தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 13 Apr 2025

23 January 2015

செளதி மன்னர் அப்துல்லா காலமானார்; புதிய மன்னர் சல்மான்

ரியாத்: சஊதிமன்னர்அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்இன்று வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.அவருக்கு வயது 90.
கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.செயற்கை சுவாசத்தில் இருந்து வந்த அவர் இன்று சவுதி அரேபியா நேரப்படி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணிக்கு காலமானார்.
இதையடுத்து அடுத்த மன்னராக, இப்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின்
அப்துல் அஜிஸ் (வயது 79 ) முடி சூட்டப்பட உள்ளார்.
சல்மானுக்கு பதில் புதிய இளவரசராக முக்ரின் பொறுப்பேற்க உள்ளார்.
மன்னர் அப்துல்லா மரணத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment