கர்ப்பம் பற்றி திட்டமிடல் எங்கள் மத்தியில் அரிதான ஒருவிடயமாகவே இருந்து வருகிறது,சிலருக்கு அவ்வாரான ஒருவிடயம் உள்ளதென்பது கூட தெரியாமல் உள்ளது,சிலருக்கு அது பற்றி தெரிந்திருந்தும் நடைமுறைப்படுத்தல் கடினம் என்றும்,கர்ப்பமானது இயற்கையாக நடைபெறவேண்டும் என்றும்,அல்லது இவ்வாரு செய்வதனால் கர்ப்பமடையாமல் போகலாம் என்றும் தப்பபிப்பிராயங்கள் உள்ளது.அவற்றை கழைந்து கர்ப்பம் பற்றி முன்னேற்பாடுகள் செய்வது ஒரு ஆரோக்கியமான குழந்தை பிறப்பில் முக்கியமானது என்று நீங்கள்தெரிந்து கொள்வதற்காக இதை நான் தொகுக்கிறேன்.
மேலைத்தேய நாடுகளில் கர்ப்பமடைவதற்கு முண்ணரான திட்டமிடல் அனேகமான குடும்பங்களினாள் நடைமுறைப்படுத்தப்படுகிறது இது அவர்களது குழந்தைகள் போதிய நிறைஉடனும்,ஆரோக்கியமாக பிறப்பதற்கும் வழியமைப்பதுடன், தாயின் ஆரோக்கியமான கர்ப்பகாலதிற்கும்,பிள்ளைப்பிறப்பின் போது ஏற்படும் பிரச்சனைகளையும்,மரணம் சம்பவிப்பதிலிருந்தும் மிக குறித்து காட்டக்கூடிய அளவுக்கு குறைக்கிறது.
நீங்கள் கர்ப்பமடைந்துள்ளீர்கல் என உங்களுக்கு தெரியவரும் முன்பே கர்ப்பபையிலுள்ள உங்களது சிசுவினுடைய மூளை உற்பட உடல் உறுப்புகள் உருவாக தொடங்கிவிடும் எனவே……
வளரும் போது தனது வாழ்க்கையின் (குழந்தைப்பருவம்,இளமைப்பருவம்,முதுமைப்பருவம் போன்ற) எல்லாக்காலங்கலிலும் ஆரோக்கியமானதாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலைகலை சமாளித்து வெற்ரி அடைய தேவையான புத்திக்கூர்மையானதாகவும் எமது குழந்தை இருக்க வேண்டுமாயின் குழந்தை சிறந்த ஆரோக்கியமாகவும்,சிறந்த திடகாத்திரமான வளர்ச்சியுடனும் பிறக்க வேண்டும்.
எனவேதான் ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என விரும்பி இறைவனிடம் பிராத்திக்கும் நாங்கள் அதற்கான முயற்சிகலிலும் ஈடுபடவேண்டும் அவ்விடயங்கள் எம்மால் கடைப்பிடிக்க கஸ்ட்டமாயினும் சிறிது சிறிதாக பழக்கத்திற்கும் கொண்டுவரவேண்டும்.
அதற்காக தாயும் தந்தையும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
சிறந்த ஆரோக்கியமான உணவு முறை
எந்த ஒரு உணவையும் தேவைக்கதிகமாக உண்பதோ,உணவை மருந்து போல மிக குறைவாக உண்பதோ நல்லதல்ல இவை இரண்டும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய முக்கியமான காரணிகள். எமது உணவானது சமநிலையானதாக(புரதம்,மாப்பொருள்,கொழுப்புச்சத்து,விற்றமின் கள்,கணியுப்புக்கள் போன்ற அனைத்தையும் போதியாளவில் கொண்டிருத்தல்) இருக்க வேண்டும் அதில் காய்கறிகல்,பழங்கல் போதுமான அளவு இடம்பெற்றிறுக்கவேண்டும் அத்துடன் சிறந்த புரதங்களும்(மீன்,இறைச்சி வகைகள்,முட்டை,பால்,சோயா கடலை போன்ற தானியங்களும்),காபோவைதரேற்றுக்களும் (சோறு,பான்,ரொட்டி, ஏணைய மாப்பண்டங்கல்) கலந்த கலவையாக எமது உணவு இருக்க வேண்டும்.
