ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்
இலங்கையின் நிறுவனங்களுக்கான ஹலால்
சான்றிதழ்களை விநியோகிக்கும் பொறுப்பு ஹலால்
சான்றுறுதி பேரவையிடம் (உத்தரவாதமளிக்கப்பட்ட)
நிறுவனத்திடம் இலங்கை நிறுவனங்களின் 2007-7ஆம் பிரிவின்
சட்டத்தின் கீழ் இப்பேரவை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 27 நாடுகளில்
அங்கீகாரமும் பெற்றுள்ளது. இது தொடர்பில் ஹலால் சான்றுறுதி பேரவையின்
பிரதம
நிறைவேற்று அதிகாரி அலி பதார் அலி தெரிவிக்கையில்,
இன்றைய உலகில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹலால் சான்றிதழ்
முக்கியமானதாகும். இலங்கை நிறுவனங்கள்
தமது உற்பத்திகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு
முக்கிய சர்வதேச சான்றாக பின்பற்றப்படுகிறது. SLS மற்றும் ISO போன்ற
சான்றுகளை போன்றே ஹலால்
சான்றுறுதி பேரவையின் சான்றும் ஒரு சர்வதேச தரச் சான்றாகும்.
அத்துடன் எமது உள்விவகார நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள்
சர்வதேச நிறுவனத்தால் மதிப்பிடப்படுகின்றது.
இத்தரச் சான்று உணவு, குடிபானம் மற்றும் பாவனைப் பொருட்கள்
போன்றவற்றின் ஹலால் தரத்தை உறுதிப்படுத்தும் ஒரு விடயாகும். அத்துடன்
இத்தரச் சான்றுடன் சம்பந்தப்பட்ட விஞ்ஞான ரீதியான
செயற்பாடுகளில் அனுபவம் வாய்ந்த தேர்ச்சிபெற்ற தொழில்நுட்ப
குழு ஹலால் சான்றுறுதி பேரவையில்
இருப்பது குறிப்பிடத்தக்கது.
எமது அனைத்து உள்விவகார செயற்பாடுகள் வெளிப்படையானதும்
சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் ஹலால் சான்றுறுதி பேரவையானது
இலாபமற்ற இலங்கையின் முக்கிய
துறைசார்ந்தவர்களின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு சர்வதேச தரங்களின்
அடிப்படையில் மார்க்க வழிகாட்டலின் கீழ் இயங்கும்
ஒரு அமைப்பாகும் இத்தரச்சான்றிதழ் விஞ்ஞான மற்றும் வர்த்தக
ரீதியான தொடர்புகள் இருந்த போதிலும் இவை சமயம் மற்றும்
கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இது பாவனையாளர்களின்
விருப்பத்திற்கு தேவையான ஹலால்
உற்பத்திகளையும் சேவைகளையும் பெற்றுக்கொடுக்க வழி வகுக்கும்.
மேலும் இவை மூலம் இலங்கையர்கள் தமது உற்பத்திகளை அதிக
பாவனையாளர்கள் கொண்ட சர்வதேச ஹலால் சந்தைக்கு அனுப்ப
வழிகிடைக்கின்றது. இதன்மூலம் உலகில் வாழும் 2
பில்லியனுக்கு அதிகமான முஸ்லிம்கள் ஹலால் உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும்.
உலக சந்தையில் ஹலால் ஏற்றுமதி சுமார் US $ 2 trillion
மதிப்பிடப்பட்டுள்ளதாக இது தொடர்பாக ஆய்வுகளை நடத்தும் VB
கேர்ணி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் மிக வேகமாக
வளர்ந்து வரும் பாவனையாளர்களின் தேவையாக இது அமைந்துள்ளது.
67 வீதம் உணவு, 22 வீதம் மருந்துப்பொருட்கள் மற்றும் 10 வீத அழகு சாதனப்
பொருட்கள் இதில் நாட்டில் இந்த
சான்றிதழுக்கு அதிக தேவை நிலவுகின்றது.
உள்ளூர் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும்
பொருட்களை சந்தை படுத்தும் சுமார் 195 இலங்கை நிறுவனங்கள்
இந்த சான்றிதழை கோரியுள்ளன. நாங்கள் அதற்கான
ஏற்பாடுகளை தற்போது துரித கதியில் மேற்கொண்டு வருகின்றோம். ஹலால்
சான்றிதழ் ஆழமான முறையில் ஆய்வுக்குட்படுத்தியும்
கண்காணிப்பட்டுமே வழங்கப்படுகின்றன. தேர்ச்சிபெற்ற உலமாக்கள்
தொழில்நுட்பவியலாளர்கள், உணவு பரிசோதகர்கள்,
மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இவற்றை கண்காணிக்கின்றனர்.
இந்த சான்றிதழை பெற வேண்டும் என எவர்மீதும் அழுத்தம்
கொடுக்கப்படுவதில்லை. ஹலால் சான்றுறுதி பேரவை நாட்டின் தேவையை கருதியே
ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன்
எல்லா நிறுவனங்களும் அவசியம் ஹலால் சான்றிதழ் பெறவேண்டும் என்ற
எந்த நிபந்தனையும் கிடையாது. நாங்கள்
இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் நிறுவனம் அல்ல
என்பதனால் எமது சேவைகள் இலவசமானது என்றும் கூறமுடியாது.
ஹலால் சான்றிதழ் படுத்தலினூடாக சிறந்த சேவைகளை வழங்க பல
துறைசார்ந்தவர்கள் உட்பட பெரும் எண்ணிகையில்
பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளோம்.
எனவே அதற்கான செலவீனங்களை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
என ஹலால் சான்றுறுதி பேரவையின் பிரதம
நிறைவேற்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Source:http://adf.ly/btP66
No comments:
Post a Comment