தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 January 2015

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கருப்புபெட்டியில் கசிந்த புதுத் தகவல் (வீடியோ இணைப்பு)

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை பிரெஞ்சு துணை விமானியே
இயக்கியதாக கருப்புபெட்டியின் ஒலிப்பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162
பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து
விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 72
உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விமானத்தின் கருப்புப்பெட்டியில் உள்ள ஒலிப்பதிவினை ஆய்வு
செய்த இந்தோனேசிய விசாரணை அதிகாரிகள் இந்த வாரம் ஐ.நா.வின் சர்வதேச
சிவில் விமான போக்குவரத்து அமைப்பில் தங்களின் முதல் அறிக்கையை
சமர்பித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு வெளியிட்ட
அறிக்கையில், விமானம் விபத்துக்குள்ளாகும் போது அனுபவமிக்க இந்தோனேசிய
விமானி இரியண்டோவுக்குப் (Iriyanto)பதிலாக பிரெஞ்சு துணை விமானி ரெமி
ப்ளெசல் (Remi Plesel)விமானத்தை ஓட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு 30 நொடிகளில் 32000
அடியிலிருந்து 37400 அடிக்கு உயர்ந்து திரும்ப 32000 அடிக்கு வந்து கிழே
விழுந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video Link:
https://www.youtube.com/watch?v=JI-FC7hbr00

No comments:

Post a Comment