கோலாலம்பூர், மார்ச் 13-
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர்
பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ்
பயணிகள் விமானம் ஒன்று கடந்த 8ஆம் தேதி புறப்பட்டது.
புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலைய
கண்காணிப்பிலிருந்து அந்த விமானம் மாயமானது. கடந்த ஆறு நாட்களாக பல நாடுகளால் தேடப்பட்டு வரும் இந்த விமானம்
பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட
27,000 கடல் மைல் பரப்பளவில் இந்த தேடுதல்
பணி நடைபெற்று வருகின்றது.
விமானத்தில் காணாமல் போன பயணிகளுக்கு மரியாதை செலுத்தும்
விதமாக MH370 மற்றும் MH371 என்ற குறியீட்டு எண்களைத் திரும்பப் பயன்படுத்துவதில்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ்
நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும்போது MH370
என்று குறிப்பிடப்படும் இந்த பயண சேவை இனி MH318 என்றும்,
பீஜிங்கிலிருந்து கோலாலம்பூர் திரும்பும் விமானம் MH319
என்றும் குறிப்பிடப்படும். இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு கொண்டுவரப்படும். பயணத்
திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இரட்டை தினசரி சேவைகள்
தொடர்ந்து செயல்படும் என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும்
அன்று விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானக்
குழுவினரின் குடும்பங்களுடன் இணைந்திருப்பதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
Thanks:மாலைமலர்
No comments:
Post a Comment