தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

11 March 2014

மாயமான மலேசிய விமானம்: நிபுணர்கள் கூறுவது என்ன?

மலேசியா ஏர்லைன்ஸ் 370 காணாமல் போய் நாட்கள்
சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் விமானம் 239 பயணிகளுடன்
என்னவாயிற்று என்பதன் சுவடு கூட தெரியவில்லை. இந்தப் புதிர்
குறித்து நிபுணர்களே ஆடிப்போயுள்ளனர். என்னஎன்ன விதங்களில் ஒரு விமானம் மாயமாகும்
வாய்ப்பிருக்கிறது என்ற தெரிந்த மட்டத்தில் தேடுதல்
வேட்டை நடத்தப்படுகிறது. ஆனால் முன் பின் தெரியாத காரணங்கள்
இருக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
1. திருட்டு பாஸ்போர்ட்டில் இருவர் பயணம் செய்த விவகாரம்:
இது குறித்து அமெரிக்க முன்னாள் விமானப் போக்குவரத்துத்
துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ என்ன கூறுகிறார்
என்றால், திருட்டு பாஸ்போர்ட் என்பதனால் பயங்கரவாத தொடர்புடைய
நபர், விமானம் எங்காவது வெடிக்கச்செய்ய பட்டிருக்கலாம்
என்று கூற முடியாது. எதிர்கால ஒரு திட்டத்திற்காக
பயங்கரவாதிகள் ஒரு வெள்ளோட்டம் பார்த்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
2. விமானத்தின் பாகங்கள் இதுவரை தென்படவில்லை. இதனால் பாம்
வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம்:
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின்
முன்னாள் துணைத் தலைவர் ராபர்ட் பிரான்சிஸ் கூறுகையில், "இந்த
மாயமான சமாச்சாரம் கேள்விப்பட்டவுடன் நான்
நினைத்தது என்னவெனில் ஏதோ காரணங்களால் விமானம் வெடித்துச்
சிதறியிருக்கும், இதற்கான சிக்னல் எதுவும்
இல்லாமலேயே இது நடந்திருக்கலாம் என்று. ராடாரிலிருந்து விமானம்
சுவடின்றி மாயமாகியுள்ளது என்றால் அது காணாமல்
போவதற்கு முன்பு எதிர்பாராதது ஏதோவொன்று நடந்துள்ளது.
என்றார்.
3. சரி செயற்கைக்கோள் தொழில் நுட்பம் என்னவாயிற்று?
விமானம் வெடித்துச் சிதறியிரிந்தால்
அதிலிருந்து வெளியாகும் உஷ்ணம்
அல்லது வேறு ஏதாவது சிக்னல்களை சாட்டிலைட்கள்
பிடித்து விடாதா? அமெரிக்க விமானப்படையில் இதே வேலையாக
இருந்த நிபுணர் பிரையன் வீடன் என்ன கூறுகிறார் என்றால்,
"சாட்டிலைட்கள் அதுபோன்ற ஒன்றை படம் பிடிப்பது கடினம். 300 கிமீ-லிருந்து
1500 கிமீ தூரத்தில் கீழே நிகழும் ஒன்றை படம்
பிடிப்பது கடினம், அது விமானமாகவே இல்லாமல் வேறு ஒன்றாக
இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் ஒரு வாய்ப்பு உள்ளது.
விண்வெளியில் 22,000 மைல்கள்
அமெரிக்க அரசின் செயற்கைக்கோள் உலகம் முழுதும்
நடப்பதை பிடிக்கக்கூடிய திறன் கொண்டது. அது பாலிஸ்டிக்
ஏவுகணைகளை படம் பிடிக்கக்கூடியது. ஆனாலும்
குண்டு வெடிப்பு போன்ற ஒன்றை அதனால் டிராக் செய்ய
முடியுமா என்பது தெரியவில்லை.
4. கடத்தல்:
விமானம் மாயமாவதற்கு முன்னால் அது யு-டர்ன் எடுத்ததாக
கூறப்படுகிறது. அது உண்மையெனில் கடத்தல் காரர்கள்
கோலாலம்பூர் போ என்று கூறியிருக்கலாமோ? ஆனால் கிடைத்திருக்கும்
சாட்சியங்களின் படி கடத்தப்பட்டதற்கான
தடயங்கள் எதுவும் இல்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
5. விமானத்தின் உடைந்த பாகங்கள் இல்லாத நிலையில்,
விமானத்தை கடலுக்குள் செலுத்தப்
பணிக்கப்பட்டு கடலுக்கு அடியில் அது சென்றிருக்குமோ என்ற
கோட்பாடு. அப்படி நடந்திருக்கக் கூடும் என்றால் அவசர நிலை சிக்னல் ஏன்
இல்லை? இரண்டு இஞ்சின்களுமே பழுதானாலும்100 மைல்கள்
வரை தண்ணீரிலேயே அதனால் செல்ல முடியுமாறு அமைக்கப்பட்ட உயர்
தொழில் நுட்ப விமானங்கள் இவை என்கிறார் பைலட் கெய்த் வோல்சிங்கர்.
அப்படி 100 மைல்கள் செல்ல முடியும் என்றால் பைலட்கள் அதற்குள்
சிக்னல் கொடுக்க முடியும் என்கிறார் இவர். இது பல பரிசோதனைகளுக்குப் பிறகே வர்த்தக
பயன்களுக்கு விடப்பட்டுள்ள விமானம் ஆகும். இதன் தொழில்
நுட்பத்தில் கோளாறுகள் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மேலும்
கூறுகிறார்.
6. விமானிகளின் தவறு காரணமா?
இந்த விமானம் மாயமானதை 2009ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில்
விழுந்த பிரான்ஸ் விமான விபத்துடன் ஒப்பிடுகின்றனர்
நிபுணர்கள். அதில் 228பேர் பலையாகியுள்ளனர். பிரேசிலில்
இருந்து பாரீஸ் சென்று கொண்டிருந்த விமானம் அட்லாண்டிக்
பெருங்கடலின் ஏற்பட்ட கடும் புயலில் சிக்கி கடலுக்குள்
சென்றது. மிகவும் செலவு பிட்த்த ஒரு நடமுறையில் சுமார் 2 ஆண்டுகள்
தேடுதல் வேட்டையில் விமானத்தின் 2 இஞ்சின்கள், குரல்
மற்றும் தரவு பதிவு எந்திரங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் இந்த முறை வானிலை மிகவும் தெள்ளத் தெளிவாக
இருந்துள்ளது. தற்போது திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர் ஜெர்மனியில்
புகலிடம் கேட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ள்து.
எனவே பயங்கரவாத தாக்குதல் என்ற யூகமும் பொய்த்துப்போயுள்ளது. முற்றிலும்
எதிர்பாராத ஒன்று நிகழ்ந்துள்ளது அது என்ன
என்பதை யாரல் கூற முடியும்?

No comments:

Post a Comment