தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label HELTH. Show all posts
Showing posts with label HELTH. Show all posts

02 June 2024

உலகில் ஆஸ்துமா நோய் அதிகம் காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.




லகில் ஆஸ்துமா நோய் அதிகம் காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.

உலகில் ஆஸ்துமா நோய் பரவல் அதிகம் காணப்படும் நாடுகளினுள் புள்ளிவிபரவியலின் படி இலங்கையும் ஒன்றாக தெரிய வந்துள்ளது. சில மாவட்டங்களில் 15-20% சதவீதமானவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்துமா பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு ஆஸ்துமா இருக்கிறதா?

மூச்சுத் திணறல், மூச்சு எடுக்கும் போது ஏற்படும் வேறு சத்தம், இருமல் (குறிப்பாக இரவில் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு), அல்லது மார்பு இறுக்கம் போன்ற நோய் அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி ஏற்படுமாயின் நீங்கள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டடுள்ளீர்கள் என சந்தேகிக்கலாம்.
எனக்கு ஆஸ்துமா அறிகுறிகள் இருந்தால் எனக்கு எப்படி தெரியும்?

பொதுவான அறிகுறிகளில் மூச்சுத்திணறல், தொடர்ந்து இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு இறுக்கம் ஆகியவை அடங்கும், பெரும்பாலும் ஒவ்வாமை, உடற்பயிற்சியின் போதும் அல்லது இரவிலும் அதிகமாகும்.

04 January 2024

சின்னமுத்து தடுப்பூசியின் மேலதிக டோஸ் பற்றிய அறிவிப்பு

பெற்றோர்களுக்கான விசேட அறிவிப்பு 
--------------------------------------------------
ஏப்ரல் 7, 2023 க்கும் ஜூலை 5, 2023 க்கும் (இரண்டு நாட்களும் உட்பட) இடையே பிறந்த குழந்தைகளின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கானது.

மூளை பாதிப்பு, நுரையீரல் அழற்சி (நிமோனியா), பார்வை குறைப்பாடு, காது கேளாமை, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சின்னமுத்து, தற்போது உலகின் பல நாடுகளிலும், இலங்கையிலும் இளம் குழந்தைகளிடையே பரவி வருகிறது.

 

15 December 2019

காய்ச்சலுக்கு அன்டிபயாடிக் ஒரு மருந்தாகுமா?


J





“டாக்டர் எனது மகனுக்கு இரண்டு நாட்களாக சரியான காய்ச்சல். பனடோல் கொடுத்தும் குறையவில்லை. என்ன அன்டிபயாட்டிக் கொடுக்கலாம்?” இது பொதுவாக பெற்றோர்களினால் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.
இன்று அபரிமிதமான அன்டிபயாடிக் பாவனையால் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்ற
து. எனவே அதைப் பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்.
காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். அதிலும் தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே வீட்டில் இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது மட்டும் ஒரு நோய் அல்ல.
ஒருவரின் உடல் வெப்பநிலை 38°C க்கு மேலும் அதிகரிக்கும் பொழுது அதை நாம் காய்ச்சல் என்று குறிப்பிடுகின்றோம் .

26 November 2019

மனச்சோர்வு நோய் Depression

மனச்சோhttps://www.rcpsych.ac.uk/mental-health/translations/tamil/depression நோய் பற்றிய விளக்கம்
மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர் சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. இது சில மணி நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு நம்மை அறியாமலே நீங்கி விடும்.
ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.
இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.

