தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

19 December 2013

11 வயதில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்று தமிழ்ச் சிறுமி சாதனை

ஒன்பது வயதில்
இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் இரண்டாம்
இடத்தைப் பெற்று சாதனை படைத்த
சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில்நுட்பத் துறையில்
பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உலகில்
முதலாம் இடத்தைப் பெற்று தாய் மண்ணுக்கு பெருமையைத் தேடிக்
கொடுத்துள்ளார். இந்தச் சிறுமி பொம்மைகளுக்கும் விளையாட்டுப் பொருட்களுக்கும்
பெருவாரியான நேர காலத்தை பொழுது போக்காகக் கழிக்காமல்
கூடுதலான காலத்தை தகவல் தொழில்நுட்பப் பாடத்துறையில்
செலவிட்டு அயராது முயற்சி செய்து சாதனை படைத்துள்ளார். பிரேமானந்த நடராஜ்
மற்றும் லக்ஷி பிரேமானந்த் தம்பதிகளின்
ஒரே ஒரு புதல்வியான வஷினியா கண்டியிலுள்ள
கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் ஆண்டில்
கல்வி பயிலுகின்றார். வஷினியா 2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில்
நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித்
துறை கற்றை நெறி சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT
DEGREE ) பூர்த்தி செய்துள்ளார். இவருக்கான
பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால்
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் கொழும்பில்
நடத்தப்படவுள்ளது. இந்தச் சாதனை இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமாகும்.
இந்தப் பட்டடிப்படிப்புத் தொடர்பான பெறுபேறு இணையத்தன் ஊடாக
கடந்த 12-12-2013 வியாழக்கிழமை வெளியாகியது. சிறுமி தன்னுடைய மூன்று
வயதிலேயே மின்னஞ்சல்
முகவரியை திறந்து கொண்டார். சர்வதேச கணினியல்
டிப்ளோமா கற்கை நெறியில் சான்றிதழ் பெற்றுள்ளார். வணிகம்
இணையத்தள பொறியியல் துறைகளில் சர்வதேச தரச்
சான்றிதழ்களை தன்னுடைய ஒன்பது வயதிலேயே பெற்றுள்ளார். அதேபோன்று சிறு
வயதிலேயே இணையத் தளத்தை வடிவமைத்தமைக்கான
பெருமை இந்தச் சிறுமையே சாரும். இதில் இரண்டாம்
இடத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்தக்
கால எல்லைக்குள் கண்டி நகரிலுள்ள கணினி உயர்
கல்வி நிலையங்களில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக
பிரித்தானிய கணினி கற்கை நெறி சங்கத்தின் பட்டடிப் படிப்புக்காக
விண்ணப்பித்து 2 ½ வருட காலத்திற்குள்
பட்டப்டிப்பை பூர்த்தி செய்து கொண்ட இவர் தன்னுடைய 11 வயதில்
பட்டம் பெற்று உலகில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். வஷினியா
சிறு வயது முதல் நல்ல குண நலங்களைக் கொண்டவர்.
இந்து சமய வழிபாட்டைப் பின் பற்றிய போதிலும்
எட்டு வயதிலிருந்து கெட்டம்பே அருகிலுள்ள விஹாரைக்குச்
சென்று பௌத்த சமய வழிபாடுகளிலும்
ஈடுபாடு காட்டி வருகின்றார். அதேபோன்று சிறு வயது முதல் ஸ்ரீ
செல்வவிநாயகர் கோவலிலுக்குச்
சென்று வழிபடுவார். இவர் கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்.
இந்தச் சிறு பிள்ளை ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றார் எனும்
