தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label சுவாரஸ்யம். Show all posts
Showing posts with label சுவாரஸ்யம். Show all posts

12 August 2015

இரட்டைத்தலை கொண்ட அபூர்வ நல்லபாம்பு: உண்ணாமல் உயிர் வாழும் அதிசயம் - வீடியோ


பீஜிங், ஆக. 12- 

பாம்புகள் ஒன்றாக விளையாடாது என்பதால் பாம்புகளின் உரிமையாளர்கள் அதனை தனித்தனியாக பிரித்து வைத்தே வளர்ப்பது வழக்கம். ஒன்றாக இருந்தால், ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால் என்ன செய்வது? 

தெற்கு சீனாவின் யூலின் மாகாணத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாம்பு பண்ணை ஒன்றில் 10 நாட்களுக்கு முன் ஆச்சர்யமளிக்கும் வகையில் இரட்டைத் தலையுடன் ஒரு நல்ல பாம்பு பிறந்தது. தனித்தனி மூளைகள் கொண்ட இந்த பாம்பு  சுதந்திரமாக சிந்தித்து தத்தமது உடலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடன், பிரிக்க முடிந்த இரட்டையர்களாக காணப்படுகிறது. 

இவ்வாறான பாம்புகள் வழக்கமாக நீண்ட காலம் வாழாது. ஒரு வேளை அவற்றினை முறையாக கவனமெடுத்து வளர்த்தால் சில காலம் பாதிப்பின்று வாழ வைக்க முடியும். ஆனால், இந்த அபூர்வ நல்ல பாம்போ எதையோ சாப்பிடவோ குடிப்பதோ இல்லை. ஆனாலும், ஆரோக்கியமாக இருக்கிறது. இருப்பினும் அது இன்னும் எவ்வளவு நாள் உயிரோடிருக்கும் என்று சொல்ல முடியாது என்கின்றனர் பாம்பியல் வல்லுநர்கள். 

தற்போது சீனாவின் நான்னிங் மிருகக்காட்சிசாலையை கலக்கி வரும் அந்த பாம்பின் சேட்டைகள் வீடியோ வடிவில்:




நன்றி:மாலை மலர்,
டெய்லி மிரர்

16 November 2014

ஸ்டார்லிங் குருவிகளின் அதிசயிக்க வைக்கும் குழு நடனம்

ஆடும் கருமேகம் போல அஸ்தமன வானத்தில் ஸ்டார்லிங் குருவிகள் அரங்கேற்றும் அற்புத
நடனத்தை பிரிட்டனில் இலையுதிர் காலத்தில் கண்டு ரசிக்க முடியும். ஸ்டார்லிங் குருவிகளின் இந்த நடனத்தைப் பற்றிய ஆய்வு ஒன்றை க்ளோஸ்டர் பல்கலைக்கழகம்
இப்போது நடத்திவருகிறது. நாற்பது ஆண்டுகளில் 80 சதவீதம் அழிந்துவிட்ட இந்தப் குருவி இனம் முற்றும்
இல்லாதுபோவதைத் தடுக்க இந்த ஆய்வு உதவுமா?
கீழே உள்ள வீடியோவைப் பார்த்து ரசிக்கவும்

இதையும் பார்க்கவும்


Thanks:
Bbc,
youtube

15 November 2014

சிங்கக்கூட்டத்திடம் சிக்கிய யானைக்குட்டி;இணையத்தைக் கலக்கும் வீடியோ

கிட்டதட்ட 14 சிங்கங்களைக் கொண்ட சிங்க கூட்டம் ஒன்றிடம் சிக்கிக்கொண்ட யானைக்குட்டி ஒன்றை இரையாக்கிக்கொள்ள முயற்சிக்கும் வீடியோ ஒன்று அப்பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்ட ஒரு குழுவினரால்
தற்போது இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது நீங்களும் காணத்தவராதீர்கள்.

05 September 2014

காட்டு ராஜாக்களை ஓட வைத்த கீரி (video)

சிங்கங்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற கீரியின் அதிசய காணொளியொன்று வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் கென்னியாவின் மாஸாய் மாரா சரணாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
இரண்டு அடி உயரமான கீரி காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களுடன் சண்டையிட்டு பின்னர் அந்த சிங்களை விரட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த காணொளி 2011 ஆம் ஆண்டு ஜெரோம் எனும் புகைப்படபிடிப்பாளரால் படம்பிடிக்கப்பட்ட போதும் தற்போதுதான் வெளியிட்டுள்ளார்.

Thanks:newsfirst

23 August 2014

உலகெங்கிலும் சூடுபிடிக்கும் 'ஐஸ் பக்கெட்' சவால் (video)

ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப்
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட்
சவாலை பலர் மேற்கொண்டுள்ளனர். இந்த நோயால் நரம்பு மண்டலம்
பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற
செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும்.
இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.

விதிகள்
முதல் விதி, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 24 மணிநேரத்தில்
இதை செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ்
அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை செய்ய
முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும். ஏற்றுக்
கொள்பவர்கள் முதலில் கேமராவின் முன் நின்று தாம் இந்த
சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ்
கட்டிகள் நிறைந்த பக்கெட் அல்லது, ஐஸ் கட்டிகள் கரைந்த பக்கெட்
நீரை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து,
தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ, பலருக்கோ சவால் விட வேண்டும்.
அவ்வளவே.
ஐஸ் பக்கெட் சாலஞ்சை திரை, விளையாட்டு மற்றும் அரசியல்
பிரபலங்கள் பலர் செய்து வருவதால், அவர்களின் சவால் வீடியோக்கள்
சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்கள் பலரும் தங்கள் பங்குக்கு தலையில் தண்ணீர்
ஊற்றி அதை வீடியோவில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர்.
எக்குத்தப்பாக செய்து நகைச்சுவையில் முடிந்த வீடியோக்களும் உள்ளன. மார்க்
ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ், பிரிட்னி ஸ்பியர்ஸ்,
'ராக்' டுவைன் ஜான்சன், அண்டர்டேகர், கெவின் பீட்டர்சன், லயனல்
மெஸ்ஸி என எண்ணற்ற பிரபலங்களது ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள்
யூடியூபில் காணக் கிடக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பலரும் சவால்
விட்டிருந்தனர்.
ஆனால், ஒபாமா, அதற்கு பதிலாக நன்கொடை அளித்து விடுவதாக
உறுதியளித்துள்ளார்.
இந்த சவால் பிரபலமானதால், ஏ.எல்.எஸ் பற்றிய
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களில்
மட்டும் 15.6 மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும்
ஏ.எல்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில்
இருந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியன்
ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதாக ஒரு
புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 2.2 மில்லியன்
முறை, இந்த வார்த்தை தங்களது பயனர்களால்
குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.

விமர்சனங்கள்

வழக்கம் போல, ஐஸ் பக்கெட் சாலஞ்ச் பற்றிய விமர்சனங்களும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த சவாலை செய்யும் பல
பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதை சொல்ல
மறந்துவிடுகின்றனர். வெறும் பரபரப்புக்காக மட்டுமே பலர்
இதை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக
எழுந்துள்ளது. எது எப்படியோ, எளிமையான ஒரு செயலின் மூலம், உலகை
திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று இந்த ஐஸ் பக்கெட்
சாலஞ்ச் நிரூபித்துள்ளது.

Thanks
BBC
தி இந்து

19 August 2014

சுத்தமாகும் லண்டன் 'பிக் பென்' கடிகாரம் video

லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ( நாடாளுமன்றம் இருக்கும்
இடம்) இருக்கும் பிரசித்தி பெற்ற பிக் பென் கடிகாரம் 2010ம்
ஆண்டிலிருந்து முதன் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது. எலிசபத்
கோபுரத்தின் மீது ஊழியர்கள், இந்த சுத்தம் செய்யும்
வேலையைச் செய்ய அங்கு இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேலை நடக்கும்
போது, இந்த கடிகாரம் மணியடிக்கும், நேரம்
காட்டும். ஆனால் அதன் நேரங்காட்டும் முட்கள் தற்காலிமாக
வேலை நடக்கும்போது நிறுத்திவைக்கப்படும். இந்தக் கடிகாரத்தின் நான்கு
முகங்கள் ஒவ்வொன்றும், 312 கண்ணாடித்
துண்டுகளால் ஆனவை. இந்த வேலையைச் செய்ய ஐந்து நாட்கள்
வரை பிடிக்கும்.



Source:bbc
இதையும் பார்க்கவும்
Big Ben - behind the scenes