மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்
சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 239
பயணிகளுடன் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்
என்று கருதப்படுகிறது. நேற்று கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த விமானம்
வியட்நாமுக்குத் தெற்கே பறந்துகொண்டிருந்தபோது ராடார்
தொடர்பை இழந்தது என்று கூறப்படுகிறது. சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த போயிங்
ரக விமானத்தில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்
இல்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்
ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 153 பேர் சீனர்கள், 38 பேர்
மலேசியர்கள், 12 பேர் இந்தோனேசியர்கள். ஆஸ்திரேலியா,
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த
சிலரும்,12 விமான சிப்பந்திகளும் இதில்
பயணித்துக்கொண்டிருந்தனர். மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே கடற்பரப்பில் இந்த
விமானத்தின் துகள்களைத் தேடும் முயற்சிகள்
தொடங்கப்பட்டிருக்கின்றன. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப் பெரும் விமான
நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் தினசரி சுமார் 37,000
பயணிகளை உலகெங்கும் உள்ள சுமார் 80 இடங்களுக்கு ஏற்றிச்
செல்கிறது. இந்த போயிங் 777 ரக விமானமும் அதன் 20 ஆண்டு வரலாற்றில் கடந்த
ஆண்டு ஜூலையில் சான் பிராஸிஸ்கோ விமான நிலையத்தில் ஏற்பட்ட
விபத்து வரை, எந்த ஒரு மோசமான விபத்தையும்
சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.
Thanks:BBC
No comments:
Post a Comment