22 March 2019

விட்டமின்  பி 12 குறைபாடு;அறிகுறி தெரியாத ஆபத்து


விட்டமின் பி 12, கோபலாமின் (Cobalamin) என்றும் குறிப்பிடுவார்கள். இது நீரில் கரையக் கூடிய ஊட்டச்சத்து. தினமும் சராசரியாக பெரியவர்களுக்கு (2.4 ug)அளவு தேவைப்படும். நம் உடலுக்கு மிகச்சிறிய அளவே தேவைப்படுகின்ற ஊட்டசத்தாக இருந்தாலும் பல வேலைகளை செய்யத் தேவைப்படுகின்ற மிக முக்கியமான விட்டமின் பி 12. இதன் குறைபாடு மெதுவாகாத்தான் பாதிப்பை வெளிப்படுத்தும். பாதிப்பு அதிகரிக்கும் போதுதான் இப்படி ஒரு பிரச்சினை இருப்பது நமக்குத் தெரியவரும் என்கிறார் உணவு ஆலோசகர் ஷீலா ஸ்வர்ணகுமாரி.
விட்டமின்  பி 12 குறைபாடு  ஏற்படக்காரணங்கள்
விட்டமின் பி 12 உள்ள உணவுகளை போதியளவு எடுத்துக் கொள்ளத் தவறுவது எடை குறைப்பு சர்ஜரி, அன்டிபயோட்டிக் மாத்திரைகள்,எய்ட்ஸ்,குடற்புழு தொற்று, குரோன்ஸ் நோய் (Crohn's Disease),வலிப்புக் கான மருந்துகள்,ஓட்டோ இம்யூன் நோய் போன்றவற்றின் காரணமாக விட்டமின் பி 12 குறைபாடுஏற்படலாம்.
அறிகுறிகள்
•கை, கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப் போதல்.
•மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம்.
•ஞாபக சக்தி குறைபாடு.
•சிந்திப்பதில்,பகுத்தறிதலில் சிரமம்.
•ஓட்டோ இம்யூன் நோய்.
எடை குறைப்பு சிகிச்சையினால் புரத குறைபாடு ஏற்பட்டு, விட்டமின் பி 12 பாதிப்பால் இரத்த சோகை ஏற்படும்.
•நடப்பதில் சிரமம்
•சமநிலை தவறுதல் (பேலன்ஸ் இழத்தல் )
•உடல் பலவீனம், சோர்வு
•வாய்ப்புண்,நாக்கு அழற்சி
•பார்வை நரம்பு பாதிபினால் பார்வை குறைபாடு.
இதனை ஆரம்ப கட்டத்தில் சரி செய்யத்தவரினால், இதயம், மூளை, நரம்பு, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.
விட்டமின் பி 12 குறைபாட்டினை மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இரத்த அணுக்களின் சோதனை (CBC Count) மூலமும் விட்டமின் பி 12 அளவு ஆகியவற்றினை தெரிந்து கொள்ளலாம் விட்டமின் பி 12 குறைபாடு பொதுவாக காணப்படுவது. சைவ உணவு சாப்பிடுகிறவர்கள், முதியவர்களிடையே இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆரம்பகட்ட குறைபாடு இருக்கும் பட்சத்தில் அதனை உணவுப் பொருட்களால் சரி செய்ய முடியும்.
விட்டமின் பி 12 இருக்கும் உணவுப் பொருட்கள்
•பால் மற்றும் பால் பொருட்கள்
•மீன் (குறிப்பாக மத்தி மற்றும் சூரை மீன் )
•கோழிக்கறி,முட்டை
       சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் தான்னியம்  மற்றும் பயறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த குறைபாடு அதிகமாக இருக்கும் போது உணவுடன் டாக்டரின் ஆலோசனைப் படி
விட்டமின் பி 12 மாத்திரைகள் அல்லது ஊசி போட்டுக்கொள்ளலாம்.
நன்றி :தினக்குரல்

