தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label WORLD NEWS. Show all posts
Showing posts with label WORLD NEWS. Show all posts

14 April 2019

உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்

இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பிறகு இதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட சற்றே அதிகமாகும்.
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், விண்கலங்களை பூமியின் நிலப்பரப்பிலிருந்து ஏவுவதைவிட, விண்ணிலிருந்து ஏவுவது குறைந்த செலவுடையாக இருக்கும்.
இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று ஆறு இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தனது முதல் பயணத்தின்போது சுமார் 15,000 அடிவரை, அதிகபட்சமாக மணிக்கு 274 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது.
Source:BBC TAMIL

17 March 2019

Christchurch Terror: Comprehensive coverage



Christchurch Terror: Comprehensive coverage from the Nine newsroom | Nine News Australia

22 November 2018

ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி





ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐநா சபை முயற்சித்து வருகிறது.

10 July 2018

தாய்லாந்து குகை: மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவு


கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் மற்றும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தாய்லாந்தின் சியாங் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை இன்னும் சற்று நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கவுள்ளனர்.
முக்குளிப்பு வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குகையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்றும் மீட்பு பணியின் தலைவர் தெரிவித்திருந்தார்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Source :BBC

09 July 2018

தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: தொடக்கம் முதல் நடந்தது என்ன?


தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக நேற்று மீட்டு வந்தனர். மீதம் உள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது
தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர். இதையடுத்து, மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

08 July 2018

தாய்லாந்து குகை: "சிறுவர்களை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்பு"


கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அங்கு சூழ்நிலை "கச்சிதமாக" உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது அந்த பகுதியில் பொழிந்து வரும் பருவமழை தொடர்ந்தால், குறுகிய பாதையை கொண்டுள்ள குகை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும் என்ற கவலை நிலவுகிறது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.
குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணி தீவிரம்
குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

29 May 2018

சகோதரர் ALI BANAT வபாத்தானார்

இன்று இறைவனடி சேர்ந்தார் சகோதரன் அலிபனாட்..!

ஆஸ்திராலியாவில் பிறந்த இந்த சகோதரன் தனக்கு கேன்சர் இருப்பதை தெரிந்த பின்னர் தனது வாழ்க்கை முறையை மாற்றி தனது சொத்துக்களை MATW Project என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு அள்ளி வழங்கி மக்களுடன் மக்களாக வாழ்ந்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக கேன்சரினால் அவதிப்பட்டு வந்த இந்த சகோதரனை நீங்கள் சமூக வளைய தளங்களில் பார்த்து இருப்பீர்கள் ஆனால் இந்த ரமலானில் அல்லாஹ் அவரை தன் பக்கம் எடுத்துக் கொண்டான் யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து இவரின் சேவைகளை பொருந்தி கொண்டு உன் கருணையால் இவருக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் என்ற சொர்க்கத்தை வழங்கி விடு ரஹ்மானே.
நன்றி முஜாஹித் நியூஸ்

Assalamualaikum Brothers And Sisters InThis Video We Will Show You A Emotional Story Of Ali Banat Who Died On Maghrib..!!

05 October 2017

லாஸ் வேகஸ் தாக்குதல் - துப்பாக்கிதாரியா, பயங்கரவாதியா?


லாஸ்வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 59 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியநிலையில் ஏன் அவரை ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிடப்படவில்லை என இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளது.
64 வயதான ஸ்டீஃபன் பேடக் குறித்து குறிப்பிடும் செய்தி ஊடகங்கள், அவரை ஒரு 'தனி மனிதர்' என்றும், ஒரு முதியவர் என்றும் 'சூதாட்டக்காரர்' மற்றும் 'முன்னாள் கணக்காளர்' என்று குறிப்பிடுகின்றன. அவரை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதில்லை. இது வலைதளவாசிகள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.

17 September 2015

சிலியில் பூகம்பம், சுனாமி: பத்து லட்சம் பேர் கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேற்றம்


தென்னமெரிக்காவிலுள்ள சிலியில் வலுவான பூகம்பம் ஏற்பட அந்நாட்டின் சில பகுதிகளை நாலரை மீட்டர் வரை உயரமான சுனாமி அலைகள் தக்கிய நிலையில், கடலை ஒட்டி வாழ்பவர்கள் சுமார் பத்து லட்சம் பேர் கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பூகம்பத்திலும் சுனாமியிலுமாக குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது.
8.3 வலுக்கொண்ட நிலநடுக்கம் தலைநகர் சந்தியாகோவுக்கு வட மேற்காக 250 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
பூகம்பத்தின் பின்னரும் 6 புள்ளிகள் அளவுக்கு வலுவான பல பின் அதிர்வுகள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளன.
கொகிம்போ, வல்பரைஸோ போன்ற இடங்களில் போன்ற ஊருக்குள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அதிபர் மிஷெல் பஷெலெட் வலியுறுத்தியுள்ளார்.
BBC

