தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label sports. Show all posts
Showing posts with label sports. Show all posts

27 February 2015

உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா இமாலய ரன் குவிப்பு : டிவிலியர்ஸ் அசத்தல் சதம்



கிரிக்கெட் உலகில் சாதனை வீரர் என்ற பெருமையை தொடர்ந்து ஏ.பி. டி
வில்லியர்ஸ் பெற்று வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த ஜனவரி 18
ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்களை குவித்து
சாதனை படைத்தார். அதே மேட்ச்சில் 31 பந்தில் சதமடித்து, அதிவேக
சதமடித்தவர் என்ற சாதனையும் படைத்தார்.
இன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 64 பந்துகளில் 150 ரன்களை குவித்து
அதிவேகமாக 150 ரன்களை குவித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இதில்
கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் இந்த அனைத்து
சாதனைகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே நிகழ்த்தியுள்ளார்.
அவருக்கு வெஸ்ட் அணி என்றாலே சர்க்கரை பொங்கல் போலிருக்கிறது...

19 January 2015

ஒருநாள் போட்டியில் வேகமான சதம்; டி வில்லியர்ஸ் சாதனை

18 ஜனவரி 2015


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் வேகமாக 100 ஓட்டங்களைக்
குவித்த சாதனையை தென்னாப்பிரிக்க அணிவீரர்டி வில்லியர்ஸ்இன்று
ஞாயிற்றுக்கிழமை நிலைநாட்டியுள்ளார்.
ஜொஹன்னெஸ்பர்க்நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் டி வில்லியர்ஸ் இந்த சதத்தை குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 36 பந்துகளில் சதம் குவித்து வேகமான 100 ஓட்டங்களுக்கு சொந்தக்காராக இருந்தவர் நியுசிலாந்தின் கொரே ஆண்டர்ஸன்.
இன்று டி வில்லியர்ஸ், 8 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் விளாசித் தள்ளி ஆண்டர்ஸனின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஜயசூரியவின் வேகமான அரைச்சதமும் முறிந்தது
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் வேகமான அரைச்சதம் என்ற 19 ஆண்டுகால சாதனையையும் டி வில்லியர்ஸ் 16 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்து முறியடித்துள்ளார்.
30 வயதான டி வில்லியர்ஸ், இன்று 44 பந்துகளில் 9 பவுண்டரிகளையும் 16 சிக்ஸர்களையும் விளாசித்தள்ளி மொத்தமாக 149 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகளவான சிக்ஸர்கள் என்ற சாதனையையும் டி வில்லியர்ஸ் இதன் மூலம் சமப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் 30 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்திருந்த கிரிஸ் கெய்ல்-இன் சாதனையே கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக குவிக்கப்பட்ட சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் இன்றைய இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது.
இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுக்கள் இழப்புக்கு தென்னாப்பிரிக்க அணி குவித்துள்ள 439 ஓட்டங்களே, அந்த அணி இதுவரை குவித்துள்ள ஆகக்கூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கை.
துவக்க ஆட்டக்காரர்களான ஆம்லாவின் 153 ஓட்டங்களும் ரோசோவின் 128 ஓட்டங்களும் இதில் அடங்கும்.
பதிலுக்கு ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 46 ஓவர்கள் முடிவில் 7 விக்ககெட்டுக்கள் இழப்புக்கு 291 ஒட்டங்களை குவித்திருந்தது.
Fastest ODI centuries
31 ballsAB de Villiers v West Indies, 2015
36Corey Anderson v West Indies, 2014
37Shahid Afridi v Sri Lanka, 1996
44Mark Boucher v Zimbabwe, 2006
45Brian Lara v Bangladesh, 2006
45Shahid Afridi v India, 2005
Thanks:
Bbc
Theguardian

16 January 2015

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விவரங்கள்


ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில்
மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012
நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின்
அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து,
ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள்,
ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி
வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை
எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில்
அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள்
அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால்,1.அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த
சுற்றுக்கு முன்னேறும், அல்லது,2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக
இருந்தால்3.இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த
சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில்
மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள
அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
அரையிறுதி:
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு
அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள்
மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் 'டை' ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில்
முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள்
அடிப்படையில் 'டை' ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

27 November 2014

தலையில் பந்து பட்டதால் காயமடைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!

சிட்னி: ஆஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து
பலமாக மோதியதால் படு காயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ்
சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நேற்றுமுன் தினம் நியூ சவுத் வேல்ஸில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட்
போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் அபாட்டின் பந்து, பிலிப்பின்
தலையில் பலமாக தாக்கி விட்டது. இதனால் படுகாயமடைந்து நிலை குலைந்து கீழே
விழுந்தார் ஹியூக்ஸ்.
தலையில் ரத்தம் சொட்டச், சொட்ட சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தது.
இரண்டு நாட்களாக கோமாவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி தற்போது
உயிரிழந்துள்ளார்.
25 வயதேயான பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட்
போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
பிலிப் ஹியூக்ஸின் மரணம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், விளையாட்டு
உலகையும் உலுக்கியுள்ளது. ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். பல நாட்டு
வீரர்கள் ஹியூக்ஸுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஹியூக்ஸ் அணிந்திருந்த ஹெல்மெட்டின் மோசமான வடிவமைப்புதான்
அவருடைய உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்றும் சில தகவல்கள்
வெளியாகியுள்ளது.
வருகின்ற 30 ஆம் தேதி, அதாவது இன்னும் இரு தினங்களில் ஹியூக்ஸின்
பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:oneindia

19 September 2014

தென் கொரியாவின் கோலாகலமாக தொடங்கிய 17வது ஆசிய விளையாட்டுப் போட்டி


இன்சியான்:
17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில்
இன்று கோலகலமாக தொடங்கியது. கொரியன் பாப் பாடகர் கங்னம் ஸ்டைல் புகழ்
சை நடனமாடி பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தினார் இன்று முதல் 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம்
தேதி நிறைவடைகிறது. இந்தப் போட்டி 3-வது முறையாக தென் கொரியாவில்
நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986 (சியோல்), 2002 (புசான்) ஆகிய ஆண்டுகளில்
ஆசிய விளையாட்டுப் போட்டியை தென் கொரியா நடத்தியிருக்கிறது. இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமாக வாசகமாக "பன்மயம் ஒளிர்கிறது இங்கே" என்ற
வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆசியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின்
முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.