06 March 2019

மெட்போமின் (Metformin) போலி வதந்தி

Dr. Anfas Farook
மெட்போமின் (Metformin) போலி வதந்தி
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
ஒரு நாள் அவசர சிகிச்சை பிரிவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு குழந்தைக்கு சிகிச்சையளித்து
க்கொண்டிருந்த வேளை, சுய நினைவிழந்த நிலையில் இன்னுமொரு அவசர நோயாளி உள்ளழைத்து வரப்பட்டார். சுமார் 45 வயதுடைய நபர், மனைவி மற்றும் இரு குழந்தைகள் வெளியே அழுத வண்ணம் வீற்றிருந்தனர்.
சிகிச்சையின் முதல் படி, அவருடைய குருதி சீனி மட்டம் பரிசோதிக்கப்பட அது "HI" என காட்டப்பட்டது, அதாவது கருவியால் பெறுமானத்தை குறிப்பிட முடியாத அளவில் மிக அதிகமாக காணப்பட்டது. மேலதிக தகவல்கள் மனைவி அழைக்கப்பட்டு பெறப்பட்டு உடனடியாக சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
"அவர் அண்மையில் தான் நீரிழிவு (சீனி வியாதி) ஆல் பாதிக்கப்பட்டார், வைத்தியர் அவருக்கு மெட்போமின் (metformin) மாத்திரை வழங்கினார். ஓரிரண்டு தினங்கள் தான் அதைப் பாவித்தார், எங்கட பக்கத்து வீட்டு தாத்தா இன்னும் நிறைய பேர் சொன்னாங்க, வட்சப்ல(whatsapp) கூட மெசேஜ் எல்லாம் வந்திச்சி... metformin அ மட்டும் கொடுத்திட வேணாம், அது kidney அ பாதிக்குமாம்......, வேர கைமருந்து இருக்கு அத கொடுங்க, சும்மா இருக்கிற மனுசன்ட kidney ய பழுதாக்க ஏலுமா?? நிறைய பேர்ட கிட்னி(kidney) பழுதாகி போய்ட்டாம்..... "
இதுதான் அந்த பெண் கூறிய கதையின் சாராம்சம். இன்று நிறைய பேர் இந்த மனநிலையில் தான் இருக்கிறார்கள். 5ம் ஆண்டு வரை படித்த பக்கத்து வீட்டு தாத்தாவின் கதை இன்னும் தெருவோர கதைகளையும் மனதார ஏற்றுக்கொள்ளும் அதே வேளை வைத்திய பரிந்துரையை உதரித்தள்ளி நடக்கின்றனர். மருந்துகள் பருகும் போது மாத்திரம் side effects , பாதிப்புகள் பற்றி அக்கறையாக கேட்பவர்கள், வெகு சாதாரணமாக சிகரட் புகைக்கின்றனர், உண்ணும் உணவுகள் கூட உடம்புக்கு பெரிதும் தீங்கு விளைவிப்பவையையே எடுக்கின்றனர். இந்த மருந்து பருகும் போதான தெளிவு உணவு மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது இருந்தால் மருந்து பருகுவதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது என்பது கசப்பான உண்மை.
மெட்போமின் (Metformin) என்பது பல தசாப்தங்களாக சர்க்கரை வியாதிக்கு பயன்படுத்துகின்ற மிகவும் பாதுகாப்பான ஒரு மருந்து வகையாகும். எனினும் சில அரைகுறைகளின் kidney பாதிப்பு போலிப்பிரச்சாரம் காரணமாக இதனை பாவிக்க தயக்கம் காட்டுகின்றனர். மருந்து பாவிக்காததன் காரணமாக குருதியில் உள்ள குளுக்கோசு அளவு அதிகமாக மாறுபடுவதன் காரணமாகவே kidney பாதிப்பு ஏற்படுகிறதே தவிர metformin காரணமாக அல்ல என்பதுவே உண்மை. எனினும் இவ்வாறு kidney பழுதடைந்த நிலையில் metformin மாத்திரை தவிர்க்கப்படுகின்ற காரணத்தைக்காட்டியே இந்த போலி பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்ட
ிருக்கிறது. இந்நிலை மெட்போமினுக்கு மாத்திரமன்றி ஏனைய பல மாத்திரைகள் மற்றும் உணவுகளுக்கும் பொதுவான விடயமென்றாலும் போலிப்பிரச்சாரம் metformin மேல் திணிக்கப்பட்டு அதன் பாவனை தவிர்க்கப்பட்டு சர்க்கரை நோயாளியின் நோயின் வீரியம் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது.
மெட்போமின் (Metformin) என்பது நீரிழிவு நோயின் போது பயன்படுத்தப்படுகின்ற பிரதான ஆரம்ப கட்ட மாத்திரையாகும். இது குருதியிலுள்ள குளுக்கோசு(சீனி) அகத்துறிஞ்சப்படும் வேகத்தை கூட்டி குருதியிலுள்ள குளுக்கோசு மட்டத்தை குறைத்து நோயை சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
மெட்போமின் என்பது சர்க்கரை வியாதிக்கு மாத்திரமன்றி இன்னும் பல நோய் நிலமைகளில் பயன்படுத்தப்படுகின்ற பாதுகாப்பானதொரு மருந்து வகையாகும்.
உதாரணமாக பெண்களில் ஏற்படுகின்ற policystic ovarian syndrome (PCOS) என்று சொல்லப்படுகின்ற மாதவிடாய் தொடர்பான பிரச்சினையின் போதும், obesity என்று சொல்லப்படுகின்ற அதிகரித்த உடல் நிறை காணப்படுகின்ற போதும் மெட்போமின் வழங்கப்படுகிறது. மெட்போமின் (metformin) என்பது சர்க்கரை வியாதி உள்ள நோயாளிகளின் kidney களை மாத்திரமன்றி மற்றைய சாதாரண மனிதர்களுடைய kidney களையும் பாதுகாக்கிறது என்பதே உண்மையாகும்.
Metformin ஒரு பாதுகாப்பான மாத்திரைதான் என்பதற்கு பல காரணங்களை கூறிக்கொண்டு செல்லலாம்.
சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மற்றைய மாத்திரைகள் மிகவும் அளவுக்கு அதிகமாகவே குருதி குளுக்கோசு அளவைக் குறைத்து சில வேளைகளில் ஆபத்தை ஏற்படுத்தினாலும் இந்த metformin ஆனது ஒருபோதும் அவ்வாரான ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தாது, உடலுக்கு பாதுகாப்பான சாதாரண பெறுமானத்துக்கே குறைக்கவல்லது.
மெட்போமின் ஆனது குருதி சீனி மட்டத்தை மாத்திரமல்லாது கொலஸ்திரோல் மட்டத்தையும் குறைப்பதோடு ஒருவருக்கு மாரடைப்பு போன்ற இதய நோயிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. அதுமாத்திரமன்றி இவ்வாறான நோயுள்ளவர்களின் kidney களையும் பாதுகாக்கிறது.
மெட்போமின் பருகுவதால் வாந்தி, வயிற்றோட்டம் போன்ற சிறு பக்க விளைவுகளே ஏற்படுகிறது. சிலருக்கு தசை வலிகள் போன்றனவும் ஏற்படலாம். இந்த மாத்திரை பல்வேறுபட்ட வியாபார நாமங்களில் தற்போது சந்தையில் கிடைக்கிறது.
எனவே இவ்வாறான போலி வதந்திகளை நம்பி ஏமாறுவதனால் உங்கள் அன்புக்குறியவர்கள் உங்களை ஏமாற்றி இந்த உலகையே விட்டுச்செல்லும் நிலமை ஏற்பட்டு விடலாம். அரைகுறைகளினதும் தெருவோர வைத்தியர்களினதும் கைகளில் உங்கள் சுகாதாரத்தையும் உயிரையும் கையளித்து விடாமல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த வைத்தியரிடமே அறிவுறை பெற்று சந்தோசமாக வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.
Dr. Anfas farook