சுமாரான உடற்பருமணைப்பேனல்
மிக மெல்லிய உடல் அமைப்போ,மிகப்பருமனான உடல் அமைப்போ பிள்ளையின் பிறப்பு நிறைக்குறைவிலும்,ஆரோக்கிய குறைவையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாது,பிள்ளை பிறக்கும் போது தாய்க்கும் பல பிரச்சணைகளை ஏற்படுத்தக்கூடியது இதனால் உடற்பருமனுடையவர்கள் உடற் பருமனைக்குறைப்பதற்கான முயற்சிகளில்( அதாவது சீரான,தொடர்ச்சியான உடற்பயிற்சி,சிறந்த நடுநிலையான உணவுப்பழக்கம்,சோம்பலான வாழ்கை முறையை மாற்றுதல் அதாவது மிக நீண்ட,அதிகநேரம் தூங்குதல்,…..) ஈடுபட்டு தம்மை கருத்தரிக்கப்பொருத்தமானவர்களாக மாற்றிக்கொள்வது அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழியமைக்கும். அதுபோல மிக மிக மெல்லியவர்கள் தமது உடட் பருமனை அதிகரிக்கும் வழிகளைக்( தொடர்ச்சியன சிறந்த நடுனிலையான உணவுப்பழக்கம்,குறைந்த அளவிலான உடற்பயிற்சி) கையாண்டு தமது உடலமைப்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களது உடல் நிறை நோய்களை ஏற்படுத்தும் அளவுக்கு கூடியதா அல்லது குறைந்ததா அதை எவ்வாறு நீங்கள் தீர்மானிப்பீர்கள் உங்களது நிறையை மட்டும் வைத்துக்கொண்டு உங்களது நிறை அதிகம் என்றோ அல்லது குறைவு என்றோ சொல்ல முடியாது அதாவது 70 kg நிறைகூட ஒருவருக்கு ஆரோக்கியமான சிறந்த நிறையாக இருக்கமுடியும் அதே போல் வேறு ஒருவருக்கு 50kg நிறைகூட ஆரோக்கியமற்ற நிறையாக இருக்க முடியும். அப்படியானால் உங்களது நிறை பற்றி எவ்வாரு தீர்மானிப்பது அதற்காக சிறந்த முறை ஒன்று உள்ளது இதற்கு உங்களுடைய உயரமும் அவசியம் இது உடல் தினிவு சுட்டெண் எனப்படும்.
உடற்திணிவு சுட்டெண்ணின் பயன்பாடு(முக்கியத்துவம்)
இங்கு உடற்திணிவு சுட்டென் (body maas index-BMI) எனும் ஒரு அளவுகோல் உங்களது இது உடற்பருமன் பற்றி ஒரு சிறந்த தெளிவான தகவலைத்தரும். இதை இளகுவாக நீங்கலும் உங்களது உடற்பருமன் பற்றி அறிந்து கொள்வதற்காக பயன் படுத்த முடியும்.
உங்களது உடற்தினிவு சுட்டென் 19 இற்கு குறைவாகவோ அல்லது 27 இற்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது.
அதாவது உடற்தினிவுச்சுட்டென் 19 இற்கும் 27 ஈற்கும் இடையில் காணப்படுதல் வேண்டும். எவ்வாறு உடற்தினிவு சுட்டென்னை கணிப்பது .
சீரான தொடர்ச்சியான உடற்பயிற்சி
இது பல வழிகளில் தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமாக வாழ துணை செய்கிறது
1. தாயின் மன உளைச்சளை குறைத்து மன அழுத்த நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது
2. இரத்த ஓட்டத்தை அதிகரித்து தாய்க்கு புத்துணர்சியை ஏற்படுத்தும்
3. தாய்க்கு குழந்தயை தாங்குவதற்கான உடல் வலிமையை கூட்டும்
4. உடற்பருமணை குறைத்து பிள்ளையையும் தாயையும் ஆரோக்கியமாக பேணும்.
ஊட்டச்சத்து(விற்றமின்-vitamines), கணியுப்பு (மாத்திரைகள்/
மருந்துகள்) பாவித்தல்.