26 July 2014

-தாத்தாரியர்களைத்-தோற்கடித்த-காஸா-இஸ்ரேல்-சிக்கியுள்ள-பொறி

-அப்துல் மலிக் அபூபக்கர்-



ஆக்கிரமிப்பாளன்- ஆக்கிரமிக்கப்பட்டவன் ஆக்கிரமிப்பாளன் யார்? என்பதை
மீள் நினைவுபடுத்த வேண்டிய ஓர் அவசியத்தைகாஸா மீதானபுதிய அத்துமீறல்
தோற்றுவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஆக்கிரமிப்பு இடம்பெறுவது போன்று,
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு நிலைப்பாடுகளைத் தோற்றுவித்து, உலகின்
கவனத்தை வேறு திசைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றது. இங்கு பலஸ்தீன
தேசிய முன்னெடுப்புக்கான நிறுவனத்தின்தலைவர்கலாநிதி முஸ்தபா அல்பர்கூஸி
சிறப்பான ஓர் உதாரணத்தின் மூலம் ஆக்கிரமிப்பாளனை மீண்டும்
அடையாளப்படுத்தியுள்ளார். 1940- 1944 காலப் பகுதியில் வட பிரான்ஸை நாஸி
ஜேர்மனி ஆக்கிரமித்து, புரிந்த அட்டூழியங்களை உலகமே அறியும். நாஸி
இராணுவத்தைஎதிர்த்து பிரான்ஸின் கிராமப் புறங்களில் Maquis எனும்பேரில்
போராட்டக் குழுக்கள் தோன்றின.பின்னர், அனைத்துசுதந்திர போராளிகளும்
கூட்டாக French Forces of Interior எனும் பேரில் நாஸி இராணுவத்தை
பிரான்ஸிலிருந்து வெளியேற்றின.

13 March 2014

MH370 விமான குறியீட்டுக்கு ஓய்வு: மலேசியன் ஏர்லைன்ஸ் முடிவு

கோலாலம்பூர், மார்ச் 13- மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று கடந்த 8ஆம் தேதி புறப்பட்டது. புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலைய கண்காணிப்பிலிருந்து அந்த விமானம் மாயமானது. கடந்த ஆறு நாட்களாக பல நாடுகளால் தேடப்பட்டு வரும் இந்த விமானம் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 27,000 கடல் மைல் பரப்பளவில் இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. விமானத்தில் காணாமல் போன பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக MH370 மற்றும் MH371 என்ற குறியீட்டு எண்களைத் திரும்பப் பயன்படுத்துவதில்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும்போது MH370 என்று குறிப்பிடப்படும் இந்த பயண சேவை இனி MH318 என்றும், பீஜிங்கிலிருந்து கோலாலம்பூர் திரும்பும் விமானம் MH319 என்றும் குறிப்பிடப்படும். இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு கொண்டுவரப்படும். பயணத் திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இரட்டை தினசரி சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அன்று விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் குடும்பங்களுடன் இணைந்திருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. Thanks:மாலைமலர்

08 March 2014

239 பயணிகளுடன் மலேசிய விமானம் விபத்த

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 239 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் வியட்நாமுக்குத் தெற்கே பறந்துகொண்டிருந்தபோது ராடார் தொடர்பை இழந்தது என்று கூறப்படுகிறது. சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த போயிங் ரக விமானத்தில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 153 பேர் சீனர்கள், 38 பேர் மலேசியர்கள், 12 பேர் இந்தோனேசியர்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த சிலரும்,12 விமான சிப்பந்திகளும் இதில் பயணித்துக்கொண்டிருந்தனர். மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே கடற்பரப்பில் இந்த விமானத்தின் துகள்களைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப் பெரும் விமான நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் தினசரி சுமார் 37,000 பயணிகளை உலகெங்கும் உள்ள சுமார் 80 இடங்களுக்கு ஏற்றிச் செல்கிறது. இந்த போயிங் 777 ரக விமானமும் அதன் 20 ஆண்டு வரலாற்றில் கடந்த ஆண்டு ஜூலையில் சான் பிராஸிஸ்கோ விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்து வரை, எந்த ஒரு மோசமான விபத்தையும் சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. Thanks:BBC