          

விட்டமின் பி 12 குறைபாடு

18 October 2018

டிஸ்லெக்சியா... பெற்றோர்கள் அவசியம் அறியவேண்டிய தகவல்கள்! #Dyslexia

டிஸ்லெக்சியா

ம் கல்வி முறையில், எழுத்துத் தேர்வுக்கே முக்கியத்துவம். ஆனால், டிஸ்லெக்சியா குழந்தைகள், படிக்கவும் எழுதவும் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களால் தேர்வுகளைச் சரியாகக் கையாள முடியாது. இப்படி மாணவர்களின் படிப்பையே ஆட்டுவிக்கும் டிஸ்லெக்சியாவை எதிர்கொள்வது பற்றிச் சொல்கிறார், குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர், எஸ்.சுப்ரமணியன். 
“கற்றலில் ஏற்படும் குறைபாடே, 'டிஸ்லெக்சியா'. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கச் சிரமப்படுவார்கள். புத்தகத்தில் வார்த்தைகள் தெரிந்தாலும், அதற்கான அர்த்தங்கள் புரிந்தாலும் அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாது. உதாரணமாக, 'walk' என்கிற வார்த்தையைச் சொன்னால், அதற்கான அர்த்தத்தை, ஸ்பெல்லிங்கை உடனே சொல்வார்கள். அதே 'walk' வார்த்தையை எழுதிக் காண்பித்து கேட்டால், அவர்களால் படிக்க முடியாது. அதற்காக, படிக்கத் தெரியாது என்று அர்த்தமில்லை. ஆங்கில எழுத்துக்களோ, தமிழ் எழுத்துக்களோ நன்றாகவே தெரியும். அந்த எழுத்துக்களைப் படித்து உள்வாங்கும் ரெஸ்பான்ஸை அவர்களால் கொடுக்கமுடியாது.

07 April 2018

புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது?

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

*புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
*மது அருந்தும் பழக்கம்
*அதிக உடல் எடையுடன் இருப்பது
குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
உடல் உழைப்பு இல்லாமை
மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

'உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்'- ஆய்வாளர்கள்
உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.
எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?
மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
எச்.பி.வி மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாகும் ஹெப்படிட்டீஸ்-பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன்மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசிகளை போடுவதன்மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Source BBC

27 March 2017

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு


இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது.
300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சமச்சீர் உணவு, இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும் என பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய சிறுநீரகவியல் கூட்டமைப்பு கூட்டத்தில், நாகசாகி பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை சமர்பித்தனர்.
மூன்று மாதங்களாக அதிக உப்பை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் மற்றும் உறக்க கோளாறு இருக்கும் நோயாளிகளிடம் அவர்களின் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி பின் அவர்களை கண்கானித்தனர்
அதன்பிறகு சராசரியாக, இரண்டு முறை சிறுநீர் கழிப்பது, ஒரு முறையாக குறைந்தது.
இந்த மாற்றம், பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் ஏற்பட்டது. மேலும் அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்தது.
சிறுநீர் கழிக்கச் செய்யும் உணர்வு
***********************************

மாறாக, 98 பேர், வழக்கத்தை காட்டிலும் அதிகப்படியான உப்பை உட்கொண்டார்கள். எனவே இரவு நேரத்தில் அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தது
அதிக அளவில் உப்பு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பை உறுதி செய்ய மேலும் ஆய்வுகள் தேவை ஆனால் இந்த விளைவு முதியவர்களுக்கு உதவும் என இந்த அய்வை மேற்கொள்ளும் பேராசிரியர் மாட்சூ டாமஹீரோ தெரிவித்தார்.
"எளிய உணவுமுறை மாற்றத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்க்கை தரத்தை மாற்ற இயலும் என்பதை இந்த ஆய்வு சாத்தியமாக்கியுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் நாக்டுரிய நிபுணர் பேராசிரியர் மார்கஸ் டிரேக், பொதுவாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு மக்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு காரணமல்ல என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக் கொள்ளும் குடிநீரின் அளவு, சிறுநீர்ப்பை மற்றும் ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பிகளின் பிரச்சனைகள் ஆகியவற்றில் மருத்துவர்கள் கவனம் செலுத்துவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த பிரச்சனைக்கான அனைத்து காரணத்தையும் சரி செய்வது எப்படி என்ற பயனுள்ள ஆய்வு நம்மிடம் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரவில் சிறுநீர் கழிக்க எழும்பும் பிரச்சனை பாதியளவிலான 50வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களை பாதிக்கின்றது.
இது வயது முதியவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது; அவர்கள் குறைந்தது இரண்டு முறையாவது இரவில் தூக்கித்திலிருந்து எழும்புகிறார்கள்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சிறுநீர் கழிக்கச் செல்லும் போது தூக்கம் கலைகிறது அதனால் மன அழுத்தம், உடல் சோர்வு மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை ஏற்படுகிறது.
வயதாவதால் ஏற்படும் பக்க விளைவா?
*******************************************
வயதாகும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் இரவில் அதிக முறை சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது.
வயது அதிகமாக ஆண்களின் பிராஸ்டேட் சுரப்பிகளும் அளவில் பெரிதாகின்றன.
அதிக அளவு உடைய பிராஸ்டேட் சுரப்பி, உடலை விட்டு வெளியேறும் போது சிறுநீர் கடந்து செல்லும் குழாயை உரசுவதால் அது சிறுநீர் கழிக்கும் உணர்வை தூண்டுகிறது.
ஆனால் இது முழுமையான காரணம் அல்ல.
பிற உடல்நல பிரச்சனைகளான நீரிழிவு, இதய கோளாறுகள் அல்லது உறங்கும் போது மூச்சுத்திணறல் என்பது போன்ற உறக்கம் தொடர்பான கோளாறுகள் ஆகியவை நாக்டுரியாவின் காரணமாக இருக்கலாம்.

