இருபது-–20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கையின் உத்தேச
குழாமில் சிறிய இடைவெளிக்குப்பின்னர் தொடக்க வீரர் உபுல் தரங்க
இணைக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐ.சி.சி.யின் இருபது–20 உலகக்
கிண்ண தொடருக்கான இலங்கையின் 30 பேர் கொண்ட உத்தேச குழாம்
அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம்
திகதி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் 15 பேர் கொண்ட
இறுதி அணி இக்குழாமிலிருந்தே தெரிவு செய்யப்படவுள்ளது. இந்நிலையில்
டினேஷ் சந்திமால் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள
இக்குஇழாமில் தொடக்க வீரர் உபுல் தரங்க, தம்மிக்க பிரசாத், ஜீவன்
மென்டிஸ் மற்றும் இசுரு உதான போன்ற வீரர்கள் சிறிய இடை
வெளிக்குப் பின்னர் தேசிய இருபது-20 அணிக்கான பரிசீல
னைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
டினேஷ் சந்திமால், திலகரட்ண டில்ஷான், குசால் ஜனித் பெரேரா,
மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்தியூஸ்,
லஹிரு திரிமன்ன, உபுல் தரங்க, அஷன் பிரியஞ்சன், கித்துருவன்
விதானகே, அஞ்சலோ பெரேரா, லசித் மலிங்க, நுவான் குலசேகர,
திஸர பெரேரா, சுரங்க லக்மால், ஷமின்ட எரங்க, தம்மிக்க பிரசாத்,
நுவான் பிரதீப், டில்ஹார லொக்குஹெட்டிகே, சச்சித்திர சேனநா யக்க, ரங்கன
ஹேரத், அஜந்த மென்டிஸ், டில்ருவான் பெரேரா, சீக்
குகே பிரசன்ன, ஜீவன் மென்டிஸ், றமித் றம்புக்வெல்ல, சத்துரங்க டீ
சில்வா, மிலிந்த சிரிவர்தன, கோசல குலசேகர, இசுரு உதான.
Source: http://adf.ly/cTApD
No comments:
Post a Comment