பெற்றோர்களுக்கான விசேட அறிவிப்பு
--------------------------------------------------
ஏப்ரல் 7, 2023 க்கும் ஜூலை 5, 2023 க்கும் (இரண்டு நாட்களும் உட்பட) இடையே பிறந்த குழந்தைகளின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கானது.
மூளை பாதிப்பு, நுரையீரல் அழற்சி (நிமோனியா), பார்வை குறைப்பாடு, காது கேளாமை, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சின்னமுத்து, தற்போது உலகின் பல நாடுகளிலும், இலங்கையிலும் இளம் குழந்தைகளிடையே பரவி வருகிறது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள சுகாதார மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இச்சூழலைக் கருத்தில் கொண்டு, அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி, அதாவது 6 - 9 மாத வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் சின்னமுத்து தடுப்பூசி மேலதிக டோஸ் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சின்னமுத்து தடுப்பூசியின் மேலதிக டோஸ் உங்கள் அருகிலுள்ள தடுப்பூசி கிளினிக்கில் 6 ஜனவரி 2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
இது 9 மாதங்கள் மற்றும் 3 வயதில் தற்போது கொடுக்கப்படும் இரண்டு சின்னமுத்து தடுப்பூசிகளுடன் மேலதிகமாக கொடுக்கப்பட உள்ளது. இது தற்போது கொடுக்கப்படும் (MMR) தடுப்பூசியே.
முன்னர் சின்னமுத்து நோயால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கண்ட வயதினரின் ஆபத்து மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசியின் மேலதிக டோஸ் வழங்கப்படும்.
உங்கள் குழந்தை பரவும் சின்னமுத்து நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, தகவலறிந்த மற்றும் பொறுப்பான பெற்றோராக உங்கள் கடமையை தவறாமல் செய்யுங்கள்.
தகவல்: Health promotion Bureau
No comments:
Post a Comment