தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

16 January 2014

மேற்குக்கரை பள்ளிவாசல் மீது யூத குடியேற்றவாசிகள் தீவைப்பு

பலஸ்தீனின் மேற்குக் கரை, சல்பித் கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசல்
ஒன்று கடும்போக்கு யூதக் குடியேற்ற வாசிகளால் தீமூட்டப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை தீ வைக்கப்பட்ட இந்த பள்ளிவாசலின் ஒரு பகுதி
சேதமாகியுள்ளதோடு, பள்ளிவாசல் சுவர்களில் இனவாத வாசகங்களும்
எழுதப்பட்டுள்ளன. அலி இபின் அபூ தாலிப் பள்ளிவாசல் நேற்று அதிகாலை 3.30
மணியளவில் தீமூட்டப்பட்டிருப்பதாக நகர மேயர் அயூப் அபூ ஹலாஹ், அனடொலு
செய்திச் சேவைக்கு கூறினார். 'தீ பரவும் முன்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து
அணைத்து விட்டனர்' என்று அவர் கூறினார். யூத குடியேற்றவாசிகளால்
பள்ளிவாசல் சுவரில் 'அறபுகள் ஒழிக', 'முஸ்லிம்களுக்கு எதிராக
பழிதீர்க்கப்படும்' என்று ஹிப்ரு மொழியில் இனவாத வாசகங்கள்
எழுதப்பட்டிருந்ததாகவும் நகர மேயர் குறிப்பிட்டார். எனினும் இது குறித்து
இஸ்ரேல் தரப்பில் உடன் எந்த பதிலும் வெளியாகவில்லை. மேற்குக் கரையில்
இருக்கும் பலஸ்தீன பள்ளிவாசல்கள் மற்றும் சொத்துக்களை இலக்கு வைத்து யூத
குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமை அமைப்பு அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த
2013 இன் ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலப் பகுதியில் யூத
குடியேற்றவாசிகளின் தாக்குதல்களால் குறைந்தது 145 பலஸ்தீனர்கள்
காயமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மொத்தம் 91
தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
Source: http://adf.ly/cAkbF

No comments:

Post a Comment