போலிக்கமிலம்( folic acid ) இங்கு கட்டாயம் மேற்கொள்ள வேண்டியது போலிக்கமிலம்(folic acid) என்ற விற்றமின் பாவனையாகும் இது உங்கள் பிள்ளையை கொடூரமான மூலை,முன்னான்(neural tube defact) நோய்கலில் இருந்து பாதுகாக்கும். அத்தோடு குறைமாதத்தில் பிள்ளை பிறப்பதிலிருந்தும்,பிறப்பு நிறைக்குறைவிலிருந்தும் குருதிச்சோகை (aneamia) போன்ர நோய்களில் இருந்தும் உங்களது குழந்தயை பாதுகாக்கும் குறைந்தது கர்ர்ப்பமடைய1 மாதத்திற்கு முன்னராவது இந்த விற்றமின் பாவனையை தொடங்க வேண்டும்.
* Studies have shown that taking folic acid supplements 1 month prior to and throughout the first 3 months of pregnancy decrease the risk of neural tube defects by up to 70%
வேறு விற்றமின்களினதும்,கனியுப்புகளினதும் பாவனையும் சிறந்தது. ஆனால் நான் முதலில்கூறியது போன்று மருத்துவர் சிபாரித்த அளவைவிட அதிகமாக உட்கொள்வதும் உங்களுக்கும்,குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிளும் விற்றமின் A,D,E க்கள்(உங்களது வைத்தியர் சிபாரித்த அளவைவிட மிக உயர் அளவுகள்) பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமானவை.
தடுப்பு மருந்துகள்
சில நோய்கல் பிள்ளை கருவிலிருக்கும் போதோ,பிறக்கும் போதோ தாய்க்கு ஏற்பட்டால் பிள்ளையை கடுமையாக பாதித்து பிறப்பு குறைபாடுகளுடனும்,மிக நளிவடைந்த(நோய்வாய்ப்பட்ட) குழந்தையாக ஆக்கிவிடும்.
அவ்வாறான நோய்கள் கருவுற்ற தாய்க்கு வருவதை தடுப்பதற்கான தடுப்பூசிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? இல்லை என்றால் உங்கள் வைத்தியரை அணுகி அது சம்பந்தமாக நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களை மேற்கொள்ளுங்கள்.
என்னென்ன தடுப்பு மருந்துகள் ஏற்றிக்கொள்ளவேண்டும்
ஜேர்மன் சின்னமுத்து(ருபெல்லா-rubella)
ஏர்ப்பு வலி(டெட்டனஸ்-tettanus).
சிண்னம்மை(அம்மாள்-chicken pox)
ஈரல் அழர்ச்சி-B(heppetitisB)
ஜேர்மன் சின்னமுத்து-rubella
கர்ப்பம் அல்லாத காலத்தில் இது சாதாரனமான ஒரு நோய் ஆகும் ஆனால் கர்ப்பகாலத்தில் இது தாயை பாதிக்குமாயின் கர்ப்பபையிலுள்ள சிசுவை கடுமையாக பாதிக்கும் அதிலும் கர்ப்பத்தின் முதல் 3 மாதத்தில் இன்நோயின் தொற்றுக்குள்ளானால் உங்களது சிசுவை அது மிக மிக கடுமையாக பாதிக்கும்.
இந்த தடுப்பு மருந்தை நீங்கள் கர்ப்பமடைவதற்கு முன்னர் பெற்றுக்கொள்வதனால் உங்களது சிசு நரம்புத்தொகுதி (மூளை,முந்னான்,ஏனைய நரம்புகள்) பாதிப்புற்ற குழந்தையாக ,கடும் இதயக்கோளாரினாள் பாதிப்புற்ற குழந்தையாக,பார்வைக்குறைபாடுள்ள குழந்தையாக பிரசவிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதுபோல் கர்ப்பக்கலைவிலிருந்தும்,குழந்தையானது இறந்து பிறப்பதிலிருந்தும் உங்களது குழந்தையை பாதுகாக்கும்.