எந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?
************************************************

பிரிட்டனில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாள் ஒன்றிற்கு 6 கிராம் உப்பிற்கு (2.4கிராம் அளவு சோடியம்) மேல் எடுத்துக் கொள்ள கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது
1-3வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2 கிராமிற்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்; 7-10 வயது குழந்தைகள் 5 கிராம் உப்பு வரை எடுத்துக் கொள்ளலாம்
11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 6 கிராம் உப்பு வரை எடுத்துக் கொள்ளலாம்.
எந்தெந்த உணவில் உப்பின் அளவு அதிக காணப்படுகிறது?
ரொட்டி மற்றும் காலை உணவு தானியங்களில் நாம் நினைக்கும் அளவைக் காட்டிலும் உப்பின் அளவு அதிகமாக இருக்கும்.
உணவுப் பொருட்களை வாங்கும் போது 100கிராம் உணவில் எத்தனை அளவு உப்பு கலந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
100கிராம் உணவில் 1.5 கிராம் அளவில் உப்பு இருந்தால் அது அதிக அளவாக கருதப்படுகிறது; இது, உணவு பாக்கெட்டுகளில் சிவப்பு நிற கோடிட்டு இருக்கும்.

04 March 2017

புற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழம், காய்கறிகள் பட்டியல்


maggona
தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதி்பபை ஏற்படுத்கக் கூடிய புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை சரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

01 March 2017

'மன உளைச்சலால் பாதிப்படைந்தவர்களுக்கு புற்று நோயால் மரணம் ஏற்பட ஆபத்து அதிகம்'



கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்பட ஆபத்து அதிகம் உள்ளதாக ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்று நோய் பாதிப்பில்லாத ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த அளவு மன உளைச்சல் அடைந்தவர்களை விட, மன உளைச்சலால் அதிக பாதிப்படைந்தவர்களுக்கு பல வகையான புற்று நோய்களால் ஏற்படும் உயிர் ஆபத்து மூன்று பங்கு அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குடல், விந்துப்பை , கணையம் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோய் ஆபத்து இவர்களுக்கு அதிகமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்த ஒரு திட்டவட்டமான காரண இணைப்பை உருவாக்க மேலும் அதிக ஆய்வு பணி தேவைப்படுகிறது என பிஎம்ஜே என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்

14 February 2017

இதயம் காக்கும் பேஸ்மேக்கரில் புதிய தொழில்நுட்பம்!



பேஸ்மேக்கர் என்றால் என்ன?

நம் இதயத்தின் வலது மேலறையில் ஒரு சிறிய ஜெனரேட்டர் மாதிரியான பயன்பாட்டில் ‘மின் கணு’(SA Node) உள்ளது. இதுதான் மின்சாரத்தை உற்பத்திசெய்து இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. சிலருக்கு இந்த இயற்கை மின்னோட்டம் உற்பத்தி ஆவதிலும், இதைத் இதயத் தசைகளுக்குக் கொண்டுசெல்வதிலும் சிரமங்கள் ஏற்படும். அப்போது அவர்களுக்கு நாடித்துடிப்பு குறைந்துவிடும். அதனால், அடிக்கடி நெஞ்சில் படபடப்பு ஏற்படும். அதிகம் வியர்க்கும். தலை சுற்றி, மயக்கம் வந்து விழுந்துவிடுவார்கள். முக்கியமாக, 50 வயதைக் கடந்தவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகம்.

09 February 2017

பார்வை இழப்பு- வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்


வயதாகும்போது பார்வைக் குறைபாடுகள்

வயதாகும்போது பெரும்பாலானோருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கு பல்வேறு நோய்கள் காரணமாக உள்ளன. கற்றரக்ட் எனப்படும் கண்புரை நோய் சத்திரசிகிச்சை மூலம் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியதாகும்.


