தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label விந்தை உலகம். Show all posts
Showing posts with label விந்தை உலகம். Show all posts

14 September 2014

சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

மூட்டு இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக
விளங்கும் சிறுமூளை இல்லாமலே 24 வயதுடைய சீனப் பெண் ஒருவர்
மற்றவர்களைப்போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவது சமீபத்தில்
தெரிய வந்துள்ளது.
வாந்தி மட்டும் குமட்டல் புகார்களுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு
வந்தபோது மருத்துவர்கள்
அவருக்கு சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துள்ளனர். அப்போதுதான்
அவரது சிறுமூளைக்குப் பதிலாக அந்த இடத்தில்
மூளைப்பகுதியைப் பாதுகாக்கும் வெறும் திரவம்
மட்டுமே நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ
வரலாற்றிலேயே இது மிகவும் அரிதான விஷயமாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக இவ்வாறான பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நடப்பதிலும்,
பேசுவதிலும் பெரும் குறைபாடுகள் காணப்படும். ஆனால் இவர்
நேராக நடக்கும்போது சிறிதளவு மயக்கமாக உணர்வதுடன்
பேசுவதில் சிறிது தெளிவில்லாத முறையில் இருப்பது தவிர
சராசரியாகவே காணப்படுகின்றார். இவரது தாயாரைத் தொடர்புகொண்டபோது, தனது மகள்
ஆறு வயதில்தான் சுயமாக நடக்க ஆரம்பித்தாள் என்றும் அந்த
வயதில்தான் சற்று தெளிவாகப் பேச ஆரம்பித்தாள் என்றும்
குறிப்பிட்டார். அதுபோல் அவர்
பள்ளிக்கு செல்லவில்லை என்பதையும் அவர் கூறினார்.
திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கும் தாயாக உள்ள இவர், மருத்துவ உலகிற்கே
ஒரு வியப்பு என்று மருத்துவர்கள்
குறிப்பிட்டுள்ளனர். இவரது மூளையின்
அனுசரிப்புத்தன்மை மகத்தானது என்று அமெரிக்க நரம்பியல்
அறுவை சிகிச்சை மருத்துவரான ராஜ் நாராயண்
கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி:மாலைமலர்

31 August 2012

வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!

வான்வெளியில் எப்போதாவது நிகழும் அற்புத
நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் வன்ஸ் இன் ப்ளூ மூன்
என்ற அர்த்தத்தில் நீல நிலாக் காலத்தில்,
என்று குறிப்பிடப்படுகிறது. வானில் வெண்மையாகத் தோன்றும் நிலவு நீல
வர்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற
பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது. அப்படியான ஓர் அரிய
நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை
இடம்பெறவுள்ளதாக புதுடில்கியில் உள்ள
அறிவியல், கல்வி தகவல்
பரப்பு அமைப்பு அறிவித்துள்ளது.. இன்று இரவு தோன்றும் நிலவு நீல நிறத்தில்
இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள்
தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில்
முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. இது இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய
நாடுகளில் வாழும் மக்களால் அவதானிக்க
கூடியதாக இருக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2-ம் திகதி முதல் முறையும்,
இன்று இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில்
இரண்டாவது முறை தோன்றும்போது,
நிலவு நீலமாகத் தோற்றமளிக்கும்
என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின்
சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக
இந்த நிறம் ஏற்படும் என்று அறிவியல்,
கல்வி தகவல் பரப்பு அமைப்பான ஸ்பேஸ்
தெரிவித்துள்ளது. அடுத்த நீல நிலவு 2015-ம் ஆண்டு ஜூலை மாதம்
தோன்றும் என்று அந்த அமைப்பின் வானியல்
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை நீல நிலவு மாலை 6.13
மணி தொடக்கம், இரவு 7.28 மணிவரை தோன்றும்
என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர்
என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்..

29 April 2012

அதிசய மீன்

க்கொன மீன் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட
 மீன்களில் ஒரு அதிசயதக்க மீன் கண்டெடுக்கப்பட்டது .
இது குடாவு கடலில் பிடிக்கப்பட்டதாக  கூறப்படுகின்றது .
இதோ காணோளியைப் பாருங்கள் .
ஸு ப்ஹானல்லாஹ் .



20 September 2011

முதன் முதலாக சூரிய ஒளியைப் பார்த்த குரங்குகளின் ஆனந்தம் (வீடியோ இணைப்பு)






இதுவரை வெளி உலகமே தெரியாமல் மருத்துவ பரிசோதனை கூடத்தில் வளர்ந்து வந்த குரங்குகள் முதன் முதலாக சூரிய ஒளியைக் கண்டு மகிழ்ச்சியில் குதிக்கும் தருணத்தை ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்று வீடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்துள்ளது.