போது எமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
இரு முறை இரட்டை வகுப்பேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார். அது
மாத்திரமல்ல 2010 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்
பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் தோற்றி ´ஏ´ தரத்தில் விசேட
சித்தியடைந்துள்ளார். வஷினியாவின் தந்தை நடராஜ் பிரேமானந்த் குருநாகல்
மல்லவப்பிடியிலுள்ள ஒட்டோ மொபைல் கம்பனி ஒன்றின் பணிப்பாளர்.
தாயின் பெயர் லக்ஷி பிரேமானந்த் சில வருடங்கள் புகழ்மிக்க
கணினி நிறுவனம் ஒன்றில் போதனாசிரியராகக்
கடமையாற்றியுள்ளார். வஷினியாவின் வயதை ஒத்த பிள்ளைகள் பொம்மைகளோடு விளையாடிக்
கொண்டிருக்கும் காலத்தில் வஷினியா, தனது தாயாருடைய
நூல்களுக்குள்ளும் கணினிகளுக்குள்ளும் மூழ்கியிருந்தார். இரண்டு வயதிலேயே
வஷினியா ஆங்கில மொழியின்
அரிச்சுவடிகளை மனப்பாடம் செய்து விட்டார். கணினி விசைப்
பலகை குறியீடுகளெல்லாம் வினியாவுக்கு கை வந்த
கலையாகி விட்டது. இவர் மூன்று வயதில் குருநாகல் சர்வதேசப் பாடசாலை ஒன்றில்
அனுமதிக்கப்பட்டு அங்கு இரு வருடங்கள் கல்வி பயின்றார். இதன்
பின் கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேசப் பாடசாலைக்கு 5 வயதில்
இணைந்து கொண்டார். பெரும்பாலானோருக்கு ஓர் இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு அதில்
ஒரு கடிமான பகுதி உண்டு. ஆனால் அது அவருக்கு சாதாரண
விடயமாகவுள்ளது. அதை அவர் இணையம் மூலம் தேடி இணைப்பதற்கேற்ப
பதிவிறக்கம் செய்கின்றார். அதற்கு அவர் ஒரு தந்திரோபாயாயமும்
வைத்திருக்கின்றார். அவர் முதலாவது வடிவமைத்த இணையத்தள முகப்பு, தகவல்கள்,
தங்களைப் பற்றி புத்தக ஒன்லைன், கேள்விகள், படத்தொகுப்பு எனப் பல
பிரிவுகள் கொண்டுள்ளது. அத்துடன் குறித்த நிறுவனம் வழங்கும்
சேவைகளும் அவற்றுக்குள் அடங்கியுள்ளன. இது ஒரு இலாபகரமான
தொழில் என்றாலும் அது மிகவும் கடிமானது எனவும் ஒத்துக்
கொள்கிறார். வஷினியாவின் விசேட திறமையைக் கண்டு கண்டி BCAS உயர்
கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே.எம். நிவாஸினால் கணினித்
துறை அறிவை மேலும் மேம்படுவத்துவதற்காக (Artificial
Intelligence And robotics)
கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக
ரோபோ தயாரிப்பதற்கான அறி திறனைப் பெற்று வஷினியா சாதனை படைப்பார்
என்பதில் சந்தேகம் இல்லை. அவர் கல்விப் படிப்புக்கு எந்தவிதமான
இடையூறுகளுமின்றி பாடசாலை செல்கின்றார். விளையாட்டில்
ஈடுபடுகின்றார். பாடசாலை வேலைகள் அனைத்தினையும்
அன்றே செய்து முடிப்பார். விடுறை நாட்களிலேதான் இந்தத் தகவல்
தொழில் நுட்ப பாடங்களைக் கற்றுள்ளார். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம்,
பிரான்ஸ், மற்றும் ஜேர்மன்
மொழிகளைப் எழுதவும் வாசிக்கவும் கூடியவர். ஓகன், பியானோ,
வாசிப்பதில் சிறந்தவர். பல பரிசில்களையும் பெற்றுள்ளார். இந்தச் சின்னஞ்
சிறிய தாய் நாடு பற்றி உலகமெங்கும் மதிக்க
வேண்டும் என்பதுடன் ஒரு வைத்தியராக
வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்
என்பதே வஷினியா இலக்காகும்.
Source:http://adf.ly/aw3eK

No comments:

Post a Comment