எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயினால் இதுவரை 307 பேர் இலங்கையில்
இறந்துள்ளதோடு 1649 எச்.ஐ.வி. பீடிக்கப்பட்டோர் அடையாளங்
காணப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க
தெரிவித்தார். அவர்களிடயே எயிட்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டோர் 432 பேர்
இருப்பதாகவும் அவர் கூறினார். வாய்மூல விடைக்காக பீ. ஹெரிசன் எம்.பி.
எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது 2010ல் 121
எச்.ஐ.வி. நோயாளர்களும் 2011ல் 146 பேரும் 2012ல் 186 பேரும் அடையாளம்
காணப்பட்டனர். 2010ல் 44 பெண்களும் 77 ஆண்களும் அடையாளங் காணப்பட்டதோடு
2011ல் 64 பெண்களும் 82 ஆண்களும் அடையாளங் காணப்பட்டனர். 2012ல் 66
பெண்களும் 120 ஆண்களும் அடையாளங் காணப்பட்டார்கள். கொழும்பு, கம்பஹா,
குருநாகல், கண்டி, களுத்துறை, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே
கூடுதலானவர்கள் அடையாளங் காணப்பட்டனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்
இலங்கையில் எயிட்ஸ் நோய் பரவுவது குறைவாகவே உள்ளது. பாடசாலை மட்டம் முதல்
எயிட்ஸ் குறித்து அறிவூட்டப்படுகிறது.
Source:http://adf.ly/a5qM1
No comments:
Post a Comment