மூட்டு இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக
விளங்கும் சிறுமூளை இல்லாமலே 24 வயதுடைய சீனப் பெண் ஒருவர்
மற்றவர்களைப்போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவது சமீபத்தில்
தெரிய வந்துள்ளது.
வாந்தி மட்டும் குமட்டல் புகார்களுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு
வந்தபோது மருத்துவர்கள்
அவருக்கு சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துள்ளனர். அப்போதுதான்
அவரது சிறுமூளைக்குப் பதிலாக அந்த இடத்தில்
மூளைப்பகுதியைப் பாதுகாக்கும் வெறும் திரவம்
மட்டுமே நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ
வரலாற்றிலேயே இது மிகவும் அரிதான விஷயமாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக இவ்வாறான பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நடப்பதிலும்,
பேசுவதிலும் பெரும் குறைபாடுகள் காணப்படும். ஆனால் இவர்
நேராக நடக்கும்போது சிறிதளவு மயக்கமாக உணர்வதுடன்
பேசுவதில் சிறிது தெளிவில்லாத முறையில் இருப்பது தவிர
சராசரியாகவே காணப்படுகின்றார். இவரது தாயாரைத் தொடர்புகொண்டபோது, தனது மகள்
ஆறு வயதில்தான் சுயமாக நடக்க ஆரம்பித்தாள் என்றும் அந்த
வயதில்தான் சற்று தெளிவாகப் பேச ஆரம்பித்தாள் என்றும்
குறிப்பிட்டார். அதுபோல் அவர்
பள்ளிக்கு செல்லவில்லை என்பதையும் அவர் கூறினார்.
திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கும் தாயாக உள்ள இவர், மருத்துவ உலகிற்கே
ஒரு வியப்பு என்று மருத்துவர்கள்
குறிப்பிட்டுள்ளனர். இவரது மூளையின்
அனுசரிப்புத்தன்மை மகத்தானது என்று அமெரிக்க நரம்பியல்
அறுவை சிகிச்சை மருத்துவரான ராஜ் நாராயண்
கருத்து தெரிவித்துள்ளார்.
நன்றி:மாலைமலர்
No comments:
Post a Comment