'மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும் திடலிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிகிறான். மரத்தில் இருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையும் அவன் அறியாமல் இல்லை. பசுமை யான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை! (6:59)
'உயரமான தூண்களையுடைய இரம் என்ற ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலக நாடுகளில் படைக்கப்படவில்லை. மேலும் பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?) அந்த மக்களோ உலக நாடுகளில் பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான். உண்மையில் உம் இறைவன் குறிவைத்துக் காத்திருக்கிறான்' (89:6- 14)
No comments:
Post a Comment