இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 'ஜனாதிபதி தேர்தல்'
இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் பிற்பகல் 4
மணிவரையில் தேர்தல் நடாத்தப்படும். வாக்காளர்கள் இயலுமானவரை காலையிலேயே
சென்று தமது வாக்குகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வாக்களிப்பினைத் தொடர்ந்து வாக்காளர்கள் அமைதியான முறையில்
வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேறுவது பணிகளை கிரமமாக முன்னெடுக்க
உதவுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்
ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாள அட்டை மற்றும் அண்மையில் வெளிநாட்டிலிருந்து
வந்தவர்களாயின் செல்லுபடியாகும். கடவுச் சீட்டினையும் உடன் எடுத்துச்
செல்லப்பட வேண்டியது கட்டாயமெனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
தேர்தல் முடிவுகளாக தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று
இரவு 11 மணியளவில் வெளியிடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம்
தீர்மானித்திருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.
ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலேயே இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகூடிய
வேட்பாளர்களான 19 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 17
அரசியற்கட்சிகள் மற்றும் இரண்டு சயேச்சைக் குழுக்கள் சார்பில் களத்தில்
இறங்கியுள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிற்கு அமைய இம்முறை ஒருகோடியே 50
இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு
முழுவதுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களின் 160 தேர்தல் தொகுதிகளிலும் இன்று
வாக்களிப் பினை நடாத்துவதற்காக 12 ஆயிரத்து 314 வாக்கெடுப்பு நிலையங்கள்
நிறுவப்பட்டுள்ளன. அதேநேரம் இன்றைய தினம் பிற்பகல் 4 மணி முதல் நாடு
முழுவதுமுள்ள ஆயிரத்து 419 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்காக 5 ஆயிரம் விசேட
அதிரடிப்படையினர் உட்பட 71 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில்
ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதற்கு மேலதிகமாக உள்நாட்டு வெளிநாட்டைச் சேர்ந்த
சுமார் 25 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேற்று முதல் நாடுமுழுவதும்
கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 'ஜனாதிபதி தேர்தலை'
நடத்துமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த நவம்பர் 20 ஆம் திகதி
தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் செய்திருந்தார்.இதற்கமைய ஜனாதிபதி
தேர்தல் ஜனவரி 08ஆம் திகதியன்று நடத்தப்படு இமன கடந்த நவம்பர் 22ம்
திகதியன்று தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர் வமாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 24 முதல் டிசம்பர் 05 வரை கட்டுப்பணம்
செலுத்தப்பட்டது. டிசம்பர் 08 ஆம் திகதியன்று தேர்தலில் போட்டியிடும் 19
வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.தேர்தல் சட்ட
விதிமுறைகளுக்கமைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் ஜனவரி 05ம் திகதி
நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெற்றது.
இதேவேளை, தேர்தலில் வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு இடும்
இரகசிய சின்னம் பிறர் அறியாத வகையில் பாதுகாக்கப்படுமெனக் கூறிய
தேர்தல்கள் ஆணையாளர் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும்
நிலையங்களிலும் சீ சீ. டி. வி கமராக்களின் உபயோகம் இல்லையெனவும்
உறுதியாகத் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையத்தில் சீ. சீ. டி. வி. கமராக்கள் பொருத்தப்படுவதால்
அடையாளமிடப்படும் சின்னத்தை பிறர் அறிந்து கொள்ள முடியுமென பரவிவரும்
செய்தி வெறும் வதந்தியெனவும் வாக்காளர்கள் அது குறித்து அச்சம் கொள்ளத்
தேவையில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முறைகேடுகள்
இடம்பெறாத வகையில் வெற்று வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு
கொண்டு செல்வது முதல் தேர்தல் பெறுபேறுகளை வெளி யிடும் வரையிலான
அனைத்துப் பணிகளும் ஒரே தொடர்ச்சியாக கிரமமானதும் நுட்பமானது மான
முறையில் செயற்கடுத்தப்படுவதனால் மக்கள் பரவலாக பேசுவது போல் வாக்குப்
பெட்டிகளை மாற்றுதல், கள்ள வாக்களித்தல் என்பன இடம் பெறுவதற்கு எவ்வித
சந்தர்ப்பமும் இல்லையெனவும் அவர் உறுதியளித்தார்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு
செல்வதற்கு தடைகள் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில்
எமக்கு முறைப்பாடுகள் கிடைக்குமாயின் குறித்த நிலையத்தின் வாக்கெடுப்பு
ரத்துச் செய்யப்பட்டு வேறு ஒரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு
செய்யப்படு மெனவும் அவர் எச்சரித்தார். இதேவேளை எக்காரணம் கொண்டும்
தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகள் எந்தவொரு
வேட்பாளருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ பயந்தோ பக்கச்சார் பாகவோ நடந்து
கொள்ள மாட்டார்களென் பதனை பொறுப்புணர்வுடன் கூறுவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரினதும் ஐந்து பிரதிநிதிகள்
வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட் டுள்ளது.பிற்பகல்
சுமார் 4 மணிக்குப் பின்னரே வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்
பெட்டிகள் எடுத்துவரப்படவுள்ள போதிலும் சுமார் மூன்று மணி முதல்
வேட்பாளருக்கு ஒரு பிரதிநிதி வீதம் வாக்கு எண்ணும் நிலையங்களில்
இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் எண்ணும் வாக்குகளில் காலதாமதம் அல்லது சந்தேகம்
இருப்பின் அவற்றை திரும்ப எண்ணுமாறு வேட்பாளர்களின் பிரதிநிதிகள்
கோரமுடியும். அத்துடன் கணக்கிடப்பட்ட பெறு பேறுகளின் பிரதிகள் அனைத்தும்
பிரதிநிதிகளுக்கும் விநியோகிக் கப்படும். அவர்கள் கையெழுத்திட்ட பிரதிகள்
என்னை வந்தடைந்த பின்னரே இறுதிப் பெறுபேறுகளை நான் வெளியிடுவதால்
கம்யூட்டர் ஜில்மால் ஏற்படுவதற்கு இடமிருக்காதெனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment