தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

24 September 2014

உங்கள் வாக்குரிமையை இணையத்தில் இப்போதே சோதித்துப் பாருங்கள்

வாக்காளர் இடாப்பில் தனது பெயர் உள்ளதா என உறுதி செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை http://www.slelections.gov.lk/id/index.aspx என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.
செப்டெம்பர் 30ஆம் திகதி வரை குறித்த இணையத்தள முகவரிக்குச் சென்று தனது மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து தனது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளதாக என உறுதி செய்து கொள்ள முடியும்.
வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாத நபர்கள் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவம் ஒன்றை பெற்று மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்புவதன் மூலம் வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச கிராம சேவகர் அலுவலகத்தில், பிரதேச செயலாளர் அலுவலகத்தில், உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment