின் சுராராவிற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத்தேடுவதை நான் அவதானிக்கிறேன். அதற்குரிய காரணம் என்றுஎன்றுகேட்டார்கள். அப்போது கஅப் (ரலி) அவர்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு வருவதற்கு முன்னர் இவர் தலைமையில்தான் ஜும்ஆவைநிறைவேற்றி வந்தோம்.இவரின் மூலம் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டோம். என்று தன்னுடைய மகனுக்குக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களுக்கு முன்னால் ஒரு நபித் தோழர் மூலம் முதலாவது ஜும்ஆ நடத்தப்படுகிறது. இரண்டாவது ஜம்ஆ பஹ்ரைனில் உள்ள ஜவாஸா என்றஇடத்தில் நடைபெற்றது அதன்பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டு வந்து குபாப் பள்ளியைக்கட்டி அங்குஜம்ஆ நடத்திய பிறகு அதன் பிறகு மஸ்ஜிதுன் நபிவியைக் கட்டியது எல்லாம் பின்னர் நடந்த சம்பவங்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த ஜம்ஆவிற்கு முக்கியமான ஒரு அந்தஸ்த்தைக் கொடுத்துள்ளார்கள் நமது பார்வையில் ஜம்ஆ நாள் என்பது வாரத்தில் ஒரு நாள் தொழுகைக்கும் மட்டும் உள்ளதுஎன்று விளங்கிக் கொண்டிருக்கிறோம். நபி (ஸல்) அவர்களின் பார்வையில் ஜம்ஆவுடைய நாள் என்பது ஒரு பெருநாளாகும் என்றுகூறிப்பிட்டுள்ளார்கள். அதனால்தான் வெள்ளிக் கிழமை நாளில் நோன்பு வைப்பதைத் தடைசெய்துள்ளார்கள் எவராவது வெள்ளிக் கிழமை நாள் நோன்பு வைக்க
வேண்டும் என்றால் அவர் ஒரு நாள் முந்திய நாளுடன் சேர்த்து வியாழன் வெள்ளியாக நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஒரு நாள் பின்திய நாளுடன்சேர்த்து வெள்ளி சனியாக நோன்பு வைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு ஹதீஸில் நபி (ஸல்)அவர்கள் இதற்குக் காரணம்சொல்லும் போது ஏனென்றால் இது ஒரு பெருநாள் அன்றைய நாள் முழுவதும் பெருநாளாக இருந்தால் முந்தி ஒன்றைசேர்த்தோ அல்லது பிந்தி ஒன்றைசேர்த்தோ நோன்பு வைக்கக் கூடாது. ஏளாத்தாளஒரு பெருநாள் போன்றது வெள்ளிக் கிழமை பொருநாளில் ஒரு சிறிய பகுதி இருப்பதன் காரணமாக அவ்வாறுகூறியுள்ளார்கள் அன்றைய நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள் இதைநாம் விளங்கிவைத்துள்ளோம். ஆனால் ஒருவருக்கு குளிப்புக் கடமை ஆகவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைக்காக அவர் குளிக்க வேண்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 897) ஆண்களாக இருந்தாலும் பெண்களால் இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கும் வரக்கூடியவர்களாகஇருந்தாலும் வராதவர்களாக இருந்தாலும் பருவ வயதை அடைந்தவர்களாக இருந்தால் இஸ்லாத்தில் வாரத்தில் ஒருநாள் குளிப்பது கட்டாயக்கடமையாகும். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் சரி அவர்களிடம் அழுக்கு இருந்தாலும் இல்லா விட்டாலும் வெள்ளிக் கிழமையாவது கண்டிப்பாகக் குளித்து விடவேண்டும் என்று வாரத்தில் ஒருநாள் குளிக்க வேண்டும்என்று சொன்ன ஒரு மார்க்கம் இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கும். மற்றநாள்களில் குளிக்க முடியும் ஆனால் வாரத்தில் ஒருநாள் குளிப்பது கட்டாயமாகும். குளிப்பதை மாத்திரம் சொல்லாமல்அன்றைய தினத்தில் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடைகளைஉடுத்திக் கொண்டு எண்ணெய் பூசிக் கொள்வது நறுமணம் பூசிக் கொள்வதுடன் அன்றையநாள் நன்றாக உணவு உண்ண வேண்டும்என்று கூறுகிறார்கள். இவைகள் எல்லாம் பெருநாளுடைய ஒரு அம்சமாகும். வெள்ளிக் கிழமை நாளில் பைத்தியம் பிடித்தவர்களைப் போன்று தலைவாராமல் அழுக்கான ஆடைகளை உடுத்திக் கொண்டு வரக்கூடாது என்பதை இந்த நபி மொழி நமக்கு கூறுகிறது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் ஒருவர்குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். பிறகு எண்ணெய்யோ நறுமணமோபூசிக்கொள்கிறார். பிறகு அவர் புறப்பட்டு (சேர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் (பள்ளிக்குள் சென்று) தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும்(அவர் ஆற்றும்உரையைச் செவியேற்க) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இதை சல்மான் அல்ஃபார்சீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 910) ஜும்ஆ நாளில் ஐவேளைத் தொழுகைகையப் போன்று ஜமாத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமை. யார் ஒருவன்ஜம்ஆவுடைய நாளில் தொழுகைக்கு வராமல் இருக்கிறார்களோ அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் வீட்டோடு நெருப்பு வைத்துக் கொளுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் ஜமாத் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி அந்த அளவுக்கு முக்கியத்துவத்தின் காரணமாகக்கூறுகிறார்கள். மற்றக் கடமைகளும் கடமைகள் தான் ஆனால் இது அவைகளைவிடவும் முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தப்பட்ட கடமையாகும் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ஜம்ஆ என்கிற அத்தியாயத்தில் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறான். நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வைநினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின்அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62:9,10)

பாவங்கள் மன்னிக்கப்படும்

ஒரு ஜும்ஆவில் இருந்து அடுத்த ஜும்ஆ வரைக்கும் நம்மிடம் மனிதன் என்றமுறையில் சில தவறுகளை நாம் செய்து விடுவோம் இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆ விலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும்பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காத வரை. (முஸ்லீம் 394) கொள்ளையடித்தல் திருட்டு விபச்சாரம், மதுபானம் குடிப்பது போன்றபெரும் பாவங்களுக்கு இந்த ஜம்ஆவின் மூலம் மன்னிக்கப்படாது. நம்மை அறியாமல் கோள் சொல்வது புறம் பேசுவது போன்ற சிறு பாவங்கள் இதன் மூலம்மன்னிக்கப்படும். அதன் காரணமாக இஸ்லாம் இஸ்லாம் சொல்லக் கூடிய பிரகாரம் ஜும்ஆவிற்கு சென்றால் இந்தப் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும். பெரும்பாவங்கள் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் நாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

Source:rasminmisc.com

04 April 2014

மரணமும் கப்ர் வாழ்வும்

இன்று 04-04-2014 இந்திரக்கரை தாருல் ஹிக்மா மஸ்ஜித்தில் அப்துர் ரஹ்மான் மெளலவி அவர்களால் நிகழ்த்தப்பட்ட ஜும்மா பேருரை மரணமும் கப்ர் வாழ்வும்


Jummah Bayan Darul Hikma 4-4-2014 Abdurahman 001.amr

18 June 2013

ரமழானை வரவேற்போம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்,
அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது. ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
'இறைவிசுவாசிகளே! உங்களுக்கு 
முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்' (அல்பகரா 2:183).

31 March 2013

இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம்

இஸ்லாம் முட்டாள்கள் தினத்தை எவ்வாறு பார்க்கிறது? 1. ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. “முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. அல்குர்ஆன் 49:11 2. ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. அளவு நிறுவையில் ஏமாற்றி மோசடி செய்த மத்யன் என்ற ஊர்வாசிகள் அழிக்கப்பட்டதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடு தான். 83:1 ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். 7:91.92 11:94 29:36 நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில் ஈரம் பட்டது. உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க, “அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள். (முஸ்லிம் 295) நபி(ஸல்)அவர்கள் எங்கள் வீட்டிலிருக்க என்னுடைய தாய் ஒரு நாள் என்னை அழைத்து, “இங்கே வா!நான் உனக்குத் தருகிறேன்”என்றார்கள். உடனே நபியவர்கள் என்ன கொடுக்க அழைத்தீர்? என்று என் தாயைப்பார்த்துக் கேட்க, அதற்கு என் தாய், “பேரீத்தம் பழம் கொடுக்க”என்றார்கள். “நீர் அவருக்கு எதையும் கொடுக்கவில்லையெனில் நீ பொய் கூறி விட்டாய் என்பதாக உன் மீது எழுதப்படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி)அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் 4993) ஒட்டகம், ஆடு போன்ற கால்நடைகளை விற்பனை செய்வதற்காக அதன் பாலை (கறக்காது) தடுத்து நிறுத்தி (அவற்றின் மடியை கனக்கச்செய்து அதிகமாகப் பால் தருவது போன்று) காண்பித்து விடாதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி 2148,முஸ்லிம் 3890) “மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளை யில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142) 3. ஏமாற்றுதலின் மற்றொரு வகை பொய் பேசுவது. பொய்யைக்குறித்தும் எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம் எண்ணற்ற குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பொய்யின் விபரீதத்தை விளக்குகிறது. “கேள்விப்பட்டதையெல்லாம் சொல்பவன் அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்”. (முஸ்லிம்) நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவர்க்கம் செல்ல வழி காட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையையே பேசிக் கொண்டி ருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான். மேலும் நிச்சயமாகப் பொய் என்பது தீமை செய்ய வழி காட்டுகிறது. தீமை நரகிற்கு வழி காட்டுகிறது. நிச்சயமாக ஒரு மனிதன் பொய் பேசிக் கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் அவன் மகாப் பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான். (புகாரி 6094, முஸ்லிம்) 4. ஏமாற்றுவதே கூடாது என்கிறது இஸ்லாம் அதை கண்டிப்புடன் எதிர்க்கிறது. ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான்!என்று குர்ஆன் கூறுகிறது குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும் ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, “அந்த மரத்தின் பக்கம் சென்றால் நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் ஆகக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான் என்று ஆசை வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன7:20,20:120) நம் பெற்றோரை வஞ்சகமாகப் பேசி ஏமாற்றியது மட்டுமல்லாது நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் அந்த ஷைத்தான் ஏமாற்றி நரகிற்கு கொண்டு செல்ல நினைக்கிறான் “ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு, மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கை இல்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.” அல்குர்ஆன் 7:27 ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான், இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் புறங்காட்டிப் பின்சென்று “மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கிறேன், நிச்சயமாக நான் அல்ல்லாஹ்வு; க்குப் பயப்படுகிறேன்,அல்ல்லாஹ் தண்டனை கொடுப்பதில் டினமானவன்” என்றுகூறினான். அல குர்ஆன் 8:48 5. மக்களின் நலம் நாடவேண்டும் கேலி பேசி மனம் புண்படும்படி நடப்பவன் உண்மை இறைவிசுவாசியாக இருக்கமுடியாது: பின்வரும் நபிமொழிகள் அதை உறுதிப்படுத்துகிறது “அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்” என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி முஸ்லிம்) அநீதியிழைக்கப்பட்வனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அவன் பாவியாக இருந்தாலும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸன்னஃப் அபீ ஷைபா) “பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். (புகாரி 10) மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நபி மொழிகளும் ஒருவர் மற்றவர்களை ஏமாற்றுவதையும், பொய் பேசுவதையும், மோசடி செய்வதையும், பரிகாசம், கேலி, கிண்டல் செய்வதையும் கடுமையாகக் கண்டிக்கின்றவையாக இருக்கின்றன. மேலும் ஏப்ரல் ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும் ஏப்ரல் ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் தவிர்ந்து கொள்ளப்படவேண்டியவை என்பதையும் அவை அனைத்தும் நமது பகிரங்க விரோதி ஷைத்தானுடைய செயல்கள் எனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒரு முஸ்லிம் என்றைக்கும் எப்போதும் மற்றவர்களின் மனது புண்படும் படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ, பரிகாசம் செய்பவனாகவோ,பொய் பேசுபவனாகவோ இருக்க மாட்டான். ஏப்ரல் ஒன்று அன்று நடைபெறுகின்ற ஏமாற்றுக்காரியங்களை முஸ்லிம்கள் தங்களைச் சார்ந்து வாழ்கின்ற மற்ற மாற்றுக் கொள்கை களைச் சார்ந்தவர்களிடத்தில் நல்ல அணுகு முறையோடு எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும், வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக, ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன். ஆக்கம்: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி ஆசிரியர் JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College) Thanks: islamkalvi.com

01 March 2013

சபித்தல்

நபி அவர்கள் கூறினார்கள், "அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது".
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம் "அதிகம்
சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும்.
பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத் 'அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக்
கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத் அதிகம் சபிப்பவர்கள் 'மறுமை நாளில்" பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ 'ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ:
கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ




Thanks:http://www.readislam.net/portal/archives/1938

21 December 2012

ஒரு நாள் உலகம் அழியும்

2012 டிசம்பர் 21 இன்றுடன் மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடைகின்றது. சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி இருளில் மூழ்கியிருக்கும். நிபிரு என்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும் என்று பல்வேறு விடயங்களைக் கூறி உலகம் அழியப் போகின்றது என்ற ஒரு கருத்து பேசப்படுகிறது. இக்கருத்தை பல்வேறு ஊடகங்களின் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. உலகம் அழியப் போகின்றது என்று திகதி குறிப்பிட்டுச் சொல்லப்படும் இது போன்ற செய்திகள் பரவுவது இதுதான் முதற்தடவையல்ல. மனித இன வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் உலக அழிவு குறித்த வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டே வந்துள்ளன. தற்போது இத்தகைய வதந்திகள் நவீன ஊடகங்களினூடாக மிக வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இது சாதாரண மக்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஆழமாக நம்பிய சிலர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாக மாறியுள்ளனர். 2012 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி உலகம் அழியப்போகின்றது என்பதும் கலப்படமற்ற ஒரு சுத்தப் பொய் மட்டுமல்ல, இது ஒரு சில வியாபார நோக்கம் கொண்ட வி'மிகளின் திட்டமிட்ட சூழ்ச்சி என்பதே உண்மை. இச்சந்தர்ப்பத்தில் உலக முடிவு நாள் மற்றும் மறுமை நாள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு தெளிவானது. அது பற்றி அறிந்து, புரிந்து, நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். மறுமை நாளின் தோற்றம் இவ்வுலகின் அழிவோடு ஆரம்பமாகும் என அல்குர்ஆனும் ஸ {ன்னாவும் விளக்குகின்றன. அல்குர்ஆனும் ஸ{ன்னாவும் உலக அழிவு, மஹ்'ர் பெருவெளி, அதற்குப் பின்னால் உள்ள சுவர்க்க, நரக வாழ்வுகள் குறித்து தேவையான அளவு விளக்கியுள்ளன. அல்குர்ஆன் உலக அழிவு பற்றி பல இடங்களில் விளக்கியுள்ளது. “அந்நாளில் வானத்தை நாம் எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவது போன்று சுருட்டுவோம். ஆரம்பத்தில் நாம் படைத்தது போன்றே மீட்டுகிறோம். இது எமது பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் அதனை நிறைவேற்றுவோம்.” (ஸ_ரா அல்அன்பியா: 104) இவ் வசனம் உலக அழிவு பற்றி முழுமையாக விளக்குகிறது. பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சம் சுருட்டிவிடப்படும். அதுவே இப்பிரபஞ்சத்தின் அழிவென அல்குர்ஆன் கூறுகிறது. எவ்வாறு இப்பிரபஞ்சம் உருவாகியதோ அந்த அமைப்பிலேயே அழிந்தும் போகும் எனவும் இவ்வசனம் சொல்கிறது. அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. அல்லாஹ் சொல்கிறான்;;: “நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.” (40: 59) “நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார்கள.; (நபியே) நீர் கூறும் ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.” (அல்குர்ஆன் 34:3) பார்க்க: (54: 1), (21:1) அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், கழா- கத்ர் ஆகியவற்றின் மீது முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை ஏற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது. மறுமை எப்போது வரும்? இறந்த பின் வாழ்வுண்டு' என்ற உண்மையை மக்களுக்கு எத்திவைத்த நபி (ஸல்) அவர்களிடம் அந்த மக்கள், ‘மறுமை நாள் வரும் என்கிறீர்களே! அது எப்போது வரும்?’ என்றும் கேள்வி கேட்கத் துவங்கினர். “மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம்.”(அல்குர்ஆன் 33: 63) மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற இரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாகக் கூறுகின்றான். ‘அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்லை. மறுமை நிச்சயம் வரும் என்றிருந்தால் அது வருகின்ற நாளை தெளிவாக அறிவித் திருக்கலாமல்லவா என்ற சந்தேகம் எழலாம். அதற்கான பதிலை இப்படிச் சொல்கிறது அல்குர்ஆன்;. “நிச்சயமாக அந்த (மறுமையின் நிகழ்வு) நேரம் வரக்கூடியதாக உள்ளது. உயிரினம் அனைத்தும், தான் செய்ததற்கு ஏற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த நாளை நான் இரகசியமாக வைத்துள்ளேன்.” (அல்குர்ஆன் 20: 15) ஆம்! இந்த நாளில் இன்ன நேரத்தில் அது (மறுமை, மரணம்) வரும் என்பது முன்கூட்டியே அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தால், மனிதர்களின் வாழ்வில் பெரும் குழப்பமே எஞ்சியிருக்கும். இன்ன நேரத்தில் மரணம் வரும், மறுமை வரும் என்ற செய்திகளை அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதால்தான் உலகம் ஓரளவு அமைதியாக உள்ளது. மறுமை வருமா? என்ற சந்தேகம் ஒருபுறம், எப்போது வரும்? என்ற