அண்மையில் இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்காக அடைக்கப்பட்டுள்ள குரங்குகளை சுதந்திரமாக நடமாட விடவேண்டும் என பல தரப்புக்களிடமிருந்து எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார்கள்.

எது எவ்வாறாயினும் வெளியில் வந்ததும் கட்டித் தழுவி தங்களுக்குள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி நெகிழ வைக்கிறது.
நன்றி. மனிதன்.com08 Sep 2011




20 April 2011

வியக்கவைக்கும் கடல் வாழ் உயிரினங்கள்

கடலுக்கடியில் நாம் இதுவரை காணாத பல அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவ்வகை அரிய உயிரினங்களை புகைப்படமெடுப்பதை சில புகைப்படக் கலைஞர்கள் தங்களது மூச்சாக எண்ணிச் செயற்படுகின்றனர். இவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்துக்கள் நிறைந்த கடலடியில் துணிகரமாக இவற்றை மேற்கொள்கின்றனர். அத்தகைய கலைஞர் ஒருவரால் ஹவாய் கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களே இவை. . . நன்றி வீரகேசரி இணையம்

06 April 2011

அறிவியல்

விமானம் பறப்பது எப்படி?
இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும் சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது… இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift) B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும் Weight=Lift Drag=Thrust த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும் டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும் விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும் விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும் சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின், அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது. (பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது) விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும் பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும் உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும் இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்) விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும் அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும் இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா? அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது) இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா? அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்… மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது) அல்குர்அன் 55-33 நன்றி tntj.net

20 March 2011

கிளி வடிவத்தில் இருக்கும் அதிசய பூ

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது. அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ. இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது. தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது. இறைவன் திருமறையில்.. நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34) தேடித்தந்தவர்: அபு அஹ்சன். நன்றி tntj.net

17 March 2011

ஆனைமுடியில் அரிய ஆரஞ்சு தவளை

தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத் தவளை இருக்கிறது. ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது. ஆயிரத்துத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தவளைக்கு ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர் கூறுகிறார். மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன் புரியாத புதிராகவே உள்ளது. அது குறித்த ஆய்வில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். டாக்டர் எஸ்.டி.பிஜு 2001 ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும், இது புதிய இனம்தான் என்பதை பல கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர் கூறுகிறார். "சீனா, லாவோஸ், கம்போடியா வியட்நாம், இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் நாடுகளில் வாழும் தவளை இனங்களுடன் இந்தத் தவளையை ஒப்பிட்டு பார்த்து, பலவிதமாக ஆராய்ந்து, இறுதியில் கரண்ட் சயின்ஸ் எனப்படும் அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்பினை வெளியிட்டோம்." என்கிறார் பேராசிரியர் பிஜு. இந்தியாவில் தவளையின ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் சி ஆர் நாராயண் ராவ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்தத் தவளையின் பெயரில் ராவ் சேர்க்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பிஜு சுட்டிக்காட்டுகிறார். மிகச்சிறிய ஒரு பகுதியில், மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உலகில் மொத்தத்தில் ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு உள்ளாகியுள்ளன. நன்றி BBC தமிழோசை

01 March 2011

ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை! (காணொளி இணைப்பு) _

மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர். நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர். சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது. டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது. இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும். இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும். குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது 'ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்' என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது. இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இரு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள். நன்றி வீரகேசரி இணையம்

02 February 2011

ஆச்சரியப்பட வைக்கும் கொரில்லா மனிதன்

கொரில்லா குரங்கு ஒன்று மனிதனைப் போல் நடைபோடும் காணொளியானது தற்போது இணையத்தில் வெகு பிரபல்யம் பெற்றுள்ளது. இக்கொரில்லாவின் பெயர் எம்பாம் ஆகும். இங்கிலாந்தின் போர்ட் லிம்பின் வன விலங்கு நிலையத்திலேயே இது பாராமரிக்கப்பட்டு வருகின்றது 1990 இல் பிறந்த இதன் தற்போதைய வயது 20 ஆகும். மற்றைய கொரில்லாக்களும் இது போன்று நடக்கக்கூடியவை என்ற போதிலும் இதன் அளவிற்கு முடியாதென அதன் பாராமரிப்பாளர் தெரிவிக்கின்றார். இக்காணொளியானது யூடியூப் இணையத்தளத்தில் சுமார் 200,000 இற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. இதனைப் ஒளிப்பதிவு செய்தவர் விலங்கியல் ஆராய்ச்சியாளரான ஜொஹானா வெட்சன் ஆவார்.** ------------------------------------------------------------------------------------------------------------- வீரகேசரி இணையம் 1/28/2011 1:56:15 PM