14 January 2014

உலகப்போர் வீரர்களின் டயரிகள் இணையத்தில் பிரசுரம்

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய டயரிக்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1914ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து பிரான்சில் ப்ளாண்டர்ஸிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியது வரையிலான காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பிரிட்டிஷ் ராணுவப் பிரிவுகள் அதிகார பூர்வமான டயரிகளில் எழுதி வைத்திருந்தன. மொத்தம் சுமார் 1.5 மிலியன் டயரிப் பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் இது வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 டயரிகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன. தனிப்பட்ட டயரிக் குறிப்புகளும் இணையத்தில் அதிகாரபூர்வ டயரிக்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட டயரிக்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன. முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்ஸன் எழுதி வைத்திருந்த சொந்த டயரியும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது. கேப்டன் பேட்டர்ஸன், தனது குறிப்பு ஒன்றில், போரின் போது தான் கண்ட காட்சிகள் "விவரிக்க முடியாதவை" என்று கூறியிருந்தார். "பதுங்கு குழிகள் ,பொருட்கள், ரத்தக்கறை தோய்ந்த ஆடைகளின் பகுதிகள் , வெடி மருந்துகள், கருவிகள், தொப்பிகள் மேலும் இன்ன பிற பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடக்கின்றன. எல்லாத் திசைகளிலும் மனித உடல்கள், அவைகளில் சில நமது ஆட்களின் உடல்கள்", என்று அவர் ஒரு குறிப்பில் விவரித்திருந்தார். இந்தக் குறிப்பை எழுதிய ஆறு வாரங்களில் அவரும் கொல்லப்பட்டார். இந்த டயரிகளை இணையத்தில் பிரசுரிக்கும் திட்டம், முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாகும். நூற்றுக்கணக்கான பெட்டிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த டயரிகளை 25 தன்னார்வலர்கள் ஸ்கேன் செய்து இந்த வேலையை செய்து வருகின்றார். வரலாற்று ஆர்வலர்களுக்கு புதிய வாய்ப்பு இந்த டயரிகள் பிரசுரிக்கப்படுவதன் மூலம், பொதுமக்கள், வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் குடும்ப வரலாற்றை எழுதுபவர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு, அதிகாரபூர்வ ஆவணங்களைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று கூறினார், தேசிய ஆவணக் காப்பகத்தில் ராணுவ ஆவணங்கள் பிரிவில் வல்லுநராகப் பணிபுரியும் வில்லியம் ஸ்பென்சர். இதன் மூலம் இந்த முக்கியமான காலகட்டத்தினைப் பற்றி, புதிய கண்டுபிடிப்புகளும் புதிய பார்வைகளும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்காலத்தில், முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த டயரித் திட்டம் அவர்களது குரல்களை நாம் கேட்க வகை செய்வதாகக் கூறினார் பிரிட்டிஷ் கலாசார அமைச்சர் மரியா மில்லர். முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கடைசி பிரிட்டிஷ் வீரர், ஹாரி பேட்ச், 2009ல் தனது 111வது வயதில் காலமானார். உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் ஷூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமானார். Source: http://adf.ly/c5ecb