கண்ணில் பிரஷர் எனப்படும் குளுக்கோமா, நீரிழிவினால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு மற்றும் இங்கு தொடர்ந்து பேச இருக்கும் வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய் ஆகியன அவ்வாறல்ல. அவற்றை முற்று முழுதாகக் குணமாக்குவது சாத்திமல்ல.


ஆனாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடிப்பதாலும் தொடர்ச்சியான சிகிச்சைகளாலும் ஓரளவு குணமாக்குவதுடன், நோய் மேலும் மோசமடையமல் தடுக்கவும் முடியும்.
வயது சார்ந்த மக்கியூலா சிதைவு (age related macular degeneration- ARMD)

மக்கியூலா என்பது எமது கண்ணில் உள்ள ஓரு சின்னஞ்சிறு பகுதியாகும் இதன் விட்டம் 5 மில்லிமீற்றர் அளவு மட்டுமே. இருந்தபோதும் எமது பார்வைக்கு அவசியமான கலங்களான  rods and cones  மிகவும் செறிவாக நிறைந்துள்ள பகுதி இதுவாகும். நுணுக்கமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதி இதுவாகும். வாசிப்பது எழுதுவது முகங்களை இனங் காண்பது போன்ற நுண்ணிய விடயங்களுக்கு அவசியமானதாகும்.


விழித்திரையின் மிகுதிப் பெரும் பகுதி பரந்த பார்வைக்கு உரியதாகும். குறித்த ஒரு பகுதியை என்றல்லாது முழுக் காட்சியையும் உள்வாங்குவதாகும். எனவே மக்கியூலா சிதைவு நோயின் போது பார்வை முழமையக இல்லாது போகாது.

மக்கியூலா பகுதியில் உள்ள கலங்கள் சேதமடைவதற்குக் காரணம் விழித்திரை மற்றும் மக்கியூலாவின் பின் பகுதியில் இருந்து அதற்கான போசனைப் பொருட்களை வழங்குவதுடன் அதிலிருந்து கழிப்புப் பொருட்களையும் அகற்றும் பகுதியான retinal pigment epithelium (RPE) சேதமடைவதே ஆகும்.

இதனால் வெளியோறாத கழிவுப் பொருளான drusen என்பது விழித்திரையில் படிந்து விழித்திரைக் கலங்களான rods and cones  ற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே பார்வை பாதிக்கப்படக் காரணமாகும்.

தடுப்பது எப்படி

இவ்வாறு பாதிப்புகள் ஏற்படாதிருக்க தடுப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை.
புகைத்தல் ஒரு முக்கிய  காரணமாகச் சொல்லப்படுகிறது. புகைத்தானது சுவாசப்பையை பாதிப்பதும் புற்றுநோய்களுக்கு காரணமாக இருப்பதும் ஏற்கனவே தெரிந்ததே. எனவே புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது வருவதற்கான சாத்தியம் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. எனவே பிரசர் இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும், பிரஷர் வந்துவிட்டால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவசியமாகும்.
பழவகைகள்;, விதைகள் உட்பட ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பது அவசியம்
குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய சாத்தியத்தை அதிகரிக்கும். இருந்தபோதும் இது பரம்பரை நோயாகக் கொள்ள முடியாது.
யாருக்கு வரும்

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயை 60 வயதிற்குக் கீழ்பட்டவர்களில் காண்பது அரிது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 20 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் வருவதாகச் சொல்லப்படுகிறது. வயது கூடக் கூட இது அதிகரிக்கும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.
75 வயதிற்குப் பின்னர் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகத் ஏற்படுகிறதாம்.

அறிகுறிகள்

மிக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுகிற நோய் என்பதால் நோயாளிகளின் கவனத்தை ஈர்ப்பதில்லை.
இருந்தபோதும் 60 வயதை அண்டியவர்கள் சில சாதாரண அறிகுறிகளைக் கவனத்தில் எடுப்பது அவசியம். வாசிப்பதற்கு வழமையை விட அதிக வெளிச்சம் தேவைப்படுவது, பத்திரிகை மற்றும் புத்தகங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவற்றதாகத் தோன்றுவது, வண்ணங்கள் வழமையைவிட மங்கலாகத் தோன்றுவது, முகங்களை அடையாளங் காண்பது சிரமமாக இருப்பது போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கலாம்.
அலட்சியம் பண்ணாதீர்கள்


மற்றொரு அறிகுறி முக்கியமானது. பொருட்களைப் பார்க்கும் போது அவற்றில் மாற்றங்கள் தெரியலாம். முக்கியமாக நேர் கோடுகள் வளைவாகவோ தாறுமாறாகவோ தோன்றலாம். உதாரணமாக நிலத்தில் பதித்துள்ள மாபிள் கல்லுகளுக்கு இடையே உள்ள கோடுகள் நெறிந்து முறிந்தோ வளைவாகவோ தோன்றுவது பிரத்தியேக அறிகுறியாகும்.


