தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

14 February 2017

இதயம் காக்கும் பேஸ்மேக்கரில் புதிய தொழில்நுட்பம்!



பேஸ்மேக்கர் என்றால் என்ன?

நம் இதயத்தின் வலது மேலறையில் ஒரு சிறிய ஜெனரேட்டர் மாதிரியான பயன்பாட்டில் ‘மின் கணு’(SA Node) உள்ளது. இதுதான் மின்சாரத்தை உற்பத்திசெய்து இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. சிலருக்கு இந்த இயற்கை மின்னோட்டம் உற்பத்தி ஆவதிலும், இதைத் இதயத் தசைகளுக்குக் கொண்டுசெல்வதிலும் சிரமங்கள் ஏற்படும். அப்போது அவர்களுக்கு நாடித்துடிப்பு குறைந்துவிடும். அதனால், அடிக்கடி நெஞ்சில் படபடப்பு ஏற்படும். அதிகம் வியர்க்கும். தலை சுற்றி, மயக்கம் வந்து விழுந்துவிடுவார்கள். முக்கியமாக, 50 வயதைக் கடந்தவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகம்.
"
இவர்களுக்கு மாத்திரை, மருந்துகளில் சரிசெய்ய முடியவில்லை என்றால், இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி, சரியான எண்ணிக்கையில் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘பேஸ்மேக்கர்’ என்று பெயர். இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும். 30 கிராம் எடை கொண்ட இக்கருவியில் பேட்டரி, மின் தூண்டல்களை உற்பத்திசெய்யும் ஜெனரேட்டர், சிறிய எலெக்ட்ரானிக் சர்க்யூட், இதயத்தின் அறைகளுக்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் வயர்கள் ஆகியவை இருக்கும். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவைச் சிகிச்சை செய்து, மார்பில் வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில் புதைத்து, தோலைத் தையல் போட்டு மூடிவிடுவார்கள். இதயத்தை இணைக்கும் கழுத்துச்சிரை (Carotid Vein) எனும் ரத்தக்குழாய் வழியாக இதன் வயரை இதய அறைக்குள் கொண்டுசென்று பொருத்திவிடுவார்கள்.
இது ஒரு கடிகாரத்தைப் போல் இயங்குகிறது. இதில் இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும் என முறைப் படுத்தப்பட்டிருக்கும். கருவி இயங்கத் தொடங்கியதும், குறிப்பிட்ட இடைவெளியில் மின்தூண்டல்கள் கிளம்பி இதயத்தைத் துடிக்க வைக்கும். பேஸ்மேக்கரிலிருந்து குறிப்பிட்ட அளவில் மின்தூண்டல்கள் இதயத்துக்குச் சென்றுகொண்டே இருப்பதால், இதயம் தொடர்ந்து துடிக்கிறது. நோயாளியின் தேவைக்கேற்ப இதயத் துடிப்பின் வேகத்தை வெளியிலிருந்தே மாற்றியமைக்கவும் இக்கருவியில் வசதியுள்ளது. ஒருமுறை பொருத்தப்படும் இக்கருவி, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல நிலையில் இயங்கும். அதற்குப் பிறகு, புதிய கருவியைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இதன்  இந்திய விலை ரூ. 1.5 லட்சம். தற்போது வயர் இல்லாத பேஸ்மேக்கர் கருவி வந்துள்ளது. நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்யாமல் இது பொருத்தப்படுவதால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் இந்திய விலை ரூ. 3 லட்சம். இம்மாதிரியான பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்டவர்களால் அடுத்தபடியாக எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க முடியாது என்பது ஒரு பெரும் குறை.

கேப்சூல் பேஸ்மேக்கர்
மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் புதிய தொழில்நுட்பத்தின் பலனாகவும் சமீபத்தில் வந்துள்ளது, கேப்சூல் பேஸ்மேக்கர். இது சற்றே பெரிய கேப்சூல் வடிவில் இருக்கிறது. இதன் எடை மொத்தமே 2 கிராம்தான். இதில் ஜெனரேட்டர் மட்டுமே உள்ளது; மின்சார வயர்கள் இல்லை. இதை இதயத்தில் பொருத்துவதற்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை. தொடையில் உள்ள ரத்தக்குழாய் வழியாக இதைக் கொண்டுசென்று, நேரடியாக இதயத்தின் வலது கீழறைக்குள் பொருத்திவிடுகிறார்கள். இதிலுள்ள கால்கள் போன்ற அமைப்பு இதயத்தைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் பலன் தருகிறது. முதியவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதைப் பொருத்திக்கொண்டவர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடியும் என்பது இதன் மிகப் பெரிய பலன். இதன் இந்திய விலை ரூ. 8 லட்சம். தற்போது பயன்பாட்டில் உள்ள பேஸ்மேக்கர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதால் விலை அதிகம்.



நன்றி:தினகரன்

* தனியாக இருக்கும் போது மாரடைப்பு! - வந்தால் என்ன செய்யலாம்..?
* ஆறு வகையான “ ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்

No comments:

Post a Comment