01 November 2013

சஹாரா பாலைவனத்தில் 'நடந்துமுடிந்த' சோகக் கதை

ஆப்பிரிக்க நாடான நைஜர், உலகில் உள்ள வறுமையான நாடுகளில்
ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக
பட்டினியால் வாடி வருகின்றனர். வறுமையின் கொடுமை தாங்காத
அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் அகடெஸ் நகரிலிருந்து கடந்த
மார்சு முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் ஐரோப்பிய
நாடுகளுக்கு குடிபுக பல்வேறு குழுக்களாக வாகனங்களில் இடம்
பெயர்ந்துள்ளனர்.
அவ்வாறு செல்பவர்கள் உலகின் மிகப்பெரிய பாலைவனமான
சஹாரா பாலைவனத்தை கடந்து செல்லவேண்டும். பல குழுக்களாக
சென்ற அவர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த
சஹாரா பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர்.
உயிர்தப்பிய
சிறுமி ஒருத்தி தங்களின் கொடூரமான பாலைவனப்
பயணத்தை பிபிசியிடம் விபரித்துள்ளார். தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் அவள்
பாலைவனத்துக்கு பலிகொடுத்துள்ளாள். இவர்கள் செப்டெம்பரின் கடைசி அல்லது
அக்டோபரின் முற்பகுதியில்
நைஜரின் ஆர்லீட் நகரிலிருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர். நைஜர் ஊடாக
சஹாரா பாலைவனத்தைக் கடந்து அல்ஜீரியாவை அடைய
முயன்ற 90க்கும் மேற்பட்டவர்கள், இடைநடுவில் தங்களின் வாகனம்
பழுதடைந்ததால், பயணத்தைத் தொடரமுடியாமல், பல நாட்களாக தண்ணீர்
தாகத்தால் தவித்து உயிரிழந்தனர்.
தொழில்தேடி புறப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக
52 சிறார்களும் 33 பெண்களும் இந்த பாலைவன பயணத்தில்
உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. வெப்பம் எரிக்கும்
பாலைவனத்தில், வாகனம் பழுதடைந்த
இடத்திலிருந்து இரண்டு நாட்களாக நடந்துசென்ற தமக்கு, அந்த
வழியால் வந்த ஒரு வாகனம் கூட உதவவில்லை என்று உயிர்தப்பிய
14 வயது சிறுமி ஷாஃபா பிபிசியிடம் கூறினாள். வரும்வழியில் உயிரிழந்த
தாயையும் இரண்டு சகோதரிகளையும்
தானே புதைத்துவிட்டு வந்ததாக அந்தச் சிறுமி தெரிவித்தாள். தேடுதல்
பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்கள், மக்கள்
கூட்டம் கூட்டமாக உயிரிழந்து காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய,
அல்ஜீரியா நாட்டு எல்லைக்கு அருகில் வெறும் 3 கி.மீ. தூரத்திலேயே இறந்து
கிடந்துள்ளனர். கடந்த
திங்களன்று இதுபோன்று 30-க்கும் மேற்பட்டோர்
இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. வறுமை காரணமாக
மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய
நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள
அல்ஜீரியா அல்லது லிபியா நாட்டு கடற்கரையை நோக்கி செல்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Thanks:bbc,maalaimalar

26 August 2013

சிரிய இரசாயன தாக்குதல்: தீவிர நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள் ஆலோசனை

சிரிய இரசாயன தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்கா மற்றும் அதனது கூட்டு நாடுகள் எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் பராக் ஒபாமா தனது ஆலோசகர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூடனும் நேற்று முன்தினம் தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சிரியா தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரு நாட்டு தலைவர்களும் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பது என்பது பற்றி ஆலோசித்ததாக அந்த செய்திக் குறிப்பில் விபரிக்கப்படவில்லை. அதேபோன்று இந்த விடயத்தில் தீர்மானம் எட்டுவதற்கு ஒபாமா நிர்வாகம் கால எல்லையை நிர்ணயித்ததா? என்பது பற்றியும் தெளிவுபடுத்தப் படவில்லை. ஆனால் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு ஒபாமா தீர்மானித்தால் பென்டகன் அதற்கு தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செய லாளர் சக் ஹேகல் நேற்று தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு தயாராக இருக்கும்படி ஜனாதிபதி ஒபாமா கோரினால் நாம் அனைத்து திடீர் முடிவுகளுக்கும் தயாராகவே இருக்கிறோம். எந்த வகையான தேர்வாக இருந்தாலும் நாம் அதற்கு தயாராகவே இருக்கிறோம். அதனை செயற்படுத்துவோம் என்று ஹேகல் வலியுறுத்தினார். எனினும் சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் நடத்தப்பட்ட இந்த இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை திரட்டுமாறு ஒபாமா கோரியுள்ளார். இந்த தாக்குதலில் சுமார் 1300 பேர் அளவில் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. “நட்பு நாடுகள், தாக்குதல் சம்பவத்தை நேரில்கண்ட ஆதாரங்கள் மற்றும் கொல்லப்பட்டோரது பிரேத பரிசோதனைகளை கொண்டு அமெரிக்க உளவு பிரிவு சம்பவம் குறித்த உண்மைத் தன்மையை திரட்டி வருகிறது" என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி, சிரிய வெளியுறவு அமைச்சர் லபித் அல் முவல்லம்மை கடந்த வியாழக்கிழமை தொடர்புகொண்டு இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பகுதிகளில் ஆய்வு நடத்த ஐ. நா. நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தார். “இந்த விடயத்தில் சிரிய அரசுக்கு மறைக்க ஒன்றுமில்லை என்றால் பாதிக்கப்பட்ட பகுதியை முடக்கிவைத்து தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, அங்கு சோதனை நடத்த உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்” என்று கெர்ரி வலியுறுத்தினார். இதனிடையே பிரிட்டன் பிரதமர் கெமரூனின் பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட தகவலில், சிரியாவில் இராசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு கடுமையாக பதிலளிக்க பிரிட்டன் பிரதமருக்கும், ஒபாமாவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை டமஸ்கஸ ¤க்கு அருகில் சிரிய அரசினால் தனது சொந்த மக்கள் மீதே நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர் என்று மேற்படி பேச்சாளர் கூறியுள்ளார். டேவிட் கெமரூன் இது தொடர்பில் கனடா பிரதமர் ஸ்டிபன் ஹாப்பருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் சிரியாவின் தற்போதைய நிலவரத்திற்கு சரியான பதிலடிகொடுக்க இரு தலைவர்களும் இணங்கியதாக கெமரூனின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் இரசாயன ஆயுதம் பயன்படுத்தியிருந்தால் அவர் சிகப்பு எல்லையை தாண்டிவிட்டதாக தொடர்ந்து எச்சரித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இது சிரியாவுக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரசாயன தாக்குதல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் 1980 களில் சதாம் ஹுஸைனின் ஈராக் அரசு, குர்திஷ் கிளர்ச்சியாளர் பகுதியில் ஈரான் படைகளுக்கு எதிராக நடத்திய இரசாயன தாக்குதலுக்கு பின்னர் அதிக உயிர்களை பலிகொண்ட தாக்குதலாக வரலாற்றில் இடம்பிடிக்கும். எனினும் சிரிய அரசு இந்த தாக்குதலை நிராகரிப்பதோடு, கிளர்ச்சியாளர்கள் மீது அது பலி சுமத்தி வருகிறது. இந்த தாக்குதல் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக சக் ஹேகல் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார். ஆனால் அவ்வாறான ஒரு இராணுவ நடவடிக்கை அமெரிக்கா மத்திய கிழக்கில் மேலுமொரு நீண்ட யுத்தத்திற்கு முகம்கொடுக்கவேண்டியதாக இருக்கும் என ஒபாமா கூறியிருந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அந்நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே ஐ. நா. துணைச் செயலாளர் ஏஞ்சலா கெய்ன் சனிக்கிழமை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ. நா. நிபுணர்கள் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் அவர் கோர உள்ளார். இதற்காக சிரியா அரசுப் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணை தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று பான் கீ மூன் ஏற்கெனவே வலியுறுத் தியுள்ளார். நன்றி:தினகரன்

14 July 2013

தற்கொலை செய்த பிரிட்டிஷ் படையினர்ஆப்கனில் பலியானவர்களை விட அதிகம்

பிரிட்டிஷ் படையில்
தற்கொலை செய்துகொண்டுள்ள வீரர்களின்
எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில்
மோதல்களின்போது கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம்
என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ்
படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக
50 பேர் வரையில்
தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிபிசியின்
பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இந்தத்
தகவல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் ஆப்கானிஸ்தானில்
தாலிபன்களுடனான மோதல்களின்போது 44 பேர்
கொல்லப்பட்டுள்ளனர். போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காத
நிலையிலேயே, படைவீரர்கள் பலர்
தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர்களின்
உறவினர்கள் கூறுகின்றனர். இந்த ஒவ்வொரு தற்கொலையும்
ஒரு பெருந்துயரம் என்று பிரிட்டனின்
பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை இப்போதும் பிரி்ட்டிஷ் படையில்
உள்ள, முன்னர் ஆப்கானிஸ்தானில்
பணியாற்றிவிட்டு வந்துள்ள படைவீரர்களில்
பலர் மன அழுத்த நோய்களால்
பாதிக்கப்பட்டுள்ளமையையும்
பனோரமா நிகழ்ச்சி கண்டறிந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த
எண்ணிக்கை இரட்டை மடங்கைவிட
அதிகரித்துள்ளமையும் இதில்
தெரியவந்துள்ளது. தகவல்பெறும் சுதந்திரத்தைப்
பயன்படுத்தி பிரிட்டிஷ்
பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த
வேண்டுகோளின்படியும்
பனோரமா நிகழ்ச்சிக்கு இது பற்றிய
புள்ளிவிபரங்கள் கிடைத்துள்ளன.

13 July 2013

புத்தகயா குண்டு வெடிப்பு - புத்ததுறவிகளுக்கு தொடர்பு?

பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள
மகாபோதி புத்தர் கோவிலில் கடந்த வாரம்
அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன.
மகாபோதி கோயில் மைதானத்தில் 4
குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.
யுனேஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
குண்டு வெடிப்பிற்கு இந்தியன் முஜாகுதீன்
பொருப்பேற்றிருந்தாலும், அதற்கான ஆதரங்கள்
சிக்கவில்லை மேலும் முரணான சில யூகங்கள்
கிளம்பியுள்ளது.
புத்தர் கோவிலில் வெடிக்காமல் கிடந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறிய ரக
சிலிண்டரில் அம்மோனியம் நைட்ரேட், சல்பர்
மற்றும் வெடிமருந்து கலவைகளால் அந்த டைம்-
பாம்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றின்
மீது உருது மொழியில் குறிப்புகள்
எழுதப்பட்டிருந்தன. மியான்மரில் முஸ்லிம்கள்
தாக்கப்படுவதை கண்டித்து இந்தியன்
முஜாகிதீன் தீவிரவாதிகள் இந்த தொடர்
குண்டு வெடிப்பை நடத்தி இருக்கலாம்
என்று கருதப்பட்டது. பாகிஸ்தானில்
இருந்து டூவிட்டர் இணையத் தளத்தில் போடப்பட்ட தகவல்களால் இந்த சந்தேகம்
அதிகரித்தது.
என்றாலும் இந்தியன் முஜாகிதீன்கள்தான்
குண்டு வெடிப்பை நடத்தினார்கள்
என்பதற்கு இதுவரை எந்த உறுதியான
ஆதாரங்களும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கோ,
போலீசாருக்கோ கிடைக்கவில்லை.
குண்டு வெடித்த மறுநாளே போலீசார் 5
பேரை பிடித்து விசாரித்தனர்.
ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று தெரிய
வந்ததால் விடுவிக்கப்பட்டனர். தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வு மற்றும்
கண்காணிப்பு காமிரா காட்சிகளால் எந்த
பலனும் கிடைக்கவில்லை. இதனால்
விசாரணை அடுத்தக் கட்டத்துக்கு நகராமல்
உள்ளது.
இந்த நிலையில் புத்தர் கோவிலுக்குள் இருப்பவர்கள் உதவி இல்லாமல் இந்த
குண்டு வெடிப்பை நடத்தி இருக்க
முடியாது என்று முடிவுக்கு தேசிய
புலனாய்வு பிரிவினர் வந்துள்ளனர்.
கோவிலுக்குள் வைக்கப்பட்ட 13 குண்டுகளும் 6-ந்
தேதி இரவு தான் எடுத்து வந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிகள் எந்த
ஒரு கண்காணிப்பு காமிராவிலும்
பதிவாகவில்லை. எனவே புத்த துறவிகளில்
யாரோ ஒருவர்தான் குண்டுகளை வைக்க மர்ம
நபர்களை காமிரா கண்ணில் படாமல் அழைத்து சென்றிருக்கலாம்
என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு போதும் நாச
வேலைக்கு இப்படி சக்தி குறைந்த
குண்டுகளை பயன்படுத்தியதே இல்லை. மேலும் 13
குண்டுகளும் ஒரே நேரத்தில் அதிகாலை 5.30 மணிக்கு வெடிக்கும் வகையில்
வைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான்
தீவிரவாதிகள் 5 நிமிட இடைவெளியில் தான்
குண்டுகளை வெடிக்க வைப்பார்கள்.
இதன் மூலம் அதிக சேதம் ஏற்படுத்த வேண்டாம்
என்ற நோக்கத்தில்தான் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
மகாபோதி புத்தர் கோவிலை நிர்வகிப்பது யார்
என்பதில் புத்த துறவிகளிடையே கடந்த சில
மாதங்களாக கருத்து வேறுபாடு உள்ளது.
எனவே கோவில்
நிர்வாகத்தை குறி வைத்து உள்ளே இருக்கும் புத்த துறவிகளே குண்டு வெடிப்பில்
ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்கான
விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவினர்
தொடங்கியுள்ளனர்.
Source:www.adaderana .lk/tamil/news.php?nid=41765

21 April 2013

சீனாவில் பூகம்பம்; 150 பேர் பலி, ஆயிரக் கணக்கானோர் காயம்

சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டமொன்றில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர். திபெத்திய பீடபூமியின் அடிவாரத்தில் இருக்கின்ற கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டதுபோல காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது. பல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துசென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தாக்கிய பூகம்பம் மக்னிடியூட் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இதே சிச்சுவான் பிராந்தியத்திலேயே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.