சின்னம் ‘மேஸ்காட்’
போட்டியின் சின்னமாக (மேஸ்காட்) இன்சியானின் சாங்டோ தீவில் வசிக்கும் கடல்
நாய்கள் (ஸ்பாட் சீல்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பரேமி, சுமுரோ, விச்வோன் என
அழைக்கப்படுகின்றன. கொரிய மொழியில் பரேமி, சுமுரோ,
விச்வோனுக்கு முறையே காற்று, நடனம், ஒளி என்பது பொருள். வட கொரியா மற்றும்
தென் கொரியா இடையே அமைதியை வலியுத்தும் வகையில் மேற்கண்ட
சின்னத்தை தேர்வு செய்துள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.

இலச்சினை
போட்டிக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை ஆசியாவின் முதல் எழுத்தான ‘ஏ'
வை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ‘ஏ' வின் இடது மேற்பகுதியில் சூரியன்
இடம்பெற்றுள்ளது. ஆசிய மக்கள் வானத்தை தங்களின் கையில் பிடித்திருப்பதைக்
குறிக்கும் வகையில் இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.

45 நாடுகள்
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட
45 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரம்
பேர் இதில் பங்கேற்கிறார்கள்.

36 வகையான போட்டிகள்

36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் 28 வகையான விளையாட்டுகள் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக்
போட்டியில் இடம்பெறுகின்றன. மொத்தம் 49 மைதானங்களில் போட்டிகள்
நடைபெறுகின்றன. அதில் 23 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டவையாகும்.


Official Name: 17th ASIAN GAMES INCHEON 2014 Duration: September 19, 2014 - October 4, 2014 (16 days) Venues: In and around Incheon Metropolitan City Participants: About 13,000 athletes and officials and about 7,000 media from the 45 OCA member states Staff: Approx. 30,000 Host: The Olympic Council of Asia (OCA) Organizer: The 2014 Incheon Asian Games Organizing Committee (IAGOC) No. of Sports: 36


ASIAN GAMES INCHEON 2014 36Sports
Aquatics, Archery, Athletics, Badminton, Basketball, Boxing, Canoe & Kayak, Cycling, Equestrian, Fencing, Football, Golf, Gymnastics, Handball, Hockey, Judo, Modern Pentathlon, Rowing, Rugby, Sailing, Shooting, Table Tennis, Taekwondo, Tennis, Triathlon, Volleyball, Weightlifting, Wrestling, Baseball, Bowling, Cricket, Kabaddi, Karate, Sepaktakraw, Squash, Wushu



Thanks:-
oneindia
incheon2014ag.org

06 September 2012

முதல் இலங்கைப் பெண் பாராலிம்பிக்கில்

லண்டனில் நடந்துவரும் மாற்றுத்
திறனாளிகளுக்கான பாராலிம்பிக் ஒலிம்பிக்
போட்டிகளில் முதல் முறையாய் இலங்கையைச்
சேர்ந்த பெண் ஒருவர் பெங்கேற்றுள்ளார். கை நீக்கப்பட்டவரான
அமரா இந்துமதி கருணாதிலக, லண்டன்
ஒலிம்பிக் போட்டிகளில் டி 46 குறைபாடு உள்ள
பெண்களுக்கான இருநூறு மீட்டர்
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இதுவரை தான் இந்த தூரத்தை ஓடியதிலே மிகக்
குறைவான நேரத்தில் இந்தப் பந்தயத்தில் இவர்
ஓடியிருக்கிறார். இதற்கு முன்பு 29.56 வினாடிகளில்200 மீட்டர்
தூரத்தை ஓடியிருந்த
அமரா பாராலிம்பிக்கில் 29.36 வினாடிகளில்
இந்த தூரத்தை ஓடியுள்ளார். ஆனாலும் அமராவால் இறுதிச்
சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இலங்கையில் இருந்து பாராலிம்பிக்
போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்ணாக தான்
ஆகியிருப்பது வாழ்வின்
திருப்புமுனை என்று அமரா பிபிசியிடம்
தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக ஓடி அடுத்த சர்வதேச
பந்தயத்தில் இலங்கைக்கு பதக்கம் வென்று தர
வேண்டும் என்பதுதான்
தனது லட்சியமென்று அவர் கூறினார். "இலங்கை போன்ற ஒரு நாட்டில் உடற்திறன்
பாதிக்கப்பட்டவர்கள்
மீது சமூகத்துக்கு இருக்கும் பொதுவான
அபிப்பிராயங்கள், எண்ணங்கள் மாற வேண்டும்." உடற்திறன் பாதிப்பில்லாத
விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும்
அங்கீகாரமும் ஆதரவும் தங்களுக்கு கிடைத்தால்
தங்களால் மேலும் சிறப்பாக பரிமளிக்க
முடியும் என்று அவர் கூறியிருந்தார்.THANKS:BBC TAMIL