ஊர் செய்திகள்
date
19 September 2014
தென் கொரியாவின் கோலாகலமாக தொடங்கிய 17வது ஆசிய விளையாட்டுப் போட்டி
இன்சியான்:
17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில்
இன்று கோலகலமாக தொடங்கியது. கொரியன் பாப் பாடகர் கங்னம் ஸ்டைல் புகழ்
சை நடனமாடி பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தினார் இன்று முதல் 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம்
தேதி நிறைவடைகிறது. இந்தப் போட்டி 3-வது முறையாக தென் கொரியாவில்
நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986 (சியோல்), 2002 (புசான்) ஆகிய ஆண்டுகளில்
ஆசிய விளையாட்டுப் போட்டியை தென் கொரியா நடத்தியிருக்கிறது. இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமாக வாசகமாக "பன்மயம் ஒளிர்கிறது இங்கே" என்ற
வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆசியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின்
முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.
சின்னம் ‘மேஸ்காட்’
போட்டியின் சின்னமாக (மேஸ்காட்) இன்சியானின் சாங்டோ தீவில் வசிக்கும் கடல்
நாய்கள் (ஸ்பாட் சீல்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பரேமி, சுமுரோ, விச்வோன் என
அழைக்கப்படுகின்றன. கொரிய மொழியில் பரேமி, சுமுரோ,
விச்வோனுக்கு முறையே காற்று, நடனம், ஒளி என்பது பொருள். வட கொரியா மற்றும்
தென் கொரியா இடையே அமைதியை வலியுத்தும் வகையில் மேற்கண்ட
சின்னத்தை தேர்வு செய்துள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.
இலச்சினை
போட்டிக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை ஆசியாவின் முதல் எழுத்தான ‘ஏ'
வை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ‘ஏ' வின் இடது மேற்பகுதியில் சூரியன்
இடம்பெற்றுள்ளது. ஆசிய மக்கள் வானத்தை தங்களின் கையில் பிடித்திருப்பதைக்
குறிக்கும் வகையில் இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.
45 நாடுகள்
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட
45 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரம்
பேர் இதில் பங்கேற்கிறார்கள்.
36 வகையான போட்டிகள்
36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் 28 வகையான விளையாட்டுகள் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக்
போட்டியில் இடம்பெறுகின்றன. மொத்தம் 49 மைதானங்களில் போட்டிகள்
நடைபெறுகின்றன. அதில் 23 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டவையாகும்.
Official Name: 17th ASIAN GAMES INCHEON 2014 Duration: September 19, 2014 - October 4, 2014 (16 days) Venues: In and around Incheon Metropolitan City Participants: About 13,000 athletes and officials and about 7,000 media from the 45 OCA member states Staff: Approx. 30,000 Host: The Olympic Council of Asia (OCA) Organizer: The 2014 Incheon Asian Games Organizing Committee (IAGOC) No. of Sports: 36
ASIAN GAMES INCHEON 2014 36Sports
Aquatics, Archery, Athletics, Badminton, Basketball, Boxing, Canoe & Kayak, Cycling, Equestrian, Fencing, Football, Golf, Gymnastics, Handball, Hockey, Judo, Modern Pentathlon, Rowing, Rugby, Sailing, Shooting, Table Tennis, Taekwondo, Tennis, Triathlon, Volleyball, Weightlifting, Wrestling, Baseball, Bowling, Cricket, Kabaddi, Karate, Sepaktakraw, Squash, Wushu
Thanks:-
oneindia
incheon2014ag.org
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment