தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 08 Apr 2025

19 February 2017

கட்டுகுறுந்த படகு விபத்தில் 11 பேர் பலி (VIDEO)


 கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, காணாமல் போனவர்களை தேடுவதற்காக 3 டோரா படகுகளும், ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ளவர்களில் 12 வயதான பிள்ளையொன்றும் உள்ள நிலையில், மேலும் கடலில் மூழ்கிய 32 பேர் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 பேர் பேருவளை வைத்தியசாலையிலும், 6 பேர் நாகொட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
இன்று காலை பேருவளையில் இருந்து களுத்துறை - ஸ்ரீகுருச தேவாலயத்திற்கு சென்ற நபர்கள் பயணித்த படகே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.










No comments:

Post a Comment