இன்று அதிகமானவர்கள் சாம்சுங் ஸ்மார்ட் போன்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு பலவும் காரணமாக அமைந்துள்ளன. இன்று அறிமுகப்படுத்தப்படும் அதிகமான சாம்சுங் ஸ்மார்ட் போன்கள் Android இயங்குதளத்தை கொண்டிருக்கின்றமையும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகளுடன் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள முடிகின்றமையும் இதற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடலாம்.
அந்த வகையில் நீங்களும் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர் எனின் உங்களுக்கு பின்வரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
*ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!
1. Quick Settings பகுதியில்மேலதிக வசதிகளை பெறுவதற்கு
ஸ்மார்ட் போனின் Notification Panel இல் தரப்பட்டுள்ள Quick Settings எனும் பகுதி மூலம் Wi-Fi, Screen rotation, Airplane Mode, Mobile Data என பல அமைப்புக்களை இலகுவாகவும் விரைவாகவும் செயற்படுத்திக் கொள்ளவும் முடக்கிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது.
எனினும் இதில் தரப்பட்டுள்ள வசதிகளுடன் இன்னும் பல அமைப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு Notification Panel ஐ இரு விரல்களால் மேலிருந்து கீழாக நகர்த்துவதன் மூலம் பெருக.
இதன் போது Wi-Fi, Screen rotation, Airplane Mode, Mobile Data போன்ற வசதிகளுடன் இன்னும் பல அமைப்புக்களுக்கான வசதிகள் தோன்றுவதை அவதானிக்கலாம்.
2. Quick Setting பகுதியில் உள்ள ஒரு வசதி தொடர்பில் மேலதிக அமைப்புக்களை பெறுவதற்கு
மேற்குறிப்பிட்டது போன்று Notification Panel இல் இருக்கக் கூடிய Quick Settings பகுதி மூலம் அமைப்புக்களை செயற்படுத்திக் கொள்ளவும் முடைக்கிக் கொள்ளவும் மாத்திரமே முடிகிறது.
உதாரணத்திற்கு Mobile data வசதியை செயற்படுத்த வேண்டும் எனின் அதற்கான குறியீட்டை சுட்டுவதன் மூலம் அதனை செயற்படுத்திக் கொள்ளவும் அதே போல் அதனை மீண்டும் சுட்டுவதன் மூலம் அந்த வசதியை முடக்கிக் கொள்ளவும் முடியும்.
எனினும் குறிப்பிட்ட ஒரு வசதி தொடர்பான மேலதிக அமைப்புக்களை பெற வேண்டும் எனின் Quick Settings பகுதியில் உள்ள அந்த அமைப்புக்கான குறியீட்டை தொடர்ச்சியாக சிறிது நேரம் சுட்டுவதன் மூலம் அது தொடர்பான மேலதிக அமைப்புக்களுக்கான பகுதியை பெறலாம்.
உதாரணத்திற்கு Mobile Data தொடர்பான Access Point Names, Network Mode, Network Operators போன்ற அமைப்புக்களை பெற Quick Settings பகுதியில் உள்ள Mobile data என்பதை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
3. S Voice வசதியை மிக இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு.
ஐபோன் சாதனங்களில் தரப்பட்டுள்ள Siri, கூகுளின் Google Now மற்றும் மைக்ரோசாப்டின் Cortana போன்று சாம்சங் கேலக்ஸி சாதனங்களில் S Voice எனும் வசதி தரப்பட்டுள்ளது. இது நமது குரல் சப்தத்தை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றி அதன் மூலம் நீங்கள் இடும் கட்டளைகளுக்கு ஏற்ற துலங்கல்களை ஏற்படுத்துகின்றது.
இந்த S Voice வசதியை சாம்சங் கேலக்ஸி சாதனங்களில் மிக இலகுவாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனின் குறிப்பிட்ட ஸ்மார்ட் போனில் உள்ள Home Button ஐ தொடர்ச்சியாகவும் விரைவாகவும் இரு முறை அழுத்த வேண்டும். (Double Tap)
4. கூகுள் தேடலை மிக இலகுவாக மேற்கொள்ள.
கூகுள் தேடியத்திரத்தில் ஏதாவது ஒன்ற தேடிப்பெற வேண்டும் எனின் முதலில் இணைய உலாவியை (Web Browser) திறந்து பின் கூகுள் தளத்துக்கு சென்ற பின்னே நாம் தேடலை மேற் கொள்வோம். எனினும் இதற்கு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்களில் இலகுவான வசதி ஒன்று தரப்பட்டுள்ளது.
உங்கள் ஸ்மார்ட் போனின் இடது பக்கம் தரப்பட்டுள்ள Menu Button ஐ தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் கூகுள் தேடலுக்கான பக்கத்தை பெறலாம்.
5. குறுஞ்செய்திகளின் எழுத்துக்களை பெரிதாக்க மற்றும் சிறிதாக்க
உங்கள் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் மூலம் நீங்கள் குறுஞ்செய்திகளை பார்க்கும் போது எழுத்துக்கள் மிகவும் பெரிதாகவோ அல்லது மிகவும் சிறிதாகவோ தோன்றுகிறதா?
அப்படியானால் குறுஞ்செய்திகளை திறந்து கொண்ட பின் Volume Button களை அழுத்திப் பாருங்கள். சிறிய எழுத்துக்களை பெரிதாக மாற்றவும் பெரிய எழுத்துக்களை சிறிதாக மாற்றவும் வழி கிடக்கும்.
இந்த வசதிகள் பெரும்பாலான சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்களில் இயங்குகிறது. மேற்குறிப்பிட்ட வசதிகளுள் சில வசதிகள் சாம்சங் கேலக்ஸி தவிர்ந்த ஏனைய Android சாதனங்களிலும் இயங்கக் கூடும்.
Thanks:Tamilinfotech
*இதையும் பார்க்கவும்
No comments:
Post a Comment