பார்வையில் கரும்புள்ளிகள் தோன்றலாம். மக்கியூலாவில் உள்ள கலங்கள் தொடர்ந்து சிதைவடையும்போது அவை அளவில் பெரிதாகும்.
பார்வை மோசமாகப் பாதிக்கப்படும்போது மாயத் தோற்றங்கள் ஏற்படலாம். இல்லாத பொருள்கள் இருப்பது போன்ற பிரமைத் தோற்றங்கள் வேறெந்த நோயால் பார்வை பாதிப்புற்றாலும் தோன்றலாம். இந்த நிலை பொதுவாக 18 மாதங்கள் வரை செல்லும்போது படிப்படியாக இல்லாது ஒழிந்துவிடும்.

சிகிச்சை

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயில் இரண்டு வகைகள் உண்டு ஈரலிப்பான மக்கியூலா சிதைவு நோய் (Wet ARMD ).  வரட்சியான மக்கியூலா சிதைவு நோய் (Dry ARMD) என்பனவே அவை.
பெரும்பாலானவர்களைப் பாதிப்பது Dry ARMD ஆகும். இது படிப்படியாக மோசமாகிப் பார்வையைக் கடுமையாகப் பாதிக்க பல வருடங்கள் செல்லலாம். இதற்கெனச் சிறப்பான சிகிச்சை முறைகள் இல்லை. ஆயினும் பாதிப்பு அதிகமாகாதவாறு தடுப்பதற்கு சிகிச்சை அளிக்கபடும்.
மாறாக Wet ARMD  மிகக் குறைந்தவர்களையே பாதிக்கிறது. ஆயினும் ஒரு சில மாதங்களுக்குள் பார்வையை கடுமையாகப் பாதிக்கும். இருந்தபோதும் இதற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன. புதிய மருந்துகளும் அறிமுகமாகின்றன. ஆயினும் அவற்றை இங்கு விபரிப்பது சாத்தியமானதல்ல.

இறுதியாக

மக்கியூலா சிதைவு நோயிற்கு தெளிவான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் இல்லை என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே ஒழுங்கான கால இடைவெளியில் கண் மருத்துவரைக் காண்பதன் மூலமே அதை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கலாம்.
அதிலும் முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், குடும்பத்தில் இந்த நோயுள்ளவர்களும் இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
வருமுன் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

நன்றி:
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)


17 September 2016

கர்ப்பமடைவதற்கு முன்னரான மருத்துவ ஆலோசனைகள்



கர்ப்பம் பற்றி திட்டமிடல் எங்கள் மத்தியில் அரிதான ஒருவிடயமாகவே இருந்து வருகிறது,சிலருக்கு அவ்வாரான ஒருவிடயம் உள்ளதென்பது கூட தெரியாமல் உள்ளது,சிலருக்கு அது பற்றி தெரிந்திருந்தும் நடைமுறைப்படுத்தல் கடினம் என்றும்,கர்ப்பமானது இயற்கையாக நடைபெறவேண்டும் என்றும்,அல்லது இவ்வாரு செய்வதனால் கர்ப்பமடையாமல் போகலாம் என்றும் தப்பபிப்பிராயங்கள் உள்ளது.அவற்றை கழைந்து கர்ப்பம் பற்றி முன்னேற்பாடுகள் செய்வது ஒரு ஆரோக்கியமான குழந்தை பிறப்பில் முக்கியமானது என்று நீங்கள்தெரிந்து கொள்வதற்காக இதை நான் தொகுக்கிறேன்.
மேலைத்தேய நாடுகளில் கர்ப்பமடைவதற்கு முண்ணரான திட்டமிடல் அனேகமான குடும்பங்களினாள் நடைமுறைப்படுத்தப்படுகிறது இது அவர்களது குழந்தைகள் போதிய நிறைஉடனும்,ஆரோக்கியமாக பிறப்பதற்கும் வழியமைப்பதுடன், தாயின் ஆரோக்கியமான கர்ப்பகாலதிற்கும்,பிள்ளைப்பிறப்பின் போது ஏற்படும் பிரச்சனைகளையும்,மரணம் சம்பவிப்பதிலிருந்தும் மிக குறித்து காட்டக்கூடிய அளவுக்கு குறைக்கிறது.
நீங்கள் கர்ப்பமடைந்துள்ளீர்கல் என உங்களுக்கு தெரியவரும் முன்பே கர்ப்பபையிலுள்ள உங்களது சிசுவினுடைய மூளை உற்பட உடல் உறுப்புகள் உருவாக தொடங்கிவிடும் எனவே……
வளரும் போது தனது வாழ்க்கையின் (குழந்தைப்பருவம்,இளமைப்பருவம்,முதுமைப்பருவம் போன்ற) எல்லாக்காலங்கலிலும் ஆரோக்கியமானதாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலைகலை சமாளித்து வெற்ரி அடைய தேவையான புத்திக்கூர்மையானதாகவும் எமது குழந்தை இருக்க வேண்டுமாயின் குழந்தை சிறந்த ஆரோக்கியமாகவும்,சிறந்த திடகாத்திரமான வளர்ச்சியுடனும் பிறக்க வேண்டும்.
எனவேதான் ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என விரும்பி இறைவனிடம் பிராத்திக்கும் நாங்கள் அதற்கான முயற்சிகலிலும் ஈடுபடவேண்டும் அவ்விடயங்கள் எம்மால் கடைப்பிடிக்க கஸ்ட்டமாயினும் சிறிது சிறிதாக பழக்கத்திற்கும் கொண்டுவரவேண்டும்.

