தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

31 December 2013

'அமெரிக்காதான் உலக அமைதிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்'

உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக
இருப்பது அமெரிக்காதான் என்று உலக மக்களில் கால் பங்கினர்
கருதுவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கணிக்கிறது. வின்/கேலப் இண்டர்னேஷனல்
அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு , 65
நாடுகளில் சுமார் 67,000 பேரிடம் கருத்துக்களைக்
கேட்டறிந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலோனோர் மத்தியில், மக்கள் இடம்
பெயர்ந்து குடியேறத் தகுதியான நாடு அமெரிக்காதான் என்ற
கருத்தும் இருப்பதாக, இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆய்வில்
பங்கெடுத்துக்கொண்டோரில் ஏறக்குறைய பாதிப்பேர் ,
வரும் ஆண்டு, முடியப்போகும் 2013ஐ விட சற்று மேலும் நன்றாக
இருக்கும் என்று நம்புவதாகக் கூறினர். உலகில் அரசியல்வாதிகள்
பெரும்பாலோர் பெண்களாக இருந்தால்,
உலகம் இன்னும் மேம்பட்டதாக இருக்கும் என்று மூன்றில்
ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் கருதினர்.
Thanks:bbc
http://adf.ly/bQMr8

No comments:

Post a Comment