சந்தேகம் மறுபுறம் என, அவர்களின் நிலை குழப்பதில் இருந்தது. அது வெகு சீக்கிரம் வரும் என அல்லாஹ் அறிவித்து விட்டான். மறுமை நாள் வரும் முன் சில அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள், மறுமை நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான சான்றுகளாக அமையும். இந்த சான்றுகள் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனிலும் குறிப்பிடுகின்றான், நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கிறான். மறுமை நாளின் அடையாளங்களில் சில: · ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தல், பின்தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகும், · விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும், · தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுதல், பாலைவனம் சோலை வனமாதல், காலம் சுருங்குதல், கொலைகள் அதிகரித்தல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்துப் பெருமையடிப்பது, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், ஆடை அணிந்தும் நிர்வாணமாயிருக்கும் பெண்கள், · உயிரற்ற பொருட்கள் பேசுவது, · தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், · மரணிப்பதற்கு ஆசைப்படுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றுதல், ய+தர்களுடன் மாபெரும் யுத்தம்,· க/பா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், ய+ப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர் தோன்றுதல், செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பைத்துல் முகத்தஸ் வெற்றி, மதீனா தூய்மையடைதல் இவை நம்பகமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள உலக முடிவுக்கான சில அடையாளங்கள். இவற்றில் சில நடந்து முடிந்த அடையாளங்கள். மற்றும் சில நிகழ்ந்து கொண்டி ருக்கும் அடையாளங்கள். என்றாலும், அந்த நாள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்பதை எம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த நாள் நெருக்கமாக வரும்போது சில மகத்தான அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள் தோன்றி விட்டால் அந்த நாள் எவ்வளவு சமீபத்தில் உள்ளது என்று முடிவு செய்து விடலாம். அத்தகைய மாபெரும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். 1. புகை மூட்டம். 2. தஜ் ஜhலின் வருகை. 3. (அதிசயப்) பிராணி. 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல். 5. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீள்வருகை. 6. ய/ஜ{ஜ் , ம/ஜ{ஜ் கூட்டத்தினரின் வருகை. 7. கிழக்கே ஒரு பூகம்பம் வெடித்தல். 8. மேற்கே ஒரு பூகம்பம் வெடித்தல். 9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தல். 10. இறுதியாக யமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல். ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி (ஸல்லல்லாஹ { அலைஹிஸ்ஸலாம்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹ{தைபா (ரழி), நூல்: முஸ்லிம் அந்த நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இம்மார்க்கத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த பத்து அடையாளங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டவுடன் உலகம் அழிந்துவிடும் என நபியவர்கள் இதன் மூலம் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். இவற்றில் மூன்று அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை. “சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ் ஜhல், (அதிசயப்) பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமானால் அவற்றுக்கு முன்பே ஈமான் கொண்டிருந்தாலே தவிர எவருக்கும் அவரது ஈமான் பயனளிக்காது” என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹ {ரைரா (ரழி) நூல்கள்: முஸ்லிம் இப்னுமாஜh) உலகம் அழியப் போகிறது என திகதி குறிப்பிட்டு அல்லது கால, நேரம் குறிப்பிட்டுச் சொல்லப்படும் தகவலை ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது. அவ்வாறு நம்புவாராயின் அவரது ஈமானில் கோளாறு இருக்கிறது என்பதே அர்த்தம்.உலக அழிவு குறித்து அவ்வப்போது பரப்பப்படும் வி'மப் பிரசாரத்தை நம்புபவர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கும் மரணம் குறித்து சிந்திக்கத் தவறி விடுகின்றனர். அது அவர்களது உலக முடிவு என்பதை மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு மனிதனுடைய மரணமும் அவனது உலக முடிவு என்பதை ஒவ்வொருவம் சிந்திக்க வேண்டும். முழு சமூகத்தினதும் மரணம்தான் உலகத்தின் இறுதிநாள் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எனவே, உலக அழிவு பற்றிய ஆய்வில் ஈடுபடுவதை விடுத்து மரண சிந்தனையோடு மறுமைநாளுக்காக எம்மைத் தயார்படுத்தி மறுமையில் வெற்றி பெறுவோமாக! அஷ்n'ய்க் nஜம்ஸித் அஸீஸ் (நளீமி)