ஊர் செய்திகள்
date
21 December 2012
ஒரு நாள் உலகம் அழியும்
2012 டிசம்பர் 21 இன்றுடன் மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடைகின்றது. சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி இருளில் மூழ்கியிருக்கும். நிபிரு என்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும் என்று பல்வேறு விடயங்களைக் கூறி உலகம் அழியப் போகின்றது என்ற ஒரு கருத்து பேசப்படுகிறது. இக்கருத்தை பல்வேறு ஊடகங்களின் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. உலகம் அழியப் போகின்றது என்று திகதி குறிப்பிட்டுச் சொல்லப்படும் இது போன்ற செய்திகள் பரவுவது இதுதான் முதற்தடவையல்ல. மனித இன வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் உலக அழிவு குறித்த வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டே வந்துள்ளன. தற்போது இத்தகைய வதந்திகள் நவீன ஊடகங்களினூடாக மிக வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இது சாதாரண மக்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஆழமாக நம்பிய சிலர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாக மாறியுள்ளனர். 2012 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி உலகம் அழியப்போகின்றது என்பதும் கலப்படமற்ற ஒரு சுத்தப் பொய் மட்டுமல்ல, இது ஒரு சில வியாபார நோக்கம் கொண்ட வி'மிகளின் திட்டமிட்ட சூழ்ச்சி என்பதே உண்மை. இச்சந்தர்ப்பத்தில் உலக முடிவு நாள் மற்றும் மறுமை நாள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு தெளிவானது. அது பற்றி அறிந்து, புரிந்து, நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். மறுமை நாளின் தோற்றம் இவ்வுலகின் அழிவோடு ஆரம்பமாகும் என அல்குர்ஆனும் ஸ {ன்னாவும் விளக்குகின்றன. அல்குர்ஆனும் ஸ{ன்னாவும் உலக அழிவு, மஹ்'ர் பெருவெளி, அதற்குப் பின்னால் உள்ள சுவர்க்க, நரக வாழ்வுகள் குறித்து தேவையான அளவு விளக்கியுள்ளன. அல்குர்ஆன் உலக அழிவு பற்றி பல இடங்களில் விளக்கியுள்ளது. “அந்நாளில் வானத்தை நாம் எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவது போன்று சுருட்டுவோம். ஆரம்பத்தில் நாம் படைத்தது போன்றே மீட்டுகிறோம். இது எமது பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் அதனை நிறைவேற்றுவோம்.” (ஸ_ரா அல்அன்பியா: 104) இவ் வசனம் உலக அழிவு பற்றி முழுமையாக விளக்குகிறது. பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சம் சுருட்டிவிடப்படும். அதுவே இப்பிரபஞ்சத்தின் அழிவென அல்குர்ஆன் கூறுகிறது. எவ்வாறு இப்பிரபஞ்சம் உருவாகியதோ அந்த அமைப்பிலேயே அழிந்தும் போகும் எனவும் இவ்வசனம் சொல்கிறது. அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. அல்லாஹ் சொல்கிறான்;;: “நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.” (40: 59) “நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார்கள.; (நபியே) நீர் கூறும் ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.” (அல்குர்ஆன் 34:3) பார்க்க: (54: 1), (21:1) அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், கழா- கத்ர் ஆகியவற்றின் மீது முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை ஏற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது. மறுமை எப்போது வரும்? இறந்த பின் வாழ்வுண்டு' என்ற உண்மையை மக்களுக்கு எத்திவைத்த நபி (ஸல்) அவர்களிடம் அந்த மக்கள், ‘மறுமை நாள் வரும் என்கிறீர்களே! அது எப்போது வரும்?’ என்றும் கேள்வி கேட்கத் துவங்கினர். “மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம்.”(அல்குர்ஆன் 33: 63) மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற இரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாகக் கூறுகின்றான். ‘அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்லை. மறுமை நிச்சயம் வரும் என்றிருந்தால் அது வருகின்ற நாளை தெளிவாக அறிவித் திருக்கலாமல்லவா என்ற சந்தேகம் எழலாம். அதற்கான பதிலை இப்படிச் சொல்கிறது அல்குர்ஆன்;. “நிச்சயமாக அந்த (மறுமையின் நிகழ்வு) நேரம் வரக்கூடியதாக உள்ளது. உயிரினம் அனைத்தும், தான் செய்ததற்கு ஏற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த நாளை நான் இரகசியமாக வைத்துள்ளேன்.” (அல்குர்ஆன் 20: 15) ஆம்! இந்த நாளில் இன்ன நேரத்தில் அது (மறுமை, மரணம்) வரும் என்பது முன்கூட்டியே அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தால், மனிதர்களின் வாழ்வில் பெரும் குழப்பமே எஞ்சியிருக்கும். இன்ன நேரத்தில் மரணம் வரும், மறுமை வரும் என்ற செய்திகளை அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதால்தான் உலகம் ஓரளவு அமைதியாக உள்ளது. மறுமை வருமா? என்ற சந்தேகம் ஒருபுறம், எப்போது வரும்? என்ற சந்தேகம் மறுபுறம் என, அவர்களின் நிலை குழப்பதில் இருந்தது. அது