ஊர் செய்திகள்
date
16 January 2015
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விவரங்கள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில்
மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012
நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின்
அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து,
ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள்,
ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி
வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை
எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில்
அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள்
அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால்,1.அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த
சுற்றுக்கு முன்னேறும், அல்லது,2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக
இருந்தால்3.இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த
சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில்
மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள
அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
அரையிறுதி:
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு
அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள்
மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் 'டை' ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில்
முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள்
அடிப்படையில் 'டை' ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment