தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

27 September 2014

சர்ச்சைக்குரிய விராது தேரர் இலங்கையில்! வி.ஐ.பி. மரியாதையுடன் வரவேற்பு


பொதுபல சேனா அமைப்பு நாளை நடத்தும் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாகக்
கலந்து கொள்ளும் நோக்கில் அவரது இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
இவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏனைய நாடுகளின் இரண்டாம் நிலை அரச தலைவர்கள்
இலங்கைக்கு வருகை தரும்போது அளிக்கப்படும் வரவேற்பு விராது தேரருக்கும்
அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது பல சேனாவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இருக்கும்
காலப்பகுதியில் விராது தேரருக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின்
மூலம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
மியன்மாரில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் விராது தேரரின் 969
அமைப்பினரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்த
சிந்தனைகளின் பேரில் கொடூரமான முறையில் உயிருடன் எரித்தும், அடித்தும்
கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான கடும்போக்குவாத அமைப்பான பொதுபல
சேனாவின் மாநாட்டில் விராது தேரர் கலந்து கொள்வது தொடர்பில் இலங்கை
முஸ்லிம்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Source:-Netrikkan

No comments:

Post a Comment