தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 07 Apr 2025

08 October 2015

அல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி தமிழ் மொழி மூலம் 191
புள்ளிகள் பெற்று களுத்துறை மாவட்டத்தில் மற்றுமன்றி மேல் மாகாணத்திலும் முதலிடத்தைப் பெற்று செல்வி நூர் ஸப்ரினா இசாக் சாதனை படைத்துள்ளார்.
அத்தோடு அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் பேருவலை அல் பாஸியத்துல் நஸ்ரியா பாடசாலை மாணவியாவார்.
இன்னும் இவர் தரம் 1 முதல் 3 வரை மக்கொனை அல் ஹஸனியாவில்
கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது "ஊரும் உலகும்" வலைப்பூவுக்கு செல்வி நூர் ஸப்ரினா இசாக் விசேடமாக
வழங்கிய செவ்வியில் தனது பாடசாலையான பேருவலை மருதான அல்
பாஸியத்துல் நஸ்ரியா ஆசிரியர்களுக்கும் தான் முன்பு கல்வி கற்ற மக்கொன
அல் ஹஸனியா பாடசாலை ஆசிரியர்களுக்கும் தனது உள்ளம்மார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக்கொண்டார்.நாமும்  அவர் எதிர்காலத்தில் மென்மேலும் பிரகாசிக்கவும்,
ஈருலகிலும் சகல நற்பாக்கியங்களுடன் வாழ அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.
அவரது விசேட செவ்வி வீடியோ கீழே

No comments:

Post a Comment