வெகு சீக்கிரம் வரும் என அல்லாஹ் அறிவித்து விட்டான். மறுமை நாள் வரும் முன் சில அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள், மறுமை நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான சான்றுகளாக அமையும். இந்த சான்றுகள் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனிலும் குறிப்பிடுகின்றான், நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கிறான். மறுமை நாளின் அடையாளங்களில் சில: · ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தல், பின்தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகும், · விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும், · தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுதல், பாலைவனம் சோலை வனமாதல், காலம் சுருங்குதல், கொலைகள் அதிகரித்தல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்துப் பெருமையடிப்பது, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், ஆடை அணிந்தும் நிர்வாணமாயிருக்கும் பெண்கள், · உயிரற்ற பொருட்கள் பேசுவது, · தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், · மரணிப்பதற்கு ஆசைப்படுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றுதல், ய+தர்களுடன் மாபெரும் யுத்தம்,· க/பா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், ய+ப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர் தோன்றுதல், செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பைத்துல் முகத்தஸ் வெற்றி, மதீனா தூய்மையடைதல் இவை நம்பகமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள உலக முடிவுக்கான சில அடையாளங்கள். இவற்றில் சில நடந்து முடிந்த அடையாளங்கள். மற்றும் சில நிகழ்ந்து கொண்டி ருக்கும் அடையாளங்கள். என்றாலும், அந்த நாள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்பதை எம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த நாள் நெருக்கமாக வரும்போது சில மகத்தான அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள் தோன்றி விட்டால் அந்த நாள் எவ்வளவு சமீபத்தில் உள்ளது என்று முடிவு செய்து விடலாம். அத்தகைய மாபெரும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். 1. புகை மூட்டம். 2. தஜ் ஜhலின் வருகை. 3. (அதிசயப்) பிராணி. 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல். 5. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீள்வருகை. 6. ய/ஜ{ஜ் , ம/ஜ{ஜ் கூட்டத்தினரின் வருகை. 7. கிழக்கே ஒரு பூகம்பம் வெடித்தல். 8. மேற்கே ஒரு பூகம்பம் வெடித்தல். 9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தல். 10. இறுதியாக யமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல். ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி (ஸல்லல்லாஹ { அலைஹிஸ்ஸலாம்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹ{தைபா (ரழி), நூல்: முஸ்லிம் அந்த நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இம்மார்க்கத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த பத்து அடையாளங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டவுடன் உலகம் அழிந்துவிடும் என நபியவர்கள் இதன் மூலம் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். இவற்றில் மூன்று அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை. “சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ் ஜhல், (அதிசயப்) பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமானால் அவற்றுக்கு முன்பே ஈமான் கொண்டிருந்தாலே தவிர எவருக்கும் அவரது ஈமான் பயனளிக்காது” என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹ {ரைரா (ரழி) நூல்கள்: முஸ்லிம் இப்னுமாஜh) உலகம் அழியப் போகிறது என திகதி குறிப்பிட்டு அல்லது கால, நேரம் குறிப்பிட்டுச் சொல்லப்படும் தகவலை ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது. அவ்வாறு நம்புவாராயின் அவரது ஈமானில் கோளாறு இருக்கிறது என்பதே அர்த்தம்.உலக அழிவு குறித்து அவ்வப்போது பரப்பப்படும் வி'மப் பிரசாரத்தை நம்புபவர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கும் மரணம் குறித்து சிந்திக்கத் தவறி விடுகின்றனர். அது அவர்களது உலக முடிவு என்பதை மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு மனிதனுடைய மரணமும் அவனது உலக முடிவு என்பதை ஒவ்வொருவம் சிந்திக்க வேண்டும். முழு சமூகத்தினதும் மரணம்தான் உலகத்தின் இறுதிநாள் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எனவே, உலக அழிவு பற்றிய ஆய்வில் ஈடுபடுவதை விடுத்து மரண சிந்தனையோடு மறுமைநாளுக்காக எம்மைத் தயார்படுத்தி மறுமையில் வெற்றி பெறுவோமாக! அஷ்n'ய்க் nஜம்ஸித் அஸீஸ் (நளீமி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment