தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

19 January 2015

ஒருநாள் போட்டியில் வேகமான சதம்; டி வில்லியர்ஸ் சாதனை

18 ஜனவரி 2015


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் வேகமாக 100 ஓட்டங்களைக்
குவித்த சாதனையை தென்னாப்பிரிக்க அணிவீரர்டி வில்லியர்ஸ்இன்று
ஞாயிற்றுக்கிழமை நிலைநாட்டியுள்ளார்.
ஜொஹன்னெஸ்பர்க்நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் டி வில்லியர்ஸ் இந்த சதத்தை குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 36 பந்துகளில் சதம் குவித்து வேகமான 100 ஓட்டங்களுக்கு சொந்தக்காராக இருந்தவர் நியுசிலாந்தின் கொரே ஆண்டர்ஸன்.
இன்று டி வில்லியர்ஸ், 8 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் விளாசித் தள்ளி ஆண்டர்ஸனின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஜயசூரியவின் வேகமான அரைச்சதமும் முறிந்தது
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் வேகமான அரைச்சதம் என்ற 19 ஆண்டுகால சாதனையையும் டி வில்லியர்ஸ் 16 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்து முறியடித்துள்ளார்.
30 வயதான டி வில்லியர்ஸ், இன்று 44 பந்துகளில் 9 பவுண்டரிகளையும் 16 சிக்ஸர்களையும் விளாசித்தள்ளி மொத்தமாக 149 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகளவான சிக்ஸர்கள் என்ற சாதனையையும் டி வில்லியர்ஸ் இதன் மூலம் சமப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் 30 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்திருந்த கிரிஸ் கெய்ல்-இன் சாதனையே கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக குவிக்கப்பட்ட சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் இன்றைய இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது.
இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுக்கள் இழப்புக்கு தென்னாப்பிரிக்க அணி குவித்துள்ள 439 ஓட்டங்களே, அந்த அணி இதுவரை குவித்துள்ள ஆகக்கூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கை.
துவக்க ஆட்டக்காரர்களான ஆம்லாவின் 153 ஓட்டங்களும் ரோசோவின் 128 ஓட்டங்களும் இதில் அடங்கும்.
பதிலுக்கு ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 46 ஓவர்கள் முடிவில் 7 விக்ககெட்டுக்கள் இழப்புக்கு 291 ஒட்டங்களை குவித்திருந்தது.
Fastest ODI centuries
31 ballsAB de Villiers v West Indies, 2015
36Corey Anderson v West Indies, 2014
37Shahid Afridi v Sri Lanka, 1996
44Mark Boucher v Zimbabwe, 2006
45Brian Lara v Bangladesh, 2006
45Shahid Afridi v India, 2005
Thanks:
Bbc
Theguardian

No comments:

Post a Comment