தற்போது பாடசாலைப்பருவத்தில் இந்த தடுப்புமருந்தானது இலவசமாக வழங்ககப்படுகிறது அவ்வாறு இந்த தடுப்புமருந்தை பெற்றிருந்தால் கவலைப்படவேண்டியதில்லை இல்லாவிட்டால் நீங்கள் கட்டாயமாக இந்த மருந்தை பெற்றுக்கொள்ல வேண்டும்
(இந்த தடுப்பு மருந்து ஏற்றிக்கொண்டதிலிருந்து 3 மாதங்களுக்கு
கர்ப்பம் தரிக்கக்கூடாது)
இந்த மருந்து ஏற்றிக்கொண்டோமா இல்லையா என்ற சந்தேகமுள்ளவர்கல் மீண்டுமொருமுறை பெற்றுக்கொள்வது சிறந்தது
அல்லது நீங்கள் உங்களது உடம்பில் இந்த நோய்க்கு எதிரான எதிர்ப்புசக்தியை பரிசோதித்துகொள்லலாம் தேவையானால் இந்தப்பரிசோதனையை தடுப்புமருந்து ஏற்றிக்கொண்டவர்களும் செய்யலாம் இதன் மூலம் இந்நோய்க்கு எதிரான உங்களது எதிர்ப்புசக்தியை அறிந்து உறுதிப்படுத்திக்கொள்லலாம்.
(see the page 80 tenteachers)
நீண்டகால நோய்களின் கட்டுப்பாடு
நீங்கள் நீண்டகால (நோய்களான; நீரிளிவு-diabetes,உயர் குருதி அழுத்தம்-hypertension,தைரோயிட் நோய்கள்-hypothyroid,hyperthyroid diseas, ஆஸ்துமா-asthma….. போன்ற)நோய்களை உடையவரா? உங்கள் நோயை நீங்கள் கர்ர்ப்பமடைவதற்கு முன்பிருந்தே சிறந்த கட்டுப்பாட்டினுள் வைத்திருத்தல் வேண்டும்.இவ்வாரான நோய்களை கட்டுப்பாட்டினுள் வைக்கத்தவரினால் உங்களுக்கு பிரசவத்தின் போதான வேறு பல நோய்கள் ஏற்படுவதுடன்,அது உங்களது சிசுவையும் வெகுவாக பாதிக்கும். W2edit மருந்துகளின் பாவனை நீங்கள் பாவிக்கும் சில மருந்துகள் கருவிளுள்ள சிசுவை பாதிக்கலாம். எனவே கர்ப்பகாலத்திற்கு பொருத்தமான மருந்துகளை உங்கள் நீண்டகால நோய்களுக்காக மாற்றி பாவிப்பது ஒரு முக்கியமான விடயமாகும். இவ்வரானவர்கள் கரர்ப்பமடையுமுன் வைத்தியரை நாடுவது கட்டயமானதாகும் குறிப்பாக. v ஆஸ்த்மா, v சீனி நோய், v பிரசர், v தைரொயிட்டு நோய்கள், v ஒவ்வாமை-allergies, v மன அழுத்தம்(depression), v வலிப்பு(fits/suizer) போன்ற எந்த நோய்களுக்காவது நீங்கள் மருந்துகள் பாவிப்பவரா? நீங்கள் கட்டாயமாக உங்கள் வைத்தியரை நாடி ஆலோசணை பெறுவதும்,கர்ப்பத்திற்கு பொருத்தமான மருந்து மாத்திரைகளுக்கு கர்ப்பமடைவதற்கு முன்னரே மாறுவதும் முக்கியமானது.
எந்த ஒரு மருந்து வகைகளையும் வைத்தியரின் சிபாரிசின்றி பாவித்தல் உங்களுக்கும், குழந்தைக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
கருத்தடை(மாத்திரைகள்,மருந்துகல்,ஏணைய மருத்துவ முறைகளை)
பாவித்தவரா. நீங்கள் கருத்தரிப்பதற்காக கருத்தடை முறையை நிறுத்தி,ஒருசில மாதவிடாய்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளுதல் சிறந்தது இந்த காலத்தில் நீங்கல் இயற்கை முறைகளையும்,தடை(barrier method) முறைகளையும் பாவிக்கலாம். இவ்வாரு செய்வதனால் உங்கலுக்கு(கர்ப்பகாலத்திலும்,பிரசவத்திலும்,..) நன்மைகள் கிடைக்கும்
குழந்தை பிறக்க எதிர்பார்க்கும் திகதி(expected date of delivery-EDD) யை இலகுவாக கணிக்கமுடியும்.
ஃ கர்ப்பத்தடை மாத்திரைகளினால் சிசுவுக்கு ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படும்
நோய்களுக்கான பரிசோதனைகள்
முன் கூட்டியே சில நோய்களை கண்டுபிடித்தல்,பிரசவகாலத்தில் அந்நோய்கள் ஏற்பட்டு அவற்றை குணப்படுத்துவதை விட இலகுவானதும்,பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம் இங்கே நாங்கள் சீனி நோய்,பிரசர்,தைரோயிட் பிரச்சணைகள், குருதிச்சோகை போன்ற நோய்களை முக்கியமாக பரிசோதிக்க வேண்டும். அவை நமக்கு கானப்படின் நாங்கள் அதற்கான மருதுவமுறைகளை கண்டிப்பாக பின்பற்றல் எமக்கு ஆரோக்கியமான குழந்தை கிடைக்க வழிவகுக்கும்.
குடும்ப நோய்கள் உங்களது தாய்,சகோதரிகளுக்கு தொடர்ச்சியான கருக்கலைவு,இறந்து பிறத்தல் போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அவை சம்பந்தமாக வைத்தியர்களுடன் அறிவுறைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். தலசீமியா -thalassaemia குடும்பத்தில் உங்களது சகோதரிகளுக்கு சகோதரர்களுக்கு அல்லது கணவனது சகோதர சகோதரிகளுக்கு தலசீமியா இருக்குமானல் அவை சம்பந்தமாக வைத்தியர்களுடன் அறிவுறைகள் பெற்று நீஙகளும்,உங்களது கனவரும் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டும். குருனாகல் மாவட்டத்திலேயே தலசீமியா மிக அதிகமாக காணப்படுகிறது எனவே இப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் திருமனத்திற்கு முன்னரே நீங்கல் உங்களது தலசீமியா சம்பந்தமான பரிசோதனைகளை முடித்துக்கொள்ள வேண்டும் உங்களுக்கு தலசீமியா நோயை காவுகின்ற மரபணு இருந்தால் உங்களுக்கு நிற்சயிக்கப்படும் துணைவருடைய தலசீமியா நிலையை பரிசோதித்து பின்னரே திருமணம் செய்ய வேண்டும். அதிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு தயாரானால் கட்டாயம் இப்பரிசோதனைகள் செய்யப்படுதல் வேண்டும் (இது எப்பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்) இது தலசீமியா நோய் கொண்ட குழந்தை கிடைத்து அது படும் கஸ்ட்டங்க்களை பார்த்து,அணுபவிப்பதை விட வரு முன் காப்பதே சிறந்தது. ஒரே குடும்பத்தில் திருமண ஒப்பந்ததிற்கு முன்னர் நீங்கள் வேறு சில நோய்களுக்கான பரிசோதனைகளும் செய்து கொள்ளல் சிறந்தது.
pic thalassaemia The Centre has identified Ibbagamuwa, Polpithigama, Ambanpola, Ehetuwewa and Giribawa MOH areas of the Kurunegala district. According to Dr. Perera carrier screening tests have already commenced in Ibbagamuwa and over 60 percent has been completed. So far the Centre has already tested 72,900 people including other MOH areas of the district such as Panduwasnuwara and Kurunegala. Among them 8 percent have been identified as Thalassaemia carriers, said Dr. Perera.
சந்ததி சந்ததியாகச்செல்லும் நோய்கல் உங்கள் குடும்பங்களில் இருந்தால் அவை சம்பந்தமான பரிசோதனைகல் செய்யவேண்டுமாயின் உங்களது வைத்தியரை அணுகி அது சம்பந்தமான அறிவுறைகளை பெற்றுக்கொள்லலாம் (இலங்கையில் நிறமூர்த்தம் சம்பந்தமான பரிசோதனைகல்(genetic counselling) கொழும்பு மருத்துவ பீடத்தில் மாத்திரமே மேற்கொள்ளப்படுகிறது அல்லது இந்தியா,சிங்கப்பூர் சென்று சிறப்பாக பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்) வேறு சில நோய்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ளமுடியும். உங்களது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி,வழங்க்கப்பட்ட தடுப்பு ம்ருந்துகள் உங்களது நோய் எதிர்ப்புசக்தியை தூண்டி இருக்கும் அளவு போன்றவற்றையும் தேவையானால் பரிசோதித்து அதற்கேற்ப ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ள்லாம். குறுகியகால நோய்களால்(acute infections) பாதிக்கப்பட்டிருந்தால் உதாரனமாக காய்ச்சல்,சுவாசப்பை நோய்கள்(respiratory tract infection),சிறுநீர்ப்பாதை நோய்கள்(urinary tract infection)…(அதற்கான மருந்துகள் பாவிப்பதனால்) அக்காலத்தில் கர்ப்பமடையாமல் தவிர்ப்பது நல்லது.