22 July 2016

மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்: ஆராய்ச்சியில் தகவல்


மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து கூறுகையில், எந்த அளவு மது குடித்தாலும், அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லாத குடிப்பழக்கம் என எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும், மதுப்பழக்கத்தால் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:BBC

17 June 2016

ஆறு வகையான “ ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்


மாரடைப்பா… இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.
கோல்டன் அவர் – Golden Hour
************************************
முதல் 2 மணி நேரம் “கோல்டன் அவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.
ஆறு வகை மாரடைப்பு
************************
மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது;

03 February 2016

கார்னியா கண் குறைபாடு: இலங்கையின் உலக சாதனை; இந்தியாவில் மட்டும் ஏன் வேதனை?


கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது.
ஆனால் இலங்கையின் அண்டைநாடான இந்தியா இதில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் கார்னியா கிடைக்காமல் பார்வையின்றி தவிக்கும் நிலைமை இந்தியாவில் இன்னமும் நீடிக்கிறது. இதன் பின்னணி காரணிகளை பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் எம் ராதாகிருஷ்ணன்.
கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும்.
உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கண்ணின் கருவிழியின் மேல் கண்ணின் முன்புறமாக அமைந்துள்ள கண்ணின் இந்த கருவிழிப்படலம் ஒருவர் மரணம் அடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டால் அதை தேவைப்படும் ஒருவருக்கு பொருத்தி அவருக்கு பார்வையைக் கொடுக்க முடியும். ஒருவர் இறந்த பிறகும் கூட அவரது உடலில் இருந்து ஆறுமணி நேரம் கழித்தும்கூட இந்த கருவிழிப்படலம் அகற்றப்பட முடியும்.
உடலின் மற்ற உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றிப் பொருத்தும்போது அந்த உறுப்பை கொடையாக பெறுபவரின் உடல் புதிதாக பொருத்தப்பட்ட உடலுறுப்பை நிராகரிக்கும் ஆபத்து இந்த கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு.
சுற்றுச்சூழலிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்.
மிகவும் எளிமையாக உறுப்பு மாற்று சிகிச்சை செய்யக் கூடிய திசுக்களில், கார்னியா எனப்படும் கருவிழிப்படலமும் ஒன்றாகும்.
பிரித்தெடுக்கப்பட்ட கருவிழிப்படலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டால் தேவைப்படும் நோயாளிக்கு, நான்கு வாரங்களுக்குள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட வேண்டும்.

பெரும்பாலான நாடுகளில் ஒரு நாளைக்கு இயற்கையாக இறப்பவர்களின் கருவிழிகள் அகற்றப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டால் மிகச்சில தினங்களுக்குள்ளேயே கருவிழிப்படல பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்கள் அனைவருக்குமே கண்பார்வையை மீண்டும் கொடுத்துவிட முடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு.
ஆனாலும் இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த நாட்டுக்குத் தேவையான கருவிழிப்படலங்கள் தாராளமாக கிடைப்பது மட்டுமல்ல, அவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடு இலங்கை. கருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
இலங்கையில், இறப்பவர்களின் கண்களை தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்வதற்கான பல காரணங்களில் அப்படி செய்வதன் மூலம் மறுபிறவியில் தமக்கு சிறப்பான பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் முக்கிய பங்காற்றுகிறது.
இலங்கையில், 5 பேரில் ஒருவர் தமது கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலத்தை தானமாக வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை கண்தானச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறக்கட்டளை நிறுவனம், 1961 ஆம் ஆண்டில் ஹட்சன் சில்வா என்ற இளம் மருத்துவரால் தொடங்கப்பட்டது.
தமது கருவிழிப்படலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்ற வேட்கை, இலங்கையில் அதற்கான தேவையை தீர்த்துள்ளதுடன், மீதமானவை ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014 இல், இலங்கையிலிருந்து சீனாவிற்கு 1000 கருவிழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு 850, தாய்லாந்திற்கு 25, மற்றும் ஜப்பானுக்கு 50 உம் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலோ, இன்னமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மனித கருவிழிப்படலங்கள் கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலைமையே இன்றுவரை தொடர்கிறது.
இந்தியாவில் தினந்தோறும் இயற்கையில் மரணமடையும் பல்லாயிரக்கணக்கானவர்களின் கருவிழிப்படலங்களை உரிய முறையில் அறுவடை செய்து பயன்படுத்தினால் கருவிழிபடல பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை ஒரே வாரத்திற்குள் நீக்கிவிட முடியும் என்று கூறும் மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஆனால் அதற்குத் தேவையான அளவுக்கு விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்தார்.

24 November 2015

காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்


நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?
அப்படியானால் அவசியம் படியுங்கள்....
சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது
.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது
,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்த
த்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி:உணவே மருந்து முகப்புத்தகம்