ஆப்பிரிக்க நாடான நைஜர், உலகில் உள்ள வறுமையான நாடுகளில்
ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக
பட்டினியால் வாடி வருகின்றனர். வறுமையின் கொடுமை தாங்காத
அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் அகடெஸ் நகரிலிருந்து கடந்த
மார்சு முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் ஐரோப்பிய
நாடுகளுக்கு குடிபுக பல்வேறு குழுக்களாக வாகனங்களில் இடம்
பெயர்ந்துள்ளனர்.
அவ்வாறு செல்பவர்கள் உலகின் மிகப்பெரிய பாலைவனமான
சஹாரா பாலைவனத்தை கடந்து செல்லவேண்டும். பல குழுக்களாக
சென்ற அவர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த
சஹாரா பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர்.
உயிர்தப்பிய
சிறுமி ஒருத்தி தங்களின் கொடூரமான பாலைவனப்
பயணத்தை பிபிசியிடம் விபரித்துள்ளார். தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் அவள்
பாலைவனத்துக்கு பலிகொடுத்துள்ளாள். இவர்கள் செப்டெம்பரின் கடைசி அல்லது
அக்டோபரின் முற்பகுதியில்
நைஜரின் ஆர்லீட் நகரிலிருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர். நைஜர் ஊடாக
சஹாரா பாலைவனத்தைக் கடந்து அல்ஜீரியாவை அடைய
முயன்ற 90க்கும் மேற்பட்டவர்கள், இடைநடுவில் தங்களின் வாகனம்
பழுதடைந்ததால், பயணத்தைத் தொடரமுடியாமல், பல நாட்களாக தண்ணீர்
தாகத்தால் தவித்து உயிரிழந்தனர்.
தொழில்தேடி புறப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக
52 சிறார்களும் 33 பெண்களும் இந்த பாலைவன பயணத்தில்
உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. வெப்பம் எரிக்கும்
பாலைவனத்தில், வாகனம் பழுதடைந்த
இடத்திலிருந்து இரண்டு நாட்களாக நடந்துசென்ற தமக்கு, அந்த
வழியால் வந்த ஒரு வாகனம் கூட உதவவில்லை என்று உயிர்தப்பிய
14 வயது சிறுமி ஷாஃபா பிபிசியிடம் கூறினாள். வரும்வழியில் உயிரிழந்த
தாயையும் இரண்டு சகோதரிகளையும்
தானே புதைத்துவிட்டு வந்ததாக அந்தச் சிறுமி தெரிவித்தாள். தேடுதல்
பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்கள், மக்கள்
கூட்டம் கூட்டமாக உயிரிழந்து காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய,
அல்ஜீரியா நாட்டு எல்லைக்கு அருகில் வெறும் 3 கி.மீ. தூரத்திலேயே இறந்து
கிடந்துள்ளனர். கடந்த
திங்களன்று இதுபோன்று 30-க்கும் மேற்பட்டோர்
இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. வறுமை காரணமாக
மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய
நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள
அல்ஜீரியா அல்லது லிபியா நாட்டு கடற்கரையை நோக்கி செல்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Thanks:bbc,maalaimalar
No comments:
Post a Comment