புகைப்பழக்கம்,மது அருந்துவதை முற்றாக கைவிடல் புகைப்பழக்கமும்,மதுப்பழக்கமும் எமது நாட்டில் பென்களின் மத்தியில் மிகக்குறைவாக கானப்பட்ட போதிலும் தற்போது ஏற்பட்டுவரும் மேற்கத்திய பழக்கவழக்க மோகத்தினால் அப்பழக்கங்கள் அதிகரித்துவருவது கவலைக்குரியதே.
புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத பெண்கள் கூட கணவன்,தந்தை போன்றவர்களின் புகையை சுவாசிப்பது சுகாதாரப்பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியது புகைப்பழக்கமும்(ஏனைய புகையிலையை பாவிக்ககூடிய உதாரனமாக வெற்றிலை சப்புதல்…..),மதுப்பழக்கமும் தாய்க்கும் சேய்க்கும் என்னற்ற கேடுகளைவிளைவிக்கும். அவை சிறு சிறு பிரச்சனை தொடக்கம் தாய்க்கும் சேய்க்கும் மரணம் ஏற்படுமளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தகூடியது.
கருக்கட்டுவதை குறைக்கும்,கருச்சிதைவு,குறைமாதத்தில் குழந்தை பிறத்தல்,பிறப்பு நிறைக்குறைவுடைய குழந்தை பிறத்தல்,placental abnormalities(previa and abrubtia), பிறப்பு குறைபாடுகளை தோற்றுவிக்கும் உதாரணமாக cleft lip,cleft palat, குழந்தை இறந்து பிறத்தல், ஆஸ்த்துமா,சுவாசப்பை நோய்கல் போன்றன ஏற்படலாம்.
புகைப்பழக்கதை கைவிடல்,புகைப்பழக்கமுடையவர்கல் வீட்டில் இருந்தால் அவர்களை வீட்டினுள் புகைப்பிடிப்பது பற்றி அவர்களிடம் பேசி அவர்களை வீட்டினுள் புகைப்பிடித்தலை கைவிட வலியுருத்தல்,புகைப்பிடிப்பவர்களுக்கு அன்மையில் செல்வதை தவிர்த்தல்,வேறு புகையிலை பாவிக்கும் பழக்கங்களை கைவிடல்,கவனை வைத்தியரிடம் போகும் போது அழத்துச்சென்று கனவனது புகை பிக்கும் பழக்கத்தை நிறுத்துதல் போன்றவற்றால் புகையின் கொடுமையான தாக்கங்களில் இருந்து உங்களையும்,உங்களது குழந்தயையும் பாதுகாத்துக்கொள்வதோடு உங்களது கர்ப்ப காலத்தை சந்தோசமாக அனுபவியுங்கள்.
Alcohol w2edit
சுருக்கம்
ஆரோக்கியமான கர்ப்பமடைவதற்கு தயாராவதற்கான 5 படிகல்
1-போலிக்கமிலம்(folic acid 400 mcg) குறைந்தது 1மாதத்திற்கு
முதலிருந்தாவது ஒவ்வொரு நாளும் பாவித்தல்.
2-புகைத்தல்,மதுப்பாவனையை முற்றாக நிறுத்தல்.
3-நோய்களை கட்டுப்பாட்டினில் வைத்திறுத்தல்,கர்ப்பதிற்கு ஏற்ற
மருந்துகளுக்கு தமது மருந்துகளை
மாற்றிக்கொள்ளல்.தேவையான தடுப்புமருந்துகளை
பெற்றுக்கொள்ளல்.
4-மருதுவரின் சிபாரிசின்றி எந்த மருந்துகளையும் பாவிப்பதை
தவிர்த்தல் இது எந்தப்பொருற்களின் பாவனைக்கும் பொறுந்தும் சில
உணவுப்பொறுற்கல்,ஆயுர்வேத,நாட்டு மருந்துகளின் பாவனை
5-பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருற்களில் இருந்து விலகி
இருத்தல்.
source:Tamil Helth.
No comments:
Post a Comment