காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலொன்றுக்குள்ளி
ருந்து பொலிஸார் பெருமளவிலான ஆயுதங்களை நேற்று கைப்பற்றியுள்ளனர்.
'அவன்த் கார்டே', எனப்படும் பாதுகாப்பு சேவை வழங்கும் தனியார்
நிறுவனத்தின் களஞ்சியசாலையாக குறித்த கப்பல் செயற்பட்டு வருகின்றமை ஆரம்ப
விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர்
அஜித் ரோஹண தெரிவித்தார்.
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
மேற்படி, 'மஹநுவர' எனப்படும் இந்த கப்பலுக்குள் பெருமளவில் ஆயுதங்கள்
இருப்பதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ். ஏ. டி. எஸ். குணவர்தனவுக்கு
தகவல் கிடைத்ததையடுத்தே காலி துறைமுக பொலிஸார் குறித்த கப்பலை சோதனையிட
ஆரம்பித்தனர்.
இதன்போது ரீ-56 ரக இயந்திர துப்பாக்கிகள், 84 எஸ் ரயிஃபல் ரக ஆயுதங்கள்
மற்றும் சுமார் மூவாயிரம் தன்னியக்க துப்பாக்கிகள் என்பன கப்பலுக்குள்
மறைத்து வைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது.
சம்பவத்தின் போது கப்பலுக்குள்ளிருந்த அதிகாரிகள். பாதுகாப்பு அமைச்சின்
அனுமதியுட னேயே தாங்கள் காலியில் நங்கூரமிடப்பட்டிருப்பதாகவும் கடற்
கொள்ளையர்களிடமிருந்து ஏனைய கப்பல்களை பாதுகாக்கும் பொருட்டு குறித்த
கப்பல் ஆயுத களஞ்சிய சாலையாக செயற்பட்டு
வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். 'அவன்த் கார்டே' நிறுவ னம் தமது
செயற்பாடுகளின் பொருட்டு 'மஹநுவர' எனப்படும் கப்பலை வாடகைக்கு
பெற்றுக்கொண்டிருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், கப்பலிலுள்ள அதிகாரிகள் தெரிவிப்பதுபோல் மிதக்கும் ஆயுத
களஞ்சியசாலைக்கென அனுமதிப்பத்திரம் வழக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு
வழங்கப்பட்டிருந்தால், அதன்படி எவ்வளவு ஆயுதங்களை களஞ்சியப்படுத்த
முடியும்? அவ்வாறானால் எத்தகைய ஆயுதங்களை களஞ்சியப்படுத்தலாம்? இந்த
அனுமதிப் பத்திரம் ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டதா? என்பது
குறித்து பொலிஸார் பல கோணங்களிலும் இதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Source:Thinakaran
No comments:
Post a Comment