* அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு
* ஓய்வூதியக் கொடுப்பனவு 1000 ரூபாவால் அதிகரிப்பு
* சமுர்த்திக் கொடுப்பனவு 100 முதல் 200 வீதம் அதிகரிப்பு
* உரமானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்
* சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு 10 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
* மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 6 ரூபாவால் குறைப்பு
* சமயல் எரிவாயு 300 ரூபாவால் குறைப்பு
* சீனி கிலோ ஒன்று 10 ரூபாவால் குறைப்பு
* 400 கிராம் பால்மா பக்கற் 61 ரூபாவால் குறைப்பு
* ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவால் குறைப்பு
* பாண் ஒரு இறாத்தல் 6 ரூபாவால் குறைப்பு
* சஸ்டஜின் பால்மா 100 ரூபாவால் குறைப்பு
* ரின்மீன் 60 ரூபாவால் குறைப்பு
* அரச வங்கிகளில் 2 இலட்சம்வரை நகை அடகுவைத்து அதனை மீட்கமுடியாதவர்களின்
வட்டிவீதம் தள்ளுபடி
* சீமெந்து ஒரு மூடை 90 ரூபாவால் குறைப்பு
* மாசி கிலோ ஒன்று 200 ரூபாவால் குறைப்பு
* சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50 வீதம் குறைப்பு
* ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஒன்றாக இணைப்பு
* 1000 சீசீக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கான வரி 15 வீதத்தால் குறைப்பு
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதம் கல்விக்கு ஒதுக்கு
* அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு 24 மணி நேரமும் திறக்கப்படும்
* செல்போன்களுக்கான ரீலோட் வரி 25 வீதத்தால் குறைப்பு
* நாட்டிலுள்ள சகலருக்கும் வங்கிக் கணக்குகள்
* என்.ஆர்.எப்.சி கணக்கிற்கு 5 வீத வட்டி அதிகரிப்பு
* வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 5000
ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகக் குறைப்பு
* 5000 ரூபாவாகவிருந்த திருமணப்பதிவுக் கட்டணம் 1000 ரூபாவாகக் குறைப்பு
* ஜனாதிபதி பதவியேற்புக்கு 6000 ரூபாய் மட்டுமே செலவு
* அமைச்சரவையை 71 இலிருந்து 31 ஆகக் குறைத்தோம்
* கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய் வரி வருமானமாக
எதிர்பார்க்கப்பட்டது
* கடந்த வரவுசெலவுத்திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும்.
மொத்த தேசிய உற்பத்தியில் 4.6 சதவீதமாகும்
* ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது
* ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது
* கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்
* இளைஞர் பாராளுமன்றத்திற்கு நிதியளிக்கப்படும்
* 2013/2014 வரி வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட இலாபத்தை
சம்பாதித்த கம்பனிகள் அல்லது
* தனிநபர்கள் இலாபத்தில் 25 சதவீதத்தினை செலுத்த வேண்டும்
* உழைக்கும் பொழுது செலுத்தும் வரியிலிருந்து ஊழிய வருமானத்தின் முதல்
600,000 ரூபா விலக்களிக்கப்பட்டுள்ளது
* உரிமம் அளிக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசி இயக்குனர்கள் அனைவரிடமிருந்தும்
250 மில்லியன் ரூபா ஒரே தடவையில் அறிவிடப்படும்
* கடனட்டையினூடான கடன்களுக்கான வட்டியை 8 வீதமாக வரையறுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment