தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

28 September 2014

புலமைப் பரிசில் பரீட்சை: அல் ஹஸனியாவின் இருவர் சித்தி

இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்
இன்று வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில்
பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர்.

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மக்கொன அல்
ஹஸனியா மகாவித்தியாலய மாணவி பாத்திமா ரிசாதா ரிஸ்வான் 177 புள்ளிகளையும்
மாணவன் இம்தாத் பைஸான் 165 புள்ளிகளையும் பெற்றனர்.

அதேநேரம், இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில்
மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவி பாத்திமா ஸாமா 197 புள்ளிகளைப் பெற்று
இலங்கையில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில்
முன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ
01) டப்ளியூ.ஏ.வெனுஜ நிம்சத் - 199 புள்ளிகள் - எம்பிலிபிடிய கனிஸ்ட பாடசாலை


02) எச்.எம்.மாலக நெத்மால் திலஹரத்ன - 198 புள்ளிகள் - ரோயல் கனிஸ்ட பாடசாலை, பொலன்னறுவை

03) நிஸ்வார் பாத்திமா ஸாமா - 197 புள்ளிகள் - ஷாகிரா மத்திய கல்லூரி, மாவனெல்லை

03) ஜி.ஷானி யசோதரா குணசேகர - 197 புள்ளிகள் - பிடியேகெதர கனிஸ்ட பாடசாலை, பெம்முல்லை

04) என்.வி.அதீஷ ஆலோக - 196 புள்ளிகள் - அளுத்வெவ கனிஸ்ட பாடசாலை, அகுணகொலபெலச


04) டப்ளியூ.ஈ.பி.டிலினி திஸர - 196 புள்ளிகள் - விஹாரமஹா தேவி பெண்கள் பாடசாலை, பதுளை


04) எச்.என்.நிஷார டி சில்வா விஜேசிங்க - 196 புள்ளிகள் - குளுபென கனிஸ்ட பாடசாலை - பொகுனுவிட்ட

04) கே.ஓ.சி.சேனல்ய கருணாநாயக்க - 196 புள்ளிகள் - யசோதரா தேவி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

04) கே.ஜே.பி.ருச்சிர செஹான் ஜெயவீர - 196 புள்ளிகள் - வெஸ்லி கல்லூரி, கொழும்பு
.

- பட உதவி:Riflan Rasheed

No comments:

Post a Comment